நறுக் - 1- ஹலோ யார் பேசறது
"ஹலோ"
"ஹலோ"
"யார் பேசறது?"
"நான்தான்"
"நாந்தான்னா யாரு?"
"நான்தான் ரேவதி"
"ரேவதி அப்பா இல்லையா?"
"இல்லை"
"அம்மா இல்லையா?"
"இல்லை"
"சரி அப்பா வந்தா ராமன் டெலிபோன் பண்ணினதாகச் சொல்லு.."
"யாரு?"
"ராமன். எழுதிக்கோ ரா-ம-ன்"
"ரா எப்படி எழுதறது "
"சரிதான் பாப்பா வீட்ல வேற யாரும் இல்லையா?"
"சேகர் இருக்கான்."
"சரி சேகரைக் கூப்பிடு..."
"சேகர் இந்தா.."
இதுல என்னவா? கடைசியில பாருங்க....
*****************
திருமதி இராஜராஜேஸ்வரிக்கு பிறகு வலைச்சர அறிமுகம் எழுதுவது தலைகீழாக அந்தரத்தில் நடப்பதற்கு சமானம். அவரது கடந்த ஏழு நாள் பதிவை யாரேனும் மொத்தமாக திரட்டி வைத்திருந்தால் அதுதான் ஒரு நிகழ்காலத் தமிழ்ப் பதிவர்கள் கையேடு.
என்னால் முடிந்த அளவிற்கு தொடுக்கப்பட்ட அறிமுகங்கள் கீழே..
பார்த்தது கேட்டது படித்தது என்று ஒரு வலைப்பூ. பழைய சென்னையைப் படம் பிடித்து நிறைய இடங்களில் பிரேம் போட்டு மாட்டியிருக்கிறார்கள். பழைய தமிழகத்தை அதாவது, தஞ்சையை, மதுரையை யாரோ படம் பிடித்ததை எடுத்து பொக்கிஷமாக அந்தக் கால தமிழகம் என்று ஒரு பதிவாக போட்டிருக்கிறார் பிகேபி. வருடத்திற்கு வருடம் தஞ்சையின் பரிணாம வளர்ச்சி தெரிகிறது. திருச்சி அப்போதே தஞ்சையை விட பிக் சிட்டி என்று புரிகிறது. மலைக்கோட்டை மேலிருந்து பார்த்தால் காவிரி கரைபுரண்டு ஓடுவது தெரிகிறது. அற்புதம். அற்புதம். நிறைய டெக்னாலஜி கூட எழுதுகிறார். சுவாரஸ்யமான வலைப்பூ.
லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் என்று ஒரு எழுத்தாளர். விகடன் பிரசூரம் இவர் எழுதிய இரண்டு புக் போட்டிருக்கிறார்கள். பெரிய ஆள். எழுத்திலும், ஏற்றத்திலும். போன வருடம் ஜூலையில் கல்கி பத்திரிகை செல்லும் இடமெல்லாம் ஒரே மசால் வடை வாசனை. என்னடான்னு எல்லோரும் ஆராய்ச்சி செய்து பார்த்தால் அதில் செவ்வடையான மசால்வடையே! அப்டின்னு ஒரு செம்மொழிக்கட்டுரை. மனுஷர் கலக்கிட்டார்.
ராமச்சந்திரன் உஷா ஒரு எழுத்தாளர். நுனிப்புல் என்று வலைத்தளத்திற்கு பெயர் வைத்து விட்டு வாசிக்க வருகிறவர்களுக்கு முழு விருந்து வைக்கிறார். சமீபத்தில் இவர் எழுதிய இரவுக் கட்டுரை மதுமிதா அவர்கள் தொகுத்த "இரவு" புத்தகத்தில் இடப்பெற்றது. அது இங்கே. இமை மூட மறுக்கும் இரவுகள்
காதலிப்பது பற்றி ஒரு பொறுப்பான அக்கா என்னவெல்லாம் எண்ணுவாள். முப்பது வரியில் வரிக்கு ஓரிருவரி எழுதி ஒரு கவிதையில் அசத்துகிறார் ஜகன். காதலிப்பது பற்றி இவர் எழுதிய ஒரு கவிதை அப்படியே அடித்துப்போடுகிறது. இரண்டிரண்டு வரிகளில் வீட்டிற்கு மூத்தவளின் கடமைகளை பட்டியலிட்டுள்ளார்.
நடராஜன் வெங்கடசுப்ரமணியன் அவர்களது வலைப்பூ வாரணம். வலை முகப்பில் மூன்று சுழி ணவோடு சேர்த்து ஒரு யானையைக் கட்டி வைத்திருக்கிறார். ஆடிக்கும் அமாவாசைக்கும் எழுதினாலும் நிறைய அமாவாசை பல ஆடிக்கள் தாங்கும் பதிவாக வெயிட்டாக எழுதுகிறார். சாம்பிளுக்கு ரெண்டு.
1. எழுத்து எங்கிருந்து வருகிறது?
2. தொலைக்காட்சி தொடர் காணும் உரிமைச் சட்டம்
இன்றைய வரிசையில் பிகேபியை தவிர மீதமிருப்போர் அபூர்வமாகத்தான் எழுதுகிறார்கள். ஆனால் எழுத்து அபூர்வமாக இருக்கிறது.
**********
என்னவா? சேகருக்கு 1 வயசு.
இது வாத்தியார் எழுதியது.
பின் குறிப்பு: முடிந்த வரையில் புதுப்புது அறிமுகமாக தருவதற்கு முயற்சிக்கிறேன். தினமும் இந்தப் பதிவில் ஆரம்பித்தது போல சில நறுக் கதைகள்/டயலாக் பதியலாம் என்று எண்ணம்.
படக் குறிப்பு: நாம ஒன்னு கேட்டா அவங்க ஒன்னு செஞ்சுத் தரும் அனைத்து தொழில்நுட்ப விற்பன்னர்களுக்கும் மேற்கண்ட படம் சமர்ப்பணம். ரொம்ப நாட்களுக்கு முன்னாடி எல்லா ஈமெயில் இன்பாக்ஸ்சையும் சகட்டுமேனிக்கு நிரப்பிய படம்.
-
17 comments:
"ஆட்டம் ஆரம்பமாயிடுச்சிடோய்...".
நல்ல பதிவு.
எல்லா தளங்களையும் பார்க்கிறேன்.
நன்றி.
@ஸ்ரீராம்.
ஹி..ஹி... ;-))
@Rathnavel
நன்றி ஐயா! ;-))
அப்பாதுரை சொன்ன நாகேஷ் போன் ஜோக் கிடைத்தவுடன் ... போன் உரையாடல வச்சு அமர்க்கள படுத்திட்டிங்க .முதல் வலைச்சர பதிவு அசத்தல் தல ...கண கச்சிதமான அறிமுகங்கள் ... ஆவலோடு இரண்டாம் பகுதிக்கு ....
மன்னை மையினர் வாழ்க வாழ்க
வாழ்க
சூழ்நிலையால் அதிகம் வரமுடிவது இல்லை
ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்குள் மையினர்வாள்.
என் வலை தளத்தை இங்கே குறிப்பிட்டதற்கு நன்றி!
@பத்மநாபன்
நன்றி தல! ரொம்ப மெனக்கட வேண்டியிருக்கிறது!!! ;-))
@siva
நன்றி தம்பி! ;-)))
@Natarajan Venkatasubramanian
நன்றி. நான் கிறுக்குவதையும் பாருங்கள். சிலபேருக்கு கிறுக்குத்தனம் பிடித்துவிடும். ;-)))
தீராத விளையாட்டுப் பிள்ளை வலைச்சரத்தில்.
வாழ்த்துக்கள்.
@மாதேவி
நன்றி மாதேவி! ;-))
பிறர் சுட்டாததை இடம் சுட்டிப் பொருள் விளக்கிய இந்தத் தன்மை ர்ர்ர்ரொம்ப ர்ர்ர்ர்ரொம்பப் புடிச்சுருக்கு ஆர்விஎஸ்.
அறிமுகம் என்பதன் உண்மையான பொருள் உமது அறிமுகம்.
இன்னும் இந்த வாரம் பூராவும் உம்ம பின்னாலயே ஓடிவரணம். வருவேன்.
வலைப்பூ அறிமுகம் பயனுள்ளதாக இருந்தது... நன்றி...Follow பண்ணிப் பார்க்கிறேன்.
@சுந்தர்ஜி
ர்ர்ர்ரொம்ப ர்ர்ர்ர்ரொம்ப நன்றி ஜி! ;-))
@என்றென்றும் உங்கள் எல்லென்...
நன்றி சார்! ;-))
என் நண்பனின்
தனித்தன்மையில்
ராஜபாட்டை .................
ரசிக்கிறேன் நண்பா
கூடவே வருகிறது
பெருமையும்.................
Post a Comment