Thursday, June 1, 2017

பாஸுந்தி

கொழந்தைக்கு வேணுமின்னா பாஸுந்தி வாங்கிக்கொடுப்போமே...
ஊஹும்..
கொழந்தை உத்துப் பார்த்துண்டே இருக்கானே.. பாஸுந்தி நன்னாயிருக்குமே...
ஊஹும்....
பாஸுந்தி ஒண்ணும் ரொம்பவும் ஸ்வீட்டாயிருக்காதும்மா..
ஊஹும்...
பாவம் கொழந்த..
பாஸுந்தி கையிலிருக்கும் பேரக் குழந்தைக்கல்ல ”பக்கத்து இலை பாஸுந்தி” சம்பிரதாயமாய்க் கேட்ட தாத்தா குழந்தைக்குதான் என்று அந்த பாட்டிக் குழந்தைக்கு தெரியாதா?!! மூன்று தடவை பொறுமையாய் ஊஹும் என்று தலையாட்டிய அந்த பாட்டிபாஸுந்தி ரெக்கமண்ட் பண்ணின தாத்தாவை விட்ட அதிபயங்கர மிரட்டல் லுக்கில் இனிமே அந்த தாத்தா குழந்தை எந்தக் குழந்தைக்காகவும்.......
பாஸுந்தியைக் கேட்காது! 
பாஸுந்தியைப் பார்க்காது!! 
பாஸுந்தியைப் பற்றிப் பேசாது!!!

1 comments:

க கந்தசாமி said...

”பக்கத்து இலை பாஸுந்தி” - சுவையான பதிவு.. இவ்வளவு வெளிப்படையாகவா பேசி மாட்டிக் கொள்வது?

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails