கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தின் வாசலில் எப்போதும் 'ஜே ஜே' என்று தேர்
கூட்டம் திருவிழா கூட்டம் போல இருக்கும். ரேஸ் கோர்ஸ் எதிரில் கிண்டி
தொடர்வண்டி நிலையம் உள்ளதால் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள இடம். இந்த
ஜென்மமே ரேஸ் விளையாட எடுத்தது போல கர்ம சிரத்தையாக ஒரு கூட்டம் எப்போதும்
அங்கே சுற்றி அலைவதுண்டு. ரேஸில் தோற்ற பாபப்பட்ட ஆத்மாக்கள் நாளை எப்படி
ஜெயிப்பது என்ற நினைப்பிலும், ஜெயித்த கோஷ்டியினர் நாளை எப்படி இன்னும்
அதிகம் கெலிப்பது என்று அந்தரத்தில் பறந்தும் சாலையை கடந்த வண்ணம்
இருப்பர்.
இருசாராரிலும் ஒரு சிலர் கார், பஸ் மற்றும் சைக்கிளைக்கூட இருபக்கமும் போக விடாமல் ரோடில் நின்று லாப நஷ்ட கணக்குளையும் அன்றைய செலவாணியையும் பற்றி தீவிர கலந்துரையாடலில் ஈடுபட்டிருப்பதை காணலாம். இதற்கிடையில் ஒரு காரின் இடது பக்க கண்ணாடியில் தனது முகம் பார்க்க வருவதுபோல் வந்த ஒரு ஆட்டோ அப்படியே அதன் முன் சென்று பிள்ளையாரை பிரதக்ஷிணம் வரும் பக்தன் போல் இடமிருந்து வலம் திரும்பி, வலது பக்கத்தில் பல இடையூறுகளை கடந்து வந்து கொண்டிருந்த எம்.டி.சி பேருந்தை நிற்க வைத்து வலது கோடி ரேஸ் கோர்ஸ் சுவர் பக்க ஓரத்தில் இருந்த தனது "xxxx xxxx சங்க ஸ்டாண்டு" வில் நின்றது.
அதன் ஓட்டுனர் ஒரு பீடியை எடுத்து பற்றவைத்தார். கணேஷ் பீடி பிடிப்பது ஒன்றுதான் இப்புவியில் இந்த தருணத்தின் அதிமுக்கியமான வேலை என்று ஒரு பஸ், கார் போன்றவற்றை நிறுத்திய வெற்றியின் களிப்பு அவர் முகத்தில் தெரிந்தது. இவ்வளவு நடந்தது ஒன்றுமே தெரியாததுபோல தன்னுடைய சக நண்பருடன் தினத்தந்தியில் வந்த அன்றைய முக்கிய கள்ளக்காதல் சம்பவங்கள் பற்றிய விவாதத்தை தொடர்ந்தார்.

இது போல் நிகழ்ச்சிகளை சென்னையில் பலரும் எதிர்கொண்டிருக்கலாம். சில பல நிகழ்வுகளின் அடிப்படையில் இந்த கீழ்வரும் ஆட்டோ வகைகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது.
1. அச்சம் தரும் (அச்சமற்ற)ஆட்டோ
ஏதோ
ஒரு எஃப்.எம் பாட்டு அலறிக் கொண்டிருக்கும். முன் சீட்டில் காக்கி
சட்டைக்கு பதில் கலர் சட்டை உட்கார்ந்திருக்கும். ஒட்டுபவருக்கு முன் பகுதி
முடியில் கட்டாயம் சிகப்பு வண்ண சாயம் பூசியிருக்கும். சீட்டில் இடம் இருந்தால் கூட
எப்போதும் ஓவர்லோடு அடிக்கும் போது ஒருவரை பக்கத்தில் உட்கார்த்தி சவாரி
அடித்த பழக்கத்தால் கொஞ்சம் இடம் விட்டு ஒரு 45 டிகிரி சாய்வாக ரோடை பார்க்க
உட்கார்ந்திருப்பார். ஆட்டோவின் பின் புறம் சிவப்பு/மஞ்சள் வண்ணத்தில்
ஆங்கில எக்ஸ் குறி அல்லது ஃபார்முலா ஒன் நம்பர் மிக பெரியதாக இரண்டு அல்லது
மூன்று முறை ஸ்டிக்கராய் ஒட்டப்பட்டிருக்கும். இதுதான் அச்சமற்ற ஆட்டோவின் அடையாளங்கள்.
இவர்கள் லெஃப்ட்ல இன்டிகேட்டர் போட்டு, ரைட்ல கையை காட்டி, நேராக நகைச்சுவை
நடிகர் விவேக் சொன்னது போல் செல்வார்கள். எதாவது கேட்டால் காண்டாகி விடுவார்கள்.
2. தக்ஷிணாமூர்த்தி ஆட்டோ
கைலி
அல்லது லுங்கி உடுத்தியிருப்பார். பேண்ட் கிடையாது. எப்போதும் கண்கள் வெளியே எங்கோ
பார்த்துக் கொண்டிருக்கும். ஒரு காலை மடக்கி சிவன் கோவிலில் கோஷ்ட
தக்ஷிணாமூர்த்தி அமர்ந்த திருக்கோலத்தில் சேவை சாதிக்கும்படி உட்கார்ந்திருப்பார். பின்புறம் ஒபாமாவே
வருவதாக ஓசை வந்தாலும் மெய்வருத்திக் கொள்ளமாட்டார். ஆட்டோ இருபது
கிலோமீட்டர் வேகத்தில் சென்றால் அது அதிசயம். அவர் மட்டும் சாலை வரி
செலுத்துபவர் போல நடு சாலையில் செல்வார். சில தக்ஷிணாமூர்த்திகள் இந்தப் பாராவின் முதல் வரியை பொய்யாக்கும் வகையில் பேண்ட்டோடும் உலவுவார்கள்.
3. சவாரி ஆட்டோ
ரோடில் மையமாக
இருபது கி.மீயில் இம்மியளவும் வலது இடது திரும்பாமல் ரசமட்டம்
பிடித்தாற்போல் ஒரே நேர்கோட்டில் சென்றால் அது சவாரி ஆட்டோ. ஹார்ன் அடித்து முன்னால் சென்று முறைத்தால் “போடா கய்தே” என்னும் பட்டம் உங்களுக்கு நடுரோட்டில் வழங்கப்படும்.
4. சவாரி எதிர்நோக்கும் ஆட்டோ
சாலையின்
இடது ஓரத்தில் இருந்து பத்து அடி உள்ளே மித வேகத்துடன் சென்று கொண்டிருக்கும், மனைவி பிள்ளைகளுடன் பிராணாவஸ்தையில் நிற்கும் கணவர்களைப் பார்த்தோ, யாரையோ எதிர்
நோக்கும் உதட்டுச் சாய புஷ்டியான இளம் பெண்ணிடமோ, தேமேன்னு ஓரமாக நிற்கும்
தேசல் பாட்டியையோ சாலையின் இருமருங்கிலும் பார்த்தால் சடாரென்று எந்த
பக்கமாக இருந்தாலும் பல்டியடித்துத் திருப்பி தலையை வெளியே நீட்டி "எங்க போணும்?" என்றால்
அது சவாரி எதிர்நோக்கும் ஆட்டோ. ஆனால் நீங்கள் எந்தத்திசைக்கு கூப்பிடுகிறீர்களோ அத்திசைக்கு கும்பிடு போட்ட “அங்கெல்லாம் வராது” என்று பதிலுரைப்பர்.
5. "டர்" ஆட்டோ
ஒரு தகர டப்பாவில்
கயிறு கட்டி, தார் சாலையில் கட்டி வேகமாக இழுத்தால் வரும் சப்தம் கேட்டால்
அது ஒரு நவீன யுக சப்த ஆட்டோ. ஊர் திருவிழாக்களில் மரணக்கிணறு என்று ஒரு
ஐட்டம் உண்டு. கிணறு போன்ற ஒரு பள்ளத்தில் படிகட்டி ஒரு மோட்டார்பைக்கில் காது குடையும் சப்தத்துடன் வேகமாக மேலும் கீழும் மரணவேகத்தில் ஒட்டுவர். அதுபோன்று
"டர்ர்ர்ர்ர்ர்ர்ர்................................." என்ற ஒலியுடன் ஒளி
என சென்று கேட்டவர்களின் காதை கே. காதாக மாற்றும் ஒலி மாசு ஆட்டோ.
6. "ஷேர்" ஆட்டோ
ஆண் பெண், மணமானவர்
ஆகாதவர், கிழவன் கிழவி, குளித்தவர் குளிக்காதவர், உடலுக்கு/சட்டைக்கு
நாற்ற மருந்து அடித்தவர் அடிக்காதவர், ஒல்லி பெண் குண்டு பையன், ஒல்லி
பையன் குண்டு பெண்மணி, மொபைலில் சதா சிரித்துப் பேசிக்கொண்டே பயணம் செய்பவர்,
வெளியே வேடிக்கை பார்த்து உள்ளே பக்கத்து பெண்ணின் பேச்சை கேட்பவர்கள்,
நடுத்தர வயது, முடி உள்ளவர், முன் பின் சொட்டை, மஞ்சள் துணிப்பை வைத்திருப்பவர்,
ஆபீஸ் பேக் சுமப்பவர், இளவயது ஜோடி, சில்லரை வைத்திருப்பவர் இல்லாதவர்,
அரசுப் பணி தனியார் பணி சொந்த 'தொழில்' செய்பவர், சேலை அணிந்திருப்பவர்
சுடிதார் போட்டவர், கண்ணாடி அணிந்தவர் அணியாதவர், ஹிந்தி பேசுபவர்
'தமிலில்' பேசுபவர்கள் என பால், மொழி, இன, மத வேறுபாடுகளின்றி ஒரே
சவாரியில் அரை பஸ் கூட்டத்தை ஏற்றி பயணத்திற்கு பத்து ரூபாய்க்கு வருவது
இந்த பங்குச்சந்தை(ஷேர்) ஆட்டோ.
இந்த பிரிவுகளுக்கு அப்பாற்பட்ட நல்ல உள்ளம் படைத்த ஆட்டோகாரர்கள் இப்பட்டியலுக்காக என்னை மன்னிப்பார்களாக! ஏதேனும் தவறிருப்பின்.
பின் குறிப்பு: இதை எழுதும் போது வெகு தொலைவிலிருந்து எஸ்.பி.பி "நான் ஆட்டோக்காரன்.... ஆட்டோக்காரன்..... நாலும் தெரிஞ்ச ரூட்டுக்காரன்" என்று ரஜினிக்காக பாடிக்கொண்டிருப்பது மெலிதாக காதில் விழுந்தது.

படம் நன்றி: http://www.rickshawchallenge.com
-
14 comments:
பங்கு சந்தை ஆட்டோ பற்றிய குறிப்பை மிகவும் இரசித்தேன்.
என்னடா இது தினம் எழுதுறாரேனு பார்த்தேன். இதான் விசயமா?
வாழ்த்துக்கள்.
நல்ல ஆராய்ச்சி :)
இதுல ஸ்கூல் ஆட்டோ-வை விட்டுட்டீங்களே ! ! பைகள் அனைத்தும் வெளியே தொங்க பிள்ளைகள் உள்ளே தொங்க... அபாயகரமான ஆட்டோ அது..
//"xxxx xxxx சங்க ஸ்டாண்டு"//
மன்னார்குடி சசிகலா பேரவைன்னு சொல்லுறதுல என்ன தயக்கம்.
தக்ஷிணாமூர்த்தி ஆட்டோ விளக்கம்..அசத்தல். ஆர்.வி.எஸ். ஆட்டோ ஸ்டாண்ட் விரைவில் உதயம்.
பங்கு ஆட்டோவில் பலமுறை பயணித்து நொங்கு வாங்கி இருக்கிறேன். நெரிசல் அதிகமானால் துக்ளியூண்டு நாற்காலியில் குத்த வைத்தே தி.நகர் டு அண்ணா நகர் வரைக்கும் அழைத்து செல்வர் இச்சாரதிகள். பங்கு ஆட்டோ பயணமே அலாதிதான்(!). பஸ் பயணமே மேல் என்றிருக்கும். ஷேர் செய்யலாம். அதுக்காக மொத்த ஷேரையும் இழந்துட்டு புட் போட்ல தொங்கிட்டு கூட சில பேர் வருவாங்க. பீக் அவர்ஸ்ல அந்தக்காட்சி கண்ணில் படும்.
யூடான்ஸ் நட்சத்திரத்துக்கு வாழ்த்துகள்.
நல்லதொரு ஆராய்ச்சி.
நெடுநாட்களுக்கு முன் இதைப் படித்ததாக நினைவு.
@kg gouthaman
நன்றி சார்! :-)
@அப்பாதுரை
ஆசீர்வாதத்துக்கு நன்றி தலைவரே! :-)
@சமுத்ரா
நன்றி சமுத்ரா! :-)
@Ponchandar
கரெக்ட்டுதான் விடுபட்டுப் போச்சு! அதான் டிஸ்கிரிப்ஷன் நீங்க சேர்த்துட்டீங்களே! நன்றி! :-)
@! சிவகுமார் !
ஆ ஊன்னா ஏம்பா அரசியலுக்குப் போறீங்க... எனக்கு அரசியல் பண்ணத் தெரியாதுங்க...
கருத்துக்கு நன்றி சிவா! :-)
@கோவை2தில்லி
வாழ்த்துக்கு நன்றிங்க சகோ! :-)
Post a Comment