”வேஷ்டியோடயா?”
எனக்கு தூக்கிவாறிப்போட்டது. பதறிப்போய்
இடுப்பில் ஒரு காசித்துண்டைச் சுற்றிக்கொண்டேன். கையில் கரும்பிருந்தால்
பட்டினத்தடிகள். தண்டாயுதபாணி ஸ்வாமியின் அப்க்ரேடட் வர்ஷன். மிகவும்
முக்கியமான ஒரு வேலை. சாக்கடை அடைத்துக்கொண்டது.
எல்லைக்காவல் படை
ஆயுதங்கள் போல தேவையானவை எப்பவுமே அவசரகதியில் தயார் நிலையில் இருக்கும்.
சின்ன கடப்பாரை. இரண்டு சட்டி மணல். அரைச் சட்டி சிமெண்ட். ஒரு பாட்டில்
ஃபினாயில். அர்ஜுனனுக்குக் காண்டீபம் போல முக்கியமான ஆயுதமாக இருபது அடி
நீளத்தில் ஒரு மத்திம வயது ட்யூப்.
வயசாகித் தொங்கிப்போனாலோ இளமை முறுக்கோடு இருந்தாலோ அந்த ட்யூபைக்
காவாய்க்குள் விட்டுக் குத்த தோதுப்படாது. கார்ப்பரேட்டுகளில் லோல்படும்
மத்திம வயது எக்ஸிக்யூட்டிவ் போல என்ன அடித்தாலும் தாங்கும் தன்மை வாய்ந்த
ட்யூப் அது. பாதி வழியில் தடையேற்பட்டு முட்டினால் அதுவாகவே கொஞ்சம்
வளைந்து கொடுக்கும். இளமை முறுக்கோடு நிமிர்த்திக்கொண்டு திரிந்தால்
வேலைக்கு ஆகாது.
இறுதியில்
மூடியிருக்கும் சேம்பர்களைக் கடப்பாரையால் கொஞ்சம் நெம்பி எடுத்து
தூக்கிவைத்துவிட்டு காண்டீபத்தைக் கையிலெடுத்தேன். ட்யூபின் தலையை வாகாக
நுழைத்துவிட்டு வால்பாகத்தைப் பிடித்துக்கொண்டு கையொடியக் குத்துக்
குத்தென்று குத்தினாலும் தலையை சேம்பர் பக்கம் வெளியே நீட்டாமல் உள்ளேயே
முட்டிக்கொண்டது. இன்சென்டிவ்வாக இரண்டு பக்கெட் தண்ணீர் ஊற்றினேன்.
கொஞ்சம் இளகிக் கொடுத்து இருபுறமும் மாற்றி மாற்றிக் குத்த அடைப்பு
நீங்கியது.
நாமே ஸ்வயமாகக் களமிறங்கி அடைப்பெடுத்த பின் பிரவாகமாக
ஓடும் சாக்கடையைக் காணும் போது ஜிவ்வென்று விண்ணுக்குப் பறப்பது போன்ற ஒரு
உணர்வு. இதுவேதான் தீர்க்கமுடியாமல் பனை முடிச்சுப் போட்டுக்கொண்ட ஒரு
பிரச்சனைக்கு தீர்வு காணும் போதும் ஏற்படும் திருப்தி. ஆனந்தம்.
0 comments:
Post a Comment