இரண்டு
மாதங்களாக புத்தக அலமாரியில் துறுத்திக்கொண்டிருந்தது. இந்தப் பக்கம்
அந்தப் பக்கம் போகும்போது பிரதானமாகக் கண்ணில் படும். அதன் புஷ்டியைப்
(விஷயம், தேகம்) பார்த்து நிதானமாகப் படிக்கலாம் என்று இவ்வளவு நாள் தொடாமல்
வைத்திருந்தேன். நேற்றிரவு கையில் எடுத்தேன். டின்னரின் போது ஒரு ப்ரேக்.
“இப்பவும் தூங்கலைன்னா கொன்னுடுவேன்” என்ற நடுநிசி மிரட்டலின் போது கீழே
வைத்தேன். அது இன்னொரு ப்ரேக். இரவெல்லாம் கடலாகவும் நம்பர்களாகவும்
நுரைத்து நுரைத்துக் கனவுவில் பொங்கியது. இன்று முடித்துவிட்டேன்.
புஷ்பேஷு ஜாதி
புருஷேஷு விஷ்ணு
நாரேஷு ரம்பா
நகரேஷு காஞ்சி
என்று ஒரு புதிரின் குறிப்புக்காக காஞ்சிபுரம் போவதற்கு முன்னதாக ”ராமதேவி” ஜானகியிடம் அனந்த் சொல்வதாக பாணினியின் இந்த சமஸ்கிருத வரிகள் இந்நாவலில் வரும். நாம் இதில் இன்னும் ரெண்டு சேர்த்துக்கலாம்.
புஸ்தகேஷு 6174
லேககேஷு சுதாகர்
குமரிக்கு தெற்கே ஒரு தீவில் துவங்குகிறது கதை. ஆயிரமாயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த காது நீண்ட பாலினக் குறிகளில்லாத ஹெர்மோப்ராடைட் (மண்புழு போல) லெமூரியர்களின் ”சக்தி பிரமிட்”டுகள்தான் பிரதான சப்ஜெக்ட். க்ரிஸ்ட்டலோகிராஃபியில் தேர்ந்த ஒருவனையும்(அனந்த்) கோலத்தை அறிவியலாக பார்க்கும் ஒருத்தியையும்(ஜானகி) நாயகநாயகியாக்கியிருக்கிறார். சடகோபன், சாரங்கன் என்று காஞ்சிபுர ஆசாமிகள் கதையின் களனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். கூட்டத்திலிருப்பவர்களை அவர்களின் வியர்வை வாசனையில் கண்டறியும் ஸ்பெக்ட்ரோமீட்டர், ஸீ பெட் லாக்கிங் (sea bed logging), voice conversion , search and synthesis software, சீலகந்த மீன்கள் இப்படியாக புத்தகம் முழுவதும் களஞ்சியமாக அறிவியல் இரைந்து கிடக்கிறது.
ஒரு அறிவியல் கதையில் இலக்கணச் சுத்தமான தமிழ் அம்சங்களைப் புகுத்தி புனைந்திருப்பது நாவலின் சுவையை பன்மடங்கு கூட்டுகிறது. கதை நெடுக புதிராக வரும் பாடல்களை எழுதிய சுதாகரை எப்படி பாராட்டினாலும் தகும். ஃபிலடெல்ஃபியாவிலிருந்து அம்பாசமுத்திரம் வரை நாடு நகரங்களைத் தாண்டி கதை விரிகிறது. ரெண்டு பக்கத்துக்கு ஒரு சயின்ஸ் சமாச்சாரம். அப்படி அறிவியல் இல்லாத இடத்தை தமிழில் சந்த நயத்தோடு எழுதியிருக்கும் ஒரு புதிர்ப்பாடல் நிரப்புகிறது.
எகிப்திய பிரமீடுகள் போலல்லாமல் தென்னிந்திய கோபுரங்கள் பாதி பிரமிட்டுகளின் (மொட்டை பிரமிட்) குறியீடு. தமிழர் நாகரீகம் லெமூரியர்களைச் சார்ந்ததா போன்ற வரலாற்று விசாரங்கள் ஓரிடத்தில் வருகிறது. சுதாகரின் கடின உழைப்பு நாவலெங்கும் தெரிகிறது. ஒவ்வொரு பக்கத்தைத் திருப்பும்போது புதியதாய் என்ன தெரிந்துகொள்ளப்போகிறோம் என்கிற ஆவலே வாசகர்களுக்குத் தூண்டில் போடுகிறது. நம்மூரில் சாணி தெளித்து வாசலில் போடும் சாதாரண கோலத்தையும் ஃபிபனாக்கி நம்பர்களையும் அனாயாசமாகச் சங்கிலி போடும் இரண்டு பக்கங்களில் நீங்கள் வாயைப் பிளக்கப் போவது சர்வ நிச்சயம்.
மஹாராஷ்டிர மாநிலத்தில் விண்கற்கள் விழுந்த லோனார் ஏரி! லோனார் ஒரு தூங்குமூஞ்சி கிராமம் என்ற வர்ணனை அக்கிராமம் ஆறு மணிக்கு அடங்குவதை அழகாகச் சொல்கிறார். அந்த ஏரியின் அருகிலிருக்கும் பாறைகளில் காந்தமானிகள் 360 பாகையில் கரகரவென்று சுழலுகின்றன. அந்த ஏரியில் ஒரு பக்கம் உப்பு நீர். ஒரு பக்கம் சுவை நீர். ஒவ்வொன்றிர்க்கும் அறிவியல்பூர்வமான விளக்கங்கள். அதில் அதிசயித்து நீங்கள் சொக்கிப்போகும் தருணத்தில் உடனேயே புதிர் நிரம்பிய ஒரு தமிழ்ப்பாடல் வந்து உங்களை அப்படியே அடித்துப்போடும்.
“தலைவால் நேராகித் தன் வாலே தலையாகித்
தன்னிலே தான் கழிய தானேயாய் நின்றிடுமே....
நாலார வட்டத்துள் நாலே எண்ணாம்”
இதுதான் 6174 என்கிற கப்ரேகர் மாறிலியின் வாழ்த்துப் பாடல். அந்த லோனார் ஏரிக்குப் பக்கத்திலிருக்கும் பாழடைந்த விஷ்ணு கோயிலில் இந்த மர்மம் விலகுகிறது. இங்கிருந்து அசுர வேகத்தில் கதையை நகர்த்துகிறார். ஆங்காங்கே ஹெலிகாப்டர் பறக்கிறது. நமக்கு பகோடா என்றால் முக்குக்கடையில் போடும் வெங்காய பகோடாதான் தெரியும். மியான்மர்க்கு அழைத்துச் சென்று அங்கிருக்கும் புத்தவிகாரங்களை பகோடா என்று காட்டுகிறார். இந்திரனின் ஐராவதம் தெரிந்த நமக்கு பர்மாவின் ஐராவதி நதிக்கரையில் ரகளையான ஒரு க்ளைமாக்ஸ் காண்பிக்கிறார்.
கதையைச் சொல்லாமல் கவனமாகத் தவிர்த்திருக்கிறேன். சுத்தமான ஒரு அறிவியல் புனைவில் தமிழ்த்தேன் தடவிக் கொடுத்திருக்கிறார். இனிக்கிறது. தமிழுக்கு இது புதுசு! இதைப் படித்த பிறகு சுதாகரின் சமீபத்தியப் படைப்பான 7.83 ஹெர்ட்ஸையும் படித்துவிடுங்கள். இந்த ஜீவனிருக்கும் வரை நம்பர் பயமில்லாமல் பெருவாழ்வு வாழ்வீர்!
நேற்றிரவு “இது என்னப்பா?” என்று கேட்ட சின்னவளிடம் கப்ரேகர் கான்ஸ்ட்டெண்ட்டைப் பற்றிச் சொன்னேன். ”எந்த நம்பருக்கும் இது மாதிரி வருமா?” என்று போர்வைக்குள்ளிருந்து கேட்டாள். ”ஆமாம். ஆனால் 1111, 2222 என்று ரிப்பீட் ஆகக்கூடாது” என்று தலையசைத்ததும் உதறி எழுந்தாள். அவளுடைய ரஃப் நோட்டில் தானே ஒரு நான்கிலக்க எண்ணைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு டிரைவ் செய்தாள். அப்பட்டமான மகிழ்ச்சி அவள் முகத்தில். அதைத்தான் இந்த போஸ்ட்டின் படமாக இணைத்திருக்கிறேன்.

0 comments:
Post a Comment