வாகனத்தைத்
துருவித் துருவி சோதனையிட்டு சோழாவை பிரதக்ஷிணமாக வரச்சொன்னார்கள். சரி
பிரதக்ஷிணம் போகலாமென்றால் சக்ராகாரமாக ஒரு ஒரு கி.மீக்குச் சுழற்றிவிட்டு,
கொடுவா மீசையாள் கதவைத் திறந்து வண்டியை வாங்கிக்கொண்டு, நமக்கு
கிச்சுகிச்சு ஏற்படுத்தும் வண்ணம் பாம் கீம் ஏதும் இடுப்பில் கட்டிக்கொண்டோ
பாக்கெட்டில் போட்டுக்கொண்டோ வந்துவிடப்போகிறோம் என்று தலையோடு கால்
டிடெக்டரால் நீவி இருகரம் குவித்து “வணக்கம்” கூறி உள்ளே விட்டார்கள்.
அழைப்பட்டையில் போட்டிருந்த ஆறரைக்கு ஆரம்பிப்பதற்கான சலனமேயில்லாமலிருந்தது ராஜேந்திரா. ராஜராஜனின் பெயரை எந்த அறைக்கு வைத்திருப்பார்கள், கரிகாலன், விஜயாலயன், சுந்தர சோழன், கண்டராதித்தன் போன்றவர்களின் நாமகரணங்களை எந்தெந்த ஹாலுக்கு சூட்டியிருப்பார்கள் என்று கற்பனைக் குதிரையில் சோழர்கள் காலத்திற்கு பயணித்துக்கொண்டிருக்கும் போது ”காஃபி சாப்பிடுங்கள்” என்று ராஜோபசாரம் செய்தார்கள். சாஸரளவு மோட்டாத் தட்டை பிஸ்கெட்டோடு.
நீலக் கலர் தீம் போலிருக்கிறது. டிஸ்கொதே ஆட உள்ளே வந்தது போல நாலாபுறமும் ஃபோகஸ் லைட்டில் நீலம் சேர்த்து சுழற்றி சுழற்றி அடித்து அரையிருட்டு ஹாலில் யாரையோ தேடிக்கொண்டிருந்தார்கள். ந்யூ இயர் பாஷ்ஷை இன்றே ஆரம்பித்தது போன்ற ஒரு தோற்றம். ஜிலுஜிலுக்கும் ஆடையில் சுருக்குப்பையோடு யுவதிகள் யாராவது உள்ளேயிருக்கிறார்களா என்று பம்பாய் பட “கண்ணாளனே..” காமிரா போல ஒரு தடவை விழியிரண்டையும் சுழற்றிப்பார்த்தேன். ஒரேயொரு ஆங்கில மாதுவைத் தவிர மருந்துக்குக் கூட அறைக்குள் மாதரில்லாத ஒரு கூட்டம்.
கம்பெனியின் அருமை பெருமைகளை விளக்கும் விதமாக ஆரம்பித்த பவர்பாயிண்ட்டில், இதோ கண்மூடிக் கண் திறந்தால் மலரப்போகும் 2015ல் வெகுஜன புழக்கத்தில் வரப்போகும் தொழில்நுட்பங்களைப் பட்டியலிட்டார். நெட்வொர்க்கிங்கில் Self Healing Networks - தகவல் பரப்பும் வழித்தடங்களில் கோளாறு ஏற்பட்டால் தன்னைத் தானே திருத்திக்கொள்ளும் தொழில் நுட்பம், ஒரு எம்பி ரெண்டு எம்பி இண்டெர்நெட்டுக்கே இப்போது சிங்கியடிப்பதற்குப் பதிலாக 100யெம்பி ப்ராட்பேண்டாம் - 100mbps consumer brandband. உலக இணைய வரலாற்றில் முதன் முறையாக என்று தீபாவளி ரிலீஸ் பண்ணுவார்கள். இலவச மெயில் சேவைகளில் பாப்பப் விளம்பரப்படுத்தி. ஹோம்தியேட்டரில் கம்ப்யூட்டரை இணைத்து சோஃபா பக்கத்தில் பாக்கெட் பாக்கெட்டாக சிப்ஸும் பாப்கார்னும் கொரித்து ரஜினியும் கமலும் அடுத்த ஜெனரேஷன் கதாநாயகிகளோடு ஆடுவதைக் கண்டு இரசிக்கலாம்.
எதற்கெடுத்தால் யூட்யூப், விக்கி என்று இணையத்தில் சேர்ந்து நமது கலாரசனைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்குப் பதிலாக Web of M2M. இணைய இணைப்பிலிருக்கும் உங்கள் வீட்டுக் கணினியும் ஊரார் வீட்டுக் கணினியும் பேசிக்கொள்வது. பகிர்ந்துகொள்வது. இப்போதே டாரண்ட் என்ற வடிவத்தில் இது அசுரத்தனமாக ஆக்கிரமித்திருக்கிறது. இத் தொழில்நுட்பத்தில் மால்வேர், ட்ராஜன் ஆபத்துகளில்லாமல் இன்னும் கூடுதல் சொகுசுகளைச் சேர்த்துச் சுகப்பயணமாக அமையுமாம். Interactive Video. இதுவும் ஆப்பிள் வைத்திருப்பவர்கள் (நானும் என் அமெரிக்க அக்காவும்) ஃபேஸ்டைம் போன்றவைகளினால் முகத்துக்கு முகம் பார்த்து இப்பவும் பேசிக்கொள்வதுதான். ஊரில் கிடைக்கும் சகல கேட்ஜெட்டுகளிலும் இதை நிறுவி எப்போதும் பக்கத்தில் ஒருவராக பார்த்து பேசி பழகிக்கொண்டிருக்கலாம்.
தமிழில் பேசினால் எதிராளிக்கு ஆங்கிலத்தில் கேட்கும்படியாக பாக்கெட்டிலிருந்து மொழிபெயர்க்கும் ஒரு துபாஷ் இயந்திரமிருந்தால் எவ்வளவு சௌகரியமாக இருக்கும் என்று என்போன்ற அரைகுறை ஆங்கில அறிவுக்காரர்களின் வேதனைக்கு ஆறுதலாக Speech to Speech transalation. கூகிள் ட்ரான்ஸ்லேட்டர் போல எசகுபிசகாக மொழிப்படுத்திப் படுத்தினாலும் போதிய அவகாசம் கொடுத்தால் கவிதை கலிப்பாக்களையே மொழிமாற்றம் செய்வதற்கு மெச்சூராகிவிடும்.
கூகிள் நாமாவை மேனியில் அச்சடித்த காரில் பயணம் செய்யும் ஒரு பார்வையற்றவரைக் காண்பித்து சிக்னலுக்கு சிக்னல் நின்று செல்லும் Driverless Car அடுத்த டெக்னாலஜி என்று ஒரு ஸ்லைட். இது சந்தைக்கு வந்தவுடன் ஒரு லாட் இந்தியாவுக்கு இறக்குமதி செய்து தீர்க்கமான பார்வையிருந்தும் சிக்னல் ஸ்கிப் செய்பவர்களை அதில் உட்காரவைத்து அனுப்பலாமோ என்று தோன்றியது. டிபி டிபியாக ஸ்டோர் செய்துகொள்ளத் தோதான Large mobile Storage. விட்டால் நம்மாட்கள் ஒரு மொபைலில் ஒரு சர்வரே ஓட்டும் காலம் காத்திருக்கிறது. முப்பரிமாண ப்ரிண்டிங். 3D Printing.
Intelligent Optical chip என்று பயோ சிப்ஸ்கள் மூலமாக இரத்த அழுத்தம் சர்க்கரையளவுகளை அவ்வப்போது கண்டறிந்து “நீ சாப்பிட்ட ரஸமலாய்க்கு இன்னும் நாலு கிமீட்டர் ஓடணும்” என்று கட்டளையிடும். இதயத்திற்கு ரத்தம் செல்வது ஐந்து சதவிகிதம் குறைகிறது. அப்பல்லோவில் போய் படுத்துக்கொள் என்று வாத்சல்யத்துடன் சொல்வது போலக் கூட ட்யூன் செய்துவிடுவார்கள்.
சிகரம் வைத்தாற்போல மிசியோ ககூவின் Tele immersion வீடியோ காண்பித்தார்கள். சென்னையில் உங்கள் பாரியாளும் அரேபியாவிலோ அமெரிக்காவிலோ நீங்கள் இருந்தால் வர்ச்சுவலாகச் சுழன்று சுழன்று ஆடலாம். உள்ளூரில் நடக்கும் பர்த்டே பார்ட்டிகளுக்கு கடல்கடந்து வசிப்பதானாலும் தேவ ஸ்வரூபமாக கலந்துகொண்டு சிறப்பிக்கலாம். ககூவின் களிநடனம் இங்கே: http://www.youtube.com/ watch?v=Jydfe3w-GAI
மத்ததெல்லாம் நெட்வொர்க்கிங்கே ஸ்மரணையாக இருப்பவர்களுக்கான அனுபூதிகள்.
அமேஸான் காட்டு மலைப்பாம்பென ரொம்பப் பெரிதாக நீண்டுவிட்டது. ஓவர் டோஸ் ஆகும் முன்னர் தொடரும் கார்டு போட்டுவிடலாம்.
அழைப்பட்டையில் போட்டிருந்த ஆறரைக்கு ஆரம்பிப்பதற்கான சலனமேயில்லாமலிருந்தது ராஜேந்திரா. ராஜராஜனின் பெயரை எந்த அறைக்கு வைத்திருப்பார்கள், கரிகாலன், விஜயாலயன், சுந்தர சோழன், கண்டராதித்தன் போன்றவர்களின் நாமகரணங்களை எந்தெந்த ஹாலுக்கு சூட்டியிருப்பார்கள் என்று கற்பனைக் குதிரையில் சோழர்கள் காலத்திற்கு பயணித்துக்கொண்டிருக்கும் போது ”காஃபி சாப்பிடுங்கள்” என்று ராஜோபசாரம் செய்தார்கள். சாஸரளவு மோட்டாத் தட்டை பிஸ்கெட்டோடு.
நீலக் கலர் தீம் போலிருக்கிறது. டிஸ்கொதே ஆட உள்ளே வந்தது போல நாலாபுறமும் ஃபோகஸ் லைட்டில் நீலம் சேர்த்து சுழற்றி சுழற்றி அடித்து அரையிருட்டு ஹாலில் யாரையோ தேடிக்கொண்டிருந்தார்கள். ந்யூ இயர் பாஷ்ஷை இன்றே ஆரம்பித்தது போன்ற ஒரு தோற்றம். ஜிலுஜிலுக்கும் ஆடையில் சுருக்குப்பையோடு யுவதிகள் யாராவது உள்ளேயிருக்கிறார்களா என்று பம்பாய் பட “கண்ணாளனே..” காமிரா போல ஒரு தடவை விழியிரண்டையும் சுழற்றிப்பார்த்தேன். ஒரேயொரு ஆங்கில மாதுவைத் தவிர மருந்துக்குக் கூட அறைக்குள் மாதரில்லாத ஒரு கூட்டம்.
கம்பெனியின் அருமை பெருமைகளை விளக்கும் விதமாக ஆரம்பித்த பவர்பாயிண்ட்டில், இதோ கண்மூடிக் கண் திறந்தால் மலரப்போகும் 2015ல் வெகுஜன புழக்கத்தில் வரப்போகும் தொழில்நுட்பங்களைப் பட்டியலிட்டார். நெட்வொர்க்கிங்கில் Self Healing Networks - தகவல் பரப்பும் வழித்தடங்களில் கோளாறு ஏற்பட்டால் தன்னைத் தானே திருத்திக்கொள்ளும் தொழில் நுட்பம், ஒரு எம்பி ரெண்டு எம்பி இண்டெர்நெட்டுக்கே இப்போது சிங்கியடிப்பதற்குப் பதிலாக 100யெம்பி ப்ராட்பேண்டாம் - 100mbps consumer brandband. உலக இணைய வரலாற்றில் முதன் முறையாக என்று தீபாவளி ரிலீஸ் பண்ணுவார்கள். இலவச மெயில் சேவைகளில் பாப்பப் விளம்பரப்படுத்தி. ஹோம்தியேட்டரில் கம்ப்யூட்டரை இணைத்து சோஃபா பக்கத்தில் பாக்கெட் பாக்கெட்டாக சிப்ஸும் பாப்கார்னும் கொரித்து ரஜினியும் கமலும் அடுத்த ஜெனரேஷன் கதாநாயகிகளோடு ஆடுவதைக் கண்டு இரசிக்கலாம்.
எதற்கெடுத்தால் யூட்யூப், விக்கி என்று இணையத்தில் சேர்ந்து நமது கலாரசனைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்குப் பதிலாக Web of M2M. இணைய இணைப்பிலிருக்கும் உங்கள் வீட்டுக் கணினியும் ஊரார் வீட்டுக் கணினியும் பேசிக்கொள்வது. பகிர்ந்துகொள்வது. இப்போதே டாரண்ட் என்ற வடிவத்தில் இது அசுரத்தனமாக ஆக்கிரமித்திருக்கிறது. இத் தொழில்நுட்பத்தில் மால்வேர், ட்ராஜன் ஆபத்துகளில்லாமல் இன்னும் கூடுதல் சொகுசுகளைச் சேர்த்துச் சுகப்பயணமாக அமையுமாம். Interactive Video. இதுவும் ஆப்பிள் வைத்திருப்பவர்கள் (நானும் என் அமெரிக்க அக்காவும்) ஃபேஸ்டைம் போன்றவைகளினால் முகத்துக்கு முகம் பார்த்து இப்பவும் பேசிக்கொள்வதுதான். ஊரில் கிடைக்கும் சகல கேட்ஜெட்டுகளிலும் இதை நிறுவி எப்போதும் பக்கத்தில் ஒருவராக பார்த்து பேசி பழகிக்கொண்டிருக்கலாம்.
தமிழில் பேசினால் எதிராளிக்கு ஆங்கிலத்தில் கேட்கும்படியாக பாக்கெட்டிலிருந்து மொழிபெயர்க்கும் ஒரு துபாஷ் இயந்திரமிருந்தால் எவ்வளவு சௌகரியமாக இருக்கும் என்று என்போன்ற அரைகுறை ஆங்கில அறிவுக்காரர்களின் வேதனைக்கு ஆறுதலாக Speech to Speech transalation. கூகிள் ட்ரான்ஸ்லேட்டர் போல எசகுபிசகாக மொழிப்படுத்திப் படுத்தினாலும் போதிய அவகாசம் கொடுத்தால் கவிதை கலிப்பாக்களையே மொழிமாற்றம் செய்வதற்கு மெச்சூராகிவிடும்.
கூகிள் நாமாவை மேனியில் அச்சடித்த காரில் பயணம் செய்யும் ஒரு பார்வையற்றவரைக் காண்பித்து சிக்னலுக்கு சிக்னல் நின்று செல்லும் Driverless Car அடுத்த டெக்னாலஜி என்று ஒரு ஸ்லைட். இது சந்தைக்கு வந்தவுடன் ஒரு லாட் இந்தியாவுக்கு இறக்குமதி செய்து தீர்க்கமான பார்வையிருந்தும் சிக்னல் ஸ்கிப் செய்பவர்களை அதில் உட்காரவைத்து அனுப்பலாமோ என்று தோன்றியது. டிபி டிபியாக ஸ்டோர் செய்துகொள்ளத் தோதான Large mobile Storage. விட்டால் நம்மாட்கள் ஒரு மொபைலில் ஒரு சர்வரே ஓட்டும் காலம் காத்திருக்கிறது. முப்பரிமாண ப்ரிண்டிங். 3D Printing.
Intelligent Optical chip என்று பயோ சிப்ஸ்கள் மூலமாக இரத்த அழுத்தம் சர்க்கரையளவுகளை அவ்வப்போது கண்டறிந்து “நீ சாப்பிட்ட ரஸமலாய்க்கு இன்னும் நாலு கிமீட்டர் ஓடணும்” என்று கட்டளையிடும். இதயத்திற்கு ரத்தம் செல்வது ஐந்து சதவிகிதம் குறைகிறது. அப்பல்லோவில் போய் படுத்துக்கொள் என்று வாத்சல்யத்துடன் சொல்வது போலக் கூட ட்யூன் செய்துவிடுவார்கள்.
சிகரம் வைத்தாற்போல மிசியோ ககூவின் Tele immersion வீடியோ காண்பித்தார்கள். சென்னையில் உங்கள் பாரியாளும் அரேபியாவிலோ அமெரிக்காவிலோ நீங்கள் இருந்தால் வர்ச்சுவலாகச் சுழன்று சுழன்று ஆடலாம். உள்ளூரில் நடக்கும் பர்த்டே பார்ட்டிகளுக்கு கடல்கடந்து வசிப்பதானாலும் தேவ ஸ்வரூபமாக கலந்துகொண்டு சிறப்பிக்கலாம். ககூவின் களிநடனம் இங்கே: http://www.youtube.com/
மத்ததெல்லாம் நெட்வொர்க்கிங்கே ஸ்மரணையாக இருப்பவர்களுக்கான அனுபூதிகள்.
அமேஸான் காட்டு மலைப்பாம்பென ரொம்பப் பெரிதாக நீண்டுவிட்டது. ஓவர் டோஸ் ஆகும் முன்னர் தொடரும் கார்டு போட்டுவிடலாம்.
0 comments:
Post a Comment