"டார்லிங்."
"என்னப்பா"
"டா-ர்-லி-ங்.."
"ம்..."
"டா--ர்--லி--ங்...."
"எ-ன்-ன-டா."
"டார்லிங் உங்கவீட்லயே எனக்கு யாரை ரொம்பப் பிடிக்கும் தெரியுமா?"
"கைய நோண்டாம யாருன்னு சொல்லு"
"சொல்லட்டா"
"சொல்லுப்பா"
"சொ-ல்-ல-ட்-டா----"
"சொல்லித்தொலையேண்டா.."
"நின்னா சின்னதாவும் உக்காந்தா பெருசாவும் இருப்பாங்களே..."
"நின்னா சின்னதா... உக்காந்தா பெருசாவா... ச்சே.. யாரு.."
"ஆமாம் டார்லிங்.. நெசமாத்தான்..."
"யாருப்பா..."
சொன்னான். (கடைசியில் பார்க்கவும்)
பதிலைக் கேட்டவுடன் ஆசையாய் இருந்த டார்லிங் ஆவேசமாய் பீச்சில் கஷ்டப்பட்டு ஒரு கல்லை தேடி பொருக்கி எடுத்துக் கொண்டு அடிக்க துரத்துகிறார்..
ஆம்பளை டார்லிங் சொன்னது கடைசியில்...
என்.கணேசன் என்பவர் என்.கணேசன்.பிளாக்ஸ்பாட்.காமின் ஓனர். ஆனந்த விகடனில் எழுதியதிலிருந்து எழுத்தாளராக மிளிர்கிறார். பால் பிரண்டனின் பார்வையில் இந்தியப் பக்கிரிகள் பற்றியும் சயனைடு விழுங்கியும் சாகாத சாமியார்கள் பற்றியும் எழுதியிருப்பது படிக்கும் ஆர்வத்தை தூண்டுகிறது. இன்னும் நிறைய எழுதியிருக்கிறார். அவசியம் பாருங்கள். என் கணேசன் உங்கள் கணேசனாகி விடுவார்.
பிறப்பு, இறப்பு என்பது உண்மையில்லை என்ற ரமண மகரிஷியின் அநுபூதியை வலைமுகப்பில் எழுதி வைத்து வ.ஸ்ரீநிவாசன் கனவு மழையில் எழுதுகிறார். தினம் ஒரு பதிவு போட்டு அதகளப்படுத்தாமல், மாதம் ஒன்று போட்டாலும் அமர்க்களமாக போடுகிறார். அசோகமித்ரனுடன் தி.ஜா பற்றிய இவரது பேட்டியில் தி.ஜாவை பற்றி கால்வாசியும் அ.மி பற்றி முக்கால்வாசியும் தெரிந்துகொள்ள முடிகிறது. அசோகமித்ரனின் எவை இழப்புகள் என்ற புத்தகத்தை படித்தவர்களுக்கு அ.மியின் பல முகங்கள் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. ஒரு முறை சென்ற நம்மை va. srinivasan பலமுறை வா வாவென்று அழைக்கிறார்.
திருவாளர் ரவி பிரகாஷ் எழுதும் வலைப்பூ உங்கள் ரசிகன். விகடனின் காலப் பெட்டகத்தை இத்தலைமுறைக்கு பொக்கிஷமாக தொகுத்தவர் இவர். வலைப்பூவிற்கு உங்கள் ரசிகன் என்று பெயர் வைத்திருந்தாலும் பதிவை படிக்கும் நம்மையெல்லாம் அவருடைய ரசிகனாக மாற்றுகிறார். என்னைக் கவர்ந்த அழகிகள் என்று இவர் எழுதிய ஒரு பதிவு படங்களுடன் பந்தாவாக இருக்கிறது. இமைக்காமல் 'பார்த்து', படித்து இன்புறுங்கள்.
பயமறியாப் பாவையர் சங்கம். தலைப்பே சுண்டி இழுத்தது. ஒரு கூடை நக்கல். ஒரு கூடை சிரிப்பு. ஒன்றாக சேர்த்தால் என்று தலைப்புக்கு கீழே டேக் லைன் கொடுத்திருக்கிறார்கள். ஐந்தாறு பேராக சேர்ந்து கூட்டணி அமைத்து தாக்குகிறார்கள். சிரிப்புக்கு பஞ்சமே இல்லை. நக்கல் நாட்டியமாடுது. காக்க காக்க ரீமேக் ஒரு வெள்ளிவிழா ஹிட். 2009 க்கு பிறகு இந்த வலைப்பூ அப்டேட் ஆகவில்லை என்றாலும் இடது பக்க மார்ஜினில் இருக்கும் இந்த வலைப்பூவின் டீம் மெம்பர்கள் வலைப்பதிவை படித்து மகிழுங்கள்.
வார்த்தைகளிலிருந்து மௌனத்திற்கு என்று தத்துவார்த்தமாக பெயர் வைத்து சமுத்ரா சுகி என்று சுயமாக பெயர் சூட்டிக் கொண்டு எழுதுகிறார் இவர். கலைடாஸ்கோப் என்று இவர் எழுதும் பதிவுகள் மிகவும் சுவாரஸ்யமானவை. இவரது வாசிப்பின் வீச்சு ரேடியோ கதிர்களாக வீசுகின்றன. அணு அண்டம் அறிவியல் என்று ஒரு விஞ்ஞானத் தொடர் வீராசாமியாக எழுதுகிறார். ரசிக்க வைக்கும் பதிவுகள். பிறருக்கு பின்னூட்டம் மட்டும் Super, Good One என்று போடுவார். மௌனம் அவ்வளவு பேசியதே ஜாஸ்தி தானே!
கடைசியில் பார்க்கச்சொன்னது:
"உங்க வீட்டு டாமிதான்". போன பதிவில் எழுதிய வாத்தியாரைப் பார்த்து நான் கிறுக்கினது. புலியைப் பார்த்து பூனை போட்டுக்கொண்ட வல்லிய ச்சூடு. சரியா?
பட உதவி: http://stuffistolefromtheinternet.com
-
20 comments:
அறிவுப்பூர்வமான அறிமுகங்கள் ... தேடி போக வைக்கிறது ...
ரவிசார் அவர்களின் எழுத்தில் எளிமையும் எதார்த்தமும் நிறைந்து இருக்கும் .. டிடைல்ஸ் எதையும் விடமாட்டார் .. என் டைரி எனும் வலைப் பூவும் வைத்துள்ளார் ...
விஞ்ஞானி சமுத்ரா வலையுலகுக்கு கிடைத்த அறிவியல் அமுது ...
//"நின்னா சின்னதாவும் உக்காந்தா பெருசாவும் இருப்பாங்களே..."
"உங்க வீட்டு டாமிதான்". //
புரியவில்லை.. விளக்கம் தேவை..
சமுத்ரா தவிர மற்ற மூவரும் அறிமுகத்துக்குள் வருகிறார்கள்.இனிப் படிக்கவேண்டும்.
கதையை ரொம்பவும் பெருசா படம் போட்டு ஆன்ஸர்லேருந்து கதையைத் தொடங்கிட்டீங்க சாமியோவ். சாரி சாமியோவ்.
அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்
மாதவன் அதான் படத்துலேயே இருக்கே
Thank U
சூப்பரான அறிமுகங்கள். எனக்குத் தெரிந்த/தெரிந்து கொள்ளப் போகிற சுவாரசியமான பதிவர்கள்.
நல்ல விஷயம் செய்திருக்கிறீர்கள்.
சூப்பரான அறிமுகங்கள். எனக்குத் தெரிந்த/தெரிந்து கொள்ளப் போகிற சுவாரசியமான பதிவர்கள்.
நல்ல விஷmaம் செய்திருக்கிறீர்கள்.
நல்ல அறிமுகங்கள்
அருமையான அறிமுகங்கள் ஆர்.வீ.எஸ்
நல்ல அறிமுகங்கள் especially
http://ungalrasigan.blogspot.com/2011/06/blog-post_09.html
@பத்மநாபன்
நன்றி பத்துஜி! ;-))
@Madhavan Srinivasagopalan
It is Dog! ;-))
@சுந்தர்ஜி
சரி சாமியோவ்! ரொம்ப புதிர் போட வேண்டாம்ன்னு..... ;-))
@A.R.ராஜகோபாலன்
நன்றி கோப்லி! ;-))
@சமுத்ரா
You deserved it! ;-)
@ரிஷபன்
நன்றி ரிஷபன் ஜி! ;-))
@”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி
நன்றி மூவார் முத்தே! ;-))
@வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)
நன்றி மேடம்! ;-))
@மோகன்ஜி
நன்றிண்ணா! ;-))
@சாய்
சரிங்க சாய்! ;-))
Post a Comment