Thursday, September 19, 2013

புகை புகையாய்.....


நீலக்கடலில் தூவிய மல்லிகை....
ஆகாய இலவம் பஞ்சு...
நுரைத்து ஓடும் பொன்னி நதி...
காதலி ஜில்லிடும் வெண்ணிலா ஐஸ்க்ரீம்...
கயிலைநாதனின் வெள்ளியங்கிரி...
வரும் புயலைக் காட்டும் வான் படம்...
வசிக்கத் துடிக்கும் குட்டி ராஜ்ஜியம்....
இந்திரலோகத்து நுழைவாயில்...
ஐராவதத்தின் பிருஷ்டபாகம்...
பனைமரம் துடைக்கும் ஒட்டடை...
செல்ல பொமரேனியன் நாய்க்குட்டி...
வாணி ஜெயராமின் “மேகமே...மேகமே...”
ஆத்திக நாத்திக வெண்தாடி...
குழந்தையின் வெள்ளை மனசு....
ஷேவிங் ப்ரஷ் தலையில் க்ரீம்...
ஒரு விள்ளல் குஷ்பூ இட்லி...
வானம் விளைத்த உப்பளம்..

கடைசியில் ஜெயித்தது:
“மேகம் ரெண்டும் சேர்கையில்....
மோகம் கொண்ட ஞாபகம்...”

9 comments:

geethasmbsvm6 said...

இதைப் போன்ற மேகக் கூட்டங்களின் படம் ஹூஸ்டனில் எடுத்தது நானும் என்னோட ஃபோட்டோப் பகுதியில் பகிர்ந்திருக்கேன். :))) ஆனால் இத்தனை கற்பனை தோணலை! :)

geethasmbsvm6 said...

தொடர

சாந்தி மாரியப்பன் said...

சோப் நுரை :-)

வல்லிசிம்ஹன் said...

எதாக இருந்தாலும் அள்ளித் தெளித்த அழகு.

'பரிவை' சே.குமார் said...

அழகான படம்...
அருமையான வரிகள்...

மாதேவி said...

வானிலே முகில்கோலம் அழகு.

Madhavan Srinivasagopalan said...

முக்கியமான ஒன்ன விட்டுட்டீங்களே..
'வானத்தில் மிதக்கும் வெண்மேகம்'

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

கொல்றீங்க சாமி.தாங்கல.

வெங்கட் நாகராஜ் said...

படமும் கவிதையும் ரொம்பவே அழகு.....

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails