சேவா ரத்னா!
”சேவைகள்
பல புரிந்தவரே!” என்று அரசியல்வாதிகளுக்கு வைத்திருக்கும் பேனர்களைப்
பார்த்தவுடன் எனக்கு சிரிப்புடன் பிச்சுமணி மாமா, எங்கம்மா மற்றும் என்
சோதரியின் ஞாபகம் தான் வருகிறது.
எலும்பிச்சம் சேவை, மிளகு சேவை,
தேங்காய் சேவை, வெல்ல சேவை என்று விதம்விதமாக வாய்க்கு வக்கனையாக சேவை
செய்பவர்களுக்கு “சேவா ரத்னா” என்று அவார்ட் கொடுக்கலாம் என்று
நினைக்கிறேன்.
1. பிச்சுமணி மாமா - எங்கள் ஊரின் பிரதான சமையற்கலை வல்லுனர்; எங்கள் குடும்பத்தின் ஆஸ்தான நளபாகராக இருந்தவர்.
2. சேவைப் படியில் உருண்டையாக மாவை இட்டு நான் ஏறி நின்று பிழிந்து தர பல சேவை தயார் செய்யும் எனது தாயார்.
3. “தம்பி இன்னிக்கி எங்காத்ல சேவை” என்று வாஞ்சையோடு கூப்பிட்டு பரிமாறும் என் அக்காள்.
#இவங்களுக்கெல்லாம் நானும் மவுண்ட்ரோட்ல பேனர் வைக்கலாம்னு இருக்கேன்.
##எச்சேவை புரிணும் அவர்களுக்கு பகவான், எம்பெருமான் மன்னார்குடி
ஸ்ரீவித்யா ராஜகோபாலஸ்வாமி சேவை சாதித்து அருள் புரிய ப்ரார்த்திக்கிறேன்.
பட உதவி: http://ashwini-spicycuisine.blogspot.com/
பின் குறிப்பு: ப்ளாக்குலகத்துடன் தொடர்பில் இருக்கவேண்டும் என்பதற்காக இதுபோன்ற அக்கப்போர்களையும், துக்கடாக்களையும் பகிரலாம் என்று விருப்பம்.
18 comments:
எனக்கு சேவை பிடிக்கும். அப்பா சபரிமலைக்கு மாலை போட்ட வருடங்கள் மட்டும் அம்மா ”சேவை” செய்வார். சேவை பிழிந்து எடுத்து முடிப்பதற்குள் கடவுளே என்று இருக்கும். வகைவகையாக சேவை தட்டில் கிடைக்கும் பொழுது அலாதி ருசிதான். இப்போ எல்லாம் இன்ஸ்டண்ட் தான். அக்கப்போர், துக்கடா பதிவுகள் தொடரட்டும்
இப்பத்தான் உங்களோட முந்தைய பதிவுக்கு கமெண்டு போட்டேன்..
அதுக்குள்ள அடுத்ததா..?
@புதுகைத் தென்றல்
சேவைக்கு நிகர் சேவைதான். இரவு டிபனுக்கும் ஏற்றதுதான்.
கருத்துக்கு நன்றி. புத்தாண்டு நல்வாழ்த்துகள். :-)
@Madhavan Srinivasagopalan
அலுத்துக்காத ராசா! :-)
சேவா ரத்னாவில் பிழிந்தெடுத்த நீர் நிச்சயமாய் ஒரு கேல் ரத்னா.
//துக்கடாக்களையும் பகிரலாம் என்று விருப்பம்.//
அப்போ அடுத்தது பக்கோடா பற்றியா....!! :)))
தொடரட்டும் உங்கள் "சேவை"....
எங்க சிறு வயதில் சேவை சாப்பிட்ட அனுபவத்தை நினைவுக்கு கொண்டு வந்தது உங்க பதிவு.
அக்கடா,துக்கடா சுவையாக இருக்கு.
LOL !! தலைப்பு ப்ரமாதம்! :D ...
சின்ன வயசுல அம்மா சேவை பண்ணும் பொது- அந்த மாவு noodles ஆட்டம் அந்த சேவ gadget லேர்ந்து வரும் பொது- நடுல கைய நீட்டி அந்த மாவ அப்டியே சாப்டும் பழக்கமெல்லாம் இருந்துது... இப்போவும் உண்டு தான்! அதனாலேயோ என்னவோ-- சேவ பண்ணியே ரொம்ப காலமாச்சு! Night dinner கு menu கொடுத்ததுக்கு thanks RVS sir!
@சுந்தர்ஜி
கேல் ரத்னா... ஜி என்ன விளையாடறீங்களா? :-)))
@RAMVI
சுவைத்ததற்கு நன்றி மேடம். :-)
@Matangi Mawley
Night Dinner திருப்தியாக சாப்பிடவும். :-)
கொஞ்சம் கெட்டியாயிடிச்சுன்னா பிழியறதுக்குள்ள தோள் ரெண்டும் கழன்று போயிடும்.:-))
ருசித்தேன்.... :)
பதிவினைச் சொன்னேன் மைனரே....
அவ்வப்போது நம் வீட்டிலும் சேவை உண்டு...
உங்கள் சேவையை மெச்சினோம்...!
உங்கள் சேவை நாட்டுக்குத் தேவை.. தொடரட்டும் :-))
தேங்காய் சேவை தேங்காயை துருவி செய்யணும், எலும்பிச்சை சேவைக்கு எலும்பிச்சம் பழத்தை பிழிந்து செய்யணும் அப்போ கருட சேவைக்கு கருடனை.... சேச்சே.....அப்படியெல்லாம் இருக்காதில்ல. :))))
கர சேவை!
சேவைன்னா அது அம்மா செய்து கொடுத்த விதவிதமான சேவைகள் தான். அந்த ருசிக்கு ஈடு இணையே இல்லை. நாங்கள் உட்கார்ந்து சுடச்சுட பிழிந்து தருவோம்.
இப்போ செய்கிறோம் என்றாலும் அந்த ருசி வருவதில்லை.
[url=http://buyonlinelasixone.com/#20994]lasix online without prescription[/url] - cheap generic lasix , http://buyonlinelasixone.com/#19504 generic lasix
Post a Comment