கையில் இருக்கும் பட்டனைக் கொடுத்து நான்கைந்து பேராய் அணியாக ஒரு இலக்கை நோக்கி ஜெயிப்பதற்காக ஓடும் ரிலே ரேஸ் போல இந்தத் தொடர் பதிவுகள். இலக்கு தலைப்புகள். பதிவுலகத்தில் ஆரோக்கியமான தலைப்புகளில் தொடரப்படும் சங்கிலிப் பதிவுகள் வெற்றிலை பாக்கோடு ஆரத்தி எடுத்து வரவேற்க வேண்டிய ஒரு நல்ல விஷயம். முன்னுரைகளைப் பற்றி எழுத்தாளர் வித்யா சுப்ரமணியம் போன மாதம் அழைப்பு விடுத்து நான்கு பேர் அவருக்கு பின்னால் பின்னுரையாக எழுதினோம்.
முன்னுரைகள் ஒரு சிறப்பான டாபிக். ஒரு புஸ்தகத்தை வாங்குவதற்கு முன் புரட்டிப் பார்க்கும் இரண்டு நிமிடங்களில் வாசகனைக் கவரும் வகையில் முன்னுரைகள் இருக்க வேண்டும். இம்முறை பிரபலங்களிடம் பேட்டி போல ஒரு தொடர் பதிவு. இம்முறை தொடுப்புக் கொடுத்தது கல்லிடையின் காதல் நாயகன் தக்குடு. முடிந்த வரையில் கேள்விக்கு நேரடியான பதில் அளித்திருக்கிறேன், படிப்போர் ரசிக்கும் வகையில்.
1) நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்?
இன்னொரு பால்யம் இப்பிறவியில் அமைந்தால் மீண்டும் அதே ’கெட்ட’ சகவாசங்களுடன் வடக்குத் தெரு மதில் கட்டையில் ராப்பூரா அரட்டையும், ராஜகோபாலன் உற்சவங்களும், கிரிக்கெட் போட்டிகளும் திணறத் திணற நிரம்பிய மன்னார்குடி வாசம்.
பசிக்கும் போது சூடான இட்லி, தேங்காய் சட்னியுடன் வயிறாற சாப்பிட்டவுடன் கண்கள் சொருக போதையேற்றும் கள்ளிச்சொட்டு ஸ்ட்ராங்காய் ஃபில்டர் காஃபி.
மேல் சட்டை போடாமல் bare body-யுடன், கையில் பேய்க் கரும்பு இல்லாமல் வேஷ்டி மட்டும் இடுப்புக்கு மேலே பட்டினத்தார் போல சுற்றிக்கொண்டு சிவனேன்னு ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருத்தல்- சில நேரங்களில்.
2) நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்?
ஒலியெழுப்பக் கூடாத பிரதேசமான ஆஸ்பத்திரி வாசலில் கூட ”டர்...டர்”ரென்று காதைக் கிழிக்கும் ஆட்டோ சத்தம். “பாம்..பாம்” என்று பஸ்கள் இரையும் ஏர் ஹார்ன்கள். ஆண்டவன் சன்னதியில் ”மாட்டுப்பொண் ஊருக்கு போயிருக்காளா” போன்ற கடைந்தெடுத்த கண்ணியம் இல்லாத செயல்கள்.
கோயிலில் “என்ன கோயிலுக்கா?”என்றும் சினிமாக் கொட்டாயில் “சினிமாவுக்கா?” என்றும் பீச்சில் “பீச்சுக்கா?” என்றும் அப்பாவியாகக் கேட்கப்படும் அச்சுப்பிச்சான சம்பிரதாயக் கேள்விகள். நல்லவேளை இறுதி ஊர்வலத்தில் கொள்ளி தூக்கிக்கொண்டு முன்னால் செல்பவரிடம் “என்ன சுடுகாட்டுக்கா?” என்று கேட்காமல் இருக்கிறார்கள்.
அருள் புரிவதற்கு ஏழை, பணக்காரன் என்று வித்தியாசம் பாராட்டாத ஏடு கொண்டல வாடாவிர்க்கு பல டினாமினெஷனில் டிக்கெட் அச்சடித்து வசூல் செய்து ‘பணக்கார சாமியாக’ க்யூ கட்டிப் பார்க்க விடுவது.
3) பயப்படும் மூன்று விஷயங்கள்
இந்த லோகாயாத வாழ்வில் ”நீங்களே பார்த்து நல்லதா வாங்கிட்டு வாங்க” என்று அஸைன் ஆகும் சில பல கிரகஸ்தாஸ்ரம வேலைகள்.
புள்ளைகுட்டிகளுக்கு வீட்டுப் பாடங்கள் மற்றும் பரீட்சைக்கு சொல்லிக் கொடுப்பது. வெரி டேஞ்சரஸ். ‘அவளுக்கு கொஞ்சம் மேத்ஸ் பாருங்க’ என்று மிஸ்ஸஸ் சொன்னால் உள்ளுக்குள் உதறல் எடுக்கிறது.
மக்கள் சமுத்திரமான தி.நகரில் கடை விரித்திருக்கும் பல அடுக்கு மாடி ஷாப்கள் மற்றும் ஸ்டோர்களில் திருகாணியில் இருந்து தீபாவளிப் பட்டு வரை எல்லாரையும் ஒட்டி உரசி ஈஷிக்கொண்டே மூச்சு முட்ட சகட்டு மேனிக்கு சாமான்கள் வாங்கும் அசாத்திய தைரியசாலிகளைப் பார்த்து. அந்தக் கடைகளைப் பார்த்தும் தான்.
4) உங்களுக்கு புரியாத மூன்று விஷயங்கள்?
ஏழெட்டு வருடங்களுக்கு முன்னால் அட்டெண்ட் செய்த யாரோ ஒருவரின் கல்யாண ரிஷப்ஷன் ஆடை அலங்காரங்களை இப்போதும் எப்போதும் ராத்திரி தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் நினைவில் வைத்திருக்கும் மாதர் குல மாணிக்கங்கள். - #எப்படி இவ்ளோ ஞாபகம் இருக்கிறது என்று சுத்தமாகவும் அழுக்காகவும் கூட புரியவில்லை.
அடுப்பில் கொதிக்கும் போதே வாசனை பார்த்து ”ரசத்துக்கு உப்பு பத்தாது” என்று ஹாலிலிருந்து அடுக்களை பார்த்து சத்தமிடும் மூக்கை நாக்காக வளர்த்த சில வாசனாதிப் பெரியோர்கள்.
ஆஸ்ரமங்களில் நித்யமும் ’ஆனந்த’ சாமியார்கள் ‘கட்டிப் பிடி வைத்தியம்” தான் செய்கிறார்கள் என்ற நிஜம் தெரிந்தும் கூட்டம் கூட்டமாய்க் குவியும் பக்தைகள் கூட்டம்.
5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?
ரகுநாதனின் ‘ரஸிகன் கதைகள்’
நாலு வயசு கௌதம்மின் பர்த் டே பார்ட்டியில் கலந்து கொண்டு திரும்பிய மானஸா போட்டிருந்த ரோஸ் கலர் ஜிகுஜிகு கோமாளி கேப்.
இந்த நவீன உலகத்தின் இரக்கமில்லாத எஜமானன் - செல் ஃபோன்.
நாலு வயசு கௌதம்மின் பர்த் டே பார்ட்டியில் கலந்து கொண்டு திரும்பிய மானஸா போட்டிருந்த ரோஸ் கலர் ஜிகுஜிகு கோமாளி கேப்.
இந்த நவீன உலகத்தின் இரக்கமில்லாத எஜமானன் - செல் ஃபோன்.
6) உங்களை சிரிக்க வைக்கும் மூன்று விஷயம் or மனிதர்கள்?
கல்யாண ரிஷப்ஷனில் கோட் சூட்டோடு சிரித்துக் கொண்டு எதிர்கால பயமின்றி போஸ் கொடுத்து நிற்கும் மாப்பிள்ளை. (பெண் சிங்கங்கள் சண்டைக்கு வரக் கூடாது. அப்படி வந்தால் ஆண் சிங்கங்கள் எனக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.)
”போதா பதவா.. தாஸ்கல்.. மூக்க அதுத்துதுவேன்” என்று என்னைத் திருப்பித் திட்டும் மழலைகள்.
எல்லாம் தெரிந்த ஆல் இன் ஆல் அழகுசாமி போல ”ஹார்ட் டிஸ்க்ன்னா ரொம்ப ஹார்டா கெட்டியா இருக்கும். லேசுல உடையாது. எங்க கீழ போட்டுப் பாருங்க”ன்னு சம்பந்தா சம்பந்தமில்லாமல் மூக்கை நுழைத்து உளறுபவர்கள்.
7) தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?
வாகனம் ஓட்டிக்கொண்டு, ரோட்டில் பிலாக்கு பார்த்துக் கொண்டு, யாருடனாவது நீலப் பல்லில் பேசிக்கொண்டும் வீடு திரும்பும் அசாத்திய திறன் எனக்கு உண்டு. வலையில் உலவும் உலாவி போல நான் ஒரு மல்ட்டி டாஸ்க்கிங் மென்பொருள்.
தமிழ்மண நட்சத்திர வாரத்தின் கட்டக் கடேசிப் பதிவு எழுதிக் கொண்டிருக்கிறேன்.
”லேட்டாயிடுத்து சாப்பிட வரியா” என்று என்னைக் கூப்பிட்ட அம்மாவிற்கு ”இதோம்மா..” என்று பதில் கூறுகிறேன்.
தமிழ்மண நட்சத்திர வாரத்தின் கட்டக் கடேசிப் பதிவு எழுதிக் கொண்டிருக்கிறேன்.
”லேட்டாயிடுத்து சாப்பிட வரியா” என்று என்னைக் கூப்பிட்ட அம்மாவிற்கு ”இதோம்மா..” என்று பதில் கூறுகிறேன்.
”ஸிஸ்டம் குடு” என்று என் கையை தட்டிவிட்டு என்னிடமிருந்து பிடுங்கும் என் செல்லங்களிடம் இருந்து கெஞ்சிக் கூத்தாடி தப்பித்துக் கொண்டிருக்கிறேன்.
8) வாழ் நாள் முடிவதர்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?
வேறென்ன? இலக்கியத் தரத்தில் இல்லையென்றாலும் நாலு பேர் படிக்கும் விதமாகவாவது. அட்லீஸ்ட் புரட்டும் விதமாகவாவது ஹி ..ஹி.. ஒரு புஸ்தகம் போட வேண்டும்.
பாதியில் விட்ட மிருதங்கத்தை மீண்டும் தூசு தட்டி எடுத்து “தத்.தி.தொம்.நம்” மிலிருந்து ஆரம்பித்து முழுக்க கற்றுக்கொள்ளவேண்டும்.
இன்னொரு முறை மண்டையை பிளக்கும் கொளுத்தும் வெய்யிலில் மன்னையில் கிரிக்கெட் டோர்ணமெண்ட் ஒன்று விளையாட வேண்டும்.
இன்னொரு முறை மண்டையை பிளக்கும் கொளுத்தும் வெய்யிலில் மன்னையில் கிரிக்கெட் டோர்ணமெண்ட் ஒன்று விளையாட வேண்டும்.
9) உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள்?
இருபத்து நான்கு மணி நேரமும் அன்னம் தண்ணீர் ’அரசியல்வாதி சோடா’ போன்ற தேவைகள் இல்லாமல் வாய் மூடாமல் பேச முடியும்.
மனசொடிஞ்சு போய் நிர்கதியாக யாராவது வந்தால் “அதோ பாரு நிலா! அந்தக் கறை அதுக்கு எப்படி வந்துச்சு தெரியுமா? கறை இருந்தாலும் நிலா அழகு தானே”ன்னு பக்கத்துல உட்கார்த்தி வச்சு கதை சொல்லி மூடை மாற்றத் தெரியும்.
ஓராயிரம் ஆட்டோக்களுக்கு மத்தியில், சாலையெங்கும் வாகனங்கள் விரவியிருந்தாலும் மனோதிடத்துடன் நாற்சக்கர வாகனம் ஓட்ட முடியும். பத்து வருஷ ’வண்டியோட்டி சர்வீஸ்’ பேசுது.
10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?
மார்கழி மாத சபாக் கச்சேரிகள் கேட்டுவிட்டு நானும் கச்சேரி செய்கிறேன் பார் என்று வாயைப் பிளந்து தெருவே கேட்கும்படி கதறும் புதிய உத்வேகப் பாடகர்கள் பாடும் எ(ச்)சப்பாட்டுகள்.
நான் படிக்கும் போதும் சரி இப்போது என் பெண்கள் பாடசாலையில் வாசிக்கும் இந்தக் கர வருஷத்திலும் சரி, ”பவி தேர்ட் ரேங்க். உங்க பொண்ணு எத்தனாவது ரேங்க்?” என்ற தேவையற்ற ஒப்பீட்டுக் கேள்வி. இதையே கிரேட் வைத்தும் கேட்பார்கள் என்று அறிக.
நுனி கூராக உள்ள மண்வெட்டியை மணல் இரைந்து கிடக்கும் தார் ரோட்டில் போட்டு “டர்..டர்.” என்று கரண்டும் ஓசை. அந்த மண்ணின் நரநர ஓசை காது வழியாக உள் புகுந்து உடம்பெங்கும் அரித்துக் கொண்டு பரவும். Oh God!
11) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?
ஓயாமல் லொடலொடவென்று Chatter Box போல பேசாமல் தேவைக்கு மட்டும் வாயைத் திறப்பது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
மாநகரப் போக்குவரத்தில் வண்டி ஓட்டும் போது கடிவாளம் கட்டியது போல ரோட்டை மட்டும் பார்த்து ஓட்டுவது எப்படி என்று கற்றுக் கொள்ள நெடு நாள் பிடிக்கும் போலிருக்கிறது.
கமகமவென்று தெருவே மணக்கும் வண்ணம் வாசனை மூக்கைத் துளைக்க சமைக்க (கரண்டி பிடிக்க) கற்றுக்கொள்ள வேண்டும்.
12) பிடிச்ச மூன்று உணவு வகை?
365 நாட்களும் இரவும் பகலும் இட்லி தோசை அதன் இணை பிரியாத ஜோடி சட்னி சாம்பாருடன். ஸ்டார் ஹோட்டலுக்கு போனால் கூட இட்லி தோசைக்கு ஆளாய்ப் பறக்கும் இட்லி விசிறி நான். சாக்கடை கசியும் பிளாட்பார தட்டுக்கடை மல்லிப்பூ இட்லி போல கமகமக்கும் ஸ்டார் ஹோட்டல் குஷ்பூ இட்லி அவ்வளவு சுகம் இல்லை.
ரொம்பவும் தளர்ந்து இல்லாமலும், கெட்டியாகவும் இல்லாமலும் தொட்டுக்க மாவடு அல்லது விழுதுடன் ஊறிய ஊறுகின்ற ஊறப்போகும் ‘வினைத்தொகை’ ஆவக்காயுடன் தயிர் சாதம். பகாசுரன் போல பத்து நிமிடத்தில் ஒரு படி சாதம் உள்ளே சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஈவினிங் டிஃபனுக்கு வெங்கலப் பானையில் கிண்டும் தேங்காய் துறுவலுடன் அரிசி உப்புமா வித் மவுத் வாட்டரிங் நீர்க்க இருக்கும் கத்திரிக்காய் கொஸ்த்து. ரவையூண்டு புளி அதிகமாய் இருந்தால் கொஸ்துக்கு உப்புமா தொட்டுக்கலாம்.
13) அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?
அவ்வப்போது டைனமிக்காக மாறும் பட்டியல் இது. இப்போது கீழே கொடுக்கும் லிஸ்ட், சென்ற ‘ட்’ அடித்த பிறகு டக்கென்று நினைவில் வந்தது.
என் கண்மணி என் காதலி... இளமாங்கனி....
படைத்தானே பிரம்ம தேவன்....
குருவாயூரப்பா... நான் கொண்ட காதலுக்கு நீ தானே சாட்சி.
எல்லாம் எஸ்.பி.பியாக முணுமுணுத்தாச்சோ!
14) பிடித்த மூன்று படங்கள்?
கிளாஸிக்
தேவர் மகன்
மகாநதி
குணா
காமடி
மைக்கேல் மதன காமராஜன்.
பஞ்ச தந்திரம்
பம்மல் ‘உவ்வே’ சம்பந்தம்.
படையப்பா
முத்து
பாட்ஷா
அண்ணாமலை......
Pursuit of Happiness என்று வாழ்க்கையில் கஷ்டப்படும் விற்பனைப் பிரநிதி ஒருவனின் கதை. ஆங்கிலத்தில் ஆக்ஷன் படங்கள் மட்டும் பார்த்த நான் கண்ணீர் வரவழைக்கும் படமாக பார்த்த சினிமா இது. ரியலி சூப்பர்ப். எவ்ளோ நாள் தான் கமல்/சிவாஜி படத்துக்கு மட்டும் ’ஓ’ன்னு அழறது.
....ஓ! மூன்று தான் சொல்லவேண்டுமோ? மும்மூன்றாய் நிறையச் சொல்லலாம். படமும் பாடலும் மூன்றில் நிறுத்தி முக்கோணமிட முடியுமா?
15) இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூணு விஷயம்?
ரொம்ப சொகுசுக்கு உடம்பு பழகிடிச்சு.
பற்கள் கிடுகிடுக்கும் குளிர் காலத்திலும் இருவது டிகிரியில் இயங்கும் காரியர் ஸ்பிளிட் ஏ.ஸி.
முகத்தை மூடும் புழுதி, குளிப்பாட்டும் சாக்கடைப் புனித நீர், ஹார்ன் மாணிக்கங்களிடம் இருந்து செவிப்பறையை காப்பாற்றிக் கொள்ள என்று மூன்றுக்கும் சேர்த்து ஜன்னலேற்றிய ஒரு ஏ.ஸி கார்.
அட்லீஸ்ட் தினமும் ஒரு வேளையாவது ஒரு கவளமாவது தயிர் சாதம். யொகர்ட்டின் குண விஷேஷங்கள் பற்றி வெள்ளைக்காரர்கள் ஏகத்திற்கும் சிலாகிக்கிறார்கள்.
அட்லீஸ்ட் தினமும் ஒரு வேளையாவது ஒரு கவளமாவது தயிர் சாதம். யொகர்ட்டின் குண விஷேஷங்கள் பற்றி வெள்ளைக்காரர்கள் ஏகத்திற்கும் சிலாகிக்கிறார்கள்.
16) இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்?
பதிவுலக சூறாவளி ராஜராஜேஸ்வரிஎழுத்தை ஆயுதமாய் வைத்திருக்கும் ஏ.ஆர்.ராஜகோபாலன்
தில்லியில் பதிவாட்சி செலுத்தும் வெங்கட் நாகராஜ்
பின் குறிப்பு: இதுவரை தமிழ்மணத்திலும் தொடர்ந்து வந்து படித்த அனைத்து அப்பாவி ஜீவன்களுக்கும் மிக்க நன்றி.
பட உதவி: http://journeyforth.wordpress.com/. நடு நாயகமாக உட்கார்ந்திருக்கும் அந்தக் குரங்கு என்னை மிகவும் கவர்ந்தது. பாடுதா? பேசுதா?
-
52 comments:
சுவாமி இன்னிக்குத்தான் மாதங்கியோட பதிவை பார்த்தேன். இங்க வந்தா நீர் கதாகாலட்சேப்கம் நடத்தி இருக்கீர்.
சொன்ன மாதிரி சொந்த ஊரில் மண்டை பிளக்கும் அக்னி வெய்யிலில் கிரிகெட் டோர்னமென்ட் ஆடனும் ஓய்
நல்ல கேள்விகள்.. ஆர்.வீ.எஸ் பதில்கள்... ரஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸித்துக் கொண்டே இருக்கிறேன் இன்னமும் ... ஆஹா.ஆஹா..
போட்டோவுல நடுவுல இருக்கிறது யார்னு புரிஞ்சுகிட்டேன்.
வலபுறம் யோசிக்கிறவர் யாருன்னு நம்ம ரெண்டு பேருக்குமே தெரியும்.
அடுத்த ஆளு யாருன்னு அவங்களாகவே ஒத்துக்கிறதுதான் நல்லது.. சொல்லிட்டேன்.
மைனர்வாள் - பிரமாதமா எழுதியிருக்கேள் அண்ணா! என்னோட நம்பிக்கை வீண்போகலை! நித்யஷ்ரீயோட குரல்ல 'கம்பீர நாட்டை' ஆலாபனை பண்ண சொல்லி கேட்ட மாதிரி சுவாரசியமான கேள்விகளுக்கு உங்களை பதில் சொல்ல சொன்னதுல அடியேனுக்கு பரம சந்தோஷம்!..:)
"அடுப்பில் கொதிக்கும் போதே வாசனை பார்த்து ”ரசத்துக்கு உப்பு பத்தாது” என்று ஹாலிலிருந்து அடுக்களை பார்த்து சத்தமிடும் மூக்கை நாக்காக வளர்த்த சில வாசனாதிப் பெரியோர்கள்."--- எங்க அப்பா-- யாராவது சமச்சிண்டே அவர் கிட்ட phone ல பேசினா-- "தாளிக்கற போலருக்கே! உளுத்தம் பருப்பு கருகிடாம பாத்துக்கோ.." ன்னு correct ஆ சொல்லுவா!! :D
"கல்யாண ரிஷப்ஷனில் கோட் சூட்டோடு சிரித்துக் கொண்டு எதிர்கால பயமின்றி போஸ் கொடுத்து நிற்கும் மாப்பிள்ளை." --- LOL!! ROFL!!! செம்ம காமெடி!!
PS: "கல்லிடையின் காதல் நாயகன் தக்குடு"... -- :D ROFL...LOL... -- "இதை நான் ஆமோதிக்கிறேன்!" ROFL!! :D
மிகவும் அழகான பதில்கள், RVS சார்.
நடு நாயகமாக உட்கார்ந்திருக்கும் அந்தக் குரங்கு என்னை மிகவும் கவர்ந்தது. பாடுதா? பேசுதா?
மூணு குரங்குமே நல்லாதான் இருக்குது. பாடுதோ பேசுதோ போஸ் நல்லா குடுக்குதுகள்.
தொடர் பதிவிற்கு என்னையும் தொடரச்செய்தமைக்கு நன்றி.
மூன்றோடு நிறுத்தமுடியுமா தெரியவில்லை. பார்க்கலாம்.
சுவாரசியமும் ரசனையும் பொங்க நகைச்சுவையான பதில்கள்...
உங்களுக்கெல்லாம் கேள்விகளும் அதற்கான பதில் எண்ணிக்கையும் (மூன்று மூன்று என்பது )யானைப் பசிக்கு சோளப்பொரி.....
க.கா.நா.. தக்குடு....... மைத்துளியின் ஆமோதிப்புக்கு ஆனந்த வாசிப்பு வழி மொழிகிறது...
பையனை ரொம்ப வெக்கபடவைக்கிறிங்களே ஆர்.வி.எஸ்
ஜி........
அடிச்சு தூள் கிளப்பி இருக்கீங்க... சூப்பர்னு ஒரே வார்த்தையில் முடிக்க முடியல... எவ்ளோ விஷயங்கள எவ்ளோ அழகா கோர்வையா எழுதி இருக்கீங்க, அதுக்காகவே ஒரு தனி சபாஷ் போடலாம்...
திருப்பதி பற்றி சொன்னதில் எனக்கு உடன்பாடில்லை... அங்கு வரும் கூட்டத்தை சமாளிக்க அவர்கள் என்ன தான் செய்ய வேண்டும் என்பதையாவது குறைந்த பட்சம் இங்கே சொல்லி இருக்கலாம்...
ஆர்.வி.எஸ். உம்ம ஸ்டைலுக்கு ஏத்த ஜமா.
எனக்கு நாலாவதில் ரெண்டும்-எட்டில் மூணும்-பத்தில் மூணும்-பன்னிரெண்டில் மூணும் ரொம்பப் பிடிச்சுது.
உம்மகிட்ட போய் யாராவது கேழ்வி கேப்பாளோ? இந்தத் தக்குடுவ என்ன பண்ணலாம்?
”போதா பதவா.. தாஸ்கல்.. மூக்க அதுத்துதுவேன்” என்று என்னைத் திருப்பித் திட்டும் மழலைகள்.
ஹா.. ஹா..
உங்களுக்கு எதுவுமே கஷ்டமே இல்லை போல.. பிரமிப்பாய் இருக்கிறது. எந்த சவாலையும் ஏற்று அழகாய் பதிவு போடுகிறீர்கள்.
//ஈவினிங் டிஃபனுக்கு வெங்கலப் பானையில் கிண்டும் தேங்காய் துறுவலுடன் அரிசி உப்புமா வித் மவுத் வாட்டரிங் நீர்க்க இருக்கும் கத்திரிக்காய் கொஸ்த்து. ரவையூண்டு புளி அதிகமாய் இருந்தால் கொஸ்துக்கு உப்புமா தொட்டுக்கலாம்.// Slurpp!!!! ippove mouth watering! enna rasanai! same pinch!
என்ன தொடர்பதிவா?!
கலக்கல் பாஸ். உங்க ரசனையோ ரசனை.
அன்பான வெங்கட்
உன் ரசனையை அழகான எழுத்து நடையை படித்து வந்தால் முடிவில் என்னையும் சேர்த்திருப்பது அதிர்ச்சியான பெருமை.
நன்றி நிச்சயம் தொடருகிறேன் , சுந்தர்ஜியும் சமைத்திருக்கிறார் , ரிஷபன் சாரின் பதிவை இன்னும் படிக்கவில்லை .
கேள்விகளை கேட்ட தக்குடுவுக்கு முதலில் ஒரு ஜே....
ஒவ்வொரு கேள்விக்கும் மும்மூன்று பதில்கள் என்று சொல்லியதற்கு பதில் மூன்று பதில்கள் அடங்கிய ஒரு பதிவு என்று சொன்னால் கூட நீங்கள் எழுதி விட முடியும் எனத் தோன்றுகிறது.
அத்தனை பதில்களையும் ரசித்தேன்...
போகிற போக்கில் நம்மையும் கோர்த்து விட்டாச்சா.... ஒன்றிரண்டு நாட்களில் எழுத முயல்கிறேன்...
@எல் கே
மூணு பேரைத்தான் கூப்பிடனும் ங்கரதால உங்களை விட்டுட்டேன். கருத்துக்கு நன்றி. ;-)
@மோகன்ஜி
நன்றி அண்ணா! ;-)
@மோகன்ஜி
இப்டி கிசுகிசுவா சொல்லாம, நீங்களே யார் யார்ன்னு சொல்லிடுங்க... ;-)
@தக்குடு
இந்த மாதிரியான அரட்டையடிக்கும் கேள்விகளை என்னிடம் கேட்டதற்கும் ஒரு நன்றி. ;-)
@Matangi Mawley
ஆமோதித்தறக்கு நன்றி. Correct - ஆ தானே சொல்லியிருக்கேன்? ;-)))
நீங்களும் அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள். ;-))
@RAMVI
தொடர் வாசிப்பிற்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றிங்க. ;-))
@இராஜராஜேஸ்வரி
மேடம்... ஹா..ஹா...
@இராஜராஜேஸ்வரி
கஷ்டப்பட்டு மூணோட நிறுத்துங்க... ;-))
@பத்மநாபன்
பத்துஜி! தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு முழுவதும் தினமும் இரவு உட்கார்ந்து எழுதினேன். தக்குடுத் தம்பி தொடர் பதிவிற்கு அழைத்தவுடன் அதையும் விண்மீனாய் எழுதுவோம் என்று எழுதினேன். யா.பசி... சோளப் பொரி.... ஹா.ஹா...ஹா.. நிஜமாகவே இன்னும் பசிக்குது.. ;-)
@பத்மநாபன்
ஆமாம்... தக்குடு தம்பிக்கு மூஞ்சி செவக்குது...;-)
@சுந்தர்ஜி
ரெண்டு, மூணுன்னு சொல்லி மேலையும் கீழையும் பார்க்க வச்சுட்டீங்க...
கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி ஜி.. ;-)
@R.Gopi
ரொம்ப நாள் கழிச்சு வரீங்க..
பாராட்டுக்கு நன்றி.
திருப்பதி.... நிறைய முறை.. தேவையில்லாமல் உட்கார்த்தி வச்சு உடராங்களோன்னு எனக்கு சந்தேகம். மேலும் பர்ஸ்ட் க்ளாஸ் செகண்ட் க்ளாஸ் சினிமா டிக்கெட் போல பல்வேறு டினாமினேஷனில் விற்பது. எல்லோரையும் வரிசைக் கட்டி விட்டாலே கூட்டம் கூடாது என்பது என் எண்ணம்.
கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி. ;-)
@ரிஷபன்
நன்றி சார்! ஏதோ செய்யறேன்... பாராட்டுக்கு நன்றி ;-))
@அநன்யா மஹாதேவன்
சின்ன வயசுல எங்க பாட்டி விறகு அடுப்புல செய்வாங்க... அப்பப்பா.. அதுல செஞ்சாத்தான் அவ்ளோ நல்லா இருக்கும். முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. அடிக்கடி வந்து எட்டிப் பாருங்க... ;-))
@Gopi Ramamoorthy
ஆமாம். நீங்களும் எழுதுங்களேன் கோபி. ;-)
@VISA
நன்றி பாஸ். அடிக்கடி வாங்க பாஸ். ;-)
@A.R.ராஜகோபாலன்
எழுது கோப்லி.. நன்றி. ;-)
@வெங்கட் நாகராஜ்
நன்றி... நீங்களும் அடிச்சு ஆடுங்க தல.. ;-)
// 14) பிடித்த மூன்று * படங்கள்? //
* = கமல் ?
//// 14) பிடித்த மூன்று * படங்கள்? //
* = கமல் ?//
இந்த கமெண்ட படிச்ச உடனே படக்குன்னு ஆரண்ய காண்டம் தான் ஞாபகத்துல வருது.
செம கலக்கல் போங்கோ :-)))))
திறமை மூன்று...
எழுத்தில் உள்ள வழுக்கி கொண்டு போய் நம்மையும் உள்ளே வாசிக்க இழுத்து விடும் கச்சிதமான வர்ணனைகள்,
மெல்லிய நகைச்சுவை,
கதை, கட்டுரை, கவிதை, பழந்தமிழ், விஞானத்தமிழ் என்று எதையும் முயற்சிக்கும் திறமை...
இந்த மூன்றும் (மட்டுமல்ல) உங்கள் திறமை ஆர் வி எஸ்...
Good answers. Hope you will sleep well after 2 weeks
நல்ல பதில்கள். அத்தனையும் ரசிக்க வைத்தது.
@Madhavan Srinivasagopalan
Yes..No..No.. Yes... ;-)
@அமைதிச்சாரல்
நன்றி சகோ. ;-)
@Anonymous
Why? Why? Why? ;-)
@ஸ்ரீராம்.
வானளாவிய பாராட்டுக்கு மிக்க நன்றி ஸ்ரீராம். நிறைய எழுத வைக்கிரீர்கள். ;-)
@மோகன் குமார்
Thank You!...You are right... ha..ha..ha.. ;-)
@கோவை2தில்லி
நன்றி சகோ. ;-)
மைனரே.... உங்கள் அழைப்பினை ஏற்று இன்று எழுதி விட்டேன் ஒரு பதிவினை....
சரிதானே....
http://venkatnagaraj.blogspot.com/2011/07/blog-post_13.html
சுவாரசியமான பதில்கள். வாயடக்கும் வித்தை கத்துகிட்டு எங்களுக்கும் சொல்லிக் கொடுங்க. இட்லி பட்டரா நீங்க? தொட்டுக்க பிடிச்சது தேங்காய் சட்னியா, வெங்காய சட்னியா, தக்காளி சட்னியா, புதினா சட்னியா? மிளகாய்ப் பொடியா, தேங்காய் பொடியா, எள்ளு காரப்பொடியா? அன்னைக்கு செஞ்ச சாம்பாரா, முதல் நாள் செஞ்ச வத்தக்குழம்பா?
இது இல்லாம் வாழ முடியாதது பத்தி எதுனா இதுவா சொல்வீங்கனு பாத்தா ஒரே இதுவா சொல்லிட்டீங்களே?
@வெங்கட் நாகராஜ்
நன்றி. ;-)
@அப்பாதுரை
நன்றி.
இல்லாம வாழ முடியாதுன்னு ஏடாகூடமா எதுனா சொல்லி மாட்டிகிட்டேன்னா என்ன பண்றதுன்னு ரொம்ப ஜாக்கிரதையா சொல்லியிருக்கேன். வம்புல மாட்டி விட்ருவீங்க போலருக்கு.. ;-)
Post a Comment