சர்வர் குண்டு போட்டதைத் தொடர்ந்து அடுக்கடுக்காக நிறைய வேலைகள். என் கர்மவினைப் பயன் குறுந்தொடர் ஒன்று ஆரம்பித்தாலே தலைக்கு மேலே வெள்ளம் போல ஆளை மூழ்கடிக்கும் வேலைகள் வந்துவிடுகிறது. பகவான் உங்கள் எல்லோரையும் என் எழுத்தில் இருந்து காத்து ரட்சிக்கிறார் என்று நினைக்கிறேன். வாழ்க வையகம். இராப்பொழுதுகளில் "காதறுந்த ஊசியும் வாராது காண் கடைவழிக்கே" என்று பாடிய பட்டினத்தார் படித்துக் கொண்டிருக்கிறேன். காதறுந்த ஊசியை டவுனான சர்வரும் என்று மாற்றிப் போட்டு படித்தால் கூட பட்டியின் வாசகம் எனக்கு முழுமை அடைகிறது. சர்வரின் தொல்லையால் பட்டினத்தடிகளை நாடவில்லை. அடிக்கடி என் சிந்தை வேதாளம் அந்தப் பக்கமும் எட்டிப் பார்க்கும். படித்ததிலிருந்து மனதை நிரப்பிய சில வரிகளை கீழே கொடுத்துள்ளேன்.
உண்டதே உண்டு
உடுத்தியதே உடுத்தி
உரைத்ததே உரைத்து
கண்டதே கண்டு
கேட்டதே கேட்டு
கழிந்தன நாளெல்லாம்.
- திருவெண்காட்டுத் திருவிசைப்பாவில் பட்டினத்தார்
#இந்த ஒரு வாரம் இப்படித்தான் கழிந்திருக்கும் என்று பட்டினத்தார் என்றைக்கோ பாடிட்டு போய்ட்டார்! முக்காலமும் உணர்ந்த ஞானி அவர்.
பின் குறிப்பு: சனிக்கிழமை ப்ளாக் வெறிச்சோன்னு கிடக்கக் கூடாதுன்னு ப்ளாக் சாஸ்த்திரங்கள் சொல்வதால் வளவளான்னு இல்லாமல் சின்னதா இந்தப் பதிவு. ஆனா இந்த டோஸ் நிச்சயம் ஒரு ரெண்டு மூணு நாள் தாங்கும்னு நினைக்கிறேன். பின் நவீனத்துவ தலைப்பு வைத்ததற்கு மாப்பு தாருங்கள். பட்டினத்தாருக்கு நன்றி.
பட உதவி: http://www.oocities.org/
-
19 comments:
சர்வர் சங்கடங்கள் இன்னமும் தொடர்கிறதா... காதற்ற ஊசியொடு புட்டுக்கிட்ட சர்வர் நல்ல ஒப்பீடு......
// உண்டதே உண்டு
உடுத்தியதே உடுத்தி
உரைத்ததே உரைத்து
கண்டதே கண்டு
கேட்டதே கேட்டு
கழிந்தன நாளெல்லாம்.//
திகார்?
குறுந்தொடர்கள் சூப்பரா எழுதறீங்க.ஆனால் படிக்கத்தான் நேரமில்லை. மன்னிக்கவும். அதனால் அப்பப்ப நேரம் கிடைக்கும்போது மொத்தமாக படிச்சு என்னோட அட்டெண்டன்ஸ் போடறேன்.
உண்டதே உண்டு.. கையாலாகாத கஸ்டமர் சப்போர்ட் கூட இப்படித்தான் என்கிறீர்களா? பலே.
ஆர்.வி.எஸ். சார், கணினி காதல் என்னச்சு அத சொல்லுங்க!! சன்யாசிய பத்தி அப்பறம் பார்க்கலாம்.
சர்வருக்கு விட்ட டோஸ் நிச்சயமா பலன் தரும்..
காதல் கணினிக்கு பட்டினத்தாரில் இருந்து ஏதும் சரக்கு கிடைத்ததா ?
இன்னும் சரியாகலையா ?? எனக்கு அந்த பிரச்சனை சரி ஆகிடுச்சி...
காதற்ற ஊசியை கழுத்தறுக்கும் சர்வருக்கு ஒப்பிடும் மைத்துனரே! வரவர புலவராயிட்டே வரீங்க !
@பத்மநாபன்
குறைந்திருக்கிறது பத்துஜி! நன்றி. :-)
@! சிவகுமார் !
இருக்கலாம்! :-)
@ஜிஜி
ரொம்ப நன்றி சகோ! :-)
@அப்பாதுரை
நன்றி அப்பாஜி! :-)
@RAMVI
ரெடியாயிகிட்டே இருக்கு. கூடிய விரைவில் வெளியிடுகிறேன். நன்றிங்க.. :-)
@அமைதிச்சாரல்
நன்றிங்க சாரல். :-)
@சிவகுமாரன்
உஹும். ஒன்னும் பேரலை... :-)
@எல் கே
எனக்கும் ஓ.கே ஆயிடுச்சு எல்.கே. துக்கம் விசாரித்ததற்கு நன்றி. :-)
@மோகன்ஜி
இல்லயில்லை.. நீர்.. நீர்... நீர் புலவர்... :-)
காதறுந்த மெளசும்..
கழுத்தறுக்கும் ’நெட்’டும்
வாராது..காண்
கடை வழிக்கே..என
பட்டு இனம் கண்டு,
’பட்டணம்’ சொன்னது,
பத்து ஜன்மம் கடந்தும்,
பத்திரமாய் தொடர்ந்து வரும்!!
Post a Comment