கல்யாணமான அபாக்கியசாலிகளுக்கு சர்வதேச அளவில்
ஒரு கட்டுரைப் போட்டி நடந்தது. தலைப்பு “மனைவி”. பல்லாயிரக்கணக்கானோர்
முண்டியடித்துக்கொண்டு கலந்துகொண்டனர். தங்களது உள்ளக்குமுறல்களைக்
கொட்டிப் பக்கம்பக்கமாக எழுதித்தீர்த்தனர். சாயந்திரம் இறுதித் தீர்ப்பு
என்று அறிவித்தார்கள். உணர்வுப்பூர்வமாக எழுதியவர்கள் தனக்குத்தான் முதல்
பரிசு என்று பார்ப்போரிடமெல்லாம் தம்பட்டம் அடித்துக்கொண்டிருந்தார்கள்.
ஆறு மணியானது. முடிவை அறிவிக்க மைக் பிடித்தார் ஒருவர். ”இந்த மகத்தான
போட்டியில் வெற்றி பெற்றவர் திருவாளர்.ஞொய்யாஞ்சிசீசீஈஈஈ” என்று
ஓலமிட்டார். திருவாளர் ஞொய்யாஞ்சியைச் சுற்றி ஈக்களாக செய்தியாளர்கள்
மொய்த்தார்கள்.
”உங்களுக்கு கல்யாணமாகி எவ்ளோ வருசமாச்சு?”
“இந்தப் போட்டிக்கு உங்க அனுபவம் எப்படி கைகொடுத்தது?”
“மனைவியைப் புரிஞ்சு வச்சுக்கிற அளவிற்கு நீங்க அவ்ளோ ஸ்மார்ட்டா?”
“நீங்க அடிபட்டதெல்லாம் எழுதி இந்தப் பரிசு வாங்கினீங்களா?”
என்றெல்லாம் பலவாறு கேள்வி எழுப்பினர். எல்லாவற்றிற்கும் அமைதியாக புன்முறுவல் பூத்துக்கொண்டிருந்தார் மிஸ்டர் ஞொய்.
“நீங்க எவ்வளவு பக்கம் எழுதினீங்க?”
என்கிற கேள்வி எங்கிருந்தோ அவர் காதுகளில் வந்து விழுந்த மறுகணம் அவர் எழுதிய கட்டுரையை எல்லோருக்கும் உரக்கப் படித்துக் காண்பித்தார்.
“She has a problem for every solution".
#ஞொய்யாஞ்சி என்று நாமகரணம் சூட்டி இவ்வுலகிற்கு இவரை தாரை வார்த்த வானவில் மனிதன் மோகன் அண்ணாவுக்கு இப்பதிவு சமர்ப்பணம்.
15 comments:
போட்டியில் வென்ற ஞொய்யாஞ்சிசீசீஈஈஈ”க்கு வாழ்த்துகள்..
நல்ல போட்டி...
மிஸ்டர் ஙொய்யாஞ்சி சூப்பர்மேன் தான் ஸார். அருமையான ரத்தினச் சுருக்கமான வரியை எழுதி அசத்திட்டாரே... ஹா... ஹா...
சூப்பர்! நல்ல புரிஞ்சு வெச்சிருக்காரே.... வாழ்த்துகள்.
அட!! நல்லயிருக்கே. ஞொய்யாஞ்சிசீசீஈஈஈ” அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
நல்லாவே புரிஞ்சு வைச்சுருக்கார்.... :)))
மோகன் அண்ணா.... திடீர்னு வந்து ஒரு அசத்தலான பதிவு போட்டுட்டு மீண்டும் காணாம போயிடறார்.....
'ஞொய்யாஞ்சி' அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
@இராஜராஜேஸ்வரி
ஞொய்யாஞ்சிக்கு வாழ்த்துச் சொன்னதுக்கு நன்றிங்க மேடம். :-)
@indrayavanam.blogspot.com
நன்றி.
@ பால கணேஷ்
இதை ரொம்ப ரசிக்கிறவர்கள் ஞொய்யாஞ்சி கட்சியைச் சேர்ந்தவர்கள் சார்! :-)
@கோவை2தில்லி
ஆமாம் சகோ! :-)
@புதுகைத் தென்றல்
:-)))))))))
@RAMVI
நன்றி மேடம். ஞொய்யாஞ்சி சொல்லச் சொன்னார். :-)
@வெங்கட் நாகராஜ்
நானும் அவரைத்தான் தேடிக்கிட்டிருக்கேன். நன்றி தலை.தலை. :-)
@திண்டுக்கல் தனபாலன்
நன்றிங்க தனபாலன். சொல்லிடறேன். :-)
Post a Comment