தன்னைப் பார்க்கிறார்கள்... என்று உணரும் போதுதான் வெட்கம் பிடிங்கித் திங்கறது... உதாரணம்: அதிகாலை வேளையில் ஜன்னலோர சீட்டில் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு ஊருக்குள் நுழையும் போது தண்டவாளத்தருகே பிருஷ்டத்தை நமக்குக் காண்பித்து வழித்துக்கொண்டு.... மூஞ்சியை அந்தப் பக்கம் திருப்பி உட்கார்ந்திருக்கும் காலைக்கடனாளிகள்.
So, நம்ம வெட்கம் அடுத்தவர்களின் கண்களில் தேங்கி நிற்கிறது. (இதற்கு சுகப்பிரம்மத்தின் கதை ஒன்று உண்டு. தனி போஸ்ட்டாக எழுதுவோம்...) ”உனக்கென்ன வெட்கமா? மானமா? ரோசமா?” என்பதை ”கல்வியா? செல்வமா? வீரமா?” ரேஞ்சுக்கு உசுப்பிக் கேட்பதற்கு முன்னால்... அவனுடைய வெட்கத்துக்குக் காரணம் நீங்கள் என்பதை உணருங்கள். வெட்கப்படுங்கள்.
”நாலு பேருக்கு முன்னாடி என் மானத்தை வாங்கிறியே” என்று அல்லல்படும் மக்களும் நாலு பேரினால்தான் அவருக்கு மானம் போகிறது என்பதை அனுபவிப்பதால் அடுத்தவரின் மானம் போவதற்கும் நாம்தான் என்று ஒத்துக்கொள்ளவேண்டும். மானத்தைக் காப்பாறிக்கொள்ளுங்கள்.
ரோசம், வெட்கத்தினாலும் அடுத்தவரினால் மானபங்கப்படுத்தப்பட்டதினாலும் எழுவது. ”ரோசக்காரண்டா... யாராவது மானத்தை வாங்கிட்டா அவங்களை வெட்டிப்புடுவான்...” போன்ற வீர வசனங்கினால் அடுத்தவனின் ரோசத்துக்கும் நீங்கள்தான் பொறுப்பு என்றாகிறது. ரோசமாயிருங்கள்.
யாரையும் வெட்கங்கெட்டவன், மானங்கெட்டவன் ரோசங்கெட்டவன் என்று சகட்டுமேனிக்கு திட்டுவதற்கு முன் யோசியுங்கள்!
End Card டைட்டில்:
வெட்கப்பட்டவர்கள் வாழ்வு வெளிச்சமடைய.... ரோசங்கெட்டவர்கள் ஆசுவாசமாகயிருக்க ... மானபங்கப்படுத்தப்பட்டவர்கள் மாண்பு பெருக... அவர்களின் நலன் கருதி வெளியீடு
0 comments:
Post a Comment