இன்னும் நானூறு கிலோமீட்டர் வேகத்தில் அழுத்தினால் அவளை ஒரே அமுக்காக அமுக்கிப் பிடித்துவிடலாம் என்று என் வாகனத்தை சூறாவளியாய் விரட்டினேன். இடதுகையால் விசையை பின்னால் இழுக்க துள்ளிக்குதித்து முன்னால் பறந்தது. வானில் திட்டுதிட்டாய் மேகமூட்டம். உலோக வைப்பர் மேகக் கூட்டத்தை அடித்துத் துவைத்து பஞ்சுமிட்டாய் ஆக்கி இரண்டு பக்கமும் சக்கை சக்கையாய் துப்பியது. இது புஷ்பக்-420. உச்சபட்ச வேகம் நானூறு மைல். அவள் நிச்சயம் 1.2K ஹை எண்டு மாடல் தான் வைத்திருப்பாள். நான் ஏன் இவளை நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு துரத்துகிறேன்?
நான்கு நாட்களாக பக்கத்து வீட்டில் தலையை விரித்துப் போட்டுக்கொண்டு பொம்பளைப் பட்டாளங்கள் ஒரே லூட்டி. கூத்தடிக்கிறார்கள். முந்தாநாள் வெண்புகை நடுவில் தேவதைகள் மாநாடு போட்டு கூடி நின்று அனுபவித்து ரசித்து சிரிப்பது போன்று ஒரு இன்பக் கனா. மெய்யாலுமே. சிரிப்பொலியும், கரகோஷமும் திரி கொளுத்திய அணுகுண்டு போல கொஞ்சம் கொஞ்சமாக ஏறி காதில் நுழைந்து வெடித்தபோது அது கனவில்லை நிஜம் என்றுணர்ந்தேன்.
எழுந்து மெதுவாக திரைச்சீலைகளை விலக்கி ஜன்னலை திறந்து வெளியே பார்வையை ஓடவிட்டேன். உச்சி முதல் வேர் வரை ஜிலீர் என்று நனைந்த மரங்களின் இலைகளில் இருந்து நீர் சொட்டுசொட்டாக முத்து போல் வடிந்தது. ஓ. மறந்தே போனேன். இன்றைக்கு எங்கள் ஊருக்கு மழை முறை. மழைக்காரன்™ கருமேகங்களை பிடித்து ஒரு பக்கமாக காற்றூதி பேட்டை பேட்டையாக கொண்டு சென்று நிறுத்தி அட்டவணைப் படி அடைமழை பொழிவான். இவன் அக்காமாலா கம்பெனியின் உறவுக்கார கம்பெனி. வீட்டிற்கு மாதம் ரெண்டனா கட்டவேண்டும். மழைக்கட்டணம். இரண்டு ரூபாய் மாத சம்பளத்தில் இதற்கு வேறு ரெண்டனா அழவேண்டும். இவனுக்குப் போட்டியாக மாமழைக்காரன்™ என்று ஒன்று புதிதாக ஆரம்பித்தார்கள். கப்சி கம்பெனியின் சகோதரிக் கம்பெனி. ஒன்றும் பெரிதாக சோபிக்கவில்லை. தலையில் துண்டைப் போட்டுக்கொண்டு கிளம்பிவிட்டார்கள். அவர்கள் கிடக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டு பக்கத்து வீட்டை விழுங்கி விடுவதைப் போல பார்த்தேன்.
ஆரஞ்சு, மஞ்சள், பச்சை என பல வர்ணங்களில் விளக்குகள் மங்கலாக பிசிறடித்து கசிந்தன. "டொம். டொம்" என்றதிர்ந்தது ஸ்பீக்கர். எந்நேரமும் அது படாரென்று வெடித்து டி.வி.டியில் பாடிக்கொண்டிருப்பவர் ஸ்தூல உடலோடு வெளியே தூக்கி எறியப்படுவார் என்பது போல பாடல் அலறியது. கண் பந்திற்கு அதிக வேலை கொடுத்து உற்றுப் பார்க்கவேண்டியிருந்தது. "ஹேய்....", "டீ..." என்று மகிழ்ச்சியின் உச்சக் கட்டத்தில் நாலைந்து லோலிட்டாக்கள் கூக்குரல் எழுப்பி குதூகலித்தார்கள். பனியன் அவர்களை வேண்டாவெறுப்பாக மேலே மூடியிருந்தது. டான்ஸ் ஆடும் போது கூட இடுப்புக்கு கீழே ஆடை தெரியாத வண்ணம் மறைத்த அந்தக் கம்பி போட்ட ஜன்னல் ஒழிக! அறையைச் சுற்றிலும் புகை மண்டலமாக, கைகளில் கண்ணாடிக் கோப்பை தாங்கி சொர்க்கத்தில் டென்ட் போட்டு குடியிருக்கிறார்கள். அவர்கள் குழுவில் யாருக்கோ இன்று அவதாரத் திருநாள் போலிருக்கிறது. கொண்டாடுகிறார்கள்.
திரும்பி சுவர்க்கடிகாரத்தை பார்த்தேன். பின்னிரவு மூனரை மணி என்று ரேடியமாய் ஒளிர்ந்தது. இந்த ஏரியா கொஞ்சம் வனாந்திரம் தான். கொஞ்சம் ஷார்ப்பான காதாக இருந்தால் அடுத்த வீட்டில் மூச்சு விடும் சத்தம் கூட தெளிவாகக் கேட்கும். ஒரு இருநூறு குடித்தனங்கள் இங்கே அமைதியாக வாழ்கிறது. "அகாலத்தில் இது என்ன ஒரு அயோக்கியத்தனம்?" என்று வெகுண்டு கேட்கத் தோன்றினாலும் மொத்தக் குருதியையும் ஒரே பார்வையில் சுண்டி இழுத்த ஒரு அழகியை பார்த்து வாயடைத்து நின்றேன். அவளைப் பார்த்துக்கொண்டே தொட்டதால் ஜன்னல் கம்பி கூட சுரீர் என்று ஷாக் அடித்தது. மெகாவாட் மின்சாரம் அவள் கண்களில் சுடர்விட்டது. இந்த சுற்றுவட்டாரத்தில் என்னைப்போல பூர்வீக சொத்து இருக்கும் கல்யாணம் ஆகாத கட்டை பிரம்மச்சாரி யாரும் இல்லை. என் அழகு? அவள் என்னைப் பார்த்தால் அப்படியே அபகரித்துக்கொள்வாள். அந்த ஸ்திரமான நம்பிக்கை தான் ஜன்னலோரத்திலேயே விடியவிடிய கால் கடுக்க என்னை நிற்க வைத்துவிட்டது.
இப்போது முதல் பாராவைப் படித்துவிடுங்கள். புரிந்துவிடும். அங்கே கிளம்பியவளை எட்டித்தொடும் தூரத்தில் பயணித்தும் ஒருமுறை கோட்டை விட்டுவிட்டேன். ஏனென்றால் அவள் மொத்த அழகையும் வெளிச்சத்தில் அப்பட்டமாக பார்த்துவிட்டேன். வெயிட். வெயிட். நீங்கள் நினைப்பது போல 'ஏ'த்தனமாக இல்லை. அரைகுறை வெளிச்சத்தில் பார்த்தவளை வானத்தில் இருந்து ஒளிர்ந்த நண்பர் ரவியின் துணைகொண்டு ஃபுல்லாப் பார்த்தேன். அந்த ஆடை அணிந்த அல்வாத்துண்டு இப்போது வாகனத்தில் வழுக்கிக் கொண்டு ஆகாயமார்க்கமாக பறக்கிறது. "பிடி..உம்..விடாதே..பிடி.." மனதரக்கன் உட்கார விடாமல் தார்க்குச்சியால் குத்தி குத்தி விரட்டுகிறான்.
ஹா.. கடைசியாக என்னைப் பார்த்துவிட்டாள்! வண்டியை ஒரு ஏரிக்கு அருகில் ஓரம்கட்டி சிலையென நளினமாக இறக்கினாள். ஆசையில் நானும் அவசரமாக ஒதுங்கினேன். பக்கத்தில் பார்க்க பளபளவென்று இருந்தாள். வெயிலில் டாலடித்தாள். ஓடினேன். என்னை அணைக்க தயாராக இருப்பது போல் இரு கையையும் நீட்டி தயாராக நின்றாள். ஆஹா... அடைந்து விட்டேன்.. ஆனந்தம்.. பேரானந்தம் என்று என்னுள்ளம் உவகை கொண்டது. அண்டசராசரத்தில் இப்போது அவளொருத்தி தான் பெண்ணாக என் கண்ணுக்கு தெரிந்தாள். பக்கத்து ஏரியில் சலசலத்த தண்ணீரில் அவள் பிம்பம் "நட்டு வைத்த போல்" டான்ஸ் ஆடியது. பாழும் மனது கிடந்து அடித்துக்கொண்டது. என்ன சொல்வாளோ?
"ஹாய். நான் 7656465897"
"ஹாய். நான் 9876565677"
ஐ.டி நம்பர் சொல்லி இருவரும் கைகுலுக்கிக் கொண்டோம். மிருதுவாக இருந்தாள். சங்கீதமாகப் பேசினாள். கை ஜில்லென்று இருந்தது. டென்ஷனில் எனக்கு நெற்றியில் வியர்த்தது. கைக்குட்டையால் துடைத்துக் கொண்டேன்.
"உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. உனக்கு என்னை...." என்று வெட்கத்தோடு நான் வார்த்தைகளை விட்டு விட்டு ஸ்லோ மோஷனில் இழுத்த இழுப்பில் அவள் "ஹஹ்ஹா..ஹா..." என்று வெடித்துச் சிரித்தாள்.
இந்த ஜென்மம் ஈடேறிய சந்தோஷத்தில் அவள் கொடி இடையை எட்டித் தொட்டு என் பக்கம் இழுத்து மூச்சு முட்ட அணைத்தேன். எந்தவித எதிர்ப்பில்லாமல் பச்சென்று ஒட்டிக்கொண்டாள். இதழோடு இதழ் பொருத்திப் பார்த்தேன். ஜாடிகேற்ற மூடியாய் மிகச்சரியாக பொருந்தியது. இது ஒரிஜினல் தான் என்று அகமகிழ்ந்து இருந்த வேளையில் "பீப்..பீப்..பீப்.." என்ற பேட்டரி ட்ரைன் ஆகும் சத்தம் வர சலனமேயில்லாமல் புஷ் டோர் போல தலை துவள என் தோளில் சவமென சாய்ந்திருந்தாள் அவள். பாழாய்ப் போனவள்.
ஹும். நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான். இத்தோடு உயிர்க் காதலி தேடும் படலத்தில் எண்ணிக்கை இருபது பூர்த்தியாயிற்று. இனி, சர்க்காராக பார்த்து தலையில் கட்டிவைக்கும் உணர்ச்சிப்பூர்வ இயந்திரத்திர்க்கு வாழ்க்கையை தாரை வார்க்க வேண்டியதுதான். அலுத்துப் போய் தோளில் இருந்து அதை கீழே தள்ளிவிட்டு புஷ்பக்கை நோக்கி நடையைக் கட்டினேன். குப்புற கவிழ்ந்து குலுங்கி அழுவது போல விலுக்விலுக்கென்று கைகால்களை உதைத்துக்கொண்டது.
ஏரியிலிருந்து நீரில் நனைந்த ஒரு பிகினி அழகி தண்ணீரும் காதலும் சொட்டச்சொட்ட என்னை நோக்கி ஆவலாக வந்துகொண்டிருந்தாள். இவளை முதலில் சோதிக்க வேண்டும்.
பின் குறிப்பு: யாக்கைக்காக திரிவதாக கவித்துவமான தலைப்பு கொடுத்திருக்கிறேன்.
படம்: ரஜினி ஞாபகம் வந்தது. அதான்....
-
27 comments:
முடிவை ஊகிக்க முடிந்தது. சுவையான கதை
மன்னார்குடி சுஜாதா என்று இனி அழைக்கலாம் என்றிருக்கிறேன். எப்பூடி?
@வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)
இதற்கு நாயகன் ரோபோ என்று ஒரு முடிவு வைத்திருந்தேன். கடைசியில் மாற்றினேன். பாராட்டுக்கு நன்றி மேடம்! ;-)
@வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)
மேலோகத்திலிருந்து வைவார் மேடம்! வேண்டாம்...... பாராட்டுக்கு மிக மிக நன்றி.. ;-))
கண்டதெல்லாம் கனவு என்று கடைசியில் முடித்து விடுவீர்களோ என்று சந்தேகப்பட்டேன்.
வர்ணனைகள் நல்லாயிருந்தன.
//ஏரியிலிருந்து நீரில் நனைந்த ஒரு பிகினி அழகி தண்ணீரும் காதலும் சொட்டச்சொட்ட என்னை நோக்கி ஆவலாக வந்துகொண்டிருந்தாள். இவளை முதலில் சோதிக்க வேண்டும்.//
பிகினி அழகியை சோதிக்கப்போவதால் கதையைத்தொடரலாமே!
@வை.கோபாலகிருஷ்ணன்
சார்... வேணாம்... அப்புறம் எழுதிருவேன்... ஜாக்கிரதை..... ;-);-);-)))
பச்சக் ன்னு தீம் செட் ஆனவுடன் நச்சு ஒரு கதையை டெவலப் பண்ணிற்ங்களே ஆர்.வி.எஸ்.. வாழ்க
கற்பனை கொடியாய் பறக்குது
அறிவியல் அற்புதமாய் அடிக்குது
இயந்திரம் இடியாய் இடிக்குது
ஏதோ ஆரம்பிச்சுட்டேன் முடியல
நல்ல இருக்கு வெங்கட்
என்ன பாஸ் , இன்னும் சிலிகான் காதலி விடாமல் துரத்துகிறாள் போல இருக்கே ....
இப்படிக்கு
வலையுலக சுஜாதா ஆர் வீ எஸ் பேரவை
கே கே நகர் கிளை
@பத்மநாபன்
பச்சக் பச்சக்குன்னு ஒட்டிக்குது... நன்றி பத்துஜி! ;-))
@A.R.ராஜகோபாலன்
Thanks Gopli. ;-)
@எல் கே
// இப்படிக்கு
வலையுலக சுஜாதா ஆர் வீ எஸ் பேரவை
கே கே நகர் கிளை//
உங்க அலப்பறை தாங்கமுடியலை..... ;-)
வாழ்த்துக்கு நன்றி. ;-))
@அப்பாதுரை
Thank you Sir! ;-)
வலையுலக சுஜாதா - ஆர்.வி.எஸ். பேரவை... அட இது நல்லா இருக்கே.. தலைமையகம் எங்கே கார்த்திக்?
வர்ணனைகள் அருமை மைனரே.... என்ன சொல்லி பாராட்டுவது என்று புரியவில்லை....
பேசாம பேரவை கிளை இங்கயும் ஆரம்பிச்சடலாம்னு இருக்கேன்...:)
@வெங்கட் நாகராஜ்
பாராட்டுக்கு நன்றி தலைநகரத் தல.
ரஜினி, கமல் ரசிகர்கள் அவர் பெயரை முன்னாடி போட்டுக்கறது போல சுஜாதா ஆர்.வி.எஸ் என்று அவரது ரசிகனாக வைத்துக்கொள்வேன். வாத்தியார் மலை. நான் மடு. ;-)))
kamal rasigaro.. mutham koduthuvittu adutha heroina thedi poreengale .. ennama illa ekkama
முடிவை யூகிக்க முடிந்தபோதும் முடிவில்லாத ஏகபோகம் ஆர்விஎஸ்ஸின் அலுப்பூட்டாத வர்ணனைகள்.க்ளாஸ் ஆர்விஎஸ்.
ரெண்டாவது பாராவில் கைத்தட்டல் அல்லது கரகோஷம் ஒன்றைக் கழற்றிவிடுங்கள்.ஒருபொருட்பன்மொழியாகிவிட்டது.
நன்றாக இருந்தது. பாராட்டுக்கள்.
Thangalin adutha thodar epoluthu?????. thangal eluthu thodarai muzhu novela kavae veliedalam.rasikar pattalam ungaluku athikamaki kondae varukirathu.ungal ezhuthil oru nerthi ullathu.
thangal neril pesum pozhuthu erukum suvarasyathai vida kadhaikalil athikamaka ullathu.
@சுந்தர்ஜி
நன்றி ஜி! ஒரு ஆர்வத்துல ஒருபொருட்பன்மொழி விழுந்துட்டுது.. சரி செய்துவிட்டேன்.. ;-))
@murali
எண்ணமா இல்லை ஏக்கமா? ஒரு முழுக் கதைக்கான கரு இது உள்ளே இருக்கு..
கமல் ரசிகர் தான்... நன்றி முரளி. . ;-))
@கோவை2தில்லி
தொடர் ஊக்கத்திற்கு நன்றி சகோ. ;-))
@Eswari
அடுத்த தொடர் எழுதப் போகிறேன்.. ... அது ஒரு க்ரைம் ஸ்டோரி...
ரசிகர் பட்டாளம் ... நன்றி.......... பாராட்டுக்கு நன்றி..
நான் உங்களுடன் நேரே பேசியிருக்கிறேனா?
நீங்கள் யார்? மன்னையா? சென்னையா? ;-))
உங்க கணினில மட்டும் ஏதோ அடிஷனலா ஒரு ஸாப்ட்வேர் இருக்கு போல.. சைன்ஸ் பிக்ஷன் எழுத வசதியா..ம்ம் கலக்குங்க.
//தலைமையகம் எங்கே கார்த்திக்?/
கே கே நகர் சென்னை
@ரிஷபன்
நன்றி சார்! ;-)
@எல் கே
கார்த்தீ........தீ....... ;-))))))))))))))))
Post a Comment