Friday, August 19, 2016

தாத்தாக்கும் எனக்கும் ஒரே லவ்வு

சிற்றுந்துகளின் இருக்கைகள் காதலர்களுக்காக வடிவமைக்கப்பட்டது. ஒருவரை ஒருவர் ஈஷிக்கொண்டு தொடைமேல் தொடைபோட்டுதான் அமர முடிகிறது.
பக்கத்து இருக்கை தாத்தாவுக்கு யாரும் அருகில் உட்கார இஷ்டமில்லை. பப்பரக்காவென்று காலை அகட்டி அமர்ந்திருந்தார். அவரைத் தாண்டி ஜன்னலோரத்தில் ஒடுங்கிக்கொண்டுச் சிரித்தேன். சட்டென்று முகத்தின் கடுகடு குறைந்து குறுக்கிக் கொண்டார். எதேச்சையாகத் தலையைக் குனிந்தபோது பார்த்தேன். அவரது கால் அம்மாம் பெருசு வீங்கியிருந்தது. அடச்சே கஷ்டப்படுத்திவிட்டோமோ என்று எழுந்துவிட்டேன். பதறி கையைப் பிடித்து இழுத்து அருகே இருத்திக்கொண்டார்.

1 comments:

வெங்கட் நாகராஜ் said...

அடடா.... பாவம் பெரியவர்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails