Thursday, August 18, 2011

வாழ்வியல் பாடத்திட்டம்



சமூக அறிவியல் வாழ்க்கையின்  
ஆசாபாசத்திற்கு அப்பாற்பட்டது

பரு(வ)ப்பொருள் மேனியின் இயற்பியலில்
காதல் வசப்படுகிறது

எல்லையில்லா அன்பு இருவரின்  
வேதியலுக்கு உட்பட்டது

உறவின்  நேசத்திலும் பாசத்திலும்
உயிரியல் வாழ்கிறது

திருமணம் இருவீட்டாரின்
கணிதத்தில் அடங்குவது

குடும்ப அமைதி
வரும் மணப்பெண்ணின்  
சரித்திரத்தில் இருக்கிறது

மன ஆரோக்கியம் நாம் வாழும்
புவியியலில் உள்ளது

நினைவிருக்கட்டும்!
சுதந்திரம் ஆங்கிலேயரிடமிருந்து மட்டுமா வாங்கியது?

ஏதோ என்னால முடிந்த
தமிழ் இது

கவிதைப் புலிகளைப் பார்த்து இந்தக் கட்டுரைப் பூனை சூடு போட்டுக் கொண்டது

#தோழர் வெங்கடேசன்.செ அவர்களுக்கு பின்னூட்டமாக போட்டது, இங்கு கொஞ்சம் முலாம் பூசப்பட்டது. 

பட உதவி: laurenpittis.bandcamp.com

-

23 comments:

Anonymous said...

//கவிதைப் புலிகளைப் பார்த்து இந்தக் கட்டுரைப் பூனை சூடு போட்டுக் கொண்டது//

காகிதப்புலிகளை விட இந்தப்பாயும் பூனை ஒரு அடி முன்னேதான்!

எல் கே said...

ஆஹா தெரியாம இன்னிக்கு வந்துட்டேனா ??

Unknown said...

கவிதை
சமச்சீர் கல்வி போல ..நல்ல இருக்கு அண்ணா

Yaathoramani.blogspot.com said...

வாழ்வின் பாடங்கள் அனைத்தும்
பள்ளிப் பாடங்கள் மூலமாகவே..
வித்தியாசமான அருமையான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

பத்மநாபன் said...

கவிஜை அழுமை ...

சாந்தி மாரியப்பன் said...

நல்லதொரு சமச்சீர் கல்வியை அறிமுகப்படுத்தியதற்கு வாழ்த்துகள் :-)

ADHI VENKAT said...

பள்ளிப்பாடங்களை பதிவுலகுக்கு வந்தும் விட மாட்டேங்கறாங்களே!!!!!!!

என்ன கொடும சார் இது?

சாரி!சாரி! கவிதை நன்றாக உள்ளது சகோ....

ஒரு கதைன்னு ஒண்ணு போட்டிருக்கேன். முடிந்த போது படித்து பாருங்கள். ரொம்ப பிஸியோ....
http://kovai2delhi.blogspot.com/2011/08/blog-post_17.html

RAMA RAVI (RAMVI) said...

தமிழும் நன்னாயிருக்கு. உங்க கவிதையும் நன்னாயிருக்கு.

வெங்கட் நாகராஜ் said...

கவித... கவித.... அப்படியே அருவி மாதிரி கொட்டிடுச்சோ... :))))

நல்ல பகிர்வு மைனரே... ஒண்ணையும் விடக்கூடாது...

வெங்கட் நாகராஜ் said...

என்ன மைனரே... ராஸ நடனம், நடனமாடியபடியே ஸ்டேஜ் விட்டு வெளியே போயிடுத்து போல... :) பதிவு டாஷ்போர்ட்-ல இருக்கு ஆனா இல்லை... :)))

RVS said...

@! சிவகுமார் !
இந்தப் பூனையின் மேல் கொண்ட அன்பிற்கு நன்றி சிவகுமார்! :-))

RVS said...

@எல் கே
ஆமா!! நல்லா மாட்டிக்கிட்டீங்க.. :-))

RVS said...

@Ramani
சார்! உங்களை மாதிரியெல்லாம் எனக்கு கவிதை எழுத வராது. ஏதோ ஒரு சிறு முயற்சி!! :-)

RVS said...

@பத்மநாபன்
இதுக்கு என்ன அர்த்தம் ஜி! :-))

RVS said...

@அமைதிச்சாரல்
சாரல்... நீங்கல்லாம் கவிதாயினி... நான் இந்த செக்மெண்ட்ல தருமி.. :-))

RVS said...

@கோவை2தில்லி
பாராட்டுக்கு நன்றி சகோ!! கதையை படித்துவிட்டேன்.. கமெண்ட்டறேன்.. :-))

RVS said...

@RAMVI

ரொம்ப நன்றி மேடம். :-))

RVS said...

@வெங்கட் நாகராஜ்
ஆமாம் தல... பக்கெட் பக்கெட்டா கொட்டுது... :-))

RVS said...

@Rathnavel
மிக்க நன்றி ஐயா!! :-))

RVS said...

@வெங்கட் நாகராஜ்
இப்போ பாருங்க!! :-)

பத்மநாபன் said...

பப்பிள் கம் மென்று கொண்டே இந்த கவிதை படித்தேன் .. அது தான் கவிதை கவிஜை ஆகவும்..அருமை அழுமையாக மாறிவிட்டது ஜி....

அம்பாளடியாள் said...

புத்தகதகங்களில் இதுவரை பலகவிதைகள் பார்த்திருக்கின்றேன்.
ஆனால் இன்றுதான் முதன்முறையாக ஒரு கவிதை பல புத்தகங்களை அறிமுகம் செய்வதைப் பார்க்கின்றேன் அருமை....!!!!
மிக்க நன்றி உங்கள் கவிதைப் பகிர்வுக்கு .(எனக்கும் கொஞ்சம் கிறுக்கத் தெரியும் சந்தர்ப்பம் கிடைக்கும்போது வாருங்கள் என் தளத்துக்கும்)தமிழால் என்றும் இணைந்திருப்போம் ....நன்றி ஐயா. .

RVS said...

@அம்பாளடியாள்

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! நிச்சயம் வருகிறேன்! :-)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails