கௌதம் வாசுதேவ் மேனன் படத்துக்கும் பி. வாசு படத்துக்கும் என்னங்க வித்தியாசம்?
I will be waiting for you....ன்னு ஹீரோயின் டேரிங்கா ஸ்டைலா நெஞ்சு
நிமிர்த்திச் சொன்னா அது கௌதம் படம் “நா உங்களுக்காக காத்திருப்பேன்”னு
தரையில காலால கோலம் போட்டுக்கிட்டுக் குழைஞ்சா அது வாசு படம்.
படம்
முழுக்க ஜிகினா மாதிரி பொடிப்பொடியா இங்கிலீஸ் வசனம். முகத்தில் அலை
அலையாய் முடி புரளும் முறுக்கேறிய ரௌடிகள். ராகவனையும் அன்புச்செல்வனையும்
ஒரு பாட்டில்ல போட்டு ஐந்து நிமிஷம் குலுக்கிக் கொட்டினா சத்யதேவ் வந்து
டேபிளில் விழுவார். ஹாரீஸ் வழக்கம் போல தன்னோட பாட்டுக்களையே ரீமிக்ஸ்
பண்ணிப் மெட்லி போட்ருக்கார். போட்டி உலகத்தில் புது மெட்டுப் போடறத்துக்கு
அசாத்திய உழைப்பு தேவை. விவேக்கை அப்படியே வெள்ளிக் கம்பிக் கட்டிய முள்
தாடியோடு காட்டியிருக்கிறார்கள். கௌதம் வாசுதேவ் மேனன் ப்ரொஜெக்டரில்
கேடிகள் படம் காட்டி மீண்டும் கா.காவை அழுத்தம் திருத்தமாக
நினைவுபடுத்தினார்.
டுமீல்.
க்ளிங்..ஷ்..ஷ்.. சப்தம் பத்து நிமிஷத்துக்கொருதரம் காதுகளைச்
சீண்டிக்கொண்டேயிருந்தது. ஹாரீஸ் பின்னணி இசைக் கோர்ப்பில் எல்லா
வாத்தியங்களுக்கும் வேலை கொடுத்திருப்பது புரிந்தது. ஜிபிஎஸ், அந்தரத்தில்
நின்று கொண்டு ஐஃபோனில் விக்கிபிடீயா சர்ச் செய்வது, கூகிள் பண்ணி ஆட்கள்
விவரம் தேடுவது போன்றவைகள் கௌ.வா.மேனனின் ரசிக்கவைக்கும் சரக்குகள்.
பதினைந்து நிமிடங்களே வந்தாலும் த்ரிஷா கொள்ளை அழகு. கல்யாணத்திற்கு முதல்
நாள் இரவு அஜீத்தை லுக் விடும் த்ரிஷா கண்களால் சுண்டி இழுத்தார். ப்பா!
இன்னும் இரண்டு ரவுண்டு தாராளமாக வருவார். ஃபர்ஸ்ட் இயர் காலேஜ் ஸ்டூடண்டாக
நடிக்கும் அழகைத் தேக்கி வைத்திருக்கிறார். இதற்கு மேல் த்ரிஷாவைப் பற்றி
எழுதினால் நான் ஜொள் விடுகிறேன் என்று கமெண்டில் அமட்டுவீர்கள்.
அனுஷ்காவிற்கு க்ளோஸ் அப் ஷாட் வைக்கும் தெகிரியம் கௌதமைத் தவிர்த்து வேறு
யாருக்கு வரும்? லிங்காவில் அக்காவாக இருந்தவர் இதில் பெரியக்காவாக
ஆகியிருந்தார். அருண்விஜய்க்கு திருப்புமுனைப் படம். மொக்கையாகக் காட்டிய
இயக்குனர்களுக்கு மத்தியில் பக்காவாகக் காட்டியிருக்கிறார். படத்தில்
அத்லெட் போல மராத்தான் ஓடுகிறார்.
அஜீத். ”தல போல வருமா?...
தலடா... ” என்று விசிலடிக்கும் ரசிகர்களையும் பொழுதுபோக்கு சினிமா பார்க்க
வந்த பொதுஜனத்தையும் சீட்டோடு சீட்டாகக் கட்டிப் போட்டவரும் இவரே.
வயசாகவயசாக அஜீத் ஸ்மார்ட்னெஸ் அதிகரிக்கிறது. சிரிக்கையிலும் சால்ட் அண்ட்
பெப்பரிலும் “வாவ்”.
என்னை அறிந்தால்.... அறிய முடியலைன்னாலும் ஒரு தடவை அஜீத்துக்காக தாராளமாகப் பார்க்கலாம்.
0 comments:
Post a Comment