அஞ்சுக்கு பத்து எடு - ஐம்பதாயிரம் எடு
ஒரு பெரிய கம்பெனியில் முக்கியமான ஒரு இயந்திரம் வேலை செய்யலை. அஞ்சாறு
நாளா எல்லோரும் முக்கி முனகிப் பார்க்கிறாங்க அது அசைய மாட்டேங்குது.
இதுக்கு ஸ்பெஷலிஸ்ட் ஒருத்தன் இருக்கான். அவனைக் கூப்பிடலாம் ஆனா ஃபீஸ்
நிறைய கேட்பான். அதனால என்ன பண்ணலாம்னு யோசிச்சாங்க.. உற்பத்தி
பாதிச்சவுடனே செலவானா பரவாயில்லைன்னு அவனைக் கூப்பிட்டாங்க....
ஒரு அஞ்சு நிமிஷம் கூட பார்த்திருக்க மாட்டான், “அஞ்சுக்கு பத்து ஸ்பானர்
குடுப்பா”ன்னான். ஒரு போல்ட்டை ஒரு திருப்பு திருப்பி “உம். இப்ப மெஷினை
ஆன் பண்ணுங்க”ன்னான். ஸ்டார்ட் பண்ணினா ஜோரா ஓட ஆரம்பிச்சிடுச்சு.
“சரி..சரி.. பீஸ் ஐம்பதாயிரம் எடுங்க”ன்னான். கம்பெனிக்காரங்களுக்கு
பேஜாராயிடுச்சு. “என்னங்க அஞ்சு நிமிஷம் கூட பார்க்கலை. ஸ்பானரை வச்சு ஒரு
திருப்பு திருப்பினதுக்கு ஐம்பதாயிரமா?” ன்னு சோகமாக் கேட்டாங்க.
“மூனு நாளா இந்தப் பராப்ளம் இருந்ததே! அப்ப நீங்களே அந்த திருப்பு திருப்பியிருக்கலாமே”ன்னு கேட்டானாம்.
##இதனால் விளங்கும் நீதி என்னான்னா
1. வேலையோட சைஸ் முக்கியமில்லை. ரிஸல்ட் முக்கியம்
2. எங்க கை வச்சா ப்ராப்ளம் ஸால்வ் ஆகும்ங்கிற விஷய ஞானத்தை வளர்த்துக்கனும்.
பின் குறிப்பு: பெருசா எழுத முடியலை. மற்றுமொரு டிட்பிட் பதிவு.
பட உதவி: oceanstateclassifieds.com
30 comments:
அதானே, எந்த நட் முடுக்கணும்னு அவருக்கு தானே தெரியும்.... :)
good post even though small.as u said size is not d matter.result 1 ly d matter. :-))
அவன் செய்த வேலைக்கு ஊதியம் இல்லை.தப்பு எங்கேன்னு கண்டு பிடிச்சான் பாருங்க அதுக்குதான!!
எங்க கை வச்சா பதிவு எழுதலாம்னு
You Only Know!
தெய்வமே...
இன்று...இப்போது கிட்டத்தட்ட சேம் பிராப்ளம்.வீட்டில் ...உங்கள் பதிவு ஆறுதல் தந்தது!
சூப்பரு...
அப்படியே நம்ம கடைக்கும் வாங்க
http://mydreamonhome.blogspot.com/
இந்த டிட்பிட் கதையை ஏற்கனவே கேட்டிருக்கிறேன்.
ரஜினி ஸ்ரீதேவி நடித்த படத்தில் ஒரு காட்சி இதுபோல இருக்கும்.
நல்ல பகிர்வு.டிட்பிட் நல்லா இருக்கு.
//1. வேலையோட சைஸ் முக்கியமில்லை. ரிஸல்ட் முக்கியம்
2. எங்க கை வச்சா ப்ராப்ளம் ஸால்வ் ஆகும்ங்கிற விஷய ஞானத்தை வளர்த்துக்கனும்.//
அவங்களுக்கு தானே தெரியும். என்ன செய்யனும்னு.
ஏற்கனவே மின்னஞ்சலில் வந்ததை படித்த ஒரு நினைவு.
அறிவின் பெறுமதிக்கு கிடைத்த ஊதியம்
அசந்துதான் போக வைக்கும் .பகிர்வு அருமை வாழ்த்துக்கள் .தொடந்தும் கலக்குங்கள் .
சுத்தியலால ஒரு இடத்துல தட்டினதா நான் படிச்சிருக்கேன்.
அவனோட பில்லு ஆயிரம் டாலராம். "சும்மா ஒரே ஒரு தட்டுக்கு ஆயிரம் டாலரா... டீடைல் பில்லு தாங்கன்னு" கேட்டப்ப அவன் கொடுத்த விவரம்..
சுத்தியலால் தட்டியதற்கு - $10
தட்ட வேண்டிய பகுதியை கண்டு பிடிக்க $990
--- This post was not டிட்பிட், but "Tight Fit"
ஹா ஹா ஹா... செம பில்ட் அப்...;)
ஆனா வீட்ல இருக்கற ஒரு engineer சும்மாவாச்சும் நட்டு போல்ட்டு ஸ்பேனர்னு வெச்சு ரெம்ப தெரிஞ்ச மாதிரி அடிக்கடி பில்ட் அப் பண்ணி இது எங்களுக்கு பழகி போச்சுங்க...;))) வீட்டின் பாதி இடத்தை அடைத்திருக்கும் மூணு டூல் பாக்ஸ்'ஐ தலையை சுத்தி வீசும் நாளுக்கு காத்திருக்கிறேன்..:)
1. வேலையோட சைஸ் முக்கியமில்லை. ரிஸல்ட் முக்கியம்
2. எங்க கை வச்சா ப்ராப்ளம் ஸால்வ் ஆகும்ங்கிற விஷய ஞானத்தை வளர்த்துக்கனும்.
பின் குறிப்பு: பெருசா எழுத முடியலை. மற்றுமொரு டிட்பிட் பதிவு./
டிட்பிட்.. சூப்பர்..
ரஜினி சார் நடிச்ச ஒரு படத்துலயும் கூட இப்படியொரு காட்சி வரும் இல்லியா..
சரி.. அந்த ஸ்பெஷலிஸ்ட் யாருங்க :-)
சார் ! மன்னிச்சுகோங்கோ!, நீங்கதான் வேங்கடசுப்ரமணியன்னு இப்பதான் தெரிந்தது. உங்கள் தளத்தில் படித்திருக்கிறேன்,கமெண்ட் போட்டதில்லை. நன்றாக இருக்கின்றன உங்கள் எழுத்துக்கள்.
@வெங்கட் நாகராஜ்
ஆமாம் தல! troubleshooting ங்கிற்குதான் காசு! :-)
@raji
All my friends are very happy if the post is small! :-))
@RAMVI
ஆமாங்க மேடம். :-)
@ரிஷபன்
சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....:-))
@ஸ்ரீராம்.
அப்படியா! ரொம்ப சந்தோஷம். :-)
@வினோத்
வரேங்க... :-)
@! சிவகுமார் !
அப்டீங்களா சிவா! மிக்க மகிழ்ச்சி! :-)
@கோவை நேரம்
என்ன படங்க? எனக்கு தெரியாதே! :-)
@கோவை2தில்லி
கருத்துக்கு நன்றி சகோ! என்ன ப்ராப்ளம்னு கண்டுபிடிக்கிறது ஒரு கலை. :-)
@அம்பாளடியாள்
வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றிங்க.. :-)
@Madhavan Srinivasagopalan
நன்றி மாதவா! tough!! :-)
@அப்பாவி தங்கமணி
நானு வர்ச்சுவல் ஸ்பானர் பிடிக்கிற ஆளுங்க... சாஃப்ட்வேர்னு சொல்ல வந்தேன்... :-)
@இராஜராஜேஸ்வரி
நன்றிங்க மேடம். :-)
@அமைதிச்சாரல்
மேடம் அது எந்த படம்?
ஸ்பானர் புடிச்ச ஆளா? இது கதைங்க... :-)
@Thanai thalaivi
உங்க பேரே தூளா இருக்குங்க... கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றிங்க.. :-)
Post a Comment