குழந்தையின் மழலையை ரசிப்பது போல இந்தக் கவிதை மாதிரி வாக்கியங்களையும் ரசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். சகல துக்கங்களையும் பொறுத்துக்கொள்ளும் ஸகிக்களுக்கு வந்தனம்.
சேலையில் தொட்டில் கட்டி
சாலை வேலை பார்க்கும் அம்மாவுக்கும்
கலர் புடவை கட்டி
காக்கி சட்டை போட்டு
ஆட்டோ ஓட்டும் அம்மணிக்கும்
பத்து செங்கல்லை தூக்கும் சித்தாளாய்
வேலை பார்க்கும் பெரியாளுக்கும்
நாலு வீடு பத்து பாத்திரம் தேய்த்து
நாலு எழுத்து படிக்க அனுப்பும் தாயம்மாவுக்கும்
கல் கணவனிடமும் புல் புருஷனிடமும்
குப்பை கொட்டும் குணவதிகளுக்கும்
அந்நியனாய் அயல் தேசம் சென்ற புதல்வனிடம்
கண்ணியமான பாசத்திற்காக ஏங்குபவளுக்கும்
உயிரை ஒருவனுக்கு கொடுத்து உடம்பை
மற்றவனுக்கு கொடுத்தவளுக்கும்
வறுமையில் தன்னை தொலைத்து கரு அறையில்
சிவப்பில் வாழும் 'அவளு'க்கும்
குடும்பத்தை பேண பஸ் பயண
கூட்டத்தில் இடிபடுபவளுக்கும்
காதலிப்பவளுக்கும்
காதலித்து கைவிடப்பட்டவளுக்கும்
நேரிலும் நிழலிலும்,
விண்ணிலும் மண்ணிலும்
இக பர சுகமளிப்பவளுக்கும்
என் சிரம் தாழ்ந்த
மனம் கனிந்த
மகளிர் தின வாழ்த்துக்கள்.
-இது கவிதை அல்ல கவிதை மாதிரி
--இது ஒரு மீள் பிரசுரம்
14 comments:
அருமை!
மகளிர் தின சிறப்புப் பதிவு மிக மிக அருமை
மனம் தொட்டுப் போகும் இதுதான் கவிதை
சர்வதேச மகளிர் தினமான இன்று அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்ந்துகள்...
கவிதை மாதிரியே நல்லா இருக்கு.... கவிதை எழுதினா! :)
இன்னும் எழுதுங்க மைனரே...
பாராட்டு மாதிரினு வச்சுக்குங்க....னு சொல்ல முடியலே. நல்லாவே இருக்குங்க. வாழ்த்துக்கள்.
நன்றி நன்றி.கவிதைக்கும் பாராட்டு !
ரொம்ப நல்லா இருக்கு.
கவிதை அழகாக உள்ளது.
மகளிராக ஆகப் போகும் மகள்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்..
@koodal bala
நன்றி! கருத்துக்கும் முதல் வருகைக்கும். :-)
@Ramani
கவிதை வாயால் கவிதை என்று பாராட்டுப்பெறுவது பெருமை!! நன்றி. :-)
@வெங்கட் நாகராஜ்
தங்களின் அதீத அன்பிற்கு நன்றி தலைநகரமே! :-)
@அப்பாதுரை
நன்றி சார்! :-)
@ஹேமா
பாராட்டுக்கு நன்றி சகோ! :-)
@கோவை2தில்லி
பாராட்டுக்கு நன்றி சகோ! :-)
@மோ.சி. பாலன்
பாராட்டுக்கு நன்றிங்க.. :-)
Post a Comment