Friday, August 19, 2016

சுமால் பஸ் டர்புலன்ஸ்

இன்னிக்கி சுமால் பஸ்ல ஓவர் turbulence. பைலட் பரீட்சை எழுதி தவறியவர்தான் இங்கே ஓட்டுநராக எழுந்தருளியிருக்கிறார் போலும். ஊழிக்கால ஆட்டம்.
வயசர்கள் இருவருக்கு வயத்தைப் பிரட்டிக்கொண்டு வாயிலெடுக்க வந்தது போல முகத்தை சுளித்துக்கொண்டு தத்தம் இருக்கைகளில் டப்பாங்குத்து ஆடிக்கொண்டிருந்தார்கள். திடீரென்று பின்னாலிருந்து மிக்ஸி ப்ளேட் கழன்று போன டகடகடக சத்தம். எக்கிப் பார்த்தால் கடைசி வரிசையிலிருந்த கச்சலான மகானுபாவர் தோள் சீட்டில் இடிபடும் ஓசை. குறுகலான சந்துகளில் கழைக்கூத்துக் காட்டினார்.
ஆலந்தூரில் சேஃப் லாண்டிங் ஆகி அக்கடான்னு மெட்ரோ பிடித்தேன். மன்னை ஶ்ரீவித்யா ராஜகோபாலன் அனுக்ரஹம். 

1 comments:

வெங்கட் நாகராஜ் said...

பேருந்திலும் Turbulence! :)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails