Saturday, July 2, 2011

பிகாரசமான வனதம் - ஒன்று பூஜ்ஜியம் ஒன்று

நறுக் - 5 
பிகாரசமான வனதம்
நறுக் 5 (a )
first and last

நறுக் 5 (b)
கிளச்ர்சியூடுட்ம் பிகாரசமான வனதம். புடிஷ்யான கிளள்ச்சொலுல்ம் ஆபிப்ள் கனன்ங்கள். சோயானின இடை. இச்ன்டேப்  இலால்மலேயே இப்டுபு மறுற்ம் தொயடைளவை பப்ளிகாக்க காடுட்ம் ஜீன்ஸ் பேன்ட். பஸ்ஸ்ண்டாடில் அபெப்ண், பகக்தித்ல் அவ்லிவாபனும்  எதேசைச்யாக உடை உசுரம் நெருகக்தித்ல் நின்றிந்ருர்தாகள். மூகோக்டு ஆயுளைம் சேத்ர்து இழுதத்து அளிவன் நறுணமம். அம்ங்மகை குத்திது விழும் புஸ்புஸ் கேத்சதை ஒதுகுக்ம் விலிரல் அணிதிந்ருந்த நீலநிற மோரதிம் கனன்த்தை நெருகுங்ம்போது பளபளதத்து.  செம்வபள வாயிருலிந்து முத்திதுர்ந்து "எக்கிஸ்யூஸ் மீ" என்றாள். காதுளிகல் ஓயிராரம் வயலிகன்ள் டூயட் வாசிதத்ன. பாதிரஜாராவின் வெணுண்டை தேவகதைள் குழுமி நின்று லாலில்லலி பாடிர்னாகள். அவனையுறிமயாமல் தரையிருலிந்து ஆசகாதித்ர்க்கு பக்றக ஆரபிம்த்ருதிந்தான்.
மேற்கண்ட இரு பாராக்கள் என்னவென்று தெரிகிறதா? புரிந்திருக்கும். விளக்கம் கடைசியில்.

**********
இந்தப் பதிவில் நான் எழுதப்போகும் சில பேர் வலையில் நான் வளைத்துப் பிடித்த ரத்தினங்கள். வலைச்சொந்தங்கள். பாசக்காரர்கள். இவர்கள் எழுத்துக்களைப் பார்த்து நான் நிறைய பொறாமைப்பட்டதுண்டு. எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போறார் என்ற ரீதியில் நான் எழுதும் எழுத்துக்களை படித்துவிட்டு உற்சாகப்படுத்தும் பெருந்தன்மை இவர்களுக்கு உண்டு. நீங்களும் படித்துப் பாருங்களேன்.

தேன் தமிழில் ஒவ்வொரு எழுத்தாக தோய்த்து எழுதும் பாங்குடையவர் திருவாளர் மோகன்ஜி. வானவில் மனிதன் என்று எழுதும் இவர் கற்பனை மேகத்தின் ஊடே அலையும் ஒரு வான்வெளி மனிதர். நேசம், பாசம், சோகம் என்று தோளில் கைபோட்டு பக்கத்தில் உட்காரவைத்து உருக்கமாகக் கதை சொல்லி ஒரு குரல் அழவிடுவார். ஆனந்தக் கண்ணீர் சில சமயம். உணர்ச்சி பெருக்கில் அழுகைக் கண்ணீர் சிலசமயம். சமீபத்தில் கிசுகிசு எழுதி எல்லோரையும் கிச்சுகிச்சு மூட்டினார். இந்தக் கிசுகிசு பதிவைப் படிப்போர் தவறாமல் பின்னூட்டக் கும்மியைப் படித்து ரசிக்குமாறு வேண்டப்படுகிறார்கள். நிறைய அதிகாரிகளுக்கு பாடம் எடுக்கும் அதிகார ஆசான். இவரோடு சேர்ந்து நான் அடித்தக் கொட்டத்தை நினைத்தால் சிறுவர்களுடன் கூட அவருடைய எளிமையான பழகும் மாண்பு எனக்கு புரிகிறது.

தமிழில் கவிதை என்பது என்னை ஏமாற்றும் அடங்காப்பிடாரி காதலி. ஒருதலைக் காதலில் நெருங்கி நெருங்கிப் பார்ப்பேன். "ச்.சீ. போ.. நீ அஞ்ஞான அசிங்கம்" என்று என்னை விட்டு காத தூரம் விலகி ஓடிவிடும். கவிதையாய் பேசினாள் என்று பெண்களைக் கூறுதல் கவிஞர்களின் இயல்பு. கவிகள் சுந்தர்ஜியிடம் ஐந்து நிமிடம் பேசினால்  சுந்தர்ஜியாய் பேசினாள் என்று அடி மாற்றி எழுதுவார்கள். எதைப் பார்த்தாலும் கவிதை புனையும் அவரது விசைப்பலகையில் ஏதோ மந்திர கவிவிசை இருக்கிறது. சுந்தர்ஜி பத்து வார்த்தை பேசினால் ஐந்தைந்து வார்த்தைகளாய் இரண்டு ஹைக்கூக்கள் பிறக்கின்றன. கைகள் அள்ளிய நீர் என்று அடக்கம் தெறிக்கும் தலைப்பில் எழுதிவருகிறார். இல்லையில்லை.. கவிக்கிறார்.

லிக என்று கலியை திருப்பிப் போட்ட கதை மூலமாக எனக்கு அறிமுகமானார் அப்பாதுரை. அவர் 'அப்பப்பா'துரை. அடேங்கப்பா! மூன்றாம்சுழி என்ற வலைப்பூவின் ஆசிரியர். ஒரு முறை உள்ளே மாட்டிக்கொண்டால் மீள முடியாமல் ஆளை உள்ளே இழுக்கும் சுழி மூன்றாம் சுழி. கட உபநிஷத்தை வெண்பாவினால் எழுதி தமிழ்ப் ப்ரியர்களுக்கு அருந்தொண்டு புரிந்திருக்கிறார். மாடர்ன், ஹிஸ்டாரிக், சயின்ஸ் ஃபிக்ஷன் என்று பல தரப்பட்ட தமிழ் படைப்புகள் தங்குதடையில்லாமல் அருவியாய் கொட்டுகிறது. சுழித்துக்கொண்டு வலையெங்கும் ஓடுகிறது. உள்ளே போனால் அட்லீஸ்ட் அரை மணிநேரம் நீங்கள் ஒதுக்கவேண்டியிருக்கும். உலகை மறக்கலாம். சுழிக்கு செல்ல இங்கே சொடுக்கவும்.

தேகத்தை கட்டுடைத்து எழுதும் எழுத்து போகனுடையது. மன உணர்ச்சிகளை கிசேலங்களை வார்த்தைகளாய் புட்டுபுட்டு வைக்கிறார். பிகினி அணிந்த கவர்ச்சியான கவி எழுத்துக்கள். சிலசமயம் எட்டிப்பார்க்கத் துடிக்கும் பிறந்தமேனியாய். எழுத்துப்பிழை என்று முரண்நகையாக பெயர் வைத்துக்கொண்டு பிழையில்லாமல் எழுதுகிறார். எதையாவது ஒன்றைக் கொடுத்து அவரது வலையை தொடுக்க வேண்டுமே என்று இங்கே ஒரு லிங்க் தருகிறேன். நிறைய வாசிப்பனுபவம் மிக்கவர். படிக்க படிக்க போதையேறும் எழுத்துக்கள் இவரது. முதிர்ந்த வாசகர்கள் நாடும் தளமிது. முதிர விரும்பும் வாசகர்களும் படிக்கலாம்.

ஒரு சிறிய பொறியென இருக்கும் கருவை வளர்த்து சுமந்து பெற்றுப்போட்டு பெயர் வைத்துவிடுவார் ரிஷபன். கதையோ, கவிதையோ பிரமாதப்படுத்துகிறார். காற்றை நேசிக்கும் இவருக்கு எழுத்து சுவாசமாக இருக்கிறது. சமீபத்தில் எழுதிய ஆண்டாள் நாச்சியார் பற்றிய பதிவும் கல்கியில் அச்சாகியிருக்கிறது. நம் நெஞ்சத்தில் அச்சாவாக அச்சானவை ஏராளம்.

ஆனந்த வாசிப்பு என்று வெறும் தலைப்பு பெயராக மட்டுமல்லாமல் பல பதிவர்களின் பதிவுகளை ஊன்றி படித்து ஊக்கமூட்டும் பின்னூட்டங்களைப் பதியும் பத்மநாபனைப் பற்றி வலைப்பூவில் தெரியாதவர் உண்டோ? அத்தி பூத்தார் போல அவரது வலைமனையில் எழுதினாலும் தினமும் பின்னூட்டங்களால் பல அற்புதப் பதிவு பல வலைப்பூக்களில் கொண்டிருக்கிறார். பதிவை எழுதிவைத்துவிட்டு வலைமனை வாசலில் பத்துஜின் கமேன்ட்டுக்காக காத்துக்கிடப்போர் ஏராளம். அதில் நானும் ஒருவன். சில பின்னூட்டத்தைப்  பார்த்தால் நாம் எழுதாமல் விட்ட சில கருத்துக்கள் அங்கே கண்ணடித்துக் கதை சொல்லக் காத்திருக்கும்.


தமிழக அரசு விருது பெற்ற எழுத்தாளர் வித்யாசுப்ரமணியம் வலைப்பூவில் எழுதுகிறார். எழுதுவதோடு மட்டுமல்லாமல் வளரும் எழுத்தாளர்களை உற்சாகப் படுத்துகிறார்.  கதையின் கதை என்று எழுதும் அவரது வலைப்பூ அர்த்தத்தின் அர்த்தத்தை அனாயாசமாக விளக்குகிறது. ஒரு சீனியர் ரைட்டர் பல தளங்களுக்கு சென்று கருத்திடுவது போஸ்டர் அடித்து போற்றத்தக்க பெருஞ் செயல்.

ஆரண்ய நிவாஸ் ஆர். ராமமூர்த்தி என்னும் இவரை மூவார் முத்தே என்று விளிப்பார்கள். நகைச்சுவை மிளிரும் பதிவுகளும் எழுதுவார், கலங்கடிக்கும் கதைகளும் எழுதுவார். உள்ளே போனால் எழுத்தாரண்யத்தில் மாட்டிக்கொள்வீர்கள். ஜாக்கிரதை!


பின் குறிப்பு: சிலர் முன்பே உங்களுக்கு அறிமுகமாயிருக்கலாம். என் முகத்தில் இவர்கள் எப்படித் தெரிகிறார்கள் என்று எழுதியிருக்கிறேன். சலித்துக்கொள்ளாமல் நான் கொடுத்த இணைப்புகளை படித்து இன்புறுக.

பாராக்களின் விளக்கம்.
முதல் எழுத்தும் கடைசி எழுத்தும் மட்டும் சரியாக இருந்தால் அந்த வார்த்தை மூளைக்கு சரியாக போய்ச்சேரும், பிழைகள் இருந்தாலும் என்று காம்ப்ரிட்ஜ் பல்கலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தார்கள். இதுவும் சில வருஷங்களுக்கு முன்னால் மின்னஞ்சலில் பல கண்டங்கள் சுற்றிய படம். இரண்டாவது பாராவாக இதை தமிழில் முயற்சி செய்தது அடியேனின் அதிக ப்ரசங்கித்தனம். பாராவில் செய்தால் பரவாயில்லை.. தலைப்பிலும் செய்தது சரியா? முறையா? என்று நீங்கள் காதைக் கிள்ளாதீர்கள்! வலிக்குது.

-

22 comments:

பத்மநாபன் said...

இரும்பு அடிக்கற இடத்துல ஈ க்கும் இடம் கொடுத்த உங்க கருணைக்கு நன்றி ...

சுந்தர்ஜி யின் வலைப்பூவிற்கும் ..வித்யா மேடத்தின் வலைபூவிற்க்கும், போகன் அவர்களின் வலைப்பூவிற்கும் உடனே சென்று பார்க்க வைக்கின்றன உங்கள் அறிமுக வார்த்தைகள் .... ///ஒரு சீனியர் ரைட்டர் பல தளங்களுக்கு சென்று கருத்திடுவது போஸ்டர் அடித்து போற்றத்தக்க // நேரம் ஒதுக்கி செல்லும் அந்த பண்பு பாராட்டுக்குரியது ..

மற்றவையில் தான் பெரும்பாலும் எனது வலை நேரம் கரைகிறது ... கரைக்கும் வண்ணம் அவர்களது எழுத்தும் கருத்தும் ....

உண்மையில் வாசிக்கத்தான் வலைப்பூவை ஆரம்பித்தேன் .. அது வஞ்சனையில்லாமல் கிடைக்கும்பொழுது ஆனந்தமாக வாசித்துக்கொண்டிருக்கிறேன் ...

வனதமே சரதிந் பிபமோம்
...அழகாக உங்கள் வேலையை காட்டிவிட்டீர்கள்

ViswanathV said...

அறிவேன்,
எழுதியதில்லை;
எழுதியது
கண்டு
படித்து
ரசித்தேன்,
எப்பொழுதும்
போல் -
இப்பொழுதும்;

Ponchandar said...

ஆஹா, அட்டசகாம். நானும் முற்யசி செய்து எழுவுதள்ளேன்.

A.R.ராஜகோபாலன் said...

அறிமுகப்படுத்தும் விதம் அற்புதம் வெங்கட்
கூடவே சுவையான தகவல்களும்

இளங்கோ said...

ரொம்ப நாளா கமெண்ட் போட நேரமில்லை அண்ணா.. கொஞ்சம் ஆணிகள் ஜாஸ்தி.
எல்லாப் பதிவுகளும் அருமை.

அப்பாதுரை said...

மிவுகம் நன்றி.

அப்பாதுரை said...

101 என்ன சமாசாரம், புரியலையே?

RVS said...

@பத்மநாபன்
இரும்பு அடிக்கற இடத்தில சுத்தியல் நீங்க... உங்களோட கமெண்ட்டுகள் பதிவிரும்புகளை நிமிர்த்திவிடும்...
கருத்துக்கு நன்றி பத்துஜி! ;-))

RVS said...

@ViswanathV
கவிதையாய் கமேன்ட்டியதர்க்கு நன்றி விசு.. ;-))

RVS said...

@Ponchandar
ஆஹா... தாராளமாய் எழுதுங்கள்.. நன்றி.. ;-))

RVS said...

@A.R.ராஜகோபாலன்
நன்றி கோப்லி! ;-))

RVS said...

@இளங்கோ
பரவாயில்லை தம்பி... சுகமா இருக்கீங்களா? ;-))

RVS said...

@அப்பாதுரை
நன்றி.. ;-))

RVS said...

@அப்பாதுரை
அது ஒன்னும் இல்லை.. பைனரியில ஒன்னு ரெண்டுன்னு வரிசை போட்டுக்கிட்டு இருக்கேன் அப்பாஜி! ;-)

Rathnavel Natarajan said...

நல்ல தளங்களை அறிமுகப் படுத்தியிருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

ஆட்டத்தில் என்னையும் சேர்த்தமைக்கு நன்றி ஆர்விஎஸ்.

இந்த வாரமெங்கும் நிறையப் புது அறிமுகங்களுக்கு நன்றி. அறிமுகப்படுத்திய விதமும் அழகு.

அது சரி.சுந்தர்ஜி எழுத்த விட பேச்சு ஸ்வாரஸ்யம்னு ஒரு தொனி இருக்காப்ல பட்டுது.அது நிஜமாயிருக்குமோன்னு ஒரு கலக்கம்.

உள்த்குதின் மறுபகக்ம் ஆரெஸ்விஎம்.

RVS said...

@Rathnavel
நன்றி ஐயா! ;-))

RVS said...

@சுந்தர்ஜி
அன்புள்ள சுந்தர்ஜி ஐயா,
எனக்கு உள்குத்து வெளிகுத்து தெரியாது. நான் உங்களைப்போல் பயில்வான் அல்ல!!! ;-)))))
கருத்துக்கு நன்றி. ;-))

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

என்னைப் பற்றி எழுதியிருப்பது எதிர்பாராமல் கிடைத்த ஆச்சர்யம். நன்றி. இன்னும் நன்றாக எழுதவேண்டும் என்ற பயத்தை ஏற்படுத்துகிறது.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அட... நாந்தேன்!


மிக்க நன்றி வி.ஆர்.எஸ்! ஸாரி ஆர்.வி.எஸ்!!!


கொழுப்பில் கலந்த ரத்தத்துடன்,

உங்கள் மூவார்!!!!

மோகன்ஜி said...

என் பிரிய ஆர்.வீ. எஸ்!

உங்கள் மனதில் எனக்கு முதலிடம் என்பது எனக்கு ஆனந்தம்... அறிமுகத்திற்கு நன்றி! நீங்கள் அறிமுகப் படுத்திய அத்தனை பேரையும் சரியாகத் தேர்வு செய்து அறிமுகப் படுத்தியிருக்கிறீர்கள். (நான் மட்டும் தான் திருஷ்டி பரிகாரம் போல்?!)

வலைச்சரத்தில் இந்த வாரம் உங்கள் கை வண்ணத்தில் அழகுத் தோரணங்கள். வாழ்த்துக்கள்!

ரிஷபன் said...

உங்க மனசுல இடம் பிடிச்சதுக்கு..
கொஞ்சம் இருங்க..
பேச வராம குரல் தடுமாறுது..
என்னத்த சொல்ல.. உங்களை எல்லாம் பார்த்து பிரமிச்சு நிற்கிறவனைக் கூப்பிட்டு ‘இவனையும் கண்டுக்குங்க’னு
வெளிச்சம் போட்டிருக்கீங்க..
ஹே ரெங்கா..

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails