ஒரு பாட்டைப் பார்த்ததும் அந்தப் படத்தை பார்க்க வேண்டும் என்ற பேராவல் எழுந்தது. தில் தோ பச்சா ஹை ஜி (Heart of a Child = குழந்தை மனசு) என்ற இந்தப் பாடல் ரஹெட் பதே அலி கான் எனும் கவாலி பாடும் பாகிஸ்தானிய இளம் பாடகரால் நமக்கு பரிசளிக்கப்பட்டது. படம் இஷ்கியா. சூஃபிக்களின் பக்திப் பாடல்கள் கவாலி. பதே அலி கானுக்கு வெண்கலக் கடையில் யானை புகுந்தது போல நல்ல காத்திரமான குரல். அட்சர சுத்தமாக பாடுகிறார். உத்தர இந்தியாவில் கஜலில் ஜொலிப்பார் என்று நினைக்கிறேன். பாலு மகேந்திரா படங்களில் வருவது போல காட்சிகளுக்கு பின்னால் தனி ட்ராக்காக பாடல் ஒலிக்கிறது. விஷால் பரத்வாஜின் அமர்க்களமான இசை காதுகளில் தேனாய்ப் பாய்கிறது.
நஸ்ருதீன் ஷாவின் நேர்த்தியான நடிப்பு இந்த பாடல் முழுவதும் நம்மை வசப்படுத்துகிறது. வடக்கத்திய கிராமங்களின் ஊடே செல்லும் ஒரு பேருந்து பயணத்தில் துவங்கும் இந்தப் பாடல் நம்மையும் அந்த பஸ்ஸின் கடைசி இருக்கையில் உட்கார வைத்துவிடுகிறது. "சீட் வேண்டாம்" என்று தலையசைக்கும் போதும் சரி அந்த முகவரி தெரியாத துறுதுறு விழிப் பெண்ணின் பக்கத்தில் உட்கார்ந்து பெருமூச்சு விடும் போதும் சரி அசத்துகிறார் ஷா.
பக்க வாத்தியங்கள் இல்லாமல் பாடல் ஆரம்பித்து நஸ்ருதீன் ஷாவின் நினைவுகள் சிறகடித்து பறக்க, பக்கத்து இருக்கையில் பயணிக்கும் அந்தத் துருதுரு கண் குமரியின் தோளில் தலை சாய்த்து கனாவில் மூழ்குகிறார். அடுத்த கணம் திரையில் வித்யா பாலன் வந்து நம் மனதை கொள்ளையடிக்கிறார். இங்கே நமக்கு காதல் நரம்பு புடைக்கிறது. நஸ்ருதீன் ஷாவின் நடிப்பிற்கு இணையாக இளமை துள்ளலில் வருகிறார் விபா. கண்களை விரிய வைக்கிறார். பாடல் முழுக்க வரும் காட்சி அமைப்புகள் வெகு சாதரணமாக நாம் ஷாவை பின் தொடர்வது போல அமைந்துள்ளது குறிப்பிடதக்கது. படாடோக வாத்தியங்கள் இல்லாமல் மெல்லிய இசை. கிடார் அடி தூள்! Strumming பட்டையைக் கிளப்புகிறது.
டீக்கடையில் பூண்டு உரித்துக்கொண்டிருப்பவன் தனது காதலியின் கையை ஆசையாய் வருட அவள் பூண்டு உரித்த தோளியை ரசமாக அவன் முகத்தில் வீசுகிறாள். ஒரு பெருமூச்சோடு இதைப் பார்க்கும் ஷா, முகத்தில் அவரது எண்ணத்தைக் கொண்டு வரும் காட்சி ஒன்று மற்றொமொரு அற்புதம். புத்தம் புது தேன் மலராக குளித்து விட்டு வரும் விபாவை பூ போட்டு அழைக்கும் அர்ஷத் வர்ஷி நான்காவது நிமிடத்தில் இருந்து பச்ச்சுக்கும் முத்தக்காட்சிகள் பற்றிய வர்ணனை என்னைப்போன்ற சிறுவர்களால் வார்த்தைகளில் வடிக்கமுடியாதது.
கிராமங்களின் வழியாக செல்லும் பேருந்தை எடுத்த லாங் ஷாட் நிச்சயம் அனேக ரசிகர்களின் விசேஷ பாராட்டை பெற்றிருக்கும். வித்யா பாலன் நம்மூர் ஆட்கள் கண்ணில் இன்னும் படவில்லையா? வேண்டாம். தனுஷுக்கு ஜோடியாக போட்டு ரோஸு ரோஸு ரோஸு என்று தெருவில் ஆடவிட்டு படுத்துவார்கள். நாம் இன்னும் நிறைய முன்னேறவேண்டும் போலத்தான் இருக்கிறது.
அதீத காதல் காட்சிகள் நிரம்பிய இந்தப் பாடலின் சுட்டி:
http://www.youtube.com/watch?v=WI70m8-WRto&NR=1ஹே பக்வான்! Vidhya பாலனிடமிருந்து முஜே பச்சாவ்!! मुझे बचाव !!
பின் குறிப்பு: கண்டதும் காதலில் விழும் இளகிய மனம் படைத்தவர்கள் மேற்கண்ட பாடலைப் பார்க்கவேண்டாம் என்று அறிவுத்தப்படுகிறார்கள்.
பட உதவி: www.bollywoodworld.com
-
28 comments:
பாடல் காட்சியை வேறு தனியே பார்க்கணுமா என்ன, உங்க சரளமான பதிவைப் படித்ததே அந்தப் பாடல் காட்சியை அப்படியே கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டதே! Nice writing!
பார்த்துடுவோம்....
அற்புதமான விமர்சனம்
படித்துவிட்டு பார்த்தது ஒரு வித்தியாசமான பார்வையை தந்தது
காதலுக்கு மொழியே தேவையே இல்லை என்பதை புரிய வைக்கும் படக்காட்சி உ அருமையான வர்ணனையில் .. இந்தி கமல் நஸ்ருதினின் நடிப்பு அட்டகாசம்...
@கே. பி. ஜனா...
பாராட்டுக்கு நன்றி சார்! உங்களோட கவிதை ரொம்ப நல்லா இருந்தது. ;-))
அற்புதமான விமர்சனம். உங்கள் எழுத்தின் மூலம் அந்தப் பாடல் காட்சியை அப்படியே கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள். பாராட்டுக்கள்.
@ஸ்ரீராம்.
இன்னமும் பார்த்துட்டு மீண்டு வரலையா ஸ்ரீராம்? ;-)))
@A.R.ராஜகோபாலன்
நன்றி கோப்லி;-) நீ எழுதும் கட்டுரைகளைப் பார்த்தாலே தெரியுமே.. உன்னுடையது விசாலமான பார்வை என்று.. நன்றி.. ;-))
@பத்மநாபன்
நன்றி பத்துஜி! இந்தி கமல்.... உங்களிடம் தான் பெயர் வைக்க கற்றுக்கொள்ளவேண்டும்... நன்றி. ;-))
@வை.கோபாலகிருஷ்ணன்
மனமார்ந்த பாராட்டுக்கு நன்றி சார்! ;-))
//தனுஷுக்கு ஜோடியாக போட்டு ரோஸு ரோஸு ரோஸு என்று தெருவில் ஆடவிட்டு படுத்துவார்கள். நாம் இன்னும் நிறைய முன்னேறவேண்டும் போலத்தான் இருக்கிறது. //
ROFL..
s.. the reality..
வித்யா பாலன் – மிகவும் வித்தியாசமான ரோல்களில் அசத்திக் கொண்டு இருக்கும் நடிகை. ”பா” மற்றும் ”லகே ரஹோ முன்னா பாய்” படத்திலும் அவரது கதாபாத்திரம் மிகவும் நன்றாக செதுக்கப்பட்டு இருக்கும். அந்த பாத்திரத்தைக் கண் முன்னே நிறுத்துவது போல இருக்கும் அவரது நடிப்பு. நல்ல விமர்சனம்… பாடலைப் பார்த்து விடுகிறேன்…
@Madhavan Srinivasagopalan
hahaha... thanks madhava... ;-)
@வெங்கட் நாகராஜ்
தலைவரே... இந்தப் படத்திலும் அசத்துகிறார்! பாருங்கள்.. நன்றி ;-))
அழகு கொஞ்சும் 'விபா'விற்கு முன் பாடலின் அழகு கொஞ்சம் குறைவுதான் ஆர் வி எஸ் சார்.
மேலும் நீங்கள் கூறுவது போல் ஒட்டு மொத்தமாக தமிழுக்கு விபா வேண்டாம் என தள்ள
முடியாது.அங்கே நஸ்ருதீனுக்கு என்றால் இங்கே கமலுக்கு ஜோடியாக வந்து கொஞ்சம் தமிழர்களையும்
கலங்கடிக்கட்டுமே
அருமையான விமர்ச்சனம்...
நல்ல விமர்சனம். வித்யா பாலன் நல்ல கதாபாத்திரங்களில் நடிப்பவர்.
ஜீனா யஹான் மர்னா யஹான்(தமிழில் காதோடுதான் நான் பேசுவேன்) போன்ற தாளகதி எப்போதும் ஹிட்லிஸ்ட்தான் ஆர்விஎஸ்.
காட்சியமைப்புகள் அழகுதான் நஸ்ருதீனின் கம்பீரத்தையும் விபாவின் நளினத்தையும் போல.
விபாவை ஊனமுற்ற பெண்ணாக குருவில் பார்த்ததால் லிஸ்ட்ல் சேர்க்கவில்லையோ?
பகிர்வு பரமானந்தம்.
பதிவே பார்த்தது போலிருக்கிறது. முன்னுரைகள் பற்றி நீங்களும் தொடர்ந்தால் மகிழ்வேன்.
ஆர்.வி.எஸ். எனக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை "ஹிந்தி" !! ஆளை விடும்.
@raji
என்னங்க.. லீவு முடிஞ்சு வந்துட்டீங்களா? கவிதை மழை பொழியுது போலருக்கே! விபா பற்றிய கருத்துக்கு நன்றி. ;-))
@சங்கவி
நன்றிங்க சங்கவி. ;-)))
@கோவை2தில்லி
கருத்துக்கு நன்றிங்க.. ;-))
@கோவை2தில்லி
கருத்துக்கு நன்றிங்க.. ;-))
@சுந்தர்ஜி
ஒப்புமைப் படுத்தி சொன்னீங்களே... அதுதான் தங்களின் தனித்தன்மை ஜி! நன்றி.
குரு விபா உட்கார்ந்துகிட்டே நடிச்சதாலே கண்ணுக்கு சரியா தெரியலை!!! மறந்துட்டேன்.. ;-))
@வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)
பாராட்டுக்கு நன்றி மேடம்!
முன்னுரைகளைப் பற்றி நிச்சயம் எழுதுவேன். அழைத்ததற்கு நன்றி. ;-))
@சாய்
ஹோ!!.. மாஃப் கீ ஜியே சாய்ஜி!!! ;-))
|\\ஹே பக்வான்! Vidhya பாலனிடமிருந்து முஜே பச்சாவ்!! मुझे बचाव !!///
ஓகோ இதுதான் குழந்தை மனசா ? .
தங்கமணி இதெல்லாம் படிக்கறதில்லையா ?
( ஹே பகவான் - मुझे भी बचाओ )
Post a Comment