கே டிவியில் திருடா திருடா. காது மந்தமானவர்களுக்காக தமிழ்லேயே சப்டைட்டில் போடலாம். பிரசாந்த்தும்... அந்த இன்னொரு நடிகர்... சட்டுன்னு பேரு வரமாட்டேங்குதே.. நிலாப்பெண்ணேல...ஹாங்... ஞாபகம் வந்திடுச்சு.. ஆனந்தும் மூக்கோடு மூக்கு உரசி நின்னுக்கிட்டு... “சந்திரலேகா... வண்டி எடுத்த்துட்டுப் போறாங்க... வா ஓடிப்போய் பிடிக்கலாம்..” போன்ற பல்லை உடைக்கும் கடினமான வசனங்களை... ஹஸ்கி வாய்ஸ்ல ரொமாண்டிக்காய் “ஓடிப்போயிடலாமா?” போல ரகஸிய மொழியில் பேசிக்கொண்டிருந்தார்கள். மணியின் படுத்தல்களில் இதுவொன்று. அப்போ... ரகசியம் பேசும் காட்சிகள் எப்படியிருக்கும்?! கொல....
ரோஜா, நாயகன், மௌனராகம், தளபதி, அக்னிநட்சத்திரம், குரு, இருவர், பம்பாய் போன்ற சினிமாக்கள் எனக்குப் பிடிக்கும்.. அதிலும் “ம்... ஏன்... ஹாய்.... ஹே.. வா... ச்சீ போடா.. வா... ஓடிப்போயிடலாம்...” போன்ற ஒற்றை வார்த்தை சாகசங்கள்.. மொத்த படத்தின் வசனத்தை அந்தக்கால கல்கண்டு முத்தாரம் புத்தக அளவுக்குள் அடக்குவதற்கு அபார திறமை வேண்டும்.. ஆஹா...எல்லாம் விஷுவல்ஸ்தான்.....
அக்னிநட்சத்திரம் வந்த புதிதில் சித்தப்பா தேவியில் போய் பார்த்துவிட்டு.. கண்ணிரண்டையும் கசக்கிக்கொண்டு... கொடுத்த ஒரு வரி விமர்சனம்.
“அடச்சே... அப்பப்பப்பா... என்னடா இது.. இருட்டுல தௌஸண்ட் வாட் லைட்டைப் பாய்ச்சி...பாய்ச்சி.. பளிச்சு பளிச்சுன்னு அடிச்சு... ஒரே கண்ணு வலி....”
அவர் அப்பவே ஓல்ட்! :-)
0 comments:
Post a Comment