பக்தன் Vs பக்தன்
================
மண்டியிட்டு பீஷ்மர் யுத்தபூமியில் அமர்ந்திருக்க தேர்சக்கரத்தை கையில் ஏந்தியவண்ணம் பரந்தாமன் அவரைக் கொல்ல உக்கிரமாக நின்றிருந்தான். ஹிந்தி வாயசைவுக்கு தமிழ் வார்த்தைகள் பட்படாரென்று தெரித்தன. விஜய் மஹாபாரதம்.

அனந்தராம தீக்ஷிதரின் ஸ்ரீமத் பாகவத சப்தாக உபன்யாசத்தில்...
”நாளை கிருஷ்ணனை ஆயுதம் ஏந்த வைக்கிறேன்” என்று பீஷ்மர் சூளுரைத்ததற்காக
தன்னுடைய பிரதிக்ஞையையும் உதறிவிட்டு ஆயுதம் ஏந்தி நின்றான். பீஷ்மர்
வாசுதேவனின் பரமபக்தர். பக்தனின் சொல்லைக் காப்பாற்ற வேண்டும் என்ற
நிர்பந்தத்தில் ஆயுதம் ஏந்தி நின்றான்.
தன்னுடைய உயிர் நண்பனும் இன்னொரு பரம பாகவதனுமான அர்ஜுனனை அன்று சரமாரியாய் அம்பு மழை பொழிந்து அடித்துக் காயப்படுத்திக்கொண்டிருந்தார் பீஷ்மர். ஆகையால் அர்ஜுனனைக் காக்கும் பொருட்டும் சக்கரம் ஏந்தி பீஷ்மரைச் சும்மா மிரட்டினாராம்.
பக்தன் Vs பக்தன் சண்டையில் இரண்டு பேருக்குமே கட்சி கட்டி கிருஷ்ணர் நின்றதை ரொம்ப அழகாக விளக்கியிருந்தார் தீக்ஷிதர்வாள்.

0 comments:
Post a Comment