சில "சங்கீத சாம்ராட்கள்" தேய்ந்த ரெகார்ட் போல ஒரே ராகத்தை பல படங்களுக்கு பற்பல பாடல்களுக்கு உபயோகப்படுத்தும் வல்லமை படைத்தவர்கள். ஒக்க ராகம். ஓராயிரம் படம். வெளிநாட்டிலிருந்து நைசாக மெட்டு உருவும் வித்தை கற்றவர்கள். "அழகிய லைலா" பாட்டுக்கு ஒரு ஆல்பத்தையே கொள்ளையடித்து போட்டு தமிழ் சினிமாவில் துண்டு போட்டு சீட்டு பிடித்த இசைஞர் உண்டு. மேஸ்ட்ரோ இளையராஜாவிடம் நிருபர் ஒருவர் பேட்டியில் கேட்டபோது "ஏழு ஸ்வரங்கள் தானே இருக்கு... அதுக்குள்ள தான் எல்லா பாட்டுக்கும் மெட்டு போட முடியும்" என்றாராம். இருந்தாலும் சில இசை இயக்குனர்கள் சுய ஈயடிச்சான் காப்பி அடித்துக் கொள்வது கொஞ்சம் ஓவர்தான். சமீபத்தில் வந்த எங்கேயும் காதல் படத்தில் வந்த நங்கை நிலாவின் தங்கை நடனம் மற்றும் மெட்டினால் என்னைக் கவர்ந்தது.
நேற்று என் மனைவியிடம் இது மைக்கேல் ஜாக்சன் போல இருக்கு என்று அளந்து கொண்டிருந்தேன். யாரோ ஒரு புண்ணியவான் மைக்கேல் ஜாக்சன் ஆடியதற்கு நங்கை நிலாவின் தங்கையை போட்டு பிசைந்து ஒரு வீடியோ யூட்டுபில் ஏற்றியிருக்கிறார். அற்புதம்.
முதலில் மைக்கேல் ஜாக்சன் துரையின் The Way You Make Me ஃபீல். ஒரிஜினல் வர்ஷன்.
மைக்கேல் ஜாக்சன்.. ஒரு நிலாவின் தங்கையை பின்தொடர்ந்து ஆடியது. கலக்கியவர் கலக்கிவிட்டார்.
ஜெயம் ரவியை வேடிக்கை பார்க்கவிட்டு ஹீரோயினை சுற்றி வெள்ளைக்கார ஆட்டக்காரர்கள் ஆடியது... எங்கேயும் காதல் படத்தில் இருந்து... இது தமிழ்ப் பட ஒரிஜினல்.
போரேன்... வேலை நிறையா கிடக்கு.. எங்கயாவது மொனாகோ, அன்டோரா போன்ற நாடுகளில் மெட்டமைத்த ஸ்ருதியான பாடல்கள் கிடைத்தால் நீங்களும் நானும் 'ஒரு பட' இசையமைப்பாளர் தான். எல்லாத்துக்கும் சுழி நல்லா இருக்கணும்.
பட உதவி: spreadshirt.com
-
29 comments:
http://www.youtube.com/watch?v=z5Q8x1wYN4w
ithu entha tamil pattu endru kandupidipavargalaukku copysamy amman aayeram porkasu valangum
நல்ல பதிவு வெங்கட்
நீ சொல்லுறதும் சரிதான் நல்ல சுழி இருந்தா
நீயும் நானும் மியுசிக் டைரக்டர் தான்
காலங்காலமா நடக்கிறது தான்... கொஞ்சம் இரைச்சலை குறைச்சாங்கன்ன பருவாயில்லை ...
காப்பி...காப்பி... இது காலங்காலமா நடந்து வருகிறது.... பாட்டு மட்டுமல்ல, முழு சீன்களை கூட அப்படியே காப்பி அடித்து வைத்துவிடுகிறார்கள்....
வலைச்சரத்தில் மீண்டும் உங்கள் அறிமுகம்....
http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_2346.html
வாழ்த்துகள்.
different.. மாங்காய்?
நம்ம ஊர்க்காரருக்கு உடம்பு வளைய மாட்டேங்குதே?
Khaledன் DIDI வந்த புதிதில் ஒரு சூறாவளியாய்த் தமிழ்ப் படங்களைத் தாக்கியது. அழகிய லைலாவும் ஹே ஸப்பா என்ற அர்ஜுனின் பாட்டும் இதேதான்.
இந்த மாதிரி இந்த உல்டா புல்டா பாடல்களும். அவை தனி ஸ்வாரஸ்யம்.
அதே போல ம்யூட்டில் கூட்டங்கூட்டமாய் ஆடுவதைப் பார்ப்பதும் அலாதி வேடிக்கை.
எக்கச்சக்க வேலை போல ஆஃபீஸில்.
எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க..
//எல்லாத்துக்கும் சுழி நல்லா இருக்கணும்.//
கரெக்டா சொன்னீங்க சார்!
இசையமைக்கவோ
இடியாப்பம் விற்கவோ
எல்லாத்துக்குமே
தலைச்சுழி
நல்லா
இருக்கணும்
//எல்லாத்துக்கும் சுழி நல்லா இருக்கணும்.//
Hmmmm :(
namakum ithukkum snaanapraapthi lethu saare
தமிழ் படத்துல இதெல்லாம் சஹஜம், sir!
சொல்லணும்-னு ஆரம்பிச்சா சொல்லிண்டே போகலாம்... MKT /பாபநாசம் சிவன் ஓட "தீன கருணாகரனே நடராஜா" (திருநீலகண்டர்) பாட்டு - GR / MGR ஓட "ஏச்சி பிழைக்கும் தொழிலே சரிதானா"(மதுரை வீரன்) -வா மாறித்து... அது அப்போ! அப்புறம் "Besame Mucho " வும் "Sway with me" -யும் "அனுபவம் புதுமை" மற்றும் "பார்த்த ஞாபகம் இல்லையோ" வா மாறித்து. "Mi Dholkar" (மராத்தி) - "வந்தேண்டா பால்காரன்"--ஆச்சு. Rihannaa வோட "Unfaithful" ஓட அட்டசல் copy யா "உனக்கென நான்"-ஆச்சு...
இதெல்லாம் நம்ப பரம்பரை சொத்து!
நான் "எங்கேயும் காதல்" பாட்டு இப்போ தான் கேக்கறேன்... அந்த remix முன்னாடியே எங்கயோ கேட்டிருக்கேன்... ரொம்ப அநியாயம்!
/எல்லாத்துக்கும் சுழி நல்லா இருக்கணும்.//
hahaha
athu unmaithan mynar vaal.
@Murali
தெரிஞ்சா மாதிரி இருக்கு ஆனா தெரியலை... ;-))) நீங்களே சொல்லுங்களேன்... ;-))
@A.R.ராஜகோபாலன்
ஆமாமாம். நன்றி கோப்லி. ;-))
@பத்மநாபன்
பருவாயில்லை ன்னு போட்டீங்க பாருங்க.. அங்க நிக்கிறீங்க நீங்க.. நன்றி பத்துஜி ;-))
@வெங்கட் நாகராஜ்
நன்றி தலைநகரமே!
என்னுடைய வலைச்சர அறிமுகத்தை கண்டு சொன்னதற்கும் நன்றி. ;-))
@அப்பாதுரை
அதைத்தான் சொன்னேன் அப்பாதுரை சார்! அவனுங்க எப்படி ஒடிஞ்சு விழறா மாதிரி ஆடறானுங்க... நம்மாளு... உஹும்... தேறாது.. ;-))
@சுந்தர்ஜி
உங்களோட கமெண்ட்டின் கடைசி லைனை வெகுவாக ரசித்தேன் ஜி! ;-))
@ரிஷபன்
சுயமா யோசிச்சா நல்லாயிருக்குமே! கருத்துக்கு நன்றி சார்! ;-))
@வை.கோபாலகிருஷ்ணன்
கரெக்ட்டுதான் வைகோ சார்!
இவர்கள் இசை இடியாப்பம் விற்கிறார்கள். நன்றி. ;;-)
@இளங்கோ
Why வருத்தம்? ;-))
@எல் கே
சரி....சரி... எல்.கே. ;-)))
@Matangi Mawley
மாதங்கி இந்த லிஸ்ட் ரொம்ப பெரிசு... எனக்கு தெரியும்.. அட்சரம் பிசகாம அடிச்சுப் போடறதுல நம்மாட்கள் மன்னர்கள். கருத்துக்கு நன்றி. ;-))
@siva
Ha..Ha..haa... Thanks siva! ;-))
http://www.youtube.com/watch?v=qzjPBCtvycM
from the movie king.. kaadalahi kaadalahi. one of my favorite songs
evlo rasichi adichurukaan parunga (copy)
@murali
கேட்டேன் முரளி. பச்சைக் காப்பி. யார் MDன்னு பார்த்தா.... ஹி.. ஹி... அவங்களுக்கெல்லாம் அவ்வளவுதான் சரக்கு.. ;-))
What a comparison? You had compared very well. This tamil song is one of my favorite song.
Post a Comment