கொஞ்ச நாளா திண்ணை ரொம்ப காலியா இருக்கு. அடிக்கடி ப்ளாக் பக்கம் வர நேரமில்லை. இருந்தாலும் மூக்கு முட்டச் சாப்பிட்ட பின்னும் தவறாமல் வாய்க்கு எதையாவது போட்டுக் கொரிப்பது போல முகப்புஸ்தகம் என்னை அடியோடு ஆட்கொண்டுவிட்டது. நண்பர்கள் குழாமும் நன்றாக சத்தம் வர தாளம் தப்பாமல் கும்மியடிப்பதால் கச்சேரி அங்கே களை கட்டுகிறது. சில நாட்களாக அங்கே நண்பர்களுக்காக பகிர்ந்ததை இங்கே உங்களுக்காகவும்.
**************** உம்மா கொடுத்த மழை *************
வங்கக்கரையோரம் மையம் கொண்ட சமீபத்திய புயல் சின்னத்தினால் தெருக்களை படகு விடும் கணவாய்களாக மாற்றிய மழை பற்றிய ஒரு ஸ்டேட்டஸ் அப்டேட்.
சென்னையை இறுக்கி அணைத்து
உம்மா கொடுத்தது மழை!
பொறாமையில் பாதாள சாக்கடைக்கு
மூச்சடைத்துப் போய்விட்டது!!
#கவிதையா படிச்சா கவிதை. கவிவாசகமா வாசிச்சா வாசகம்.
##எல்லாம் படிக்கிறவங்க கையில இருக்கு
மழையின் தாக்கம் மனதிற்குள் தாக்கத்தை ஏற்படுத்த என்னிடமும் பேஸ்புக் இருக்கிறது என்று எழுதினேன் இன்னொரு கவிதை.
ஏதோ
கோபப்பட்ட பொண்டாட்டி
திட்டுவதைப் போல
பாட்டம் பாட்டமாய்
பெய்கிறது மழை
#இன்னுமொரு மழைக் கவிதை
#போன மழைக் கவிதைக்கு எழுதிய “#” வாசகங்கள் இதற்கும் செல்லுபடியாகும் என்பதை அறிக
’#’ வாசகங்களில் என்னுடைய தனிப்பட்ட கருத்து!
***************** அடித்து வி்ளையாடும் ஆசிரியர் ********************
"ஸார் நம்ப முடியவில்லை” என்றேன். அவர் தன் பெண் பிறந்து வளர்ந்ததையும், வளர்ந்த சூழ்நிலையையும் 1500 வார்த்தைகளில் சொன்னார். அவள் எப்படி மாறிப் போனாள் என்பதை விவரித்தார். அதைப் பகுதி பகுதியாக இந்த அத்தியாயத்தில் இறைத்திருக்கிறேன். ஒரேயடியாகக் கொடுத்தால் ரம்பம் படம் போட்டு ஆசிரியருக்கு ‘தேனி - பால கோபாலன்’ என்று லெட்டர் எழுதுவீர்கள்.
#இப்படி வார்த்தைகளால் நான்கு ஆறுகளாக அடித்து விளையாடும் எழுத்தாளரை தேடிக்கொண்டிருக்கிறேன். உங்களுக்கு யார்னு புரிஞ்சிருக்குமே! எங்க சொல்லுங்க பார்ப்போம்!!!! :-)
***************** புத்தக அலமாரி ********************
அரை மணியில் அடுக்கி விடலாம் என்று ஆரம்பித்தால் இரண்டு மணி நேரம் பெண்டு நிமிர்த்தியது என்னுடைய புத்தக அலமார். அது பற்றிய ஒரு அப்டேட்.
நாலரை மணிக்கு அடுக்க ஆரம்பித்தது இப்போதுதான் முடிந்தது.
ஷெல்ஃபில் குந்தியிருந்த ஆதவன், கி.ரா, சா.க, தி.ஜா,எம்.வி.வி, கரிச்சான் குஞ்சு,லா.ச.ரா, இரா.முருகன்,சுஜாதா, பாரதி, அ.கா.பெருமாள், புதுமைப்பித்தன், பி.ஏ. கிருஷ்ணன், சு.ரா, அசோகமித்ரன், ஜி.நாகராஜன், மாலன், வாலி, எஸ். ராமகிருஷ்ணன், பாலகுமாரன், வி.ஸ.காண்டேகர்,அ.முத்துலிங்கம், கவிஞர் முத்துலிங்கம், இரா.கணபதி, ஜெ.மோ,சாரு, சோ, பா.ரா எல்லோருக்கும் மிக்க மகிழ்ச்சி!
Malcom Gladwell, Richad Dawkins, Martin Gardner, Rashmi Bansal, JULIAN ASSANGE, GURCHARAN DAS, CHARLES MOSLEY (THE ART OF ORATORY) போன்ற ஆங்கில ஆத்தர்களும் VERY VERY HAPPY!!
#எல்லோரையும் மீண்டும் ஒருமுறை தொட்டுப் பார்த்ததில் எனக்கும் மட்டட்ற மகிழ்ச்சியே!
***************** கண்டீஷன்ஸ் ****************************
”அப்பா! ஒன்னு சொல்லட்டா?”
”என்ன?”
”அடிக்கக் கூடாது”
“......”
“திட்டக் கூடாது”
”......”
“அம்மாக் கிட்ட சொல்லக் கூடாது”
“.....”
“அம்மாக் கிட்ட சொன்னாலும், அம்மா திட்டக்கூடாது”
“.....” (நம்ம கையில இல்லையே!)
“அம்மாவும் அடிக்கக் கூடாது”
“.....” ( அவுட் ஆஃப் அவர் ஸ்கோப்)
“ப்ராமிஸ் பண்ணு”
“.....”
“எம்மேல பண்ணு”
“.....”
“மதர் ப்ராமிஸ் பண்ணு”
”....”
(என் கையை எடுத்து தன் கைமேல் வைத்துக்கொண்டாள்)
”சார்ட் ஓரத்தில லேசா கிழிஞ்சிடிச்சு”
#இந்த சம்பாஷணையில் ஒரு ”என்ன”க்கு அப்புறம் வேற எதுவும் கேட்காத அப்பிராணி இந்த ஆர்.வி.எஸ்
#லொடலொடா என் ரெண்டாங் க்ளாஸ் படிக்கும் ரெண்டாவது. பதில் சொல்லமுடியாத எவ்ளோ கண்டீஷன்ஸ்!!
என்னுடைய இரண்டாவது பெண்ணின் ஒரு பள்ளிக் காலை நேர கறார் பேச்சு.
*********** கவிச்சக்ரவர்த்தியின் லேட்டஸ்ட் புக் **************
அகஸ்மாத்தாக லக்ஷாதிபதியான ஒருவர் பதிப்பகத்தாருக்கு பின்வருமாறு ஒரு லிகிதம் எழுதினார்:-
அன்புள்ள ஐயா,
தாங்கள் அனுப்பிய கம்ப ராமாயணம், வால்மீகி ராமாயணம், வில்லிப்புத்தூரார் பாரதம் ஆகியவை கிடைக்கப் பெற்றேன். இவர்கள் சமீபத்தில் எழுதிய நூல்களும் வி.பி.பியில் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
# Ravi Prakashஅவர்கள் தொகுத்த விகடன் காலப் பெட்டகத்திலிருந்து..
##நல்லவேளை, திருக்குறள் படித்துவிட்டு அந்த தாடி வைத்த ஆளின் அட்ரெஸ் என்ன என்று கேட்காமல் விட்டார்!
### இது துணுக்குதான் :-)
*************** ’ஓய் மாமா’வும் நாராயணனும் ************
”ஓய் மாமா!” அப்டீன்னு ரோட்ல எதிர் சாரியில போற மாமாவைக் கைத்தட்டிக் கூப்பிட்டா சைக்கிள்ல நம்ம பக்கத்தில போற மாமா திரும்பி “என்னைக் கூப்பிட்டியா?” அப்டீன்னு கேட்டாராம். அதுமாதிரி நாராயணன்னு பையனுக்கு பேர் வச்சுட்டு அவனைக் கூப்பிட்டாலும் ஒவ்வொரு தடவையும் வைகுண்டவாசன் தன்னைக் கூப்பிட்டதா நினைச்சுப்பன்.
#ரெண்டு நாளா கார் போக்குவரத்தில சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதரோட ஸ்ரீமத் பாகவத சப்தாகம் கேட்டுக்கிட்டு இருக்கேன்.
##பக்தி மார்க்கத்தில் பகவன் நாமாவை எப்படிச் சொன்னாலும் அவனை அடையலாம் என்பதற்கு தீக்ஷிதர் சொன்ன உதாரணம்.
###சிரிப்பை வரவழைத்தாலும் எவ்ளோ பெரிய உண்மை!
**************** கூண்டுக் குரங்குகள் *****************
மானேஜ்மெண்ட் கதைகளில் கூண்டில் அடைக்கப்பட்ட குரங்குகளின் கதை ஒன்று உண்டு.
மூன்று குரங்குகளைக் கூண்டில் அடைத்து மேலே மூடியைத் திறந்து வைத்திருப்பார்கள். ஒவ்வொரு முறையும் குரங்குகள் மேலே தப்பிக்க ஏறும்போதெல்லாம் குழாய் மூலம் கொதிக்க கொதிக்க வெந்நீர்ப் பாய்ச்சுவார்கள். குரங்குகள் சூடுபட்டு பொத்தென்று கீழே விழுந்துவிடும். சிறிது நாட்களுக்குப் பிறகு வெந்நீர்ப் பாய்ச்சுவதை நிறுத்தினாலும் குரங்குகள் மேலே ஏறும் பழக்கத்தை விட்டுவிடும்.
ஒரு நாள் ஒரு புதிய குரங்கை கூண்டுக்குள் விடுவார்கள். குரங்கு தப்பித்துப் போக எண்ணி கூண்டுக்கு மேலே ஏறும். ஏற்கனவே கூண்டுக்குள் சூடுபட்ட குரங்குகள் புதிய குரங்கின் வாலைப் பிடித்து இழுத்து “ஏ! மூடனே! ஏறாதே.. கொதிநீர்ப் பாய்ச்சுவார்கள்” என்று எச்சரிக்குமாம்.
சில புதியகுரங்குகள் மறுபேச்சு பேசாமல் சமர்த்தாக உட்கார்ந்துவிடும். சில விஷமக் குரங்குகள் முயற்சி செய்யும்.
#இதில் எவ்வளவு விஷயங்கள் சொல்கிறார்கள். புரிகிறதா?
39 comments:
அடை மழைதான் போங்க!ஆனா திண்ணைக் கச்சேரில எத்தனை விஷயம் இருந்தாலும் அந்த இரண்டாங்கிளாஸ் வாலுதான் ஹை லைட்டா இருக்கு.வாலு நீளமானா நறுக்க முயற்சிக்காதீங்க.வளரட்டும்.நறுக்கினீங்கன்னா வருங்கால ஜீனியஸை இழக்கறதா அர்த்தம் :-))
கச்சேரி அடடா.. ரசித்து சிரிக்க வைத்தது.
ஒரேயடியாகக் கொடுத்தால் ரம்பம் படம் போட்டு ஆசிரியருக்கு ‘தேனி - பால கோபாலன்’ என்று லெட்டர் எழுதுவீர்கள்.
போங்க.. ஆர்விஎஸ் இவரைக் கண்டுபிடிக்க கணேஷ் வசந்த்தா வேணும்!
தொடருங்கள்.
என்ன தல திடிரென இப்படி கலக்கிறீங்க..
அத்தனையும் சூபு்பர்..
உங்க ரெண்டாவது மகள் ரொம்ப சுட்டின்னு நினைக்கிறேன்..
#தேவதைகள் வாழும் வீடு .
சரியான அவியல்.
பக்தி மார்க்கத்தில் பகவன் நாமாவை எப்படிச் சொன்னாலும் அவனை அடையலாம் என்பதற்கு தீக்ஷிதர் சொன்ன உதாரணம்.
###சிரிப்பை வரவழைத்தாலும் எவ்ளோ பெரிய உண்மை!/
இனிமையான பகிர்வு மழைக்குப் பாராட்டுக்கள்..
உங்கள் பெண்ணின் பீடிகையைப் பார்த்ததும் கடைசியில் "ஒண்ணு"ன்னு சொல்லி கடிக்கப் போறா'ன்னு நினைச்சேன். புகழ் பெற்ற தினசரியில் தொடரும் வாஈப்புக்கு சந்தோஷமும், வாழ்த்துகளும். இருண்டவானத்தின் பின்னணியில் எதிர்வரிசைக் கட்டிடங்கள் புகைப் படம் அருமை.
புகழ்பெற்ற தினசரியில் தொடரும் வாய்ப்புக்கு வாழ்த்துகள்.
முகப்புத்தகத்தில் படித்தவை மீண்டும் படிக்கத் தந்தமைக்கு நன்றி. :) ரசித்தேன் மீண்டுமொரு முறை....
ஜூப்பர் கச்சேரி.. திண்ணையில் :-)
ஆர்.வி.எஸ் நல்ல பல்சுவை விருந்து. புகைப்படம் அருமை.
கச்சேரி நடக்கட்டும் ////
புகைப்படம் சூப்பர்
ஏதோ வெளிநாடு போல இருக்கே
தினசரியில் வாய்ப்பா ? பலே பலே .
ஆமா .. உங்க முகவரி என்ன ?
எனக்கு பெண்பிள்ளைகள் என்றால் ரொம்ப இஷ்டம்.( எங்கள் வீட்டில் என் 3 சகோதரர்கள் உட்பட யாருக்கும் பெண் பிள்ளை இல்லை.) உங்கள் ரெண்டாங்கிளாஸ் வாலு என்னைபொறாமைப்பட வைத்தாள்
திருஷ்டி சுத்திப் போடுங்க .
முன்பே ஓரிருமுறை உங்கள் பதிவுக்கு வந்திருக்கிறேன். தீராத விளையாட்டுப் பிள்ளையின் பெயர் நினைவுக்கு வரவில்லை. கூண்டுக் குரங்குகள் கதை படித்தபோது, ஒரு கதை நினைவுக்கு வந்தது. “இந்தியாவிலிருந்து நண்டுகளை ஏற்றுமதி செய்வார்களாம். கூடையில் அவை மூடப்படாமல் அனுப்பப் படுமாம். அது எப்படி நண்டுகள் வெளியேறிவிடாமல் வந்து சேர்கின்றன என்று அயல் நாட்டினருக்கு ஆச்சரியமாம். விசாரித்தபோது கிடைத்த விளக்கம் அவை இந்திய நண்டுகள்,ஒன்று மேலே போனால் மற்றவை அதைக் கீழே இழுத்துவிடுமாம்”இந்தியர்கள் மற்றவர் மேலேறுவதை விட மாட்டார்கள். இதையே ராஜிவ் காந்தி சொன்னதாகவும் கதை.
rvs sir sowkyama
abaram
romba naal aachu inga vandhu
thodarungal(naanum varugiren)
(KONJA NAAL MAGANUDAN HYDERABAD VAASAM)
anbudan balu vellore
சரியான அ(றி)வியல்!அதிலும் அந்த வால் கொஞ்சம் சூப்பர், வாழ்த்துக்கள்!
எங்கள் கார்த்திகேயன் கார்டன் காலனி வாலிடம் நான் ஒரு ரைம் சொன்னேன்:
அம்மா..அம்மா..
யாரடிச்சா?
அப்பா அடிச்சா?
எப்படி அடிச்சா?
பல்டி அடிச்சா?
அந்த வால் சட்னு திருப்பி சொன்னது:
அம்மா அம்மா..
யாரடிச்சா?
ஆரார் மாமா அடிச்சா?
எப்படி அடிச்சா?
பல்டி அடிச்சா?
இது எப்படி இருக்கு?
அன்புடன்,
ஆர்.ஆர்.ஆர்.
சுவாரசியம். photo is excellent!
தினசரியில் தொடர வாழ்த்துக்கள். (தினசரி பெயர் என்னனு மட்டும் சொல்லிட்டா ரொம்ப வசதியாயிருக்கும். வாங்கிப் படிக்கத்தான் :)
பொதுவாக சென்னைக்கு ப்ளையிங் கிஸ் மட்டும் தந்துவிட்டு ஓடிவிடும் மழை, இம்முறை டைட்டாக கட்டிக்கொண்டது. உங்கள் புத்தக அலமாரி குறித்து 'ஜெ' விடம் இன்பார்ம் செய்துவிட்டேன்.
//அகஸ்மாத்தாக,லக்ஷாதிபதியான, லிகிதம் //
உங்கள் எழுத்து நடை சுதேசமித்திரன் படிக்கும் எபக்டை தருகிறது.
தமிழக கதர் கட்சி தலைவர்களை வைத்து கடைசியாக சொன்ன கதை... உங்க தில்லே தனிதான்!!
'திண்ணை' தினசரியில் வரப்போவது மகிழ்ச்சியான செய்தி. கங்க்ராட்ஸ். ஆனா நாங்க இப்படி ஓசிலதான் படிப்போம்.
@raji
பயங்கர வாயாடியா இருக்கா! பார்க்கலாம் எதிர்காலத்தில என்ன பண்றான்னு... கருத்துக்கு நன்றி மேடம். :-)
@ரிஷபன்
சுஜாதான்னு சொல்லாம கணேஷ்-வசந்தா வரணும்னு எவ்வளவு அழகாச் சொல்றீங்க சார்! நன்றி. :-)
@கவிதை வீதி... // சௌந்தர் //
திடீர்னு கலக்கிட்டேனா? சாரிங்க..
கருத்துக்கு நன்றி! :-))
@!* வேடந்தாங்கல் - கருன் *!
//தேவதைகள் வாழும் வீடு// ஐ லைக் இட் வெரி மச்.
நன்றி கருன்! :-))
@வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)
நன்றி மேடம்! :-)
@இராஜராஜேஸ்வரி
பகிர்வு மழை! நன்றி மேடம். :-)
@ஸ்ரீராம்.
ஒன்னுன்னு சொல்லி கடிக்கற நிலையில அம்மணி அன்னிக்கு இல்லை. படம் எடுக்க கருணை மழை பொழிந்த வருணபகவானுக்கு நன்றி.
கருத்திட்ட உங்களுக்கு ஒரு நன்றி! :-)
@வெங்கட் நாகராஜ்
வாழ்த்துக்கு நன்றி தலைநகரத் தல. :-)
@அமைதிச்சாரல்
நன்றிங்க சாரல். :-)
@கும்மாச்சி
விருந்ததை ருசித்ததற்கு நன்றி உம்மாச்சி... சாரி.. கும்மாச்சி! :-))
@siva
வெளிநாடா... உள்ளூர் செலவானிக்கே வழியக் காணோம். அந்நியச் செலவானிப் பற்றி பேசுறீங்களே சிவா! :-))
@சிவகுமாரன்
திருஷ்டி சுத்திப் போடுகிறேன். உங்க நம்பரை எனக்கு மெயில் அனுப்புங்க சிவா! பேசுவோம்! :-)
@G.M Balasubramaniam
ஐயா கருத்துக்கு நன்றி. நீங்கள் முன்பே வந்துள்ளீர்கள். நண்டு கதை மிகவும் பிரபலம்தான். :-)
@balutanjore
சார்! ரொம்ப நாளாச்சு இந்தப் பக்கம் காத்தடிச்சு. சௌக்கியமா? எப்படி இருக்கீங்க? கருத்துக்கு நன்றி. :-)
@”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி
உங்க பாட்டும் சூப்பர், பதிலுக்கு அந்த வாலோட பாட்டும் சூப்பர்.
கமெண்ட்டுக்கு நன்றி சார்! :-)
@அப்பாதுரை
பாராட்டுக்கு நன்றி. தினசர் இன்னும் கொஞ்ச நாள் ஆகும் என்று நினைக்கிறேன். முழுவதுமாக க்ளிக் ஆனதும் சொல்கிறேனே! ப்ளீஸ். உங்களுக்கு தெரிந்ததுதான். :-))
@! சிவகுமார் !
பாட்டம் பாட்டமாக பின்னூட்டமிட்ட சிவகுமாருக்கு நன்றி!
////அகஸ்மாத்தாக,லக்ஷாதிபதியான, லிகிதம் // அது அந்தக் கால விகடன் எழுத்து. அப்படியே தந்தேன்.
உங்களுக்கு சிறப்பாக ஓசியில் இங்கே தான்!! :-))
//அது வாய்த்தால் இனி வாரம் ஒருமுறை இது இங்கே பிரசூரிக்கப்படும். //
once again.. oh! my god save me..
Post a Comment