Knight Rider ன்னு ஒரு புராதன சீரியல். மாமியார்க் கொடுமை, நாத்தனார்
பழி தீர்க்கும் வஞ்சம் போன்ற மசாலாக்களில் சிக்கி இக்காலத் தமிழர்கள்
தவிப்பதற்கு முன்னர் ஜொலிக்கும் நீலக்கண்ணர் ஒருவர் ”வாழ் ஷ் திஸ்” என்று
வழவழா கொழக்கொழான்னு ஆங்கிலத்தில் பேசி நடித்திருப்பார். நான் ஏழாவது
எட்டாவது படிக்கும்போது ”ஆய்பவன்” சொல்லும் ஸ்ரீலங்கா ரூபவாஹிணியில்
ஒளிபரப்புவார்கள். விண்ணை முட்டும் ஆண்டெனாக்களின் மூலம் யூயெம்மெஸ்
பூஸ்டர் தூர்தர்ஷனை விட ரூபவாஹினியை அள்ளிக்கொண்டு வந்து தரும். வீட்டுக்கு
வீடு லைட் ஹௌஸ். ”நம்ம வீட்டு ஆண்டென்னா மேலே ஏறி நின்னாக்க ஸ்ரீலங்காவே தெரியுமேடா” என்று எம்மாரெஸ் சார் ஜோக்கடிப்பார்.
அந்த நீலக்கண்ணரிடம் ஒரு amphibian கார் இருக்கும். நீரிலும் நிலத்திலும்
சக்கைபோடு போடும். கொள்ளையர்களையும் சமுதாயத்திற்கு தீங்கு
விளைவிப்பவர்களையும் விரட்டிக்கொண்டு வரும் போது அப்படியே சர்ர்ர்ரென்று
தண்ணீரில் இறக்கி அவர்களது ஸ்ட்ரீம் போட்டை துரத்தும்.
ஆடி, பியெம்டபிள்யூ, ஜாகுவாரெல்லாம் சென்னைக்குத் தேவையில்லை. தற்போதைய தேவை ஒரு தவக்களைக் கார். அது கொஞ்சம் பெரிய மாடலாக இருந்து தேரையாக இருந்தால் கூட தேவலை. தில்லை கங்கா நகர் கடக்கலாம்.
”நிலத்திலும் நீரிலும் பயணிக்கும்படியான அரசுப் பேருந்துகள் இயக்கப்படும்” என்று அடுத்த முறை ஆட்சியைப் பிடிக்க நினைப்பவர்கள் கூட தேர்தல் அறிக்கையில் சேர்த்துக்கொள்ளலாம். பெருவாரியான தாழ்வான பகுதிவாசிகளின் மேலான ஓட்டுகள் கிடைக்கும்.
மழையைத் திட்டாதீர்! பழிக்காதீர்! பழகிக்கொள்வீர்!!
யாரேனும் ஸ்ட்ராங்கான மழைக் கவிதை எழுதினால் விடிந்துவிடும்!

0 comments:
Post a Comment