Saturday, May 9, 2015

தலைவர் லக்ஷணம்‬

தலைவரே...” என்று பார்க்கும்போதெல்லாம் மட்டையாய் மடிந்தும் வெண்ணையாய்க் குழைந்தும், நாடித்துடிப்பேன்னும் நாயகனேன்னும் மூ.சந்துக்கு மூ.சந்து போஸ்டர் ஒட்டியும் காவடி தூக்குபவர்கள் ஏராளம். இவைதான் தொண்டர்கள் குண்டர்களின் இலக்கணம் என்று தற்காலத்தில் நிறைய பார்த்துவிட்டோம். அது சரி லீடருக்கான முக்கியமான குணம் என்ன? 

*
”லீடரா இருக்கப்பட்டவனுக்கு சகிப்புத்தன்மை அவஸ்யம். வீட்லயே மூத்த சகோதரனோ சகோதரியோ லீடரா இருந்து பம்பரமா சுத்தி நிறைய காரியம் பண்ணிண்டிருப்பா... எப்படா தப்பு பண்ணுவா.. திட்டலாம்னு ரெடியா காத்துண்டிருப்பா. வீட்டுலேயே அப்படின்னா ஊர்ல பொதுகாரியத்துக்கு வந்துட்டோம்னா இன்னும் ஜாஸ்தியா பொறுமுவா. அதனால சகிப்புன்னா கொஞ்சநஞ்சமில்லை. சமுத்ரமளவுக்கு சகிச்சுக்கணும். புரியும்படி சொல்லணும்னா பாலைக் குடிச்சிண்டிருக்கிற கைக்குழந்தை நறுக்குன்னு கடிச்சுடுத்துன்னா வலியைப் பொறுத்துண்டு, வாத்சல்யத்துடன் சிரிச்சிண்டே அடுத்த பக்கத்துக்கு மாத்தி மாதா பாலூட்டறா மாதிரி சகிப்புத்தன்மை வேணும்.”

--மஹாபாரத உபன்யாசத்தில் ஸ்ரீஸ்ரீஅண்ணா

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails