”லேடி.... ஹண்டர்... டைகர்...” என்று சொல்லிக்கொண்டே குத்துவிடுவது போல
மடக்கிய விரல்களை உடுக்கையடியாக உலுக்கி...... லேடியாக இருந்தால் இடது தோள்
பட்டையில் முந்தானை போடுவது போல கையை வைக்க வேண்டும், ஹண்டராக இருந்தால்
விரல்களை மடக்கி துப்பாக்கி போலவும் டைகர் என்றால் புலி பாய்வது போல
விரல்களை கொக்கிகளாக மடக்கியும் காண்பிக்கவேண்டும். இது இருவர் விளையாடும்
கேம். இருவரும் வலது கையை உலுக்க வேண்டும் இடது கை விரல்களை ஜெயித்த
பாயிண்டுகள் கணக்கிற்கு வைத்துக்கொள்ள வேண்டும்.
“ரூல்ஸ் தெரியுமா?”
“ஊஹும். தெரியாது..” ஸ்வாமிநாதஸ்வாமியிடம் வாய் பொத்தி ப்ரவண மந்திர உபதேசம் கேட்ட ஈஸ்வரனைப் போல மரியாதையாகக் கேட்டேன்.
“பாரு... நான் லேடி வச்சு.. நீ ஹண்ட்டர் வச்சா... எனக்கு ஒரு பாயிண்ட்...”
“ஏன்?”
“லேடி வந்து ஹண்டர் பொண்டாட்டி.. அவனை அடிச்சுடுவா...”
“ஓ...அப்படிப்போகுதா கதை...”
“ஆமாம்.. அது மாதிரி நீ ஹண்டர் வச்சு நான் டைகர் வச்சா.. ஒனக்கு ஒரு பாயிண்ட்...”
“ஏன்?”
“என்னப்பா... கேள்வி கேட்டுண்டே இருக்கே... புரியலையா? ஹண்டர் புலியை ஷூட் பண்ணிடுவான்.. அதனால ஒரு பாயிண்ட்..”
பிள்ளை விளையாட்டில் புலியைக் கூட தில்லாக ஷூட் பண்ணறவனை பொண்டாட்டி அடிச்சுடுவா என்கிற உயர்ந்த வாழ்வியல் தத்துவம் புரிந்தது.
”திரும்பத் திரும்ப கேக்காதே.... நான் டைகர் வச்சு நீ லேடி வச்சுண்டா... எனக்கு ஒரு பாயிண்ட்.... ஓகே.. ஆரம்பிக்கலாமா?”
ராகமாக “லேடி... ஹண்ட்டர்... டைகர்...ம்.. நீயும் சொல்லணும்.. லேடி.. ஹண்ட்டர்.. டைகர்..”.
“போப்பா.. நீ மெதுவா காமிக்கிறே...”
“நான் வச்சத்துக்கப்புறம் கையை மடக்கிறே... ஃபர்ஸ்ட்டு பத்து பாயிண்ட் எடுக்கறவா வின் பண்ணிடுவா.. ஒகே..”
ஆட்டம் தொடர்ந்தது. நான் ஒன்பது பாயிண்ட்.
“ச்சே... சனியன் காத்து எம் பக்கம் வீசுது.. அதான் தோத்துக்கிட்டிருக்கேன்...”
“எங்கடி இதெல்லாம் கத்துக்கறே....”
“எதெல்லாம்?”
“சனியன் காத்து....”
“சந்தானம் காமடிப்பா அது.. சரி.. சரி.. நீ விளையாடு...”
ஒரு ஆட்டம் ஜெயித்து அடுத்த இரண்டு ஆட்டங்கள் தோற்கடிக்கப்பட்டேன். என்னுடைய ஆட்ட பாணியைத் தெரிந்துகொண்டு ரிஃப்ளெக்ஸில் மடேர் மடேரென்று அடித்தாள். இதுபோல மானஸா கைவசம் கொத்து விளையாட்டுகள் இருக்கிறது. இந்த லீவில் மொத்தமாக ஆட வேண்டும்.
தோற்றுப்போனதில் பரம திருப்தி. ஜெயித்ததைக் காட்டிலும் பல்ப் வாங்கியதில் அதிக சந்தோஷம். அரைமணி நேரம் என்னை அண்ட்ராயர் பையனாக்கியவளுக்கு என்ன பரிசு தருவது?
”அடிச் செல்லமே..” என்று கட்டி முத்தமிட்டேன்.

0 comments:
Post a Comment