Sunday, November 27, 2011

அடங்காதது

 
 
 
 
 
 
 
 
கொட்டித் தீர்த்த
மழை அடங்கியது

இலை சொட்டிய
நீர் அடங்கியது

அர்த்தஜாமம் முடிந்த
கோயில் அடங்கியது

எரிந்து அலுத்த
தெருவிளக்கு அடங்கியது

சப்தம் இரைத்த
வாகனம் அடங்கியது

சிக்னலில் கையேந்திய
பிச்சை அடங்கியது

காதலர்கள் மோகித்த
கடற்கரை அடங்கியது

பண்டம் விற்ற
கடை அடங்கியது

அழுது வடிந்த
டிவி அடங்கியது

பேசி அலுக்காத
ஊர் அடங்கியது

வாசலில் உட்கார்ந்த
செக்கியூரிட்டி அடங்கியது

வாலாட்டித் திரிந்த
தெருநாய் அடங்கியது

பேட்டரி கரைந்த
கடிகாரம் அடங்கியது

நாள் முழுவதும்
அலைந்த மனசு
இன்னும் அடங்கவில்லை!!
 
படம்: இணையத்தில் அகப்பட்டது.

23 comments:

அப்பாதுரை said...

சிங்கில் மால்ட் நீட்டா ரெண்டு பெக் அட்சா அடங்கும்.

Yaathoramani.blogspot.com said...

அடங்காததும் ஒருவகையில் நல்லதே
இல்லையெனில் ஒரு நல்ல படைப்பு
கிடைக்காமலும் போயிருக்கலாம்
மனம் கவர்ந்த பதிவு.வாழ்த்துக்கள்
த.ம 2

raji said...

சூப்பர்!

அது மனுஷனை சுட்டெரிக்க வேண்டிய சமயத்துலதான் அடங்கும்.இல்லையா?

வெங்கட் நாகராஜ் said...

ஏற்கனவே முகப்புத்தகத்தில் சொன்ன மாதிரி நல்லா இருக்கு! :)

கும்மாச்சி said...

நல்ல பகிர்வு.

ரிஷபன் said...

நாள் முழுவதும்
அலைந்த மனசு
இன்னும் அடங்கவில்லை!!

அது அடங்கிட்டா அப்புறம் ஏது சுவாரசியம்

விஸ்வநாத் said...

அடக்கம்
ஆகும் வரை
அடங்காதிருக்கும்,
அதுவே மனிதமாகும்;

RAMA RAVI (RAMVI) said...

மனம் ஒரு குரங்கு!! அது அடங்கவே அடங்காது.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

மனசு அடங்காத வரை பதிவுகள்தான்.

ஸ்ரீராம். said...

பிரமாதம்.
மனம் அடங்கிட்டால் அப்புறம் ஞானியாகி சும்மா இருக்க வேண்டியதுதான். அது போருங்க....(Bore)

ADHI VENKAT said...

கவிதை ரொம்ப நல்லா இருக்கு சகோ.

RVS said...

@அப்பாதுரை
தலைவரே! அட்டகாசம் போங்க. :-)

RVS said...

@Ramani
ஹா..ஹா.. நீங்கல்லாம் கவிதை எழுதுறீங்க.. நான் கவிதை மாதிரி எழுதறேன் சார்! நன்றி. :-)

RVS said...

@raji
ஹா..ஹா.. இதுக்கு பதில் பெருசா இருக்கு. முடிஞ்சா ஒரு பதிவா தட்டலாம். நன்றி. :-)

RVS said...

@வெங்கட் நாகராஜ்
பாவம் உங்களை மாதிரிஆட்களை ரொம்ப படுத்தறேனோ? மூஞ்சிப் புஸ்தகம் இங்கே ரெண்டுத்லேயும் ஒரே சரக்கைப் போட்டு...இரண்டிலும் வேறுவேறு எழுத நேரமில்லை. நன்றி. :-)

RVS said...

@கும்மாச்சி
நன்றி கும்! :-)

RVS said...

@ரிஷபன்
அதானே! :-)

RVS said...

@ViswanathV
விசு! கவிதைக்கு கவிதையாவே கமெண்ட்டிட்டியா? ஒ.கேப்பா.. :-)

RVS said...

@RAMVI
ஆமாம். குரங்கு மாதிரி சொறிஞ்சுகிட்டே இருக்கும். :-)

RVS said...

@ஸ்ரீராம்.
ஞானிங்களுக்கு அது ஜோராம்! :-)

RVS said...

@கோவை2தில்லி
நன்றி சகோ! :-)

சாந்தி மாரியப்பன் said...

ஆஹா.. அட்டகாசம் :-)

அம்பாளடியாள் said...

மனங்கள் ஓய்வதில்லை!..அருமையாகச் சொன்னீர்கள் .இந்த மனம் எப்போது அடங்குகின்றதோ அப்போதுதான்
வாழ்வில் நின்மதி கிட்டும் .அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி .என் தளத்தில் இன்று பட்ட மரங்களும் பறவைகளும்
முடிந்தால் உங்கள் கருத்தினையும் தாருங்கள் என்று அன்போடு கேட்டுக்கொள்கின்றேன் .

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails