Friday, December 9, 2011

வென்னிலா ஐஸ்க்ரீமும் வம்பு பண்ணும் காரும்

”வென்னிலா ஐஸ்க்ரீம் வாங்கினா உங்க வண்டியில ஸ்டார்டிங் ட்ரபிள் இருக்கு. வேற ஃப்ளேவர் ஐஸ் வாங்கினா ப்ராப்ளம் இல்லாம சட்டுன்னு ஸ்டார்ட் ஆகுது” என்று உச்சியில் ”டியர் சார்” போட்டு உடம்பு முழுக்க சகட்டுமேனிக்கு திட்டி வந்திறங்கிய ஒரு கஸ்டமர் ஈமெயிலில் அகிலமெங்கும் கிளை விட்டு ஆலமரமாகப் படர்ந்திருக்கும் அந்தக் கார் கம்பெனியின் சர்வீஸ் துறை அதிர்ந்துவிட்டது.

இந்த வினோத வழக்கைக் கண்டு அஞ்சிய சர்வீஸ் மேனேஜர் "It's Funny" என்று கையைப் பிசைந்தார். பழுது என்ன என்பதைக் கண்டறிய ஒரு சர்வீஸ் எஞ்சினியரை அந்தக் கஸ்டமரிடம் அனுப்பினார். அந்தப் ப்ராப்ளமாட்டிக் காரின் உரிமையாளர் ஒரு கம்பெனியில் உயர்பதவி வகிப்பவர். காலையில் அவரின் இல்லத்திற்குச் சென்றார் அந்த எஞ்சினியர்.

“சார்! வாங்க வாங்க. கிளம்பலாமா?” என்று உற்சாக வரவேற்பளித்தார் அந்த பிக் கஸ்டமர்.

“போலாம் சார்” என்று சோகையாக சொன்னார் அந்த கம்ப்ளையிண்டின் வீரியம் தெரிந்த அந்த எஞ்சினியர்.

“இப்ப பாருங்க. ஸ்டார்ட் பண்றேன். ஒரு ப்ராப்ளமும் இருக்காது” என்று சாவியைத் திருகினார்.

உடனே வண்டி ஸ்டார்ட் ஆனது. சௌகரியமாக ஆபீஸுக்கு சென்றடைந்தார்கள். எஞ்சினியருக்கு வண்டியில் எள்ளளவும் சந்தேகம் வரவில்லை. சாயந்திரம் மறுபடியும் வீட்டிற்கு கிளம்பினார்கள். எஞ்சினியர் அவருக்குப் பக்கத்து சீட்டில் பழுதை ஆராயும் துடிப்புடன் அமர்ந்திருந்தார்.

“எங்க குடும்பத்தில எல்லோரும் ஐஸ்க்ரீம் பிசாசு. போற வழியில ஐஸ்க்ரீம் வாங்கிக்கிட்டு போகலாம்” என்றார்.

அது ஒரு புகழ் பெற்ற விஸ்தாரமான சர்வதேச தரமிக்க ஐஸ்க்ரீம் பார்லர்.

“இப்ப பாருங்க. இன்னிக்கி நான் ஸ்டாராபெர்ரி ஃப்ளேவர் வாங்கப்போறேன். வண்டி எந்த பிரச்சனையும் பண்ணாம ஸ்டார்ட் ஆயிடும்” என்று சொல்லிக்கொண்டே கடைக்குள் போனார்.

வெளியே வந்து ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீமை எஞ்சினியருக்குக் காண்பித்துவிட்டு வண்டியை ஸ்டார்ட் செய்தார். மறுப்பேதும் சொல்லாமல் ஸ்மூத்தாக கிளம்பியது.

“பாத்தீங்களா” என்று இளித்தார். “சரி நாளைக்கு பார்க்கலாம்” என்று நினைத்துக்கொண்டார் அந்த எஞ்சினியர்.

“நாளைக்கும் கண்டிப்பாக சாயந்திரம் வாங்க” என்று அன்புக் கட்டளை இட்டார். மறுநாள் மாலை நேரே அவரின் அலுவலகத்திற்கு சென்றார் அந்த எஞ்சி. இருவரும் கி்ளம்பினார்கள். அதே ஐஸ்க்ரீம் கடையில் நிறுத்தம்.

“இன்னிக்கி நான் சாக்லேட் ஃப்ளேவர் வாங்கப் போறேன். வண்டி ஸ்டார்ட் ஆயிடும்” என்றார்.

கையில் ஐஸை ஏந்திக்கொண்டே வந்தார். எஞ்யின் முகத்துக்கு எதிராக ஃப்ளேவர் நிரூபிக்க நீட்டினார். “பார்த்துக்கோங்க. இது சாக்லேட் ஃப்ளேவர். இப்பவும் வண்டி ஸ்டார்ட் ஆயிடும்”. சாவி போட்டு திருகினார். வண்டி சந்தோஷமாகக் கிளம்பியது.

பக்கத்தில் எஞ்சியைப் பார்த்து சிரித்தார். ”நாளைக்கும் வாங்க” என்றார். மறுநாளும் சென்றார் அந்தத் தளர்வடையாத இளம் எஞ்சி.

“ஜெண்டில்மேன். இன்னிக்கி நான் பட்டர்ஸ்காட்ச் வாங்கப்போறேன். இன்னிக்கிம் நோ ப்ராப்ளம்” என்றார். அவர் சொன்ன சொல்லுக்கு கட்டுப்பட்டதைப் போல வண்டி சண்டித்தனம் செய்யாமல் பதவிசாக நடந்து கொண்டது.

மறுநாள் மாலை சென்றார். “இன்னிக்கி க்ளைமாக்ஸ். நான் வென்னிலா ஃப்ளேவர் வாங்கப்போறேன். வண்டி ஸ்டார்ட் ஆகாது பாருங்க” என்றார். எஞ்சினியருக்கு அது என்ன என்று பார்த்துவிடும் ஆர்வம் பொங்கியது. சந்தர்ப்பத்திற்காக காந்திருந்தார். அதே ஐஸ்க்ரீம் கடை வந்தது. சிரித்துக்கொண்டே வண்டியை அணைத்துவிட்டு இறங்கினார் அந்த கஸ்டமர்.

கடையிலிருந்து ஒரு கையில் வென்னிலா ஃப்ளேவர் ஐஸ்கிரீமோடு வெளியே வந்தார்.

“இப்ப ஸ்டார்ட் பண்ணட்டுமா?”

“ம்”

சாவியைத் திருகினார்.

”க்ரிகிர்கிர்......கிர்கிரி..கிரி..கிர்...” வண்டி உதறியது.

திரும்பவும் படிக்காதவன் ரஜினியின் “லெக்ஷ்மி ஸ்டார்ட்..” வசனத்தோடு திருகினார்.

”க்ரிகிர்கிர்......கிர்கிரி..கிரி” இப்போது வண்டிக்குக் கமறியது.

எவ்வளவோ பிரயத்தனப்பட்டும் பலனில்லை. வண்டி சுத்தமாகப் படுத்துவிட்டது.

வண்டி கிளம்பாத சோகத்தில் இருந்தும் தான் சொன்னது நிரூபணமான மகிழ்ச்சியில் சிரித்தார் அந்த கஸ்டமர்.

“பாத்தீங்களா. நான் சொன்னப்ப நீங்க நம்மபல இல்ல. கிளம்பல பாருங்க. எனக்குப் புரிஞ்சிடிச்சு. வென்னிலா ஃப்ளேவர்னா உங்க கம்பெனி வண்டிக்கு அலர்ஜி. ஆவாதுங்க. உங்களாலெல்லாம் இதைக் கண்டு பிடிக்க முடியாது.. பாருங்க..பாருங்க..” என்று கொக்கரித்தார்.

எஞ்சினியருக்கு சரியான கடுப்பு. “சர்தான் போய்யா!” என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டு அமைதியாக இருந்தார்.

“நாளைக்கு ஸால்வ் பண்ணுகிறேன்” என்று உறுதி அளித்துவிட்டு வீட்டிற்கு நடையைக் கட்டினார். இரவு முழுவதும் நான்கு நாட்களாக நடந்தது அனைத்தையும் ஷாட் பை ஷாட்டாக ஃப்ரேம் ஃப்ரேமாக ஓட்டிப் பார்த்தார். ஒரு அரை மணியில் மூளைக்குள் பல்பு பிரகாசமாக எரிந்தது.

மறுநாள் காலையில் அந்த கஸ்டமரின் கம்பெனிக்கு சென்றார்.

“காரணம் கண்டு பிடித்துவிட்டேன்” என்றார் அந்த எஞ்சினியர் பெருமிதத்துடன்.

“என்ன?”

“வேப்பர் லாக் ப்ராப்ளம். நீங்கள் ஐஸ் க்ரீம் வாங்கும் கடையில் விசேஷ ஃப்ளேவர்கள் கடையின் உள் பக்கம் கடைசியில் இருக்கும் கவுண்டரில் கொடுக்கிறார்கள். டோக்கன் வாங்கி அதை அங்கே நீட்டி நீங்கள் வாங்கிக்கொண்டு வெளியே கார் பார்க்கிங் வருவதற்குள் எஞ்சின் கூலாகிவிடுகிறது. வண்டியும் எந்தச் சிரமமும் இல்லாமல் ஸ்டார்ட் ஆகிவிடுகிறது. ஆனால், கடைசி நாளன்று நீங்கள் வாங்கிய வென்னிலா ரக ஐஸ்க்ரீம் அந்தக் கடையின் வாசலிலேயே கொடுக்கிறார்கள். ஆகையால் நீங்கள் வாங்கிக் கொண்டு வரும்போது எஞ்சின் இன்னமும் சூடாகவே இருப்பதால் வேப்பர் லாக் ரிலீஸ் ஆக நேரமெடுக்கிறது. இதுதான் காரணம். வண்டி கிளம்பாததற்கு காரணம் ஐஸ் வாங்கும் நேரமே தவிர ஐஸ்க்ரீம் கிடையாது” என்றார் அந்த எஞ்சினியர்.

கஸ்டமர் அசந்து போனார். எஞ்சினியரின் கம்பெனியும் அவரை அங்கீகரித்தது.

மாரல் ஆஃப் தி ஸ்டோரி: கஸ்டமர் தனக்குத் தெரிந்த வகையில் சொன்ன கம்ப்ளைண்டிற்கு பகபகாவென்று சிரிக்காமல் லாஜிக்கோடு அணுகினால் தீர்வு உண்டு. பழுதை விவரிக்கத் தெரியாதவராக இருந்தாலும் கஸ்டமர் இஸ் தி கிங். :-)
பின் குறிப்பு: மீண்டும் ஒரு டிட்பிட் பதிவு. துணுக்குத்தோரணமாகத் தொங்குகிறது என் வலை.
-

26 comments:

Anonymous said...

nice story..

Unknown said...

அட இது நல்ல இருக்கே venila ice cream..

இப்படித்தான் யோசிக்கணும் போல ..

பால கணேஷ் said...

விசித்திரமான கம்ப்ளைண்ட். யோசித்துப் பார்த்த்தால் சிம்பிளான தீர்வு. எதையும் நுணுகி ஆராய வேண்டும் என்பதை உணர்த்திய நல்ல கதை. துணுக்குத் தோரணங்கள் என்று வருந்தாதீர்கள். பல தோரணங்கள் சேர்ந்தால் அழகிய மாலை. படிக்க இந்தத் தோரணங்கள் சுவையாக இருக்கின்றன... நன்றி.

ஸ்ரீராம். said...

மிளிர்கிறது.

Unknown said...

நல்லா யோசிக்க வைத்தது உங்களது மைக்ரோ கதை...அருமை.

ரிஷபன் said...

மெயிலில் வரும் இம்மாதிரி கதைகள் படு சுவாரசியம். எத்தனை முறை படித்தாலும். இதன் மூல ஆசிரியர் குறித்த பிரமிப்பு எனக்கு எப்போதும். என்னமாய் கற்பனை.

RVS said...

@எனக்கு பிடித்தவை
நன்றி! :-)

RVS said...

@siva
நன்றி சிவா! :-)

RVS said...

@கணேஷ்
ஆமாம் சார்! ஒரு எஞ்சினியரான என்னை அசத்திய கதை! நன்றி. :-)

RVS said...

@ஸ்ரீராம்.
நன்ற்ங்க.. :-)

RVS said...

@ஜிஜி
நன்றிங்க ஜிஜி! :-)

RVS said...

@ரிஷபன்
முதலில் மெயில் கதைகள் என்று தான் லேபிள் கொடுக்க பிரியப்பட்டேன். அப்புறமாக என்னுடைய மசாலாவையும் சேர்த்து அரைத்து ஊற்றியதால் டிட்பிட் கதைகள் என்று பெயரிட்டேன்.

கருத்துக்கு நன்றி சார்! :-)

RS said...

RVS சார், அருமையான பகிர்வு.

இரண்டு நீதிகள்,

எவரது கருத்தையும் ஏலனம் செய்யாதிருத்தல்,

If you have eye for detail, the solution can be found easily.

பகிர்வுக்கு நன்றி,
ஸ்ரீதர்

வெங்கட் நாகராஜ் said...

ஏற்கனவே மெயிலில் ஆங்கிலத்தில் வந்தது! ஆனாலும் உங்கள் மொழியில், இனிய தமிழில் படிக்கும் போது ரசிக்க முடிந்தது.

நன்றி மைனரே....

Yaathoramani.blogspot.com said...

நோய் நாடி நோய் முதல் நாடும்.. திறன்.
சர்விஸ் மேனேஜருக்கும் இருக்க வேண்டும்
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 4

Madhavan Srinivasagopalan said...

நா ஐஸ்க்ரீம் பைத்தியமும் இல்ல
எங்கிட்ட காரும் இல்ல..
இப்ப நா என்ன செய்யணும் ?

சிவகுமாரன் said...

ரசித்து சிரித்தேன்.
கஸ்டமராக வடிவேலையும், இஞ்சினியராக பார்த்திபனையும் கற்பனை செய்து கொண்டேன். என் கற்பனையில் குண்டக்க மண்டக்க வசனங்களோடு , சிரிப்பு இன்னும் அதிகமானது.

பொன் மாலை பொழுது said...

மன்னார் குடி மைனரே எப்படி இருக்கீங்க

அப்பாதுரை said...

interesting..

இராஜராஜேஸ்வரி said...

மாரல் ஆஃப் தி ஸ்டோரி: கஸ்டமர் தனக்குத் தெரிந்த வகையில் சொன்ன கம்ப்ளைண்டிற்கு பகபகாவென்று சிரிக்காமல் லாஜிக்கோடு அணுகினால் தீர்வு உண்டு. பழுதை விவரிக்கத் தெரியாதவராக இருந்தாலும் கஸ்டமர் இஸ் தி கிங். :-)

மன்ம் கவர்ந்தது
மசாலா சேர்த்த தீர்வு.. பாராட்டுக்கள்..

RAMA RAVI (RAMVI) said...

மாரல் சிறப்பாக இருக்கு.நல்ல கதை

ம.தி.சுதா said...

///“எங்க குடும்பத்தில எல்லோரும் ஐஸ்க்ரீம் பிசாசு. போற வழியில ஐஸ்க்ரீம் வாங்கிக்கிட்டு போகலாம்” ////

ஏனுங்க எல்லாரும் காஞ்சனா படம் பார்க்கவா போறிங்க... ஹ..ஹ...

ADHI VENKAT said...

அட இது புதுசா இருக்கே!

விதவிதமான ஐஸ்க்ரீம் பெயர்களையெல்லாம் சொல்லி இந்த நடுங்கும் தில்லி குளிரிலும் ஐஸ்க்ரீம் சாப்பிட தூண்டுகிறது தங்கள் டிட்பிட் பதிவு.

Ramkumar said...

Sir,
I do read your blog, once in a while. All through, the blogs have had steady flow and nice sequencing. Kudos!

Truly, 'Customer is the King'. When these Gandhi's words are forgotten, there are many live examples to see viz., BSNL, Ambassador.

Ramkumar said...

Sir,
I read your blogs, once in a while. All have a steady flow and nice sequencing. Kudos to you!

Truly, 'Customer is the king'. When these Gandhi's words are forgotten, there are many live examples to see around us viz., BSNL, Ambassador, etc.

Sivakumar said...

Hi Ram,

Nice to see your comments while preparing for next week's examination.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails