Monday, November 7, 2011

கமல்ஹாசன்: பிறந்தநாள் வாழ்த்துகள்

”சீச்சீ... உனக்கு கமலப் புடிக்குமா? அவன் கிஸ்ஸெல்லாம் அடிப்பான். நீ கெட்டப் பையன். எங்கிட்ட பேசாதே” என்று ஏழாவது எட்டாவது படிக்கும் போது கமல்ஹாசனைப் பிடிக்கும் என்று சொன்ன காரணத்தால் இப்படி சக வயது நண்பர்களால் ஓரங் கட்டப்பட்டேன். பேண்ட் போட்ட அண்ணாக்கள் ”பய விவரமானவனா இருக்கான்” என்று கண்ணடித்து சிரித்து கன்னம் தட்டினார்கள். தட்டிய கன்னத்தை தடவிக்கொண்டு புரியாமல் விழித்திருக்கிறேன்.

விக்ரமும் காக்கிச்சட்டையும் விவரம் புரிந்த பிறகு பார்த்தவுடன் எதற்கு அப்படி வம்பு அளந்தார்கள் என்று ஒரு பிட் அளவு புரிந்தது. எட்டு பிட் சேர்ந்தது ஒரு பைட் என்பதன் ஒரு பிட். சொச்சமிருக்கும் ஏழு பிட் புரிய இன்னும் ஏழு வருடங்கள் பிடித்தது. கண்ணும் கருத்துமாய் கைக்கு அடக்கமான குஷ்பூவைக் காதலிக்கும் சிங்காரவேலனாக நடித்த பொழுதுதான் எட்டாவது பிட் எனக்கு புரிந்து ஒரு பைட் கம்ப்ளீட் செய்தேன்.

சிவாஜிகணேசனை சிலாகிக்கும் அளவிற்கு கமல்ஹாசனை பொதுஜனங்கள் போற்றிப் புகழ் பாடுவதில்லை. எனக்குக் கூட மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்னவில் பத்மினியைப் தூணுக்குப் பின்னால் இருந்து லுக் விடும் சிவாஜியை ரொம்ப பிடிக்கும். அதேயளவு காக்கிச்சட்டையில் மொட்டை மாடியில் அம்பிகாவிடம் கண்மணியே பேசு என்று குழையும் கமலையும் பிடிக்கும். அவரைப் பற்றிய ஒரே சார்ஜ்ஷீட்: கிஸ் அடிப்பார். கட்டிப் பிடிப்பார். இப்படியாக தமிழ் மரபுக்கு எதிராக திரைகளில் தோன்றுகிறார் என்று என்றைக்கு கொடிபிடித்தார்களோ, இப்போது அழத் தெரியாத புதுமுகங்கள் கூட மூக்குரச முத்தம் கொடுக்கிறார்கள்.

இயற்கையாகவே நகைச்சுவை ததும்ப நடிப்பார். சென்னை பாஷை அவருக்கு கை வந்த கலை. குணா நல்லாயிருக்குன்னு சொன்னா உடனே “நிஜ வாழ்க்கையை வாழ்ந்திருக்கார்னு சொல்லு” என்று கைகொட்டி சிரிப்பார்கள். நாயகனில் “ஆ....ஆ.....” என்று அழுதது அழியாப் புகழ் பெற்று பேட்டைக்கு பேட்டை மேடைக்கு மேடை மிமிக்கிரி செய்தார்கள்.

எனக்குப் பிடித்த பத்து கமல் படங்கள். ஸார்ட்டிங் ஆர்டர் எதுவும் இப்பட்டியலுக்கு கிடையாது. ஒவ்வொரு சமயம் ஒவ்வொன்று சிறந்தது .

  1. தேவர் மகன்
  2. மகாநதி
  3. மைக்கேல் மதன காம ராஜன்
  4. நாயகன்
  5. குணா
  6. அவ்வை ஷண்முகி
  7. காக்கிச் சட்டை
  8. சிகப்பு ரோஜாக்கள்
  9. இந்தியன்
  10. உன்னால் முடியும் தம்பி


பத்துக்குள் அடக்க முடியாதவர் கமல். ரசிகர்களை நற்பணி மன்றங்கள் அமைக்கச் சொல்லி ரத்ததானம் கொடுக்க வைத்தார். ஏழைகளுக்கு நோட்டுப் புஸ்தகம் பரிசளிக்கச் சொன்னார். அநேக நட்சத்திரங்களைப் போல சுயநலத்திலும் பொதுநலமாய் நற்காரியங்கள் பல செய்வதற்கு ஊன்றுகோலாக இருக்கிறார். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

பத்துப்பாட்டும் போட்டுடுவோம்.

டிக்.டிக்.டிக்கில் மாதவியை க்ளிக்கிப் பாடும்...

-

மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது....

தெய்வீக ராகம்... ராஜாவின் ஆரம்ப ப்ளூட் பிட்... தெவிட்டாத தெள்ளமுது...

ராதா ராதா நீ எங்கே.... மீண்டும் கோகிலாவில்...

நீல வான ஓடையில்..... தலைவர் எஸ்.பி.பியின் ஆரம்ப ஆலாபனை அமர்க்களம்... 


அம்பிகாவின் பட்டுக் கண்ணம் கமல் தொட்டுக்கொள்ள ஒட்டிக்கொள்ளுமாம்... காக்கிச்சட்டையில்...


ஊர்வசியுடன்.... சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கும்... அந்த ஒரு நிமிடம்  பாடல்....




அமலாவுடன் பூங்காற்று உன் பேர் சொல்ல என்று வெற்றி விழாவில்.....

கௌதமியுடன் காதலை வாழ வைக்கும் கமல்.. அபூர்வ சகோதரர்கள் படத்தில்...




கிண்ணத்தில் தேன் வடித்து....


-

42 comments:

வெங்கட் நாகராஜ் said...

உலக நாயகனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்....

நல்ல பாடல்கள்... நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் பக்கத்தில் பாடல்கள்.... நன்றி மைனரே...

RAMA RAVI (RAMVI) said...

//பத்துக்குள் அடக்க முடியாதவர் கமல்.//

உண்மை.

எனக்கு திரையரங்கிற்கு போய் சினிமா பார்பது ரொம்ப பிடிக்காது.ஆனால் கமல் படங்களை மட்டும் திரையரங்குக்கு சென்று பார்த்துவிடுவேன்.

raji said...

சார்!நான் கூட கமல் ரசிகைதான்.அதுக்காக என் தோழிகள் எல்லாரும் படிக்கற காலத்தில என்னை கிண்டல் பண்ணுவாங்கதான்.ஆனாலும் எனக்கு அவர் நடிப்பு பிடிக்கும்.
அப்பறம் அந்த லிஸ்ட்ல 'சிப்பிக்குள் முத்து' விட்டீங்களே.எனக்கு ரொம்ப பிடிச்ச படம் சார்! :)

சக்தி கல்வி மையம் said...

இன்னும் பல சாதனைகளை குவிக்க வாழ்த்துகிறேன்.. வயதில்லை எனவே வணங்குகிறேன்..

pudugaithendral said...

கமல் மீது இருக்கும் குற்றச்சாட்டு அப்ப சரி. இப்ப நீங்க சொல்லியிருப்பது போலத்தான் இருக்கு. அதனால இப்ப கமல் மேல் இருக்கும் குற்றச்சாட்டு பொய்யானது போல இருக்கு. :))

நேற்றுதான் ஜப்பானில் கல்யாணராமன் பார்த்து கொண்டிருந்தேன். பிள்ளைகள் ஆவி கமலை ரசித்தனர். அயித்தானுக்கு கமல் ரொம்ப பிடிக்கும்.

நல்ல கலைஞனாக எனக்கும் அவரை கொஞ்சம் கொஞ்சம் பிடிக்கும் (சில படங்களில் மட்டும்) :))

pudugaithendral said...

http://ganakandharvan.blogspot.com/2011/11/blog-post.html

கானக்கந்தர்வனில் கமலஹாசன் பிறந்தநாள் சிறப்புப்பதிவு

பொ.முருகன் said...

வாழ்வேமாயம்,மூன்றாம்பிறை,சலங்கைஒலி...,இவைகள் எல்லாமே டாப் 10 க் குள் அடங்கும் படங்கள்.

பொன் மாலை பொழுது said...

நினைத்தாலே இனிக்கும் மறந்து போச்சா மைனரே?
நல்ல ரசிகனாக உங்கள் தொகுப்பு.

CS. Mohan Kumar said...

நீங்கள் சொன்ன லிஸ்ட்டில் காக்கி சட்டை தவிர மற்றவை எனக்கும் பிடித்த படங்களே

விஸ்வநாத் said...

ஹேராம்க்கு
வேண்டும் ஒரு இடம்.
அதில் இடப்பெற்ற
"நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி" பாடல்
கமல் எழுதிப் பாடியது;
அற்புதமானது;

Anonymous said...

கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அதை பதிவிட்ட பதிவுலக நாயகருக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்!!

Unknown said...

HAPPY BIRTHDAY KAMAL UNCLE.

அப்பாதுரை said...

எங்கள் பிளாக் சவடால் கதை எழுதும்போது கவனமாக இருங்கள். 'கைக்கு அடக்கமான குஷ்பூவை' போல் எழுதினால் ஆபாசம் என்று சொல்லக்கூடும்.

அப்பாதுரை said...

பூங்காற்று உன் பேர் சொல்ல பாட்டு எந்தப் படத்தில்?

ரிஷபன் said...

விக்ரமும் காக்கிச்சட்டையும் விவரம் புரிந்த பிறகு பார்த்தவுடன் எதற்கு அப்படி வம்பு அளந்தார்கள் என்று ஒரு பிட் அளவு புரிந்தது. எட்டு பிட் சேர்ந்தது ஒரு பைட் என்பதன் ஒரு பிட். சொச்சமிருக்கும் ஏழு பிட் புரிய இன்னும் ஏழு வருடங்கள் பிடித்தது. கண்ணும் கருத்துமாய் கைக்கு அடக்கமான குஷ்பூவைக் காதலிக்கும் சிங்காரவேலனாக நடித்த பொழுதுதான் எட்டாவது பிட் எனக்கு புரிந்து ஒரு பைட் கம்ப்ளீட் செய்தேன்.

முன்பு கமலுக்கு.. இப்போது உங்க எழுத்துக்கு.. சபாஷ்.

கே. பி. ஜனா... said...

பாடல்கள் நல்ல செலெக்ஷன்!

ananthu said...

மூன்றாம்பிறையில் கமலின் நடிப்பை பார்த்தவர்கள் முத்தத்தைப் பற்றி பேச மாட்டார்கள் ... இயல்பான நடையில் அமைந்த உங்கள் பதிவு அருமை ... கமல்ஹாசன் அவர்களைப் பற்றி கலைமகன் கமல் ...என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளேன் , வருமாறு அழைக்கிறேன் ...

ஸ்ரீராம். said...

கமல் நல்ல நடிகர்.

அப்பாதுரை பின்னூட்டத்தை ஆவலோடு எதிர்பார்த்து ஏமாந்தேன்! நான் எதிர்பார்த்தது வேற!

அப்பாஜி...நீங்க கேட்கும் பாட்டு வெற்றி விழா படத்துல!

Ram Balaji said...

Paramakudi indredutta panmuga kalayaignai Mannargudi Mannukku sondakkararn vazhthuvadu inimai

vazhgah kamal valarga avar kalai sevai

balaji

அப்பாதுரை said...

அப்புறம் பதினெண்கீழ்க்கணக்கு பதிவு வந்தாலும் வரும்.. எதுக்குங்க வம்பு.. ஸ்ரீராம். :)
(படம் பெயருக்கு நன்றி)

சாந்தி மாரியப்பன் said...

சலங்கை ஒலியை விட்டுட்டீங்களே..

மை ஃபேவரிட் திற்பரப்பு அருவியைக் காட்டினதுக்காகவே 'தெய்வீக ராகம்' இன்னும் ரொம்பப் பிடிக்கும் :-))

Ponchandar said...

Byte மட்டும்தானா ?? KB, MB & GB இன்னும் எவ்வளவோ இருக்கே ! !

சொல்லத்தான் நினைக்கிறேன் படத்துல இருந்து அவர் ஆரம்பிச்சுட்டாரே ! !

RVS said...

@வெங்கட் நாகராஜ்
உலக நாயகனுக்கு தலைநகர நாயகனின் வாழ்த்துகள் நன்று! நன்றி! :-)

RVS said...

@RAMVI
ஆமாம்! ஒரு நல்ல கலைஞனின் படத்தை திரையரங்கிற்கு சென்று பார்ப்பதே அவனுக்கு நாம் தரும் மரியாதை மேடம். கருத்துக்கு நன்றி. :-)

RVS said...

@raji
நிறைய படங்கள் இருக்கு மேடம். எல்லா ரசமும் கலந்த கலவையா படங்கள் லிஸ்ட் கொடுத்தேன். 80ஸ் பாடல்கள் கொடுத்தேன். அம்புட்டுதேன். :-)

RVS said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!
நன்றி! :-)

RVS said...

@புதுகைத் தென்றல்
இப்ப வர்ற இளசுங்களோட மூவ்மெண்ட்ஸ் பார்த்தா கமல்லாம் ஒன்னுமில்லை... :-))

RVS said...

@பொ.முருகன்
சரிதான். பெரும் பட்டியல் கொடுக்கலாம்ங்க.. நன்றி. :-)

RVS said...

@கக்கு - மாணிக்கம்
அற்புதமான பாலச்சந்தர் படம். கொஞ்சமா கொடுக்கலாம்னு தான் இப்படி... :-)

RVS said...

@மோகன் குமார்
காக்கிச் சட்டை ஒரு பொழுதுபோக்குப் படம் மோகன். எல்லா ரசமும் வேண்டுமல்லவா? கருத்துக்கு நன்றி. :-)

RVS said...

@ViswanathV
விசு அந்தப் பாட்டு எனக்கும் ரொம்ப பிடிக்கும். 80ஸ் மட்டும் சேர்த்தேன். :-)

RVS said...

@! சிவகுமார் !
பதிவுலக நாயகரா? யாருப்பா அது? (திரும்பிப் பார்த்தாலும் யாரும் இல்லீங்களே!)

நன்றி சிவா. :-)

RVS said...

@siva
அவர்கிட்ட சொல்லிட்டேன் :-)

RVS said...

@அப்பாதுரை
சார்! ஒரு ஃப்ளோல சொல்லிட்டேன்..தப்பு தப்பு.. :-)

RVS said...

@ரிஷபன்
தன்யனானேன் சார்! :-)

RVS said...

@கே. பி. ஜனா...
நன்றிங்க. :-)

RVS said...

@ananthu
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க. உங்கள் பதிவும் நன்றாக இருந்தது. :-)

RVS said...

@ஸ்ரீராம்.
பாராட்டுக்கு நன்றிங்க. :-)

RVS said...

@Ram Balaji
பரமக்குடி.. மன்னார்குடி... பாலாஜீ...... நன்றி. :-)

RVS said...

@அமைதிச்சாரல்
சலங்கை ஒலியை விடமுடியுங்களா? கொஞ்சமா சில பாடல்களை பதிவிட்டேன் மேடம். நன்றி. :-)

RVS said...

@Ponchandar
அது பெரிய மலை. இன்னும் நிறைய இருக்குதாங்க... கருத்துக்கு நன்றி. :-)

சிவகுமாரன் said...

டிக் டிக் டிக் பார்க்கப் போய் அங்கு எங்கள் கணக்கு வாத்தியாரை பார்த்து விட்டு, "டேய் .. நான் அப்பவே சொல்லலை , இதெல்லாம் ஒன்னும் பாக்க கூடாத படமில்லை. நம்ம சாரே வந்திருக்குரார்டா "
அடித்த கமென்ட் நினைவுக்கு வருகிறது.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails