Friday, June 24, 2011

முன்னுரைகளின் என்னுரை

முதல் இரண்டு வரிகளில் கதைக்குள்ளே ஒரு ஆளை சுருக்கு போட்டு இழுக்கவில்லை என்றால் உருவிக்கொண்டு எஸ்கேப் ஆகிவிடுவார்கள். முன்னுரையில் ஒரு பொறி வைத்து பெருந்தீயாக ஊதியோ அல்லது மெய்மறக்க வைத்து வாசகர்களை கட்டி இழுத்து வருவதோ மிகப்பெரிய கலை. அசாத்திய சாமர்த்தியம். பல பக்கங்களுக்கு படிப்பவர்களை அடித்துப் போடும் உத்தி தெரிந்த ஜாம்பவான்களுக்கு முன்னுரை ஒன்றும் எட்டாக் கனியல்ல. இருந்தாலும் இருநூறு முன்னூறு வார்த்தைகளுக்கு மிகாமல் கட்டுரை வரைக என்ற எட்டாம் வகுப்பு மாணவனின் வழவழா வாழைமரக் கட்டுரை போல இல்லாமல் கதைக்களனின் சாராம்சமாக எழுதப்படும் முன்னுரைகள் இந்த உலகத்திற்கு முன் மாதிரி உரைகளே!

ஒரு முன்னுரை கட்டுரைக்கு இவ்ளோ பெரிய முன்னுரையா என்று மூச்சிரைத்து முறைத்துப் பார்ப்பவர்கள் இங்கே நிற்க. எழுத்தாளர் வித்யா சுப்ரமணியம் அவர்கள் போன பதிவிற்கும் பிந்தைய பதிவில் பின்னூட்டமாக இந்த முகவுரைகளைப் பற்றி எழுத தொடரச் சொன்னதால் வந்த விளைவு இது. ஒரு நான்கு சாம்பிள்கள் சொல்லலாம் என்று அவா.

ஒன்று சிலப்பதிகாரம் என்ற தமிழர்களின் பண்டைய வரலாறு, கற்பு, நீதி என்று சகல துறைகளை அலசிய படைப்பின் முன்னுரை. இரண்டாவதாக ஒரு சமூக நாவலை வரலாற்றுடன் இணைத்து எழுதிய புலிநகக்கொன்றையின் முகவுரை. ஒரு இதிகாசக் கருவை சுவையாக, காதல் காவியமாக சொன்ன நித்ய கன்னி மூன்றாவது. கடைசியாக ஒரேநாளில் ஒரு சாமானியனுக்கு நடக்கும் அவனது வாழ்வின் தருணங்களை படம்பிடித்த நாளை மற்றுமொரு நாளே என்ற இலக்கியம். நான் இங்கே ஔவையார் ஆண்டி முருகனை வரிசைப்படுத்தி பாடியது போன்று ஒன்று இரண்டு போட்டது படைப்புகளை வரிசைப்படுத்துவதற்காக இல்லை.

முதலில் வாத்தியாரிடமிருந்து ஆரம்பிப்போம். நிறைய முகவுரைகள் அவர் எழுத்துக்களில் ஜொலித்திருக்கின்றது. சிலப்பதிகாரம் ஒரு எளிய அறிமுகம் என்ற தனது நூலிற்கு அவர் எழுதிய முன்னுரை என்னைப் போன்ற தற்குறிகளே சிலப்பதிகாரம் படிக்கலாம் என்று ஊக்கமூட்டியது. சுஜாதா ஆற்றியது இலக்கியப்பணியா என்று சர்ச்சையில் ஈடுபடுவோருக்கு ஒரு செய்தி. அறிவியல், இலக்கியம் என்று எதை எடுத்தாலும் "நைனா.. இது ஒன்னும் இல்லீப்பா.. அவ்ளோதான்" என்று தோளில் கையைப் போட்டு தோழனாய் சொல்லும் பாணி என்றென்றும் தமிழ்கூறும் நல்லுலகிற்கு புதுசு.
பாரதி 'நெஞ்சை அல்லும் சிலப்பதிகாரம்' என்று சொன்னது மிகப் பொருத்தமான வருணனை. ஆனால் தற்கால அவசரத்தில் இருக்கும் எஸ் எம் எஸ் - 'லாஸ்ட் டச் வித் டமில் யார்' - இளைஞர்களின் நெஞ்சை அள்ள சிலப்பதிகாரத்தின் கதையையும், அழகான அமைப்பையும், உவமைகளையும் எளிய முறையில் சொல்ல வேண்டியது தேவை என்று எண்ணினேன். அதன் விளைவுதான் இந்நூல்.

சிலப்பதிகாரத்தைப் படித்தபோது எனக்கு மிஞ்சிய ஒரு மகா வியப்பு. அதன் காலத்தை கடந்த நவீனம், contemporaneity , இன்றும் புதிதாக இருக்கும் கதையும், அதை சொல்லும் முறையும். அதை நீங்கள் உணர்ந்துகொள்ள முடிந்தால் இந்த எளிய உரையின் பயன் கிட்டியதாகச் சொல்வேன்.
சுஜாதா 

இணையத்தில் எதையோ தேடும்போது பொக்கிஷமாக கிடைத்தது புலிநகக்கொன்றை. இரண்டு நாட்களுக்குள் அடித்துபிடித்து வாங்கிப் படித்தேன். ஆசிரியர் பி.ஏ.கிருஷ்ணன். நாங்குநேரி பகுதியில் தென்கலை ஐயங்கார் குடும்பத்தின் ஐந்து தலைமுறை வரலாறு, சமூக நாவலாக. 1865 லிருந்து 1972 வரை நடக்கும் கதை. கம்யூனிசம், சுதந்திரப் போராட்டம், பெரியார், தி.மு.க என்று பலதளங்களை தொட்டுச் செல்கிறது இந்நாவல். Tiger Claw Tree என்று ஆங்கிலத்தில் முதலில் எழுதி அதை மீண்டும் தமிழில் எழுதியிருக்கிறார். அற்புதம். இதே கிருஷ்ணன் "அக்கிரகாரத்தில் பெரியார்" என்ற கட்டுரைத்தொகுப்பு ஒன்றையும் எழுதி வெளியிட்டிருக்கிறார். சுவாரஸ்யமான புத்தகம். புலிநகக்கொன்றை முன்னுரைக்கு வருவோம். தனது நாவலை திரும்ப எழுதும் போது மொழிபெயர்ப்பதின் நுணுக்கத்தைப் பற்றி ஆராய்ந்திருக்கிறார். அந்த முன்னுரையிலிருந்து சிறு துளிகள்.

"செவ்வாய் கிரஹத்திலிருந்து ஒரு மொழி அறிஞர் பூமிக்கு வந்தால் உலகெங்கும் மனிதர்கள் பேசும் மொழி ஒன்றுதான், ஒரு சில வட்டார வித்தியாசங்களுடன், என்ற முடிவுக்கு அவர் வருவார்" என்று சாம்ஸ்கி கூறுகிறார். "அந்த வித்தியாசங்கள் நமக்கு முக்கியமானவை." எவ்வளவு முக்கியமானவை என்பது என் ஆங்கில நாவலைத் தமிழில் மறுபடியும் எழுத முற்பட்டபோதுதான் தெரிந்தது. கம்பனையும் சங்கப்   பாடல்களையும், நம்மாழ்வாரையும் நமது காரமான வசவுகளையும் ஆங்கிலத்தில் கொண்டுவருவது எவ்வளவு கடினமோ அவ்வளவு கடினம் ஷேக்ஸ்பியரையும், ஹௌஸ்மானையும், நாஷையும், லியரையும் தமிழில் கொண்டுவருவது. திறமையான மொழிபெயர்ப்பாளர்கள் கோயிலில் வைத்து கும்பிடத்தக்கவர்கள்.
பி.ஏ. கிருஷ்ணன் 

தி.ஜா, கரிச்சான்குஞ்சு, எம்.வி.வெங்கட்ராம் போன்ற மருத நாட்டு எழுத்தரசர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஒன்று அவர்கள் நான் பிறந்த பகுதிக்காரர்கள். ஏரியாப் பாசம். இன்னொன்று வாசகனை தலையை திருப்பவிடாமல் அனாயாசமாக கதையை நகர்த்தும் லாவகம் தெரிந்தவர்கள். தி.ஜா வசனத்திலேயே பாத்திரம் வழியாக காட்சி சொல்லும் வித்தகர். கரிச்சான்குஞ்சு அந்தக் கால தஞ்சை ஜில்லாவை எழுத்துக்களால் கையை பிடித்து அழைத்துக்கொண்டு போய் கண் முன்னே காட்டுவார். கும்பகோணத்து எம்.வி.வெங்கட்ராம் மஹாபாரதத்தில் நடந்த சிறிய நிகழ்வை எடுத்துக் கொண்டு நித்ய கன்னி என்ற காவியம் படைத்திருக்கிறார். அதன் முன்னுரையில் அவர் அரசர்களுக்கும் அந்தணர்களுக்கும் தரும் விளக்கம் அற்புதம்.


மகாபாரதத்தில் நித்ய கன்னியின் கதை ஆறேழு பக்ககளில் அடங்கிவிடுகிறது. இந்தச் சிறு பொறியைத்தான் "ஊதி ஊதி"ப் பெரும் தீயாக மூட்டியிருக்கிறேன். கதை சரித்திரக் காலத்துக்கும் முற்பட்டது; பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கதை. அப்போது இந்தப் பாரத பூமியில் பல அரசர்கள் ஆட்சி புரிந்தார்கள். அக்காலத்தில் அரசியலில் ஒரு நெறி இருந்தது. குடிகளின் மகிழ்ச்சியையும் சுபிட்சத்தையும் மனதில் கொண்டு, அரசர்கள் ஆண்டனர். அறத்தை அடிப்படையாகக் கொண்ட சமூக வாழ்க்கை அமைதியாக இருந்தது. மறை ஓதுவதையும் ஓதுவித்தலையும் தொழிலாகக் கொண்டதாலும், ஆயுதப் பயிற்சியை அறிந்து கற்பிக்கும் திறன் பெற்றிருந்ததாலும், பொருள் தேடுவதில் முனையாமல் பரம்பொருள் தேட்டத்தில் ஈடுபட்டிருந்ததாலும் அந்தணர்களை அரசர்களும் மக்களும் மதித்தனர் அக்காலத்தில். நாட்டின் ஆட்சிக்கு மட்டும் அன்றி மக்களின் வாழ்க்கை நெரிக்கும் அந்தணர்கள் வழி வகுத்துக் கொடுத்தார்கள். அன்றைய சமூகத்தில் அவர்களுக்கு அத்தகுதி இருந்தது. மேலே சொன்ன பகைப்புலனில்தான் 'நித்ய கன்னி'யின் கதை உருவாகியிள்ளது.
எம்.வி.வெங்கட்ராம்
 
இது கொஞ்சம் இங்கிலிபீசு முன்னுரை. இது இந்தக் கதைக்காக பிரத்யேகமாக எழுதப்பட்டது இல்லை. இருந்தாலும் காலச்சுவட்டில் இதை தேர்ந்தெடுத்து பிரசூரித்தவர் யாராக இருந்தாலும் மனமார்ந்த பாராட்டுக்கள். ஒரே நாளில் கதை நகர்வதாக எழுதப்பட்ட ஜி.நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே என்ற நாவலின் தொடக்கத்தில் இதை அச்சடித்திருக்கிறார்கள்.


"God is not always in his Heaven, all is not always right with the world. It is not all bad, but is is not all good, it is not ugly, but it is not all beautiful, it is life, life, life - the only thing that matters. It is savage, cruel, kind, noble, passionate, selfish, generous, stupid, ugly, beautiful, painful, joyous - it is all those and more and it is all these that I want to know and, by God, I shall, though they crucify me for it"
THOMAS WOLFE

லா.ச.ரா, கி.ரா.ஜா போன்ற தலைசிறந்த எழுத்தாளுமைகள் பற்றி இன்னும் நிறைய இருக்கிறது. முடிந்தால் சிலபல பகுதிகளாக படித்தவற்றை வேறொரு பதிவில் பகிர்கிறேன். இதை எழுதவேண்டும் என்று ஆரம்பித்து மற்றவர்களையும் ஊக்கப்படுத்திய எழுத்தாளர் வித்யா சுப்ரமணியத்திற்கு நன்றி.

மோகன்ஜி, அப்பாதுரை, பத்மநாபன், சுந்தர்ஜி, போகன் போன்றவர்கள் இதைப் பற்றி இன்னும் விஸ்தாரமாக எழுதலாம். இச் சிறுவனால் முடிந்தது இவ்வளவே!

திரு ரிஷபனின் முன்னுரை இங்கே.

-

52 comments:

சமுத்ரா said...

அருமை! பிரபலங்கள் சொன்னவற்றை தேடித் பிடித்து எழுதி இருக்கிறீர்கள்..

பத்மநாபன் said...

முன்னிறுத்தும் முன்னுரைகளை பற்றி அழகாக சொன்னீர்கள் ... வாத்தியாரின் முன்னுரையும் சரி முகவுரையும் சரி படித்துவிட்டால் அந்த கதையை படிக்காமல் இருக்கமாட்டோம் ..

( தொடர சொல்லியிருக்கிறிர்கள் நன்றி ...தொடர் பதிவு பட்டியல் கூடி கொண்டே போகிறது .... இந்த வருஷத்துக்குள்ளதானே )

A.R.ராஜகோபாலன் said...

முன்னுரைகளைப் பற்றிய
முகவுரை
முத்தாய் ஜொலித்து
முழுத்தாய் பிரமிக்க வைத்தது
அற்புதம் வெங்கட்

இராஜராஜேஸ்வரி said...

முன்வாசல் பூஞ்சோலையான முனுரையை அலங்கரித்த பாங்குக்குப் பாரட்டுக்கள்.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

உங்களின் விசாலமான வாசிப்பின் வீச்சு வெளிப்படுகிறது ஆர்விஎஸ்.

நிறைய வாசிப்பவர்களால்தான் நிறைவாக எழுதமுடிகிறது.

ஏற்கெனவே ஒண்ணு பாக்கி. பக்கத்து இலைக்குப் பாயசமா அடுத்து இன்னொண்ணா? அநியாயம்.

அது போகட்டும் யாரோ ஆந்திரா பார்ட்டியாமே? யாரோ மன்னை மச்சினருக்கு எதுக்காகவோ கடலையுருண்டை கொடுத்து அமுக்கினாராமே? உங்களுக்கு எதுவும் தெரியுமா ஆர்விஎஸ்?

அப்பாதுரை said...

இதுக்குத் தான் வித்யா சுப்ரமணியம் மாதிரி intellectual heavy weights பதிவுப் பக்கம் போகும் பொழுது கவனமா இருக்கணும்ன்றது..

வித்யா, ரிஷபன் அளவுக்கு இல்லாட்டாலும் பரவாயில்லை, நீங்களும் நல்லாத்தான் எழுதியிருக்கீங்க.. (ச்ச்ச்சும்மா சொன்னேங்க.)

பி.ஏ.கிருஷ்ணன் படிக்க வேண்டும் போலிருக்கிறதே. அறிமுகத்துக்கு நன்றி.

சுஜாதா.. போவுது, விடுங்க. ஜவஹரோட சிலப்பதிகாரம் முன்னுரை டாப்புக்கு டாப்புனு தோணுது.

பொதுவா முன்னுரைகளைப் படிக்க மாட்டேன்.. புரட்டி விடுவேன். வித்யா அவர்கள் பதிவுக்குப் பிறகே முன்னுரைகளில் நிறைய தவற விட்டிருக்கிறேனோ என்று தோன்றியது. அழைப்புக்கு மிக நன்றி; சரக்கு இல்லையே சாமி. யோசிக்கிறேன்.

சைதாப்பேட்டை வடகறியா சவாலங்கிடிய ஏத்துக்கிட்டு எழுதினதுக்கு பாராட்டுக்கள். சுந்தர்ஜி என்னவோ கேட்டிருக்காரு பாருங்க. எனக்கும் கடலையுருண்டை பிடிக்கும் - வேறே டைப் கடலையுருண்டை கொடுத்துட்டுப் போயிடறாங்க!

அப்பாதுரை said...

'முன்வாசல் பூஞ்சோலை' - very nice இராஜராஜேஸ்வரி.

RVS said...

@சமுத்ரா
நன்றி சமுத்ரா! ;-))

RVS said...

@பத்மநாபன்
ஆமாம் தல.. இந்த வருசத்துக்குள்ளத்தான். ;-))

RVS said...

@A.R.ராஜகோபாலன்
நன்றி கோப்லி. ;-))

RVS said...

@இராஜராஜேஸ்வரி
அழகான கருத்துக்கு நன்றிங்க.. ;-))

RVS said...

@சுந்தர்ஜி
பாராட்டுக்கு நன்றி.
யாருங்க அது.. ரொம்ப மோசமான கூட்டணியா இருக்குமோ? ;-))

RVS said...

@அப்பாதுரை
நமக்கு அம்புட்டுதான் சரக்கு.. உங்களுக்கு சரக்கு இல்லையா... டூ மச்...

வெத்துப்பெட்டி நாங்களே இப்படி ஆடறோம்.. வத்திப்பெட்டி நீங்க... என்னா வாத்யாரே......

ஜவஹர் சாரோட அந்த சிலப்பதிகார லிங்க் தரமுடியுமா?

அது என்ன விசேஷ கடலையுருண்டை தல... ;-)))

ரிஷபன் said...

ஜி. நாகராஜன் என்று பெயர் பார்த்ததும் அடடா.. விட்டுட்டேனே என்று என் தலையில் நானே ஒரு குட்டு குட்டிக் கொண்டேன்.. அவரவர் படங்களுடன் பதிவு போட்ட அழகு ஆஹா.. ஜோர். என்ன இருந்தாலும் கத்துக்குட்டி கத்துக் குட்டிதான்.. சிங்கம் சிங்கம்தான்.. சபாஷ்.

எல் கே said...

நமக்கும் இதுக்கும் ரொம்ப தூரம் தலைவரே. ஒன்னு மட்டும் சொல்லிக்கறேன்.

வெகு ஜன மக்களாலும் படிக்கப் பட்டு புரிந்துகொள்ள முடிவதே இலக்கியம் என்பது என்னுடைய கருத்து ...

சென்னை பித்தன் said...

முன்னுரை பற்றிய உங்கள் உரை இன்னுரைதான்!புலிநகக்கொன்றை பற்றி முன்பு ’தாளிக்கும் ஓசை’யில்
படித்திருக்கிறேன்.ஆனால் அதை தேடிப் பிடித்துப் படித்து எழுதியிருக்கிறீர்கள்!நன்று!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அட..அற்புதம்!

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.

வை.கோபாலகிருஷ்ணன் said...

4 உதரணங்களை எடுத்துக்கொண்டு முன்னுரை பற்றிய தங்களின் விரிவானதொரு உரை மிகவும் அருமையாக உள்ளது.

//முதல் இரண்டு வரிகளில் கதைக்குள்ளே ஒரு ஆளை சுருக்கு போட்டு இழுக்கவில்லை என்றால் உருவிக்கொண்டு எஸ்கேப் ஆகிவிடுவார்கள். முன்னுரையில் ஒரு பொறி வைத்து பெருந்தீயாக ஊதியோ அல்லது மெய்மறக்க வைத்து வாசகர்களை கட்டி இழுத்து வருவதோ மிகப்பெரிய கலை. //

தேவ ரகசியத்தையே இப்படி அப்பட்டமாக வெளியிட்டிவிட்டு


//இன்னும் விஸ்தாரமாக எழுதலாம். இச் சிறுவனால் முடிந்தது இவ்வளவே!//

என்று முடித்துள்ளது தங்களின் தன்னடக்கத்தை முன்னுரையாக இட்டதுபோல உள்ளது, சபாஷ்!

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

RVS said...

@ரிஷபன்
நன்றி சார்! நீங்க சிங்கம். நான் அசிங்கம். ;-)

RVS said...

@எல் கே
கரெக்ட்டுதான் எல்.கே. ஜி.நாகராஜன் படிச்சுப் பாருங்க.. ரொம்ப எளிய நடை தான்.... ;-))

RVS said...

@சென்னை பித்தன்
நன்றி சார்! //இன்னுரை// வாழ்த்துக்கு நன்றி ;-))

RVS said...

@”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி
நன்றி மூவார் முத்தே! ;-))

RVS said...

@Rathnavel
நன்றி ஐயா! ;-))

RVS said...

@வை.கோபாலகிருஷ்ணன்
தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி சார்! ;-)))

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

ஆஹா அசத்திட்டீங்க ஆர்.வி.எஸ். நான்தான் லேட்டா வந்து பின்னூட்டம் போடறேன். மன்னிக்கவும். இந்த பதிவு தொடரத்தொடர சூப்பர் வைரங்கள் எல்லாம் வெளில வரும்னு நம்பறேன். எல்லாத்தையும் சேர்த்து ஒரு புத்தகமா போட்ருவோமா? என் அழைப்புக்கு உடனே ஆவலோடு வந்து தொடர்ந்ததற்கு நன்றி.

RVS said...

@வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)
பெரியவங்க சொல்லிட்டீங்க.. தட்ட முடியுங்களா.. வாழ்த்துக்கு நன்றி. ;-))

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

அப்பாதுரை சார்....என்ன சொன்னீங்க intellectual heavy weight page ஆ? சும்மாதானே. இருந்தாலும் நன்றி :-))

raji said...

தண்டன் சமர்ப்பிக்கிறேன் ஆர் வி எஸ் சார்.இதைத் தவிர வேறேதும் சொல்லுமளவுக்கு
இந்த ஞான சூன்யத்திற்கு என்ன இருக்க முடியும்?

அப்பாதுரை said...

இந்த வருசத்துக்குள்ள தானே :) பத்மநாபன் பின்றாரே?

அப்பாதுரை said...

சொல்வதெல்லாம் உண்மை; உண்மையைத் தவிர வே ஒ இல்லை வித்யா சுப்ரமணியம்! உங்கள் பதிவுகள் பலமானவை.

அப்பாதுரை said...

ஜவஹரின் புத்தகம் தான் இருக்கு rvs - மின் வடிவ சுட்டி என்னிடம் இல்லையே.

ஸ்ரீராம். said...

அடிச்சு ஆடறீங்க ஆர் வி எஸ். அருமை.

ஸ்ரீராம். said...

//"கடவுள் தனது ஹெவன் எப்போதும் இல்லை, இதுஅனைத்து மோசமாக இல்லை. உலக எப்போதும் சரிஅல்ல, ஆனால் அது அசிங்கமான அல்ல, அனைத்துநல்ல அல்ல, ஆனால் அது எல்லா அழகான அல்ல,அது வாழ்க்கையை, வாழ்க்கையை, வாழ்க்கை உள்ளது-. அதை அந்த மேலும் இது இந்த தான் நான் தெரிந்து கொள்ள வேண்டும் என்று மற்றும் - விஷயங்களில்அது சந்தோஷமான, வலி, அழகான, அசிங்கமான,முட்டாள்தனமான, தாராள, சுயநலம், உணர்ச்சி,நேர்மையானது, வகையான, ​​கொடூரமான,மிருகத்தனமான ஒரே விஷயம் , கடவுள், நான்,என்றாலும் அவர்கள் "அது என்னை சிலுவையில் அரைய வேண்டும்//


நீங்கள் கொடுத்துள்ள ஆங்கிலத்தை கூகிள் மொழிபெயர்ப்புப் பலகையில் கொடுத்து வந்த ரிசல்ட்...!

ADHI VENKAT said...

நல்ல பகிர்வு. முடியும் போது இந்த புத்தகங்களை வாங்கி படிக்கிறேன். முக்கியமாக இனி எல்லா புத்தகங்களிலும் முன்னுரைகளை தவறாமல் படிக்கிறேன்.


http://kovai2delhi.blogspot.com/2011/06/1_24.html

RVS said...

@raji
ச்சே..ச்சே.. நானும் அதே கேசுதாங்க... பெரியவங்க நிறையா பேர் இங்க கமெண்ட்டா போட்டுக்கிட்டு இருக்காங்க.. நான் சிறியவன். வீட்ல செல்லமா கூப்புடுற பேர் சின்னதம்பி. ;-))

RVS said...

@அப்பாதுரை
பதிப்பகம்.. மற்றும் தலைப்பைச் சொன்னா வாங்கி படிக்கறேன் சார்! ;-)))

RVS said...

@ஸ்ரீராம்.
நிஜமாவே.. யாராவது அடிச்சா ஆடறேன்.. நன்றி ஸ்ரீராம். ;-))

RVS said...

@கோவை2தில்லி
நன்றி சகோ. உங்க கதம்பம் பார்த்தேன். அங்கே வந்து கமேண்டரேன் ;-))

மோகன்ஜி said...

அன்பு ஆர்.வீ.எஸ்! என் பின்னூட்டத்தைக் காணவில்லையே?

இருக்கட்டும் அந்த 'வளவளா' நினைவுக்கு வரவில்லை. தப்பிச்சீங்க.. அருமையான பதிவு.

கிசுகிசு அடுத்ததும் போட்டாச்சு சாரே!

Anonymous said...

நல்லா இருக்குது.

சமீபத்தில், Airtel Super Singer episode ஒன்றில், கோபி, கண்ணதாசன் பாடல்களை பற்றி பேசும் போது சொன்னவை.

ஒரு பாடலில் இராமாயண கதையை இரு வரிகளில் இப்படி தந்திருப்பார் -

'கோடு போட்டு நிற்க சொன்னால் சீதை அங்கு இல்லையே !
சீதை அங்கு நின்றிருந்தால் ராமன் கதை இல்லையே !'

நான் சுஜாதா, பாலகுமாரன், சாண்டில்யன், கல்கி கதைகள் படிக்க முடிந்தது. லா.ச.ரா , தி.ஜா , அகிலன் போன்றவர்களையும் படிக்க ஆசை -உங்கள் பதிவும், வித்யா சுப்ரமணியம் அவர்களும் பதிவும் அருமை. கதை படிக்க தூண்டுவன.

உங்கள் பதிவில் இதுதான் எனக்கு பிடித்தது - ஒரே விஷயம் பற்றி பேசாமல் எல்லாம் தொடுகிறீர்கள்.

நன்றி.

ரகு.

Anonymous said...

"நான் சுஜாதா, பாலகுமாரன், சாண்டில்யன், கல்கி கதைகள் படிக்க முடிந்தது" - இது கொஞ்சம் அதிகப்படியான வார்த்தைகளோ? - வாசிக்க முடிந்தது என்று இருந்திருக்க வேண்டுமோ? - ஆனாலும் இன்னும் மீதமுள்ளது. இனி முன்னுரை முதல் படிக்க உத்தேசம். நன்றி.

ஊன்றி படிப்பதற்கும் , சும்மா வாசிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டுதானே?

(மீண்(ட)டும் ) ரகு.

இராஜராஜேஸ்வரி said...

வலைச்சர ஆசிரியருக்கு வரவேற்பும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும். வாழ்க வள்முடன்.

RVS said...

@மோகன்ஜி
அண்ணா... உங்களது "வளவளா"வா இருக்காது "பளபளா." எனக்கு தெரியும்.. ஆனா ஏன் காணலைன்னு தெரியலை..
நன்றி. ;-))

RVS said...

@ரகு.
கருத்துக்கு நன்றி. ரொம்ப நாளா ஆளைக் காணோம்? சுகமா இருக்கீங்களா? ;-))

RVS said...

@இராஜராஜேஸ்வரி
நன்றிங்க.. உங்களுக்கு அப்புறம் இனி நான் யாரை அறிமுகப்படுத்தறது... வலைச்சரமே உங்கள் அறிமுகங்களால் நிரம்பி வழிகிறது.. ;-))

அப்பாதுரை said...

பதிப்பகம் பற்றி எழுதியிருந்தேனே rvs? (யாரங்கே பின்னூட்டங்களை ஏப்பம் விடுவது?)

ஜவஹர் வலைப்பதிவிலிருந்து:
விலை : ரூ.75/=
முகவரி : கிழக்கு பதிப்பகம்
எண்:33/15, எல்டாம்ஸ் சாலை
ஆழ்வார்பேட்டை - சென்னை 600 018
தொலைபேசி : 044 – 43009701
வலைத்தளம் : www.nhm.in

நான் பனகல் பார்க் அருகில் new world book storeல் (கடை பெயர் சரியாக நினைவில்லை - எங்கள் ஸ்ரீராமுக்குத் தெரியும்) வாங்கினேன். ஏகக் கிராக்கியாம். நாலு காபி வைத்திருந்தார்கள். ஏகக் கிராக்கியா, நிறைய அச்சடிக்கவில்லையா என்பது ஜவஹருக்குத் தான் தெரியும் :)

பத்மநாபன் said...

வலைச்சரம் சிறப்பாசிரியர் பணி சிறக்க நல் வாழ்த்துகள்..

R. Gopi said...

Nice!

RVS said...

@அப்பாதுரை
உங்க கருத்து மடல் எனக்கு வந்து சேரலையே அப்பாஜி!
தகவலுக்கு நன்றிங்க.. கட்டாயம் படிச்சுப் பார்க்கிறேன். ;-))

RVS said...

@பத்மநாபன்
நன்றி பத்துஜி! ;-))

RVS said...

@Gopi Ramamoorthy

Thanks Gopi! Long time No See!!! ;-))

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails