Hardwickia binata என்ற பொட்டானிகல் பெயருள்ள ஒரு
மரத்தை இந்த ஸ்டேட்டஸின் ஒட்டாகப் பார்க்கிறீர்கள். இது சித்ரகூட மலையில்
இளையபெருமாள் ஏறிப் பார்த்த மரம். இராஜாஜியின் இராமாயணம்
படித்துக்கொண்டிருக்கிறேன். முதல் பக்கத்திலிருந்து மளமளவென்று கதையை
நகர்த்துகிறார். படிக்கும்போது எழுத்துகள் வழியாக ராமன் அடி பற்றி
பின்னாலேயே காடு மலை ஆறுகளைக் கடந்து ஓடுகிறோம். அண்ணன் தம்பி பாசத்தைப்
பக்கம் பக்கமாக வடிக்கிறார். ராஜாஜியின் ராமச்சந்திரமூர்த்தியைப்
படிக்கும்போது சாதாரணரர்களுக்கே கருணை ஊற்றெடுக்கும்.
இராமனுக்கு பணிவிடைகள் செய்து பகவத் கைங்கர்யம் செய்யும் இளையபெருமாள்
தூரத்தில் புழுதி கிளம்ப ஆச்சா மரத்தின் மேலேறிப் பார்த்தான் என்று ராஜாஜி
எழுதியிருந்தார். பரதன் சதுரங்க சேனையுடன் வருவதைப் பார்த்ததும் கோபாவேசமாக
“ராஜ்ஜியத்தைப் பிடிங்கிக்கொண்டதுமில்லாமல் படையெடுத்தும் வருகிறான்...”
என்று குதித்தானாம்.
அரச, ஆல, வேப்ப, கருவை, கருவேப்பிலை, பூவரசு, நாவல், புளிய, மா, பலா, தேக்கு, வாழை, நெல்லி, புங்க, தென்னை, பனை, புன்னை, நாகலிங்கப் பூ, சந்தன மரங்கள் சகஜமாகத் தெரிந்தவை. பார்த்தவை. ஆச்சா மரமா? அதென்ன ஆச்சாரமான மரம் என்று கூகிளில் மூழ்கினேன். கிஷ்கிந்தா காண்டத்தில் சுக்ரீவனுக்கு தெம்பூட்டவும் தனது வில்லாற்றலை காண்பிக்கவும் ஏழு மராமரங்களென்று இராமன் துளைத்தது ஆச்சா மரங்களைத்தானாம். இத்தகைய வலிமையான ஆச்சா மரத்தில்தான் நாகஸ்வரம் தயாரிக்கிறார்கள் என்பது கூடுதல் செய்தி. கம்பனும் ”பெரிய, ஆச்சா, விலங்கு” என்று அர்த்தம் தொனிக்க ”“மா..மா..மா..” போட்டு எழுதிய பாடலை இங்கே பார்க்க: http://www.tamilvu.org/slet/l3710/l3710ame.jsp?st=391&ed=509&mi=2&sno=872
இப்படி இந்த மரம் தேடுகையில் கிடைத்த தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் வனவியல் வலைப்பக்கம் உபயோகமான ஒன்று. (அது இங்கே: http://agritech.tnau.ac.in/forestry/ntfp_hardwickia_binata.html) தமிழிலும் ஆங்கிலத்திலும் மரங்களை மட்டுமன்றி தமிழ்நாட்டின் ஆரண்ய வனப்புகளை சங்கிலியாகக் கோர்த்து பார்வைக்குக் கொடுத்திருக்கிறார்கள்.
“ஆர்வியெஸ் சட்டையில மேல் பொத்தானைப் போடுடா... ரௌடி மாதிரித் திரியற...” என்று ஹைபிஸ்கஸ் ரோஸாசினான்ஸிஸுடன் அடிப்படை ஒழுக்கங்களையும் போதித்த மன்னை நேஷனல் ஸ்கூல் பாட்டனி பாலு சார் ஞாபகம் நினைவில் நிரடுகிறது.
#தாவரவியல்

0 comments:
Post a Comment