Thursday, December 15, 2016

சந்திப்பு: சுதாகர் கஸ்தூரி; விஞ்ஞானப் புனைவு வித்தகர்

லேசாக முடி நரைத்த பிசிராந்தையார் இன்று வீடு வந்திருந்தார். அன்பு நிறைந்தவர்கள் என்றும் இளையராயிருப்பர்.
சுதாவுக்கு குருதியெங்கும் அன்பு கலந்து ஓடுகிறது. இளமை இதோ இதோ என்று வந்தார். 6174, 7.83 ஹெர்ட்ஸ் போன்ற விஞ்ஞானப் புனைவுகள் எழுதி புதினங்களுக்கு புதிய ஸ்ருதி சேர்த்தவர் சுதா. கற்றுத் தெளிந்தவர்களிடம் காணப்படும் எளிமையில் இன்னும் பல பங்கு சேர இருப்பவர். விஷயஞானம் தெளிவாக இருந்தும் என் போன்ற பாமரர்களுடன் பேசும் போதும் துளிக்கூட பந்தா இல்லாத மனுஷ்யர். என்னிடம் இருக்கும் லவலேசம் புத்தகங்களையும் அதில் எனக்கேற்பட்ட வாசிப்பின்பத்தையும் பகிர்ந்து கொண்டேன். (ரம்பம் போட்டேன் என்று என்னுடைய அத்யந்த ஸ்நேகிதக் குழு கூவுவது கேட்கிறது) குழந்தையின் ஆர்வத்துடன் கேட்டதுடன் அடியேனின் சிறு முயற்சியையும் மனதாரப் பாரட்டிய தயாள குணம் படைத்தவர். நன்றி எழுத்தாளர் சுதாகர் கஸ்தூரி!!
ஞாயிறு மதியம் நலமுடன் சென்றது.
இந்தக் காவியப் புகைப்படத்தை எடுத்தவர்: சங்கீதா சேஷசாயி! 

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails