"........."
"இது...”
"கிட்ட
கொண்டா. ஓ.. பீமாராவ் அப்பார்ட்மெண்ட்ஸா! ஷ்ட்ரெய்ட்டா போய் ஃப்ர்ஷ்ட்
லெஃப்ட்டு அப்புறம் ஒரு பெரிய நாட்டார் கடை வரும். அத்தத் தாண்டி ஒன்னு....
ரெண்டு..... மூனாவது லெஃப்ட்”
“அதோ அந்த மரத்தடிக்கு கீழ ஒரு சிகப்பு கலர் இன்னோவா நிறுத்தியிருக்கே அதுக்கு அப்புறமா வர்ற லெஃப்ட்டா?”
“ஆமா. அங்க ஒரு பொடிப்பய குரங்குபெடல்ல சைக்கிள் ஓட்டிக்கிட்டு போறானே அது தாண்டி”
“அவன் ரைட்லன்னா போறான்”
“இல்ல.. அதையும் தாண்டி ஒரு ஆன்ட்டி போவுதில்ல, அங்க ஒரு லெஃப்ட் இருக்குங்க”
“நடு ரோட்ல ஆட்டோவும் அதுக்கு ஓரமா ஒரு ஸ்டாண்ட்டும் இருக்கே அதுக்கு பக்கத்திலயா?”
“ஆமாமா...”
“தேங்க்ஸ்”
***
”இந்த அட்ரெஸ்..”
“அச்சச்சோ!
இது இந்த ஏரியாவுல வராதுங்களே! வந்த வழி தப்புங்க. ஒன்னு பண்ணுங்க...இப்ப
வர்ற இம்மீடியட் லெஃப்ட்ல கட் பண்ணி கடைசி லெஃப்ட்ல திரும்புங்க”
“இங்க தான் மூனாவது லெஃப்ட்லன்னு சொன்னாங்களே”
“தப்பு
சார்! சொன்னாக் கேளுங்க... நீங்க இப்ப வர்ற லெஃப்ட்ல திரும்பி கடேசில ரோடு
முட்டற வரைக்கும் போங்க.. அங்க போயி ஒரு லெஃப்ட் எடுங்க! அங்க கேளுங்க
கரெக்ட்டா சொல்லுவாங்க”
“தேங்க்ஸ்ங்க”
“ம்... போய்ட்டு வாங்க..”
*****
“இந்த அட்ரெஸ்.....”
“ஹலோ.. இப்பதானே சொன்னேன்.. முத லெஃப்ட் அப்புறம் மூனாவது லெஃப்ட்”
“அங்க அப்பார்ட்மெண்ட்டும் இல்ல.. ஈ காக்கா இல்ல. மனுஷ வாடையே காணோம்ங்க”
“அப்ப... நேரா போய் ரெண்டாவது லெஃப்ட்ல திரும்பிப் பாருங்களேன்”
“நீங்க எங்கூட வந்து கொஞ்சம் வழி காமிக்கமுடியுங்களா?”
“எனக்கு வேலை இருக்குப்பா..”
“நா அலையுற அரை மணி நேரமா இங்க தான் உட்கார்ந்திருக்கே. என்னப்பா வேலை உனக்கு.”
“ஹலோ. நக்கலா! சும்மா போய்யா!”
“ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்களேன்”
“சரி..சரி... பார்க்க பாவமா இருக்க... வண்டிய எடு... காட்டுறேன்...”
*********
“யோவ். நிறுத்துய்யா.. ரெண்டாவது லெஃப்ட்டுக்கு பதிலா ஃபாஸ்டா நேராப் போறியே!”
“பரவாயில்ல... ஒரு டிக்கெட் கெடச்சுதுல்ல...”
“என்னய்யா சொல்ற...”
”பீமாராவ்
அப்பார்ட்மெண்ட்ல ஒருத்தருக்கு இன்னியோட ஆயுசு முடியது. தூக்கிக்கிட்டு
வரச்சொன்னாங்க.. அதுக்குதான் வாடகைக்கு சைக்கிள் எடுத்து அலைஞ்சுகிட்டு
இருந்தேன். ஒன்னும் தகயலை...”
“யோவ்.. யோவ்.. நிப்பாட்டு...நிப்பாட்டு... ஒன்னும் புரியலை... நீ யாரு...”
“நான் யமதர்மன் டீம்ல அப்பெரண்டீஸா போன அஷ்டமில நல்ல மரணயோகத்தில ஜாயின் பண்ணியிருக்கேன். இன்னிக்கு தான் என்னோட முதல் பூலோக அசைன்மெண்ட். வெறுங்கையோட திரும்ப
முடியுமா?.. ம்.. சொல்லுங்க...”
“டேய்.. சும்மா..
அரைபெடல் போட்டு சைக்கிள்ல தள்ளாடிக்கிட்டு போகும்போது எனக்கு
குதிக்கத்தெரியாதுன்னு நினைச்சியா... டபுள்ஸ் அடிச்சே எமலோகத்துக்கு
கொண்டுபோய்டுவியோ! கிறுக்கனா நீ! போடாங்.....”
“வேணாம்... சொன்னாக்கேளுங்க... குதிக்காதீங்க... வேணாம்... ”
***********
“கங்கிராட்ஸ்... பீமாராவ் அப்பார்ட்மெண்ட்ஸ் கேஸ் கிடைக்கலைன்னாலும் இவன தூக்கிக்கிட்டு வந்துட்ட....”
“எவனாயிருந்தலும் தண்ணி லாரி வரும்போது குறுக்கால குதிப்பான்னு சொன்னீங்க.. அதே மாதிரி நடந்தது பாஸ்”
“இந்தா.... அடுத்தது இதுதான் அட்ரெஸ்....”
-
பட உதவி: www.ebay.in
பின் குறிப்பு: முழுவதும் வசனமாக ஒரு கதை.
-
32 comments:
Sooper
ரசித்தேன். (ydr கதை நானும் ஒண்ணு எழுதி வச்சிருக்கேன். ரெண்டு வருசமா எடிட் பண்ணிட்டிருக்கேன் :)
Awesome! Neatly sketched. நல்ல அஸைன்மெண்ட், ப்ராஜக்ட் கைடு, ’டெட்’லைன். :-)
நல்ல நகைச்சுவை.. வித்யாசமாக, பிரமாதமாக இருக்கு.
வசனகதை ....
விதி வலியது..
அடுத்த முறை யாராவது அட்ரஸ் கேட்கும் போது கவனமா இருக்கணும்...
இனிமே யாராவது அட்ரஸ் கேட்டா பதில் சொல்லுவோம்....?
ப்ராஜெக்ட்னா இப்படினா இருக்கனும்! நமக்கும் வந்து வாய்கர்தே!! :))
இந்தக் கதை மூலம் உங்க முகவரியை எழுதிட்டீங்க ஆர்விஎஸ்.
வித்தியாசமா இருந்தது.
@BalajiVenkat
Thanks Balaji! :-)
@அப்பாதுரை
சார்! உங்க யமதர்மன் கதை போடுங்க. சுவாரஸ்யமா இருக்கும். ஏன் ஒரு வருஷமா டிங்கரிங் பண்றீங்க... போதும்.. :-)
@அநன்யா மஹாதேவன்
‘டெட்’லைன்... ரொம்ப பிடிச்சது. க்ரேட். :-)
@RAMVI
நன்றிங்க மேடம். :-)
@இராஜராஜேஸ்வரி
ஆமாம் மேடம். விதி வலியது. இந்த மாதிரி கதையையும் படிக்கனும் பாருங்க. :-)
@Ponchandar
அட்ரெஸ் கரெக்ட்டா சொன்னாப் போதும். உயிர் பிழைக்கலாம் சார்! :-)
@ஸ்ரீராம்.
சொல்லனும். கரெட்டா சொல்லனும். :-)
@தக்குடு
ப்ராஜெக்ட் நம்மளை கொண்டு போய்டுது. :-)
@சுந்தர்ஜி
முத்திரையான கமெண்ட் ஜி! நன்றி. :-)
@கோவை2தில்லி
ரசித்ததற்கு நன்றி சகோ! :-)
Super... :)
(பாரின் போயிட்டிங்களா... எங்க ஆளக் காணோம்.. அப்படின்னு கேட்கக்கூடாது --- ஆணிகள் கொஞ்சம் ஜாஸ்தி Anna :) )
நல்ல கதை.... :)
நேற்றைய தினத்தில் வந்த ஒரு ஹிந்தி பேப்பரில் ஒரு ஜோக்:
Accountant - எம தூதரிடம்: எனக்கு இன்னும் நேரமே வரலையே அதுக்குள்ள எதுக்கு என்ன தூக்குனீங்க?
எம தூதர்: சும்மா பேசாதே... மேலே க்ளோசிங் டைம். Balance Sheet Tally ஆகலை.. அதான் உன்னைத் தூக்கிட்டோம்...
முகநூல் போனதால் வலைப்பூ சுருக் ஆகிவிட்டது.. இந்த சுருக் ’நறுக்’..
எம தர்மரு இப்படியா ரூட் பிடிச்சு போட்டு தள்ளறாரு...இனி யார் கேட்டாலும்
அவங்க அட்ரஸ கேட்டுட்டுத்தான் ரூட் அட்ரஸ் கொடுக்கணும்...
பூலோக அசைன்மென்ட் எப்பிடி எல்லாம் வருதுடா சாமி!
ஆரம்பிச்சுட்டேன்.. முடிக்கத் தெரியாம தொங்குது RVS... may be we should collaborate.
இப்போ புரியுது....
அப்ரண்டிச நம்பினா.. இப்படித்தான்.. பின்லாடன் அட்ரச.. ரொம்ப நாள் தேடிட்டே இருந்தாங்க போல..
@இளங்கோ
நன்றி! :-)
@வெங்கட் நாகராஜ்
இந்த ஜோக் கூட ரொம்ப நல்லா இருக்கே! :-)
@பத்மநாபன்
இந்த சுருக் நறுக் உங்க கமெண்ட் பாணியே தனிதான் சார்! நன்றி. :-)
@raji
பூலோக அசைன்மெண்ட்!! ஹா..ஹா..ஹா... :-)
@அப்பாதுரை
தங்கள் சித்தம் என் பாக்கியம் குருவே!! :-))
@Madhavan Srinivasagopalan
ஹா..ஹா..ஹா.. :-)
Post a Comment