கல்லூரிக் காளையாக இருந்த போது நண்பர்கள் ரூட் விடும் அழகிய பெண்ணைக் கவர்வதற்கு
“என்னடா மாப்ள ஐந்தாண்டு திட்டமா?” என்று கிண்டலடிப்பார்கள். இந்தக்
கேள்வியை என்னிடம் கேட்பார்களா என்று கேட்டு என்னைத் துளைக்காதீர்கள்.
கன்னிப் பெண்களைக் கண்டால் என் கண்கள் நிலம் நோக்கப் பழகியிருந்தது.
ஐந்தாண்டு
திட்டங்களைப் பற்றி சமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் படித்தேன். பண்டித
ஜவஹர்லால் நேரு 1951-ம் ஆண்டு குளிர்கால கூட்டத்தொடரில் முதல் ஐந்தாண்டு
திட்டத்தை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
ஐந்தாண்டு திட்டங்களில் கல்வியைப் பற்றி ”பாஞ்ச் பஞ்ச்” பாயிண்ட்ஸ்.
1. இந்த முதல் ஐந்தாண்டு திட்டத்தின் இறுதியில், 1956-ம் வருடம் தான் ஐந்து ஐ.ஐ.டி தொழில் நுட்பக் கல்லூரிகள் தொடங்கப்பட்டது.
2. 1953-ம் வருடம் பல்கலைக்கழக மானியக் குழு நிர்மாணிக்கப்பட்டது. (UGC)
3.
இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தில் Tata Fundamental Research அமைக்கப்பட்டு
ஸ்காலர்ஷிப் மூலம் தேறிய நிறைய பளிச் மூளை மாணவர்களுக்கு அணு மின்
துறையில் வேலை வாய்ப்பளிக்கப்பட்டது. 1961-66ல் மாநிலங்களுக்கு கல்வியை
சீர் செய்யும் பொருப்பளிக்கப்பட்டது.
4. 1966 லிருந்து 1992
வரை திட்டமிட்ட ஐந்தாண்டு திட்டங்களில் உயர் கல்வியை உயர்த்தும் பொருட்டு
எதுவும் உருப்படியாக செய்யவில்லை. ஒன்பதாவது மற்றும் பத்தாவது ஐந்தாண்டு
திட்டங்களில் ஆரம்பக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
5. பதினொன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் அரைகுறையாக படிப்பைப் பாதியில் விடுவதை கட்டுப்படுத்தத் திட்டங்கள் வகுக்கப்பட்டது.
தொடர்புடைய சுட்டி: http://12thplan.gov.in/
எல்லா ஐந்தாண்டு திட்டங்களிலும் வகுத்தவைகளைச் செயலாக்கிவிட்டார்களா? என்ற கேள்வியைத் தாங்கும் த்ராணி எனக்கில்லை. 2012-ல்
வரப்போவது பனிரெண்டாவது ஐந்தாண்டுத் திட்டமாம். இதில் 2017-ல் மேல்நிலைக்
கல்வியை அனைத்து மாநிலங்களுக்கிடையே சமச்சீர்படுத்துகிறார்களாம்!!
பின் குறிப்பு: ரொம்ப நாளா சைட் காலியாக் கிடக்கு. நாளைக்கு முடிந்தால் காதல் கணினியைத் தொடர்கிறேன்.
பட உதவி: http://indolinkenglish.wordpress.com/
-
27 comments:
//"ரொம்ப நாளா சைட் காலியாக் கிடக்கு. நாளைக்கு முடிந்தால் காதல் கணினியைத் தொடர்கிறேன்"//
ok
நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.
அருமையான
பயனுள்ள பதிவு நண்பா
//இந்தக் கேள்வியை என்னிடம் கேட்பார்களா என்று கேட்டு என்னைத் துளைக்காதீர்கள். கன்னிப் பெண்களைக் கண்டால் என் கண்கள் நிலம் நோக்கப் பழகியிருந்தது.//
நம்பிட்டோம் மைனரே. ஐந்தாண்டுத் திட்டங்கள்... நல்ல பகிர்வு.
தொடருங்கள் காதல் கணினியை....
கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து போட்ட ஐந்து ஆண்டு திட்டங்கள் எல்லாம் மிகவும் அருமையானவை தான்.. அதை செயல் படுத்துவதில் தான் கோளாறு .. நல்ல விழிப்புணர்வு பதிவு ....
@ஸ்ரீராம்.
ட்ரை பண்றேன்!! :-)
@Rathnavel
நன்றி சார்! :-)
@A.R.ராஜகோபாலன்
நன்றி நண்பா!! :-)
@வெங்கட் நாகராஜ்
நம்பித்தான் ஆகணும் தல. :-))
@பத்மநாபன்
ஆரம்பகால் சுதந்திர இந்தியாவில் நிறைய பயனுள்ள திட்டங்கள் வகுத்திருந்தார்கள் என்று தெரிகிறது. போகப்போக அட்டூழியங்கள் பெருகிவிட்டது... எல்லாம் காலம் செய்த கோலம்.. :-((
காதல் கணினியை தொடரவும்..
//கன்னிப் பெண்களைக் கண்டால் என் கண்கள் நிலம் நோக்கப் பழகியிருந்தது//
அப்படியே நம்புகிறேன். நானும் அது போலவே என்பதால்.
//நாளைக்கு முடிந்தால் காதல் கணினியைத் தொடர்கிறேன்.//
பெரிய எழுத்துக்களில், சின்ன சின்ன பாராவா போட்டு பளிச்சினு வெளியிடுங்கள். அப்போ தான் site அடிக்க நல்லாயிருக்கும்.
காதலுக்காக காத்திருக்கிறோம்.
// கன்னிப் பெண்களைக் கண்டால் என் கண்கள் நிலம் நோக்கப் பழகியிருந்தது.//
'அனுபவத்திற்கு' மட்டுமே முன்னுரிமை.. -- சரிதான்..
(Please take it in light sence.. no affence intended.)
சைட் ஏன் காலியாய் கிடக்கு ஆர்.வீ.எஸ்?
உங்களைப்போலவே நானும் கல்லூரிக்காளையாக இருந்திருக்கிறேன். ஒரு சின்ன வித்யாசம். நான் AVM - ம்மின் முரட்டுக்காளை.
//கன்னிப் பெண்களைக் கண்டால் என் கண்கள் நிலம் நோக்கப் பழகியிருந்தது//
கன்னியர் சன்பாத் எடுத்துக்கொண்டு இருக்கையில் கண்கள் நிலத்தைப்பார்க்கத்தான் செய்யும்.
ஆர்.வி.எஸ்...ஐந்தாண்டு திட்டத்தை தவறாக புரிந்து கொண்டால் அரசு பொறுப்பாகாது. அது ஆளும் கட்சியின் நலனுக்காக அவர்களே போட்டுக்கொள்ளும் திட்டம். For Example CWG, GG (2G) and your favourite Biz Magnate Kalanidhi's "SCV"....என்று சொல்லிக்கொண்டே போகலாம்......>>>>>>>
65-67 வாக்கில் அந்தப்பக்கமாக யாராவது வந்தால் டெல்லி ஐஐடியில் உள்ளே பிடித்துப் போட்டு விடுவார்களாம். அப்படி இடம் கிடைத்துப் படித்து (?) தேறிய பல ஞானிகளை அறிவேன்.
அவங்க திட்டம் போட்டது எல்லாமே வேற மேட்டருக்கு
அது சரியாத்தானே நடந்திருக்கு
@!* வேடந்தாங்கல் - கருன் *!
கொஞ்சம் டைம் ப்ளீஸ்... தொடருகிறேன்.. :-)
@வை.கோபாலகிருஷ்ணன்
காதலுடன் காத்திருப்பதற்கு மிக்க நன்றி சார்!
கூடிய விரைவில் வெளியிடுகிறேன்... :-)
@Madhavan Srinivasagopalan
பரவாயில்லை மாதவா! என்னை நாடறியும்.. :-)
ஜோக்காத்தான் எடுத்துக்கிட்டேன்... :-)
@மோகன்ஜி
கொஞ்சம் ஒர்க் லோடு... சமாளிக்கறேன் அண்ணா.. :-)
@! சிவகுமார் !
முரட்டுக்காளையா... பயமா இருக்குப்பா...
சன் பாத் எடுத்துக்கொண்டாலும் நிலம் பார்த்தால் தகுமா?
அது என்ன என்னோட BIZ Magnet... எதுலயாவது கோர்த்து விட்றாதீங்கப்பா... :-)
@அப்பாதுரை
சார் ரொம்ப தன்னடக்கத்தோட பேசுறீங்க... நீங்க டெல்லி ஐ.ஐ.டி ஸ்டுடண்ட் தானே!! :-)
@ரிஷபன்
அது சரிதான் சார்! உலகக் கொடுமை... :-)
ஹிஹி.. உங்க பெருந்தன்மை.
Post a Comment