சத்யாவிற்கு அசாத்திய டைமிங் சென்ஸ். வாயாலேயே கிச்சுகிச்சு மூட்டுவதில் கில்லாடி.
காரில் வரும் போது காதல் ஜோடிகள், கல்யாணம், கத்திரிக்கா என்று பல திசைகளில் பேச்சு போனது.
பேசினதுல ஒரு சின்ன க்ளிப்.
“டெண்டுல்கரை விட அஞ்சலி அஞ்சு வருஷம் பெரியவளாம்...”
“அதனால என்ன... அப்படிதான் இப்பெல்லாம் கன்னாபின்னான்னு இருக்காங்க...ட்ரிங்கிங் டுகெதர்...லிவிங் டுகதெர்... டையிங் டுகதர்னு.... ”
”திருநீர்மலைல அம்மா பொண்ணு ரெண்டு பேருமே காதலன் கூட ஓடி வந்து கல்யாணம் பண்ணிகிட்டாங்களாம். தாலிகட்டி படி இறங்கும் போது மாலையும் கழுத்துமா ஜோடியாப் பார்த்துக்கிட்டாங்கன்னு போன வருஷமோ என்னமோ தந்தியில படிச்சேன்.”
“நல்லவேளை. இதே ரீதியில பேத்தியும் ஓடி வந்து க்யூல நின்னு பண்ணிக்காம இருந்துதே. நீர்வண்ணப்பெருமாள் பெருமாள் பொட்டிய கட்டிண்டு இடத்தைக் காலி பண்ணிண்டு வேற ஊருக்குப் போய்டுவார்...”
“ஏன். கமல் கூட கொழந்தை பொறந்தத்துக்கு அப்புறம் தான் கல்யாணம் பண்ணிண்டார்..”
”அதெல்லாம் எதுக்கு? எனக்குத் தெரிஞ்ச இடத்துல நடந்த கூத்தை சொல்லட்டா?”
“ம்.”
“வீட்டுக்கு ஒரே பையன். லவ் பண்ணினப் பொண்ணை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு அழிச்சாட்டியமா ஒத்தைக் கால்ல நின்னு பண்ணிண்டான்”
“சரி..”
“தாலி கட்டின நாள்லேர்ந்து எண்ணி சரியா அஞ்சாவது மாசம் குழந்தை பொறந்தது..”
“ஐயய்யோ!!”
“வீட்ல எல்லோரும் அதிர்ந்து போய்.. ஏண்டா? ஊர்ல சிரிக்கமாட்டாங்களா? என்னாடாச்சுன்னு கேட்டாங்க..”
“அதுக்கு என்ன சொன்னான்?”
“நாந்தான் முன்னாடியே உங்ககிட்டல்லாம் சொன்னேனே.. அப்டீன்னு சதாய்க்கிறான்.”
“என்னடா சொன்னேன்னு அவனோட அம்மா அப்பா அழாக்குறையா கேட்டாங்க.”
“அவன் சொல்றான். நான் அப்பவே சொன்னேன் பொண்ணுக்கு 24 வயசு 5 மாசம்னு”.

8 comments:
//ஏன். கமல் கூட கொழந்தை பொறந்தத்துக்கு அப்புறம் தான் கல்யாணம் பண்ணிண்டார்..”//
Best Joke .
subbu thatha.
Yarunga sathya?
சகிக்கலை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
என் தளத்தில் இன்று:ஊதா கலரு ரிப்பன்
tvpmuslim.blogspot.com
தீயா வேலை செஞ்சிருக்காரு போல.
நிஜமாகவே இது நடந்திருக்கு கீதா:) ஜூன்ல கல்யாணம் டிசம்பர்ல பையன்
பிறந்தாச்சு.
முகப்புத்தகத்திலேயே படித்து ரசித்தது.....
மீண்டுமொரு முறை ரசித்தேன்!
24வயது 5 மாதம் :))
Post a Comment