"ஏய் டோலர்!! இது புரியுதா பாரேன்...."
"என்ன?"
"நடப்பவர் பார்க்க மாட்டார்
பார்ப்பவர் நடக்க மாட்டார்"
"முதலாமவர் குருடு, இரண்டாமவர் கால் முடியாதவர். அதானே... போய்யா குடாக்கு... "
"சரி இப்ப நான் சொன்னத்துக்கு முன்னால பத்து வரி சேர்த்துச் சொல்றேன். எதாவது வெளங்குதான்னு பாரேன். ”
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
குலத்துக்குத் தெய்வம் வேறாய்க்
கொள்கிற தமிழர் தங்கள்
வழிகாட்டித் தலைவரைன்று
பற்பல பேரைச் சொன்னார்
என்றாலும் மனசுக்குள்ளே
இன்னொருவர் இருப்பாரென்று
ஆராய்ந்தேன் அவர்கள் போற்றும்
தலைவர்கள் யார்யாரென்று
இருந்தவர் இரண்டு பேர்கள்
அவர்களின் அடையாளங்கள்
நடப்பவர் பார்க்க மாட்டார்
பார்ப்பவர் நடக்க மாட்டார்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
“காலுக்கு கீழே தரை நழுவுது... பூமி அதிருது... மேலே வானம் இடிஞ்சு கீழே விழுது.....”
“ஏம்பா?”
”இவ்ளோ சொற்சுவை பொருட்சுவையோடு கவுஜ எழுத ஆரம்பிச்சுட்டியே... அதான்... .”
“ச்சே...இது ஞானக்கூத்தனோடது பா... தேர்தல் சமயத்துல ஜோராக்கீது பாரு....”
“அதானே பார்த்தேன்.. திடீர்னு ஓரிரவில் உனக்கு மூளை வளர்ந்துடுச்சோன்னு டரியலாயிடிச்சு...ஆனா நடப்பார் பார்ப்பார்ன்னு ஒண்ணுமே புர்லயே ராசா....”
“வழிகாட்டின்னு ஒரு லைன் எழுதியிருக்காரா?”
“ஆமா.. தங்கள் வழிகாட்டித் தலைவரென்று...ன்னு இருக்குது...”
“அதுக்கும்.... கடேசி ரெண்டு லைனுக்கும் லின்க் இருக்குது... பார்த்துக்கோ...”
“ஹக்காங்... அது சரி.. அந்த இரண்டு பேரு யாரு?”
“இல்ல எனக்கு ஒருத்தருதான்... அவரு பார்த்துக்கிட்டே நடப்பாரு...”
“இன்னொரு ஞானக்கூத்தன் சொல்லேன்...”
”இப்போ சொல்லுவேன்... நீ அப்படியே ஓடிப்போயிரணும்.... அரசியல் பேசக்கூடாது....”
“ம்.. சொல்லு...”
“எனக்கும் தமிழ்தான் மூச்சு
ஆனால்
பிறர்மேல் அதைவிட மாட்டேன்”
0 comments:
Post a Comment