பட்டுப்பாவாடை சரசரக்க ஒரு எவர்சில்வர் ப்ளேட் நிறைய காட்பரீஸ் கொட்டி எடுத்துக் கொண்டு கல்யாண ரிசப்ஷனில் வாசலில் நின்று சர்க்கரைக் கொடுப்பது போல இருகையிலும் ஏந்தி வீடு வீடாக தெருவில் சிறுமிகள் இனிப்பு வினியோகித்த கரும்பு நாட்கள் தான் பிறந்த நாள் என்றால் எனக்கு நினைவுக்கு வருகிறது. ஆண்களுக்கு என்றைக்குமே படாடோக அலங்காரம் தேவையில்லை. அவசியமும் இல்லை. பெண் பிள்ளைகள் புத்தாடை உடுத்தி, கூந்தலுக்கு குஞ்சலம் வைத்து கட்டி, முகத்துக்கு ஒரு இன்ச் பாண்ட்ஸ் பூசி, கண்ணுக்கு மை எழுதி, காதுக்கு குடை ராட்டினம் போல ஜிமிக்கி மாட்டி, அம்மாவின் வாத்து போட்ட தங்கச் செயினை சட்டைக்கு மேலே தொங்கவிட்டுக் கொண்டு, அது ஆட ஆட, கொலுசு கொஞ்சும் சலங்கையாய் ஜலஜலக்க பர்த்டே அன்றைக்கு நடந்து வரும் அழகே தனி. ஸ்டாப்! ஸ்டாப்!! இதெல்லாம் நான் பாண்ட் போட்ட புதிதில் பார்த்த சின்னஞ்சிறு மழலைகளின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள்.
சாக்லேட் தட்டை நீட்டி விட்டு ஒன்றுக்கு மேலே எடுத்துவிடுவானோ என்ற பதற்றத்தில் தடுமாற்றமாக கண் தாறுமாறாய் அலைபாயும். ஒரு சாக்லேட்டை எடுத்தவுடன் சடாரென்று கையை பின்னால் இழுத்துக்கொண்டு அடுத்தாளுக்கு தட்டை நீட்டிவிடுவார்கள். இன்னும் சில சாக்லேட் கைகாரிகள் டீச்சர் வீட்டிற்கு மொத்தம் நான்கு சாக்லேட் என்று எண்ணித் தட்டில் போட்டு இளித்துக்கொண்டே நீட்டுவார்கள். பலே கில்லாடிகள். ஒரு முறை ஒரே அள்ளலில் இரண்டு சாக்லேட்களை அபகரித்துக் கொண்ட குற்றத்திற்காக ஒரு வாரம் முகத்தைத் தூக்கிக் வைத்துக்கொண்டுப் பார்க்காமல் ”டூ”விட்டவர்களும் உண்டு.
பெரிய பெரிய பூப் போட்ட சட்டையும், காக்கி அல்லது கருப்பு கலரில் விரைத்துக் கொண்டு நிற்கும் ஒரு மொடமொடா ட்ராயரும்தான் பிறந்த நாளின் பிரசித்திப் பெற்ற துணிமணி. சில வருடம் இந்த சட்டைப் பூ காயாக டிசையனில் உருமாறலாம். வேறொன்றும் அண்டபேரண்ட வித்தியாசம் எதுவும் இருக்காது. சட்டை, ட்ராயருக்குத் துணி எடுத்து ’ஸ்டைலோ’ மணியிடம் ஒரு மாசத்துக்கு முன்னால் தைக்க கொடுக்கவேண்டும்.
ஆண்களுக்கான அதி நவீன விசேஷ டைலர். எட்டாவது படிக்கும் காலத்திலேயே என் உயரம் இருக்கும் மணி அண்ணன் கால்சராயில் ஜிப் வைக்க அளவு எடுக்கும் போது இரு தொடைகளுக்கு இடையே அந்த மரக்கட்டை ஸ்கேலால் ஒரு முறை தூக்கிப் பிடிக்கும் போது ஒரு விதமாக ஜிவ்வென்று இருக்கும். வேலைப்பளுவில் கோபத்தில் இருந்தால் ஒரு விசையுடன் தட்டும் போது கலங்கிப்போய்விடும்.
ஆண்களுக்கான அதி நவீன விசேஷ டைலர். எட்டாவது படிக்கும் காலத்திலேயே என் உயரம் இருக்கும் மணி அண்ணன் கால்சராயில் ஜிப் வைக்க அளவு எடுக்கும் போது இரு தொடைகளுக்கு இடையே அந்த மரக்கட்டை ஸ்கேலால் ஒரு முறை தூக்கிப் பிடிக்கும் போது ஒரு விதமாக ஜிவ்வென்று இருக்கும். வேலைப்பளுவில் கோபத்தில் இருந்தால் ஒரு விசையுடன் தட்டும் போது கலங்கிப்போய்விடும்.
இன்ச் டேப்பை சில சமயங்களில் அங்கவஸ்திரமாகவும் பல சமயங்களில் கழுத்தைச் சுற்றி நாகாபரணமாகவும் போட்டுக்கொண்டு நம்மை தோளைப் பிடித்து பம்பரமாகச் சுற்றிவிட்டு சுற்றிவிட்டு அங்க அளவெடுப்பார். அவர் அளந்ததில் நிச்சயம் களைத்துப் போய் நாயர் கடை ஸ்ட்ராங் டீயோ, அல்லது பாய் கடை குளுகோஸ் கூல்ட்ரிங்ஸோ குடிக்கவேண்டும். அவரின் கடையைத் தாண்டி வரும்போதும் போகும்போதும் ஒரு முறை எட்டிப்பார்த்து “அண்ணே ட்ரெஸ் எப்ப ரெடியாகும்?” என்று உடுக்கும் புத்தார்வத்தில் ஒருவித துடிப்புடன் கேட்டால் “அப்பாட்ட குடுக்கறேம்பா” என்றும், அப்பாவிடம் “பையனை அனுப்புங்க ஸார்! நீங்க ஏன் வீணா கடைக்கு அலையறீங்க” என்று பேசி பிரித்தாளும் கொள்கையை கடைபிடிப்பார். சில சமயம் ஜிப்பிற்கு கீழே லேசாக பிடிப்பது போல இருந்தால், “எல்லாம் போடப் போட சரியாயிடும்” என்று சொன்னது எப்படி என்ற லாஜிக் இன்றுவரை இடிக்கிறது.
அது போகட்டும். புத்தாடை உடுத்துவது ஒரு சுகம் என்றால் அதை பள்ளிக்கு அணிந்து செல்வது சுகமோ சுகம். அனைவரும் நேற்று உடுத்திய நீலக் கலர் ட்ராயர் வெள்ளைச் சட்டை சீருடையில் வர நாம் மட்டும் புதிய கலர் ட்ரெஸ்ஸில் வாயெல்லாம் பல்லாக இளித்துக்கொண்டே செல்வது ஒரு அல்ப சந்தோஷம். ஜிலுஜிலுக்கும் ட்ரெஸ் போட்டுக்கொண்டு ராமராஜனாய் சென்றால் அன்றைக்கு பள்ளியின் செண்டர் ஆப் அட்ராக்ஷன் நாம்தான். சில ஆசிரிய புண்ணியாத்மாக்கள் “இன்னிக்கு பொறந்த நாளாச்சேன்னு விடரேன்! பொழச்சுப் போ!!’ என்று ஒரு கொலை மிரட்டலோடு விட்டுவிடுவார்கள். இது போன்ற தருணங்கள் நித்தம் நித்தம் நமக்கு பிறந்த நாள் வரக்கூடாதா என்று ஏங்க வைத்துவிடும். ஒரு நாள் முதல்வர் போல வீட்டிலும், ரோட்டிலும், ப்ளாட்ஃபாரத்திலும், பள்ளியிலும் அன்று நாம் தான் கூஜா இல்லாத ராஜா!
மாலையில் கோபாலன் கோவிலுக்கு சென்று “பூரட்டாதி, கும்ப ராசி” சொல்லி ஒரு அர்ச்சனை செய்துவிட்டு வந்து புதியதை விழுத்துவிட்டு பழையதை அணிந்துகொள்ளும் போது துக்கம் தொண்டையை அடைக்கும். மறுநாள் வழக்கம் போல ”சனியனே!”, “கடங்காரா”, “பீடை” போன்ற பீஜாக்ஷர மந்திரங்கள் ஒலிக்க எங்கும் பவனி வரவேண்டும். வட்டியும் முதலுமாக வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டும். மாலை மரியாதை எதுவும் கிடைக்காது.
கருப்பு சோன்பப்படியை உதிரியாய் எடுத்து ஒட்ட வைத்தது போன்று உதட்டுக்கு மேலே குச்சிகுச்சியாய் ரோமம் துளிர் விட ஆரம்பித்த பிறகு வந்த பிறந்தநாட்கள் என் இளமைக்கு சமர்ப்பணம். “மாப்ளே.. எங்க ட்ரீட்?” என்ற கேள்வியுடன் ஆரம்பிக்கும் அந்நன்நாள் தொன்னூற்று ஒன்பது சதவிகிதம் பொன்நாளாக அமையும். தோள், கழுத்து, இடுப்பு என்று எங்குமே அளவே இல்லாமல் மாட்டி விட்டது போன்ற கொசுவலை ஸ்டைலில் ஒரு துணியில் சத்யராஜ் “அண்ணே.. அண்ணே.. நீ என்ன சொன்னே... என்னப் பார்த்து என்ன பாடச் சொன்னே!!” என்று தண்ணி போட்டுப் பாடிய மேல் சட்டை போடும் வயது(க்கு) வந்த போது நான் மாரிஸ் டைலருக்கு மாறியிருந்தேன்.
சாந்தி தியேட்டர் எதிர்புறம் இருந்தா அக்கால ஃபேஷன் கிங் அவர். தலையில் பொட்டு மயிர் கிடையாது. உச்சந்தலையில் கை வைத்தால் வெண்ணையாய் வழுக்கி அவர் உள்ளங்காலடியில் கொண்டுபோய் விடும் வழவழ மண்டை. அண்ணன் தம்பி மொத்தம் மூன்று பேர். உடனே ஆர்.பி. சௌத்ரி படத்துக்கு போய்விடாதீர்கள். கை கால் இடுப்பு ஷோல்டர் அளவுக்கு ஒருத்தர், வெட்டித் தைக்க ஒருவர், காஜாவுக்கு இன்னொருவர் என்று குடும்பமாக எங்கள் ஊர் இளைஞர்களை ரஜினிகாந்த்களாகவும், கமல்ஹாசன்களாகவும் மாற்ற குத்தகைக்கு எடுத்திருந்தார்கள். மாரிஸ் வாசலில் சின்னோண்டு மினியாய் தவம் கிடந்த பதின்மங்கள் ஏராளம்.
ஊர்த் திருவிழாவின் போது ஐயனார் கோவில் வாசலில் நாலு ட்யூப் லைட் கட்டி விடிய விடிய இறங்காமல் ஓட்டும் சைக்கிள் சாகசவித்தைக்காரர்கள் போல சில ஆத்ம நண்பர்கள் பொறந்த நாளில் புதுசு போட்டுக்கொண்டு சைக்கிளில் வீதிவீதியாகச் சுற்றுவார்கள். எனக்கு பெடல் போடுவதற்கு அவ்வளவு தெம்பில்லை. ஆகையால் ஆண் நண்பர்கள் அனேகம் பேர் ஊரின் அப்ஸரஸ் ஃபிகர்கள் பற்றிய தெருவாரிக் கணக்கெடுப்போடும், நேற்றிரவு குஷ்பூ பாரில் நடைபெற்ற சரக்கு பார்ட்டியில் அவர்களது பாண்ட் அவிழா சாகசத்தையும், லக்ஷ்மி தியேட்டர் ’பக்தி’ படங்களைப் பற்றியும் வெட்டி அரட்டைக்கு மாநாடாகக் கூடும் ’ஸ்னேக்’ பார்களிலும், கண்டிப்பாக குட்டிச்சுவர் இருக்கும் ஒன்றிரெண்டு தெருமுனைகளுக்கும் ஒரு மினி ரவுண்ட் அடித்துவிட்டு சுருக்கென்று பத்தரை மணிக்கெல்லாம் வீட்டுக்கு திரும்பும் ஒரு உத்தமோத்தமன்.
கல்லூரியின் போது எட்டாம் நம்பர் பஸ் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு கொட்டமடித்துக் கொண்டாடிய பிறந்த தினங்களைப் பற்றி இச்சந்தர்ப்பத்தில் சொல்வது அவ்வளவு உசிதமாக இருக்காது. அது இளமைக்கு விருந்து. வாலிபத்தின் உட்சபட்ச கொண்டாட்டம். படிப்படியாக வயது ஏற ஏற ஹாப்பி பர்த்டேக்கள் சம்பிரதாயமாக புது ட்ரெஸ் போட்டுக் கொண்டு ஸ்வாமிக்கும், பெற்றோருக்கும் நமஸ்காரம் செய்வதோடு முடிந்துவிடுகிறது.
பின் குறிப்பு: ”என்ன இன்னிக்கி பொறந்த நாள் பற்றி இவ்ளோ வளவளா?” என்று கேட்பவர்கள் இந்தப்பக்கம் கொஞ்சம் உங்கள் காதைக் கொடுங்கள். “இன்றைக்கு எனக்கு பிறந்த நாள்”. மிகவும் பாடாய்ப் படுத்துபவர்களை எங்கள் பகுதியில் “சரியான அவதாரமா வந்து பொறந்திருக்கான்டா” என்று திட்டுவார்கள். இப்போது தலைப்பை மீண்டும் ஒரு முறை படிக்கவும். நன்றி!
-
50 comments:
இங்கும்..எங்கும்….. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்…
பிறந்தநாளும் நீங்களும் வளர்ந்த விதத்தை ரசனை பொங்க அளித்து விட்டீர்கள்..
வாழ்க ..... வளர்க………
மறுபடியும் பிறந்த தின நல்வாழ்த்துகள்..
எங்கூர்லயும் 'அவதாரம்' என்றசொல் திட்டவும், கூப்பிடவுமாக இரட்டை அவதாரமெடுக்கும் :-))
Happy birthday Mr. Keeper of mannai memories! FYI, they recently found a series of solutions to let people live till they are 150. Applying theory of relativity to that age, welcome to your teenage now!
Shekar!
என்னதான் சொல்லுங்க சின்ன வயசுல கொண்டாடின பிறந்த நாள்
கொண்டாட்டம் சுகமான விஷயம்தான்.
அதுவும் பிறந்த நாளுக்கு முதல் நாள் ராத்திரி தூக்கமே வராது.எப்படா விடியும்னு
இருக்கும்.இந்த மாதிரி ஃபீலிங்க்ஸ்லாம் இப்ப இருக்கற குழந்தைகளுக்கு இருக்கறாப்பல
தெரியலை.
நீங்க பூரட்டாதி நட்சத்திரமா? நான் ரேவதி
Wish you many more happy returns of the day!
பிறந்த நாள் வாழ்த்துகள் ஆர் வி எஸ்.! சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீர்கள். இந்நாளில் அன்று என்னென்னவெல்லாம் செய்தோம் என்று சந்தோஷ ஏக்கத்துடன் நினைத்துப் பார்ப்பது இன்றைய பிறந்த நாள் கொண்டாட்டம் போலும்!
மை டியர் ஆர்.வி. எஸ்...பல்லாண்டு காலம் குடும்பத்தினருடன் தாங்கள் இன்பம் பொங்க வாழ இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்!!
அக்காலத்தில் சிறார் உடை தைக்கும் விஷயத்தை நகைச்சுவை பொங்க எழுதியமைக்கு ஸ்பெஷல் பொக்கே!!
மனப்பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.html
குறையாத வளத்துடனும்
குன்றாத நலத்துடனும்
இன்றுபோல் என்றும் சிறந்து வாழ
மனமாற வாழ்த்துகிறேன்
பிறந்த தின வாழ்த்துகள்..
வாழ்க!
ஆமா... போட்டோல யாருண்ணே?
மைனர்வாள்! நீர் எப்போதும் செளக்கியமாவும் சந்தோஷமாவும் இருக்கனும் ஓய்! சரியான 'அவதாரம்' தான் நீங்க!! :)
மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள் ஆர்.வி.எஸ்.
அட்டகாசமாகப் பழைய நினைவுகளைக் கண்முன் வைத்துவிட்டீர்கள். சாகலேட் சிறுமிகள் இன்னும் மாறபவில்லை:)
பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா..
needs a bit of editing. could read better than whats it is now :(
பிறந்த நாள் வாழ்த்துகள் மைனரே.. இது இரண்டாவது முறையோ.... [முகப்புத்தகத்தில் முதலாவது.... :)]
நல்ல பகிர்வு. சிறுவயது நினைவுகள் என்றுமே இனிமையானவை தான் நண்பரே.
இனிய அன்பன பிறந்த நாள் வாழ்த்துக்கள் நம்ம ஊரு மைனருக்கு.
என்றும் இளமையுடன்
இதே துடிப்புடன்
வாழ்க வளமுடன்
என்றும் உங்களின் வாசகனும்
தம்பியும்.
ஒரு முறை ஒரே அள்ளலில் இரண்டு சாக்லேட்களை அபகரித்துக் கொண்ட குற்றத்திற்காக ஒரு வாரம் முகத்தைத் தூக்கிக் வைத்துக்கொண்டுப் பார்க்காமல் ”டூ”விட்டவர்களும் உண்டு.
//
இதாவது பரவலஒரு முறை நான் மூன்று சாக்லேட் லபக்கிவிட்டேன் என்று அடுத்த வருடம் பிறந்த நாள் அன்று எனக்கு சாக்லேட் குடுக்காத நண்பனும் உண்டு..//
அண்ணே சின்ன போஸ்ட் உங்களுக்காக நேரம் இருந்தா வந்து பாருங்கள்.
//பெண் பிள்ளைகள் புத்தாடை உடுத்தி, கூந்தலுக்கு குஞ்சலம் வைத்து கட்டி, முகத்துக்கு ஒரு இன்ச் பாண்ட்ஸ் பூசி, கண்ணுக்கு மை எழுதி, காதுக்கு குடை ராட்டினம் போல ஜிமிக்கி மாட்டி, அம்மாவின் வாத்து போட்ட தங்கச் செயினை சட்டைக்கு மேலே தொங்கவிட்டுக் கொண்டு, அது ஆட ஆட, கொலுசு கொஞ்சும் சலங்கையாய் ஜலஜலக்க பர்த்டே அன்றைக்கு நடந்து வரும் அழகே தனி.//
//மாலையில் கோபாலன் கோவிலுக்கு சென்று “பூரட்டாதி, கும்ப ராசி” சொல்லி ஒரு அர்ச்சனை செய்துவிட்டு வந்து புதியதை விழுத்துவிட்டு பழையதை அணிந்துகொள்ளும் போது துக்கம் தொண்டையை அடைக்கும். மறுநாள் வழக்கம் போல ”சனியனே!”, “கடங்காரா”, “பீடை” போன்ற பீஜாக்ஷர மந்திரங்கள் ஒலிக்க எங்கும் பவனி வரவேண்டும்//
அப்படியே 30/35 வருடங்களுக்கு முன்னால் அழைத்து சென்றுவிட்டீர்கள்.
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
என்றென்றும் இன்று புதிதாய் பிறந்தோம் என்று இனிது வாழ வாழ்த்துக்கள்.
தாமதமாய் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நல்ல பகிர்வு. முதல் பாரா சூப்பர். சிறுவயது நினைவுகளை இவ்வளவு ஞாபகத்துடனும், ரசனையுடனும் சொல்லியிருக்கீங்க சகோ.
நீங்க பூரட்டாதியா..ராஜி ரேவதியாம்...நான் நடுவில் உத்திரட்டாதி.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் RVS...இது என் முதல் விஜயம்...சிவா கேசரி கொடுத்து வரவேற்று... வழிகாட்டினார்...
@பத்மநாபன்
நான் எங்கிருந்தாலும் வாழ்த்தும் பத்துஜிக்கு மனமார்ந்த நன்றி. :-))
@அமைதிச்சாரல்
அவதாரத்திற்கு அவதாரம் சொன்ன நீங்க கிரேட்டுங்க... :-))
@Krish Jayaraman
சேகர்... 150 தா... யப்பாடியோவ்....
வாழ்த்துக்கு நன்றி சேகர்.. :-)
@raji
இதுக்கு பேர் தான் ராசிங்க....
வாழ்த்துக்கு மிக்க நன்றி மேடம்.. :-))
@bandhu
Thank you very much mr. bandhu. :-))
@ஸ்ரீராம்.
சந்தோஷ ஏக்கம்... வார்த்தை காயின் பண்ணி பின்றீங்க...
வாழ்த்துக்கு நன்றி.. :-)
@! சிவகுமார் !
வாழ்த்துக்கு நன்றி சிவா!
துணி வாங்கி தைக்க கொடுத்த காலமெல்லாம் மலையேறிப் போச்சு இப்ப...
:-))
@Rathnavel
ஐயா மிக்க நன்றி.. :-)
@Ramani
சார்! வாழ்த்துக்கு மிக்க நன்றி.. :-))
@கே. பி. ஜனா...
நன்றி சார்! :-)
@அப்பாதுரை
வாழ்த்துக்கு நன்றி வாத்யாரே!!
போட்டோல இருப்பது ஒரு அந்தக் கால அராத்து!! இந்தக் கால சமர்த்து!!! :-)
@தக்குடு
வாழ்த்துக்கு மிக்க நன்றி க.கா.நா. :-))
@வல்லிசிம்ஹன்
மனமார்ந்த வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க... இப்பெல்லாம் இந்தப் பக்கம் வர மாட்டேங்கிறீங்க.. :-))
@இளங்கோ
மிக்க நன்றி தம்பி.. :-))
@mama
சரிடா மாமா!! :-))
@வெங்கட் நாகராஜ்
வாழ்த்துக்கு மிக்க நன்றி வெ.நா. (டில்லி ராஜா) :-))
@siva
வாழ்த்துக்கு மிக்க நன்றி சகோதரா!!
எனக்காக ஒரு போஸ்ட்டை வேஸ்ட் பண்ணிட்டியேப்பா!! :-))
@RAMVI
மிக்க நன்றி மேடம்!! :-))
@இராஜராஜேஸ்வரி
வாழ்த்துக்கு ரொம்ப நன்றிங்க.. உங்க சைட் பக்கம் வரமுடியலைங்க... மன்னிக்கவும்.. :-))
@கோவை2தில்லி
நன்றி சகோ!!
பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி.... வரிசையா இருக்கோமோ? :-))
@Reverie
முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க..
அடிக்கடி வாங்க :-))
@கோவை2தில்லி
நீங்க உத்திரட்டாதியா?
எங்க வீட்டு வெங்கட் கூட உத்திரட்டாதிதான்.
அதுவும் நாங்க 2 பேரும் ஒரே மாசம்ங்கறதால எங்க 2 பேருக்கும் அடுத்தடுத்த நாள்
பொறந்த நாள் வரும். (யார்ங்க அது என்ன பொருத்தம் பாட்டு பாடறது??!! :-)) )
"நீங்க உத்திரட்டாதியா?
எங்க வீட்டு வெங்கட் கூட உத்திரட்டாதிதான்.
அதுவும் நாங்க 2 பேரும் ஒரே மாசம்ங்கறதால எங்க 2 பேருக்கும் அடுத்தடுத்த நாள்
பொறந்த நாள் வரும். (யார்ங்க அது என்ன பொருத்தம் பாட்டு பாடறது??!! :-)) )"
ராஜி நிஜமாகவே உங்க ரெண்டு பேருக்கும் நல்ல பொருத்தம் தான்.
அண்ணா என்னோட நட்சத்திரமா!!!!!
Belated Birthday Wishes Vadyare, Sorry i had been sent to Accra-Ghana. I hav`t seen ur post. Wish you all best and will pray the almighty to give good health and wealth (Write more and kill us!!!!:)-
@Kannan
Thank you very much for your wishes. Will write more and more and kill you through my keyboard. :-)))))
Thanks.
Post a Comment