”அச்சச்சோ... நம்ம மேலே இடிச்சுட்டு கீழே விழுந்துட்டாங்க பாருங்க..ன்னு
சத்தம் போட்டா.. நா ப்ரிட்ஜ் ஓரத்துல ரெண்டு அடி கூட
நகர்ந்துருக்கமாட்டேன்....அப்படியே பேலன்ஸ் இல்லாம பின் சீட்லேர்ந்து
மல்லாக்க விழுந்துட்டா...”
“எப்டி சித்தப்பா?” துக்கம் பக்கென்று தொண்டையை அடைத்தது.
”நாங்க ஆக்டிவால ப்ரிட்ஜ் மேலே ஏறிக்கிட்டிருக்கோம்.. ஆப்போஸிட்ல
ப்ரிட்ஜ்லேர்ந்து வந்து இறங்கி... ராங் ரூட்ல எங்களைத் தாண்டி மூனு பேரோட
அந்தப் பக்கம் போம்போது என் டூவீலர் பின்னாடி இடிச்சு....அவ கையில இருந்த
காசெல்லாம் சிதறியிருந்தது... பக்கத்துல
ஓடி வந்தவங்க எடுத்துக்கொடுத்தாங்க... மடியில போட்டுக்கிட்டு..
ஹேமா..ஹேமான்னு தலையை அசைச்சேன். பதிலில்லை.. வாயிலிருந்து ரத்தம்
வழிஞ்சுது... என் மடியிலேயே போய்ட்டா....” அதுக்கு மேலே சித்தப்பாவால் பேச
முடியவில்லை. கேவினார்.
ஆஸ்பத்திரியில் குழுமியிருந்தவர்கள் மத்தியில் அடர் மௌனம். சிறிது இடைவெளியில் மீண்டும்.....
“யாரையும் குத்தம் சொல்ல மாட்டா.. அதிர்ந்து பேச மாட்டா.... தெருவுல பூக்காரியோ யாருக்கெல்லாமோ ஹெல்ப் பண்றத்துக்காக அவா தர்ற வளையல்...ல்லாம் வித்து..அந்த காசைதான் கையில வச்சுருந்தா..... ஸ்கூல் விட்டு தானே வந்துடறேன்னுதான் சொன்னா... எமன் என் ரூபத்துல வந்துட்டான்.... என்னிக்கும் இல்லாம நா வந்து ஸ்டேஷன்லேர்ந்து அழைச்சுக்கறேன்னு வண்டிலே போனேன்.. என் மடியிலேயே போய்ட்டா..” கதற ஆரம்பித்தார்.
நாற்பத்தொன்பது வயசு. இரண்டு பசங்கள். இந்த குளிரில் மார்ச்சுவரியில் படுத்திருக்கிறாள். என்னிடம் வாஞ்சையுடனும் வாத்சல்யத்துடனும் ஸ்நேகிதியாகவும் பழகியவள். மனசு கிடந்து தவிக்கிறது.
இதை மெனக்கெட்டு இங்கு எழுதணுமா? என்று நினைத்தேன்.
ஆனால், இதை தாமதிக்காது அவசியம் எழுத வேண்டும் என்ற உந்துதல் ஒரு காரணத்தால் ஏற்பட்டது. ஒரு ஹெல்மெட் இத் தருணத்தில் காலனை அண்ட விடாமல் செய்திருக்கும். பக்கத்து கடைக்குதான் போறேன்... அடுத்த தெருவுக்குதான் போறேன்.. ஃப்ரெண்ட் தான் ஓட்டறான்.. பின்னாடி உட்கார்ந்துதான் போறேன்.. டிவியெஸ் ஃபிஃப்டிதான்... என்றெல்லாம் சமாதானம் சொல்லிக்கொண்டு இரு சக்கரவாகனத்தில் சீறுபவர்கள்.. கவனிக்க.. தலைக்கவசம்.. உயிர்க்கவசம்.. உங்கள் மேல் அன்புள்ளவர்கள் உங்களுக்காக வீட்டில் காத்திருக்கிறார்கள்.
சித்தி...சித்தீஈஈஈஈஈஈஈஈ...

0 comments:
Post a Comment