குடியாத்தம் எனப்படும் குடியேற்றம் சிவனடியார் திருக்கூட்டத்தைச்
சேர்ந்த சிவ.ஆ. பக்தவச்சலம் நடத்தும் சமயச் சிற்றிதழ் தமிழ் வேதம்.
”தெருவெல்லாம் தமிழ் வேதம் முழங்கச் செய்வோம்” என்பது அடிவரி. பன்னிரு
திருமுறைகளிலிருந்து தேர்ந்தெடுத்த பனுவல்களை பகுதி பிரித்து ”கடன் தீர,
ஆயுள் பெருக, செய்வினை அகல” என்று உபதலைப்பிட்டு வெளியிடுகிறார்கள்.
மாதந்தோரும் முதல் வாரம் வெளிவரும் சஞ்சிகை. முன்னட்டை பின்னட்டை சேர்த்து
முப்பத்தறே பக்கங்கள். ஒரு இதழ் பத்து ரூபாய் ஐம்பது பைசா. (ஏனிந்த ஐம்பது
பைசா?)
ஒற்றியூர் வடிவுடையம்மன் கோயில் நடராசர் சன்னிதி வாசலில் கண்ணிமைக்கும்
நேரத்தில் கவர்ந்திழுத்த மஞ்சள் அட்டையும் ரோஸில் பக்தவச்சலம் பெயரும்
தெரிந்து நண்பர்களிடம் ”தமிழ் வேதத் திரட்டுன்னு ஒரு புக்குப்பா....” என்று
கேட்டுக்கொண்டிருந்தேன். சிவனருள் பெற்ற ஸ்நேகிதம் ஒன்று சந்தா கட்டி
புத்தகத்தை வீட்டிற்கு அனுப்பியது. பிரதி மாதம் கீழ்கண்ட பொருளடக்கத்தோடு
சில புதிய பத்திகள் சேர்க்கப்பட்டு சிவானுக்கிரஹம் காட்டப்படுகிறது.
1) நாயன்மார் வரலாறு
2) திருஐந்தெழுத்தின் ஆற்றல்
3) சிந்தனைக்குச் சில
4) ஒரு அற்புத சிவாலயம்
தமிழ் வேதத்தின் பக்கங்களிலிருந்து ஒரு சொட்டுத் தேன்.
சிந்தனை செய்ய மனம் அமைத்தேன் செப்ப நா அமைத்தேன்
வந்தனை செய்யத் தலை அமைத்தேன் கை தொழ அமைத்தேன்
பந்தனை செய்வதற்கு அன்பமைத்தேன் மெய் அரும்பவைத்தேன்
வெந்த வெண்ணீறணி ஈசற்கு இவையான் விதித்தனவே
-- பொன்வண்ணத்தந்தாதி
சிவஜோதியில் ஐக்கியமாக ஆசைப்படும் ஆர்வலர்களுக்கு அட்ரெஸ்:
சிவ. ஆ. பக்தவச்சலம், 43, சந்நிதி வீதி, நல்லூர்ப்பேட்டை, குடியாத்தம் - 632602. வேலூர் மாவட்டம். தொலைபேசி: 04171-222946 ஆயுள் சந்தா: ரூ. 1500/-, ஆண்டுச் சந்தா ரூ. 120/-
”படிக்க நேரமில்லீங்க..” என்று அலுத்துக்கொள்பவர்கள் கூட ஆண்டுச் சந்தாவோ ஆயுள் சந்தாவோக் கட்டலாம். இந்தச் சீரிய முயற்சியை ஆதரித்ததாக இருக்கட்டும்.
#திருச்சிற்றம்பலம்

0 comments:
Post a Comment