Friday, March 29, 2013

ரோஸ் ரோஸ்... நோஸ் நோஸ்...


”உம் பேரு என்னா?”

“ஆர்விஎஸ்”

“ம்....”

”இது என்ன?”

“மூக்கு”

“இங்கிலீஷ்ல..”

“நோஸ்”

“உள்ளங்கையை மடிச்சுக்கோ...”

“ம்.. “

“பிரி..”

“பிரிச்சாச்சு..”

“இப்ப உன் கையில என்ன இருக்கு...”

“ஒண்ணுமில்ல...”

“அத இங்கிலீஷ்ல சொல்லு...”

“நத்திங்...”

”இப்ப நீ சொன்னதெல்லாம் சேர்த்துச் சொல்லட்டா?”

“ம்... சொல்லு..”

“ஆர்விஎஸ் நோஸ் நத்திங்...”

கரெக்ட்டுதானே. சின்னவளுக்குத் தெரிஞ்சதை விட எனக்கு என்ன பெரிசாத் தெரிஞ்சுடப்போகுது. :-)

(*) 

"அப்பாப்பா... என் கையைப் பிரியேன்..”

“வேண்டாம்.. அப்புறம் நீ அன்னிக்கி மாதிரி ஆர்விஎஸ் நோஸ் நத்திங்னு சொல்லி பழிப்பே....”

“இல்லப்பா... நீ பிரியேன்...”

“ம்... பிரிச்சாச்சு...”

“நடுப்பற இருக்கிற கத்தியை எடு..”

“அங்க ஒண்ணுமில்லையே...”

”ச்சும்மா.. இப்படி எடுப்பா... “

“ம்...சரி..”

“உன் மூக்கை அறுத்துக்கோ...”

“ம்.. அறுத்துண்டேன்..”

“கத்தியைத் திரும்பவும் என் கைக்குள்ள வச்சுடு...”

“வச்சாச்சு...”

“இப்ப மறுபடியும் கையைப் பிரியேன்...”

“ம்.. பிரிச்சுட்டேன்.”

“எங்கைலேர்ந்து இப்ப ரோஜாப்பூவை எடு..”

“எடுத்தாச்சு..”

“வாசனை வருதான்னு மோந்து பாரு...”

“ம்..”

“ஐயே!... உனக்குதான் இப்ப மூக்கே இல்லையே.... அப்புறம் எப்படி மோந்து பார்ப்பே...ஹெஹ்ஹே....”

......பரிகாசம் செய்துவிட்டுக் கைக்கொட்டிச் சிரித்த சின்னவளின் முகத்தாமரைக்காகவே இன்னும் எவ்வளவு தடவை வேண்டுமானாலும் மூக்கறு படலாம்...

என்னுடைய வாண்டுவின் ரகளைகள்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails