Sunday, October 22, 2017

இலட்சியம்

சதாசிவ நகர் தாண்டமுடியவில்லை. ட்ராஃபிக் ஜாம். ராத்திரி ஒன்பது மணிக்கு இங்க என்னடா ட்ராஃபிக் ஜாம் என்று தேடினேன். தேர்க்கூட்டம் திருவிழாக்கூட்டம் இருந்தது. இரண்டு சக்கரக வாகனங்கள் சாலையோரம் சாய்மானமாக ஸ்டாண்டிட்டிருக்க... ஒரு டாஸ்மாக் நடை திறந்திருந்தது.
க்ரில் போட்டக் கவுண்டரை குறி வைத்து இரண்டு வரிசைகள் நீண்டிருந்தன. இடதுசாரி வரிசையின் வாலில் ஏக்கத்துடன் காத்திருந்த டப்பாக் கட்டு கைலியாரிடம்....
“ணா... ஏன் இரண்டு வரிசை நிக்குது?”
“ஒண்ணு பீருக்கு.. இன்னொன்னு கட்டிங்கிக்கு..”
“நீங்க நிக்கிற இந்த வரிசை... பீரா? கட்டிங்கா?”
“ஒனுக்கு என்ன வாணும்? “
“இதுதான் வேணும்ங்கிறதில்லை... கூட்டம் குறைஞ்ச வரிசையில நிக்கலாம்ணு...”
”லட்சியமே இல்லாம குடிக்கிறியா?”
தூக்கிவாரிப்போட்டது. அந்த இலட்சியவாதியின் கேள்விக்குப் பிறகு அங்கே நிற்க முடியவில்லை. துக்கம் தொண்டையை அடைக்க வேலையைப் பார்க்கக் கிளம்பிவிட்டேன்.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails