ஆஞ்சநேயருக்கு நமஸ்காரம்
ரொம்ப
நாளைக்கப்புறம் ”ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய ஜெய ராம்” என்ற மந்திர
ஸ்பீக்கர்கள் தூணுக்குத் தூண் ஒலிக்க நங்கைநல்லூர் ஆதிவ்யாதி ஹர விஸ்வ ரூப
பக்தாஞ்சனேயரின் திவ்ய தரிசனம் வாய்க்கப் பெற்றேன். எப்போதும்
திருவிழாக்கோலம் பூண்டிருக்கும் கோவில்.
செல்லும் வழியெங்கும்
தள்ளு வண்டியில் மாவடு விற்கிறார்கள். கொஞ்சம் காம்போடு. காம்பு கிள்ளியது
விலை குறைச்சல். மாமாக்களும் மடிசார் மாமிகளும் படி படியாக கேரி பேக்கில்
சுமந்து செல்கிறார்கள். ”மாதா ஊட்டாத சோத்தை மாங்கா ஊட்டும்பா” என்ற பழமொழி
சொல்லிச் சிரித்த ஒன்பது கெஜம் பாட்டி மங்களகரமான தீர்க்க சுமங்கலி.
சினிமா டைரக்டர்கள் யார் கண்ணிலாவது அம்புட்டால் அமுக்கி சதாபிஷேகம் செய்து
கொண்ட பணக்கார ஐயர் கேரக்டருக்கு ஆம்படையாள் வேஷம் கொடுத்துவிடுவார்கள்.
அடுத்த தீபாவளிக்கு டீவிக்கு டீவி பேட்டி கொடுக்கும் வாய்ப்பு பிரகாசமாக
இருந்தது.
ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸில் கூட்டம் அம்முகிறது.
இவையனைத்தையும் மீறி ஸ்வாமி சின்மயானந்தா ட்ரஸ்ட்டின் மொபைல் புக் ஸ்டோர்
பிரதானமாக என் கண்ணில் பட்டது. “ஷார். ப்ளீஸ் விஜிட் அஸ் ஷார்” என்று
வடக்கத்திப் பையன் கையைப் பிடித்து இழுக்காத குறையாக கேட்டான். தூரத்தில்
என்னைப் பார்த்தவுடனே கொக்கி போட தீர்மானம் செய்தவன் போல தோன்றியது. “வில்
ஹாவ் தர்ஷன் ஃப்ர்ஸ்ட், ஆன் மை ரிடர்ன் டெஃபெனட்லி ஐ வில் விஸிட்” என்று
அந்த ரஜினி ஸ்டைல் கேசம் கொண்ட விற்பனைப் பையனிடம் சத்தியம் செய்து
கொடுத்துவிட்டு நகர்ந்தேன். காவிப் பற்களில் ஸ்நேகமாகச் சிரித்தான்.
இங்கே 2/3/4 வீலர்களை விடவேண்டாம் என்று கண்டிப்புடன் சொன்ன போர்டுக்குக்
கீழே அனைத்து வாகன டினாமினேஷனிலும் நிறுத்தி அந்த போர்டுக்கு அழகு
காண்பித்திருந்தார்கள். காலணிக்கு என்று செய்யப்பட்ட பிரத்தியேக ஷெல்ஃப்
அலம்பி துடைத்து விட்டாற் போல இருந்தது. அனைவரும் சௌகரியமாக செருப்பு
ஜோடிகளை தரையில் விசிறி எறிந்து கழற்றி மாட்டிக்கொண்டார்கள். நால்வரில்
இருவர் காலால் பாண்டி விளையாடி செருப்பு மலைக்குள் தங்களது ஜோடிகளைத்
தேடிக்கொண்டிருந்தார்கள்.
கோயிலில் இம்முறை பாண்ட் போட்ட டீன் ஏஜ்
பெண் பிள்ளைகளின் ஆதிக்கம் நிறைய இருந்தது. கூடவே “யே அவன் என்ன சொன்னான்
தெரியுமா” என்ற வம்பும் இருந்தது. கோதண்டராமர் சன்னிதியில் வெளியில் நின்று
அஷ்டோத்திரம் ஒருவர் சொல்ல கடமையாய் ஒரு பட்டர் மாமா கர்பக்கரஹம் அருகே
உட்கார்ந்து துளிசிதளத்தை ராமர் காலடியில் வாயைத் திறக்காமல்
சமர்ப்பித்துக்கொண்டிருந்தார். சேவிப்பவர்கள் கண்ணத்தில் போட்டுக்கொண்டு
நகர்ந்தார்கள்.
கால் மேல் கால் ஏறாமல், தோளுக்கருகில் ”ஸ்...ஸ்”
என்று உஷ்ண மூச்சு விடாமல், ”சந்நிதியை விட்டு நில்லுங்கப்பா. மத்தவங்க
எல்லாம் சாமி பார்க்க வேண்டாமா?” என்று அதிகாரக் கூச்சலில்லாமல்
பக்தர்களுக்கு அருள்பாலித்துக்கொண்டிருந்தார் விஸ்வரூப ஆஞ்சநேயர்.
“புத்திர் பலம் யசோ தைர்யத்தை” ஒரு நான்கு முறை சொல்லி கண்ணத்தில்
போட்டுக்கொள்ளும் போது தோளில் மோதிக்கொண்டே சென்றார் ஒரு பக்தகோடி.
இத்தனைக்கும் அவருக்கும் எனக்கும் சென்னைக்கும் தென்னிலங்கைக்கும்
இருக்கும் தூரம் காலியாகக் கிடந்தது. சில ப்ரஹஸ்பதிகளுக்கு இடிபாட்டோடு
சுவாமி தரிசனம் செய்தால்தான் மனசு திருப்தியடையும்.
கற்பூரம்
தட்டிப்போட்ட தீர்த்தம் ஒரு உத்தரணி குடித்துவிட்டு வேணுகோபாலனை தரித்தேன்.
ஹரித்திராநதி தெப்பக்குளத்தின் நடுவில் வீற்றிருக்கும் வேணுகோபாலன்
நினைவில் வந்து வேணுகானம் வாசித்தார். குங்கும பிரசாத்தை அள்ளக்கூடாது
என்பதற்காக சுண்டி விரல் நுழையும் ஓட்டைக்குள் அடைத்துவைத்திருக்கும்
தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்த அந்த லோக்கல் ஐன்ஸ்டீன் வாழ்க! ஆஞ்சநேயரின்
உதவியுடன் எடுத்து நெற்றியில் தரித்துக்கொண்டேன். வடைமாலையிலிருந்து
உருவிய வடை பிரசாதமாகக் கொடுத்தார்கள். ஆளுக்கு இரண்டு. வெளியே சென்று
சாப்பிடவும் போர்டுக்கு கீழேயே வாயூறிய ஆவலில் நாலு பேர் கடித்துச்
சாப்பிட்டார்கள். “வெளியே போய் சாப்பிடுங்க சார்” என்ற செக்கியூரிட்டிக்கு
வேலை கொடுத்தார்கள்.
சின்மயானந்தா இளைஞன் வழிமேல் விழி வைத்துக்
காத்திருந்தான். தீவிரவாதியிடம் சரணடையும் அப்பாவி போல நேரே மொபைல் புத்தக
நிலையத்துக்குள் நுழைந்தேன். சின்மயானந்தா என்னை ஆட்கொண்டார். ஆறுக்கு
நான்கில் இருந்த மூன்று பக்கத்தை கண்களால் துழாவினேன். சின்மயானந்தரின்
“கைவல்யோபநிஷத்தும் நீதிக்கதைகளும் வாங்கிக்கொண்டேன். “தேங்க்யூ ஷார்”
சொன்னான் அந்த இளைஞன்.
“வீட்ல அவ்ளோ புக் இருக்கு. இன்னமும்
ரெண்டா?” என்று இடித்த என் தர்மபத்தினியிடம் “இது போன்ற விஷயங்களுக்கு
வாங்கும் சக்தி படைத்தவர்கள் சப்போர்ட் செய்தால் தான் அவர்களுக்கு
என்கரேஜிங்காக இருக்கும்” என்று சாதுர்யமாகப் பேசி சேதாரத்திலிருந்து
தப்பித்தேன். ஆஞ்சநேயருக்கு நமஸ்காரம்.
பட உதவி: indianewsreel.com
-
33 comments:
நாலாவது பாரா... ஆஹா..உண்மை..உண்மை!
சேவிப்பவர்கள் கண்ணத்தில்?.போட்டுக்கொண்டு...!
ஒன்பது கஜ பாட்டியின் திரை வாய்ப்பு
பற்றிய கற்பனையை ரசித்தேன்.
நாலாவது பத்தி நம்ம மக்களின் பக்கத்தை நன்றாகவே காண்பித்திருக்கிறது
//கோயிலில் இம்முறை பாண்ட் போட்ட டீன் ஏஜ் பெண் பிள்ளைகளின் ஆதிக்கம் நிறைய இருந்தது. கூடவே “யே அவன் என்ன சொன்னான் தெரியுமா” என்ற வம்பும் இருந்தது//
நீங்க இதுக்கா கோவிலுக்கு போனீங்க?
:-))
கண்ணத்தில்............. போட்டுக்கொண்டேன். ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்
ஆஞ்சி தரிசனம் உங்கள் மூலம் எங்களுக்கும்.... நன்றி மைனரே.... :)
:)super visit..
ஞாயிறு அன்று இங்கே அனுமன் ஜெயந்தி (மார்கழியில்தானே என்று கேட்ககூடாது. வடக்கே பொளர்ணமியன்றாம். வடக்குக்கும் தெற்குக்கும் நடுவில் இருப்பதால் இங்கே இப்படி இருக்கலாம் என நினைக்கிறேன்.
ஊர்வலம், அபிஷேகம் என ஆஞ்சி ரொம்ப பிசி. நங்கநல்லூர் ஆஞ்சியை தரிசனம் செய்து 12 வருடங்கள் ஆகிறது. உங்க பதிவு படிச்சதும் ஒரு எட்டு போய் வந்த திருப்தி. :)
முன்னொரு முறை இதே கோவில் விசிட் பற்றி இதே வலைப்போவுல எழுதியதாக ஞாபகம்..
எத்தன தடவ எழுதினாலும் சலிப்பு தட்டாம இருக்கு.. அது உன்னோட எழுத்தின் வலிமை.. கிரேட்.. கீப் இட் அப்..
And As puthukaith thendral pointed out.. yes, it's 'anju's B'day here now..
அருமையான எழுத்து நடை.
உங்களுடன் சேர்ந்து நான்களும் தரிசித்தோம்.
நன்றி.
// “வீட்ல அவ்ளோ புக் இருக்கு. இன்னமும் ரெண்டா?” என்று இடித்த என் தர்மபத்தினியிடம் //
அப்டியா ?
அப்ப 11-Mar-12 அன்னிக்கும் அடி விழுந்திருக்கு. தெரியாமப் போச்சே.
இனிமே ரயில்,யானை,வானவில்,அருவி,
பெண்களூர் பிகர்கள் லிஸ்ட்ல உங்களோட எழுத்து நடையையும் சேர்த்துட வேண்டியத்தான். எத்தனை முறை அனுபவித்தாலும் சலிப்புதட்டாத ஒரு சுவாரசியம்! :-)
2000 வருடம் பழவந்தாங்கலில் இருக்கும் மாமா வீட்டிலிருந்து கொண்டு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருந்த சமயத்தில் இரண்டு முறை இந்த கோவிலுக்கு சென்றிருக்கிறேன்.
மாவடுவா!!!!!!! எங்கு பார்த்தாலும் இதே பேச்சா இருக்கு.....
ஆஞ்சநேய தரிசனம் அருமை
ஆஞ்சனேய தர்சனம் கிடைத்தது.
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
@ஸ்ரீராம்.
:-)
@raji
ஆஞ்சநேயர் தரிசனம் மட்டும் கண்களுக்குத் தெரிந்தால் நான் மஹான் ஆகிவிடுவேன் மேடம்! :-)
@துளசி கோபால்
மேடம்... அதென்ன அவ்வளவு “ண்”... எனக்குப் புரியவில்லை. :-)
@வெங்கட் நாகராஜ்
நன்றி தல! :-)
@siva sankar
Thank you! :-)
@புதுகைத் தென்றல்
கருத்துக்கு மிக்க நன்றி. மார்கழி இப்பவோ அவரை திருப்திப்படுத்தினால் சரிதான். :-)
@Madhavan Srinivasagopalan
பாராட்டுக்கு நன்றி மாதவா! :-)
@Rathnavel Natarajan
நன்றி சார்! :-)
@விஸ்வநாத்
விசு! குடும்ப ரஹஸ்யத்தை பொதுவில போட்டு உடைக்காதே! வீட்டுக்கு வீடு Staircase! :-)
@தக்குடு
அன்புக்கு நன்றி தக்குடு ஸாப்! புது மாப்பிள்ளைக்கு ரப்பப்பரி.... :-)
@கோவை2தில்லி
ஒரு மிஸ்டிகல் சூழல் அங்கு நிலவுவதை நம்மால் உணரமுடியும் சகோ! கருத்துக்கு நன்றி. :-)
@T.N.MURALIDHARAN
வருக. நன்றிங்க.. :-)
@மாதேவி
புத்தாண்டு வாழ்த்துக்கு நன்றி. உங்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள் உரித்தாகுக!! :-)
சார் எங்க இடதுக்கு வந்து இருக்கேள் ரொம்ப நன்னா எழுதி இருக்கேள் சந்தோஷம்
இத்தனைக்கும் அவருக்கும் எனக்கும் சென்னைக்கும் தென்னிலங்கைக்கும் இருக்கும் தூரம் காலியாகக் கிடந்தது. சில ப்ரஹஸ்பதிகளுக்கு இடிபாட்டோடு சுவாமி தரிசனம் செய்தால்தான் மனசு திருப்தியடையும்.
கற்பூரம் தட்டிப்போட்ட தீர்த்தம் ஒரு உத்தரணி குடித்துவிட்டு வேணுகோபாலனை தரித்தேன்
super!
அசத்தலான நடையில் பதிவு..
குறிப்பாக ஷார்,விஜிட் அஸ்' :) நல்ல நுண்பார்வையும் மனிதர்களைப் படிக்கும் வழக்கமும் இருக்கிறது உங்களுக்கு.
@Guru
நன்றி சார்! :-)
@ரிஷபன்
Thank you Sir! :-)
@மாலதி
கடைசி இரண்டு பதிவுகளாக நன்றி மட்டும் நவில்கிறீர்கள். நானும் நன்றி கூறிக்கொள்கிறேன். :-)
@அறிவன்#11802717200764379909
கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சார்! :-)
Post a Comment