ஒரு ஊர்ல ஒரு கணவன் மனைவி இருந்தாங்களாம். இந்தக் கதையை இப்படித்தான் ஆரம்பிக்கவேண்டியிருக்கும். ரொம்பப் புராதனமான கதை சொல்லலாக இருக்கிறது. பரவாயில்லை. மேலே சொல்லுவோம். அந்த தம்பதிக்கு ஒரே ஒரு மகள். பார்ப்பவர்கள் மயங்கி மூச்சடைக்கும் அழகுள்ள அதிரூப சுந்தரி அவள். எங்கெல்லாம் இதுபோல அழகி இருக்கிறாளோ அங்கெல்லாம் அவளை மணமுடிக்க போட்டா போட்டியிருக்கும் என்ற உலக நியதிப்படி அவளுக்கு மூன்று முறைமாமன்கள் க்யூ கட்டி நின்றார்கள். மூவருமே அவர்களுடைய அக்காவிற்கு ஆத்ம தம்பிகள். இவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க அந்த அக்கா ஒரு போட்டி வைத்தாள். ஆளுக்கு நூறு ரூபாயைக் கொடுத்து “இதை மூலதனமாக வைத்துக்கொண்டு யார் அதிகம் சம்பாதிக்கிறீர்களோ அவர்களுக்கே என் மகள்” என்றாள் சவாலாக.
மூவரும் அந்த நூறு ரூபாயை பாக்கெட்டில் திணித்துக்கொண்டு ஊர் ஊராக சுற்றினர். இறுதியாக மைசூரில் வந்திறங்கினர். மூத்தவன் ஒரு மாயக் கண்ணாடி வாங்கினான். யாரை நினைத்துக்கொண்டு பார்க்கிறோமோ அந்த ஆளைக் காட்டும் கண்ணாடி அது. இரண்டாமவன் ஒரு மரத்தொட்டில் வாங்கினான். அதுவும் ஒரு அதிசயப் பொருள். எங்கே செல்லவேண்டும் என்று நினைக்கிறோமோ அங்கே நம்மை ஏற்றிக்கொண்டு பறந்து செல்லும். இருவருக்கும் மிகவும் மகிழ்ச்சி. இவற்றினால் அக்காளைத் திருப்திப்படுத்தி அவளது மகளை மணந்துவிடலாம் என்று மனக்கணக்கு போட்டார்கள்.
சின்னவன் கொஞ்சம் விஷயாதி. பொறுமையாக அந்தக் கடைத்தெரு முழுவதும் சுற்றிவிட்டு கடைசியாக ஒரு பதுமை விற்கும் கடைக்குச் சென்றான். அதுவும் விசேஷமான பொம்மைதான். இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் பொம்மை அது. மிகவும் சந்தோஷமாக சின்னவன் அதை வாங்கினான்.
மூவரும் அந்தக் கடைத்தெரு முழுவதும் சுற்றிவிட்டு ஒரு மரத்தடியில் சிறிது நேரம் கண் அயர்ந்தார்கள். திடீரென்று மூத்தவன் தான் வாங்கிய பொருளை சோதித்துப் பார்க்க எண்ணினான். கண்ணாடியைத் தன் முன்னால் விரித்து வைத்துக்கொண்டு தன் அக்கா மகளை நினைத்தான். அப்போது அவன் கண்ட காட்சியால் மூர்ச்சையடைந்தான். அக்கா மகள் பிணமாகக் கிடந்தாள். அக்காள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுது கொண்டிருந்தாள்.
உடனே பக்கத்திலிருந்த இரண்டாமவன் தனது தொட்டிலில் அண்ணனையும் தம்பியையும் ஏற்றிக் கொண்டு ஊரை நினைத்தான். கணநேரத்தில் தொட்டில் பறந்து வந்து அவர்களை ஊரில் தரையிறக்கியது. தொட்டிலிலிருந்து குதித்து ஓடிய சின்னவன் தனது அபூர்வமான பொம்மையால் இறந்து கிடந்தவளை பிழைக்கவைத்தான்.
கொடுத்த காசை உருப்படியாக செலவழித்த சின்னவனுக்குத்தான் தனது பெண்ணை அக்காள் கட்டிவைத்தாள் என்று சொல்லித்தான் தெரியவேண்டுமோ?
பின் குறிப்பு: தலைப்பினால் கவரப்பட்டவர்களுக்கு ஒரு செய்தி. அவரவர் விதிப்படி முறைப்பெண் கிட்டும் என்பதறிக. பேரா.இரா.மோகன் தொகுத்த ”விருந்தும் மருந்தும்” என்ற நூலிலிருந்த வட கன்னட நாட்டுப்புறக் கதை. மூலத்திலிருந்த கதைமொழி இங்கே என் மொழியில். பறந்து வருவதற்கு தொட்டிலும், பார்ப்பதற்கு அந்த மாயக் கண்ணாடியும் இல்லையென்றால் சின்னவனுக்கு சான்ஸ் கிடைத்திருக்குமா என்றெல்லாம் பட்டிமன்றம் போட்டு ஆராயாமல் கதையைப் படித்து இன்புற்றமைக்கு நன்றி.
படக் குறிப்பு: பழைய கதையாதலால் cinefundas.com-ல் கண்டெடுத்த சரோஜாதேவி இங்கு அதிரூப சுந்தரியாக வர சம்மதித்தார்.
-
46 comments:
அருமை ...உங்க பாணியில்...
நல்லா இருக்கு.
நம்ம சந்தேகம் வேற....(மீண்டும்) உயிர் கொடுத்தவன் தந்தை ஆகி விட மாட்டானோ...
கதை நல்லா இருக்கே.
ஒரு ஊர்ல ஒரு கணவன் மனைவி இருந்தாங்களாம்.// ஆரம்பத்துலே ஆரம்பிச்சாச்சா?
எங்கெல்லாம் இதுபோல அழகி இருக்கிறாளோ அங்கெல்லாம் அவளை மணமுடிக்க போட்டா போட்டியிருக்கும்// சூப்பரு..
விஷயாதி.// நான் கேள்விப்படாத வார்த்தை..
கொடுத்த காசை உருப்படியாக செலவழித்த சின்னவனுக்குத்தான் தனது பெண்ணை அக்காள் கட்டிவைத்தாள் என்று சொல்லித்தான் தெரியவேண்டுமோ?// அட..
பறந்து வருவதற்கு தொட்டிலும், பார்ப்பதற்கு அந்த மாயக் கண்ணாடியும் இல்லையென்றால் சின்னவனுக்கு சான்ஸ் கிடைத்திருக்குமா என்றெல்லாம் பட்டிமன்றம் போட்டு// எப்படி நாங்க கேள்வி கேட்போம்ன்னு தெரியுமோ?
வித்தியாசமான கதைதான், ஆனால் இதே பாணியில் வேறு ஒரு கதை கேட்டிருக்கிறேன். அதில் உயிர் கொடுத்தவர் தந்தைக்கு சமமானவர் ஆனதால் அவருக்கு அந்தப் பெண் கிடைக்க மாட்டாள்.
என்னதான் சொன்னாலும் மூவரும் வாங்கிய பொருளால் மட்டுமே அந்தப் பெண் உயிர் பிழைத்ததால் முடிவு என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அதிரூப சுந்தரி... :) நல்ல சிறுகதை மைனரே....
வேதாளம் விக்கிரமாதித்தனுக்கு சொன்ன
கதையாக இருக்கு? ஆனால் தர்க்கம் வேண்டாம் சொன்னதில் மட்டும் மாற்றம்
நன்றி!
SUPERU..
கன்னடத்துப் பைங்கிளி ஃபோட்டோ போட்டிருந்தீங்களா? நான் என்னவோ அவங்க மலரும் நினைவுகள் போலானு நினைச்சுட்டேன்.வந்தா கதையே வேற!இது நான் படிச்சுருக்கேன்.
நல்லா இருக்கு..
நல்லா இருக்கு சகோ.
பாவம் அந்தப் பொண்ணு.. பிழைச்சதும் அதை வச்சு யார் கட்டிக்கணும்னு போட்டி வேற..
ஆரம்பமும் முடிவும் மைனர்வாள் 'டச்'. கேள்வி எல்லாம் 'கேள்வியின் நாயகன்' தான் கேட்பார், நாங்க கேட்க மாட்டோம்...:))
அருமையான கதை RVS. நாட்டுப்புறங்களில் தான் எத்தனைக் கதைகள் கொட்டிக் கிடக்கின்றன அதிரூப சுந்தரி அழகு தான் .
Haahah! Vishayadhi - have never heard of. :)
Conratulations in winning savaal potti!!!! (nalla velai, naan indha kadhaiya pottiku anupadhinga nu sollama irundhene!!!! :O adha neenga ketrukka maatinga adhu vera vishayam :P) treat? ;-)
சவால் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு வென்றமைக்கு (சிலை ஆட்டம்) பாராட்டுகள் ஆர் வி எஸ்.
சிறுகதை போட்டியில் முதல் வென்றதற்காக வாழ்த்துகள் சகோ.
சவால் சிறுகதையில் வென்றதற்கு வாழ்த்துகள் ஆர்.வி.எஸ்!! சேப்பாயியை ரெடியாக வையுங்கள். இந்த வாரம் ட்ரீட் குடுக்க ரெடியாக இருங்கள்!!!
ஒரு விளையாட்டுப்பிள்ளைக்கும் ஓடக்காரருக்கும் இடையே சம்திங் கிம்திங் ஏற்பாடாம். இதைப் பத்தி உங்களுக்கு ஏதாவது தெரியுமா RVS?
@கோவை நேரம்
மிகவும் நன்றிங்க. :-)
@ரேகா ராகவன்
நன்றி சார்! :-)
@ஸ்ரீராம்.
விடுங்க ஸ்ரீராம்! ஏதோ பண்ணிட்டுப் போறாங்க.. :-)
@Lakshmi
நன்றி மேடம் :-)
@!* வேடந்தாங்கல் - கருன் *!
நிறைய விஷயங்கள் அறிந்தவன் விஷயாதி!
என் நண்பர்களைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். அதான் ஒரு பிட்டைச் சொருகி முடித்தேன்.
கருத்துக்கு நன்றி கருன்!! :-)
@Madhavan Srinivasagopalan
எந்தப் பொருளை வாங்க வேண்டும் என்று யோசித்து வாங்கியதால் அவனுக்கு கிடைத்தது.
மாதவா! இதைத்தான் பட்டிமன்றம் போடாதீர்கள் என்று விண்ணப்பித்தேன். :-)
@வெங்கட் நாகராஜ்
நன்றி தலைநகரத் தல! :-)
@வலிபோக்கன்
அவங்க சைடுல சொல்றா மாதிரி சொல்லியிருக்காங்க... விக்ரமாதித்யன் கதைகளில் வருவது போலத்தான். கருத்துக்கு நன்றி :-)
@siva
Thanks! :-)
@raji
பிசி ஆட்களை அப்புறம் எப்படி உள்ள இழுக்கறது?
நீங்க படிச்சுட்டீங்களா? வெரிகுட். :-)
@கே. பி. ஜனா...
Thanks:-)
@கோவை2தில்லி
நன்றி சகோ! :-)
@ரிஷபன்
ஹா..ஹா... கருத்துக்கு நன்றி சார்! :-)
@தக்குடு
தக்குடு சார்! நீங்க எப்படி கேள்வி கேட்பீங்கன்னு தெரியும். :-)))))))))
@சிவகுமாரன்
நன்றி சிவா! :-)
@Porkodi (பொற்கொடி)
பாராட்டுக்கு நன்றி. ஒரு உண்மையைச் சொல்லட்டா. எனக்குக் கூட ரெண்டாவதா நான் எழுதினதுதான் பிடிச்சிருந்தது. ஆனா ஊருக்கே முதல் பிடிச்சிருந்தது.
ஆண் கடத்தல் பிடிக்கலை போலருக்கு. சரி விடுங்க.. :-)
@ஸ்ரீராம்.
நன்றிங்க. :-)
@கோவை2தில்லி
பாராட்டுக்கு நன்றி சகோ! :-)
@! சிவகுமார் !
நன்றி சிவா! நேரில் சந்திப்போம். :-))
@அப்பாதுரை
யார் சார் அந்த ரெண்டு பேரும்? எனக்கு தெல்லேது... :-))))
நல்ல விளையாட்டு இது.இருந்தாலும் நல்ல கதை சொல்லாக்கம்.வாழ்துக்கள் சார்.நிறைய எழுதுங்கள்.படிக்கிறோம்.
விமர்சிக்கிறோம் வாழ்த்துகிறோம்.
நன்றி வணக்கம்.
நல்ல விளையாட்டு இது.இருந்தாலும் நல்ல கதை சொல்லாக்கம்.வாழ்துக்கள் சார்.நிறைய எழுதுங்கள்.படிக்கிறோம்.
விமர்சிக்கிறோம் வாழ்த்துகிறோம்.
நன்றி வணக்கம்.
Post a Comment