இராவணன் கூட பிறன்மனை நோக்காப் பேராண்மையுடன் இருந்ததாக வரும் இராமாயணச் சான்று இது! ஆச்சரியமாக இருக்கிறதா?
சீதாப் பிராட்டியார் அசோகவனத்தில் சிறைவைக்கப்பட்டிருக்கும்போது இராவணன் பல வேடங்களில்
வந்து வசீகரிக்கப் பார்க்கிறான். ஒன்றுக்கும் சீதாப் பிராட்டியார் மசிவதாக
இல்லை. மிகவும் கலக்கமுற்று ஒரு நாள் தனது உப்பரிகையில் உலாத்திக்கொண்டிருந்தான். மதியாலோசனை
செய்ய தனது மந்திரியை அழைக்கிறான்.
சீதை தனக்கு இணங்கவில்லை என்பதை வருத்தத்தோடு சொன்ன இராவணனுக்கு மந்திரி ஒரு சமயோசித யோசனை கூறினான்.
“அரசே! சீதை எவருக்கும் மயங்காதவர். நீங்கள் ஸ்ரீராமன் வேடமிடுங்கள். நிச்சயம் உங்களுக்கு அவர் மயங்கலாம்” என்றான்.
அதற்கு இராவணன் “அமைச்சரே! அந்த வேடம் கூட பூண்டு பார்த்துவிட்டேன். ஆனால் அந்த வேடத்திற்குக் கூட ஒரு தனி மகிமை இருக்கிறது போலிருக்கிறது” என்றான்.
இராவணனை வியப்பாகப் பார்த்தான் அமைச்சர். என்ன என்பது போல புருவங்களைச் சுறுக்கினான்.
”சீதை எனக்கு பிறன்மனை ஆதலால் அந்த வேடத்தில் இருக்கும் போது என்னால் காதலுடன் பார்க்க முடியவில்லை” என்று சொல்லி வருந்தினான் இராவணன்.
#இராமனின்
பிறன்மனை நோக்காப் பேராண்மையின் மகத்துவம் அவனது வேடமிட்டவருக்குக் கூட
ஒட்டிக்கொள்ளும் என்பதற்கு வரும் இராமாயணச் சான்று இது. நினைத்தாலே
சிலிர்க்கிறது.
பின் குறிப்பு: இனிமேல் இதுபோல டிட்பிட்ஸ் பதிவுகள் கூட போடலாம் என்று விருப்பம்.
-
47 comments:
#இராமனின் பிறன்மனை நோக்காப் பேராண்மையின் மகத்துவம் அவனது வேடமிட்டவருக்குக் கூட ஒட்டிக்கொள்ளும் என்பதற்கு வரும் இராமாயணச் சான்று இது. நினைத்தாலே சிலிர்க்கிறது.
டிட்பிட்ஸ் ரொம்ப டேஸ்டி..
பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
சவால் சிறுகதைப்போட்டியில் வென்றதற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்..
பாராட்டுக்கள்..
போட்டி அறிவித்தவுடனே நினைத்தேன் சேப்பாயியில் வந்து பரிசு தட்டிச் செல்வீர்கள் என்று..
எப்போதும் வென்றான் என்ற
ஊர் உங்க ஊரு போல..
டிட்பிட்ஸ் - நீங்க Bit bit - ஆ சொன்னாலும் hit hit thaan!
அசத்துங்க!
அருமையான கருத்துஅழகான பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
டிட்-பிட்ஸ் தொடர்வ து குறித்து மிக்க மகிழ்ச்சி
ஆவலுடன் காத்திருக்கிறோம்
Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது!
http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html
Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது!
http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html
தப்பா நினைக்காதீங்க.. எனக்கென்னவோ இது உளறலா தோணுதுங்க.
தொடருங்க. காத்திருக்கிறோம்
டிட்பிட்ஸ் - நீங்க Bit bit - ஆ சொன்னாலும் hit hit thaan!
அசத்துங்க!
//repeatu..
// பின் குறிப்பு: இனிமேல் இதுபோல டிட்பிட்ஸ் பதிவுகள் கூட போடலாம் என்று விருப்பம். //
ஒன்னோட பிலாகு..
ஒன்னோட கணணி..
ஒன்னோட இஷ்டம்..
ஜமாய்..
இருந்தாலும் இந்தப் பதிவோட முதல் வரிய படிச்சதும் என்ன சொல்லப் போறீங்கன்னு புரிஞ்சிடிச்சு. நாங்கலாம் ______
அடுத்து இராவணன் தன் காலிலிருந்து நரம்பு எடுத்து இசைக்கருவியில் பூட்டி சிவனை மகிழச்செய்த டிட்பிட்ஸ்-ஐ எதிர்பார்க்கிறோம்
Kalathikku yetra karuthu.
தீ.வி.பி யில் இவ்வளவு சிறிய பதிவா!!!!!!!!!!!!
டிட்பிட்ஸ் ரொம்ப நன்றாக இருக்கிறது சகோ. இது போலவே தொடருங்கள்.
வாழ்த்துக்கள் அருமையான பதிப்பு பலதடவை பார்த்தும் பார்த்தும் அலுக்காத ராமாயணத் தொடரில் இராமனின் சிறந்த பண்புகள் இன்னும்
ஏராளம் உள்ளன அவற்றைப் பகிர்வதில் காண்பவர் மனமும் மகிழும் என்பதில் ஐயம் இல்லை .தொடரட்டும் சிறப்பாகத் தங்கள் பணி.மிக்க நன்றி இப் பகிர்வுக்கு ......
பிறன் மனை நோக்குவதையே முழு நேர வேலையாக கொண்டுள்ளவர்கள் உள்ள தேசத்தில் இது தேவைதான்.
இனிமேல்இது போல டிட் பிட்ஸ்
பதிவுகளைப்போடலாம் என்பது சரியே/
டிட் பிட்ஸ்ல சேங்காலிபுரம் நிறைய போடுங்களேன்.படிக்கறோம் :-))
இராமனின் மோகனம் ஜானகி மந்திரம்.... இதில் எதுவும் இராவனனிடம் எடுபடவில்லை. அவனுக்குக் கை கொடுக்க வில்லை.. ஐயோ பாவம்.. இராவணன்..
நல்ல டிட் பிட்ஸ்.. தேவையானதும்...
சிறுகதைப் போட்டியில் முதல் பரிசைப் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்
இன்னும் பல வெற்றிகளை குவிக்க வேண்டுகோள்.
ஒரு துண்டு நோட்டீசை வைத்துக்கொண்டு மெகா பிலடப்பைக் கொடுக்க முடியும். அது வெற்றியும் பெறும் என்றால்... ஆர்.வி. எஸால் மட்டும் தான் முடியுமோ!!! அருமையா இருந்தது கதை... விரு விருன்னு..
interesting
ராவணனிடமிருந்த நற்குணங்களையும் சொல்லியுள்ளது வால்மீகி மற்றும் துளசி ராமாயணத்தில். பிற்கால இலக்கியங்கள்தான் அவனை முழு நேர வில்லனாக்கி விட்டது.
சிறுகதைப் போட்டியில் முதல் பரிசைப் பெற்றமைக்கு வாழ்த்துகள்
இராவணனின் பேராண்மை பற்றி முன்னே பட்டிமன்றத்தில் யாரோ பேசக்கேட்டிருகிறேன். சாமவேதம் அறிந்தவன் ருத்ரவீணை மீட்டி சாமகானம் பாடி சிவனையும் பார்வதியையும் மகிழ்வித்தவன். சாமகானப்ரியே என்பார்கள் அம்பிகையை.அவர்கள் அருள்பெற்றவனை வில்லனாக காட்டும்போது பல சமயம் என்மனமும் வருத்தப்படும்.இதற்கு ஒரு பெண்(தங்கை)தான் காரணம் என்னும்போது கோபமாயும் வரும். நல்ல பதிவு ஆர் வி எஸ்..சவால் வெற்றிக்கு மறூபடி வாழ்த்து!
நீங்கள் ராவணனை பாராட்டியதற்கு கூட ஏன் அவர் இப்படி வெறிகொண்டு போஸ் தருகிறார்? காப்பி ரைட்ஸ் வாங்காம போட்டோ போட்டதற்கா?
தங்களை என் பதிவில் ஒரு தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன்.வேண்டுகோளை ஏற்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
@இராஜராஜேஸ்வரி
பாராட்டுக்கு நன்றி மேடம். :-)
@இராஜராஜேஸ்வரி
என் மேல் அவ்வளவு நம்பிக்கையா? மிக்க நன்றி. :-)
@வெங்கட் நாகராஜ்
டிட் பிட்.. ஹிட்..ஹிட்.... நீங்க எதாவது புதுப் படத்துக்கு பாட்டு எழுதலாம் தலைவரே! ரொம்ப நல்லா வரும்.
ஹா..ஹா.. பாராட்டுக்கு நன்றி. :-)
@Ramani
பாராட்டுக்கு மிக்க நன்றி சார்! :-)
@அப்பாதுரை
இராமனின் மகத்துவம் ஊரார் அறிய சொல்லப்பட்ட கதையாக இருக்கலாம். மிகைப்படுத்திச் சொல்லப்பட்டாலும் கருத்தின் மேன்மைக்காக எடுத்துக்கொள்ளலாம் என்பது எனது தாழ்மையான அபிப்ராயம் சார்! :-)
அர்த்தமுள்ள ஹிந்துமதத்தில் கண்ணதாசன் சொன்ன கதை இது. :-)
@புதுகைத் தென்றல்
நன்றிங்க... தொடர்ந்திருக்கிறேன். பாருங்கள். :-)
@siva
நன்றி சிவா! :-)
@Madhavan Srinivasagopalan
சரி மாதவா..உன் சொல்படியே செய்கிறேன்.. :-))
@Ponchandar
இராவணன் மேருமலையைத் தூக்குவதிலிருந்து ஆரம்பிக்கவேண்டும் பொன்சந்தர். எழுதுவோம். கருத்துக்கு நன்றி. :-)
@R.SOLAIYAPPAN
நன்றி சோலை. :-))
@கோவை2தில்லி
சகோ! உங்களுக்கு ரொம்ப நக்கல். :-))
இனிமேல் அப்பப்போ இதுபோல சோட்டா பதிவுகளை எதிர்பார்க்கலாம். கருத்துக்கு நன்றி. :-)
@அம்பாளடியாள்
ரொம்ப நன்றிங்க.. :-)
@விமலன்
சமீபத்திய ஆய்வு ஒன்றில் கள்ளக் காதல் தமிழகத்தில் மலிந்துகிடக்கிறது என்பதைக் கேள்விப்பட்டவுடன் நான் கேட்ட இந்த விஷயத்தைப் பகிர்ந்தேன். கருத்துக்கு நன்றி. :-))
@raji
செய்கிறேன் மேடம். :-)) கருத்துக்கு நன்றி. :-)
@ஆதிரா
நன்றி ஆதிரா. நலமா? ஆடிக்கும் அமாவாசைக்கும் ஒரு நாள் இந்தப் பக்கம் எட்டிப் பார்க்கிறீர்கள்.
பரிசுக்கு வாழ்த்தியமைக்கும் நன்றி. :-)
@சங்கர் நாராயண் @ Cable Sankar
ஆஹா.. நன்றிங்க...
இச்சிறுகுடிலை எட்டிப் பார்த்தற்கு நன்றி. :-)))
@வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)
ஆமாம் மேடம். கருத்துக்கு நன்றி. :-)
@ரிஷபன்
பாராட்டுக்கு நன்றி சார். :-)
@ஷைலஜா
இராமன் வேடமிட்டவரும் கூட அவன் கருணையால் நல்லவராவர் என்பதற்கு உதாரணம் இது.
கருத்துக்கு நன்றிங்க..:-)
@! சிவகுமார் !
காப்பிரைட் பிரச்சனையா இல்ல இந்த பதிவு “காப்பி” ரைட்டாங்கிற பிரச்சனையான்னு தெரியலை சிவா! :-)
@raji
தொடர் பதிவா? எழுதுகிறேன். :-)
படிக்க நன்றாக இருக்கிறது. ஆனால் இது ராமாயணத்தில் இல்லை என்று கருதுகிறேன்,
அருமை
Post a Comment