”உம் பேரு என்னா?”
“ஆர்விஎஸ்”
“ம்....”
”இது என்ன?”
“மூக்கு”
“இங்கிலீஷ்ல..”
“நோஸ்”
“உள்ளங்கையை மடிச்சுக்கோ...”
“ம்.. “
“பிரி..”
“பிரிச்சாச்சு..”
“இப்ப உன் கையில என்ன இருக்கு...”
“ஒண்ணுமில்ல...”
“அத இங்கிலீஷ்ல சொல்லு...”
“நத்திங்...”
”இப்ப நீ சொன்னதெல்லாம் சேர்த்துச் சொல்லட்டா?”
“ம்... சொல்லு..”
“ஆர்விஎஸ் நோஸ் நத்திங்...”
கரெக்ட்டுதானே. சின்னவளுக்குத் தெரிஞ்சதை விட எனக்கு என்ன பெரிசாத் தெரிஞ்சுடப்போகுது. :-)
“ஆர்விஎஸ்”
“ம்....”
”இது என்ன?”
“மூக்கு”
“இங்கிலீஷ்ல..”
“நோஸ்”
“உள்ளங்கையை மடிச்சுக்கோ...”
“ம்.. “
“பிரி..”
“பிரிச்சாச்சு..”
“இப்ப உன் கையில என்ன இருக்கு...”
“ஒண்ணுமில்ல...”
“அத இங்கிலீஷ்ல சொல்லு...”
“நத்திங்...”
”இப்ப நீ சொன்னதெல்லாம் சேர்த்துச் சொல்லட்டா?”
“ம்... சொல்லு..”
“ஆர்விஎஸ் நோஸ் நத்திங்...”
கரெக்ட்டுதானே. சின்னவளுக்குத் தெரிஞ்சதை விட எனக்கு என்ன பெரிசாத் தெரிஞ்சுடப்போகுது. :-)
(*)
"அப்பாப்பா... என் கையைப் பிரியேன்..”
“வேண்டாம்.. அப்புறம் நீ அன்னிக்கி மாதிரி ஆர்விஎஸ் நோஸ் நத்திங்னு சொல்லி பழிப்பே....”
“இல்லப்பா... நீ பிரியேன்...”
“ம்... பிரிச்சாச்சு...”
“நடுப்பற இருக்கிற கத்தியை எடு..”
“அங்க ஒண்ணுமில்லையே...”
”ச்சும்மா.. இப்படி எடுப்பா... “
“ம்...சரி..”
“உன் மூக்கை அறுத்துக்கோ...”
“ம்.. அறுத்துண்டேன்..”
“கத்தியைத் திரும்பவும் என் கைக்குள்ள வச்சுடு...”
“வச்சாச்சு...”
“இப்ப மறுபடியும் கையைப் பிரியேன்...”
“ம்.. பிரிச்சுட்டேன்.”
“எங்கைலேர்ந்து இப்ப ரோஜாப்பூவை எடு..”
“எடுத்தாச்சு..”
“வாசனை வருதான்னு மோந்து பாரு...”
“ம்..”
“ஐயே!... உனக்குதான் இப்ப மூக்கே இல்லையே.... அப்புறம் எப்படி மோந்து பார்ப்பே...ஹெஹ்ஹே....”
......பரிகாசம் செய்துவிட்டுக் கைக்கொட்டிச் சிரித்த சின்னவளின் முகத்தாமரைக்காகவே இன்னும் எவ்வளவு தடவை வேண்டுமானாலும் மூக்கறு படலாம்...
“வேண்டாம்.. அப்புறம் நீ அன்னிக்கி மாதிரி ஆர்விஎஸ் நோஸ் நத்திங்னு சொல்லி பழிப்பே....”
“இல்லப்பா... நீ பிரியேன்...”
“ம்... பிரிச்சாச்சு...”
“நடுப்பற இருக்கிற கத்தியை எடு..”
“அங்க ஒண்ணுமில்லையே...”
”ச்சும்மா.. இப்படி எடுப்பா... “
“ம்...சரி..”
“உன் மூக்கை அறுத்துக்கோ...”
“ம்.. அறுத்துண்டேன்..”
“கத்தியைத் திரும்பவும் என் கைக்குள்ள வச்சுடு...”
“வச்சாச்சு...”
“இப்ப மறுபடியும் கையைப் பிரியேன்...”
“ம்.. பிரிச்சுட்டேன்.”
“எங்கைலேர்ந்து இப்ப ரோஜாப்பூவை எடு..”
“எடுத்தாச்சு..”
“வாசனை வருதான்னு மோந்து பாரு...”
“ம்..”
“ஐயே!... உனக்குதான் இப்ப மூக்கே இல்லையே.... அப்புறம் எப்படி மோந்து பார்ப்பே...ஹெஹ்ஹே....”
......பரிகாசம் செய்துவிட்டுக் கைக்கொட்டிச் சிரித்த சின்னவளின் முகத்தாமரைக்காகவே இன்னும் எவ்வளவு தடவை வேண்டுமானாலும் மூக்கறு படலாம்...
என்னுடைய வாண்டுவின் ரகளைகள்.
22 comments:
Stress busters.... Nsoi
ரசிக்க வைக்கும் ரகளைகள்...!
தொடர வாண்டுகளுக்கு வாழ்த்துக்கள்...!! ஹிஹி...
அய்யய்யோ...எத்தனைதரம் மூக்கறுபடப்போகுதோ மருந்தும் ப்ளாஸ்ரரும் வைத்துக்கொள்ளுங்கள்:))
சூட்டி வாண்டு.:)வாழ்த்துகள்.
வாண்டுவின்
ரகளைகள்.
ரசிக்கவைத்தன ..
ரகளைகளும் மூக்கறு படலமும் தொடரட்டும் :-))
எப்படித்தான் இந்த குட்டீஸ்களுக்கு இந்த மாதிரில்லாம் யோசிக்கத் தோணுதோ...! ரசிக்க வைத்தது உங்கள் வாண்டுவின் குறும்பு! நிச்சயம் இவற்றை ரசிக்க எத்தனை தரம் வேண்டுமானாலும் நீங்கள் மூக்கறுபடலாம்!
மூக்கறு படலம் பிரமாதம். குட்டீஸ்க்கு தான் இப்படியெல்லாம் யோசிக்கத் தோணும்....:)
:-))))))
:)
Mannai karthik
பெறும் அவற்றுள் யாம் அறிவது இல்லை அறிவு அறிந்த
மக்கட்பேறு அல்ல பிற !!!!!
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/04/blog-post_5204.html) சென்று பார்க்கவும்... நன்றி...
@BalajiVenkat
Yes Balaji. Thanks.
@திண்டுக்கல் தனபாலன்
ஆமாம் தனபாலன். ரசிக்கவும் மகிழவும் வைக்கிறது. :-)
@மாதேவி
பல தடவைப் பட்டாச்சு. ஆனால் சுகமான மூக்கறுபடல். :-)
@ இராஜராஜேஸ்வரி
நன்றி மேடம்.,
@அமைதிச்சாரல்
தொடர்ந்து கொண்டே இருக்கிறது மேடம். நன்றி. :-)
@பால கணேஷ்
பசங்களுக்கு இதிலெல்லாம் கிரியேட்டிவிட்டி பொங்குது. கருத்துக்கு நன்றி.
@கோவை2தில்லி
நான் மூக்கறு படுவதில் எத்தனை பேருக்கு சந்தோஷம். :-)
@DaddyAppa
:-) :-)
Thanks Mannai karthik
@அறிவன்#11802717200764379909
நன்றிங்க அறிவன். :-)
திண்டுக்கல் தனபாலன்
வலைச்சர அறிமுக செய்திக்கு நன்றி தனபாலன்.
Post a Comment