Thursday, June 9, 2011

நாற்சந்தி

இரு வருடங்களுக்கு முன் ஒரு நாள் நுங்கம்பாக்கம் அருகில் விமானம் டேக் ஆஃப் ஆகும் ஸ்பீடில் போன "டர்...டர்..." ஆட்டோ அன்பர் ஒருவர் கன நேரத்தில் தடுமாறி ரோடுக்கு நடுவில் இருக்கும் மீடியனில் ஏற்றி அதே வேகத்தில் எதிர் திசையில் உருண்டு தூசி தட்டி சிரித்துக் கொண்டே எழுந்தார். ஆயுசு கெட்டி. தண்ணீர் லாரி, மாநகர பஸ் என்று எதிலும் ஏறி எமன் வரவில்லை.

வைத்த கை எடுக்காமல் ஒலியெழுப்பும் "ஹாரன் மாணிக்கங்கள்" சிலர் பயமுறுத்தியே ரோடுக்கு வெளியே தள்ளியவர்கள் பட்டியல் ஏராளம். இன்னும் சிலர் "பிப்பிப்பீ..பிப்பிப்பீ..பிப்பிப்பீ.." என்று இடைவெளி விட்டு ராகமாக ஹாரன் அடிப்பார்கள். எதற்கும் அசங்காமல் அவர்கள் அப்பன் வீட்டு ரோடில் பயணிக்கும் பிரகஸ்பதிகளும் உண்டு.

சிகப்புக்கும் பச்சைக்கும் வர்ண பேதம் பார்க்காமல் ஓட்டும் டிரைவர்கள் நம்மிடையே தாராளம். நம் இந்திய நகரங்களில் கரணம் அடித்து வண்டியோட்டும் அசகாய சூரர்களை நிறைய பார்த்திருக்கிறோம். நியூயார்க் சிட்டியில் ஒரு நாற்சந்தியில் எடுத்த வீடியோ கீழே. உங்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று வண்டியோட்டி காண்பிக்கிறார்கள். எல்லோருமே கேவலம் மானிடப் பதர்கள் தானே!



3-Way Street from ronconcocacola on Vimeo.


இந்த வீடியோவில் பூந்து பூந்து ஒட்டியவர்களை விட, சைக்கிள், கார், லாரி என்று ரகம் பிரித்து ரவுண்டு மற்றும் கட்டம் கட்டி ஒட்டிக் காண்பித்த அந்த திறமைசாலியை பாராட்டுகிறேன். Good Work. 

-

28 comments:

Sivakumar said...

சைக்கிள் கேப்புல வேலைய காட்டுறவங்கள பாத்துருக்கோம். சைக்கிளை வச்சிக்கிட்டு கேப்புல வேலை காட்டுற ஆளுங்க...அசகாய சூரர்கள்தான்!!

வை.கோபாலகிருஷ்ணன் said...

வீடியோ காட்சி திறக்க நெடுநேரம் ஆனது. பிறகு திறந்தது.

காட்சிகள் வெகு அருமையாக இருந்தன.

கரணம் தப்பினால் மரணம் என்பது எல்லா இடத்திற்கும் பொருந்தும்போல உள்ளது.

ஜனத்தொகை அதிகம். வாகனங்களும் அதிகம். எல்லோருக்குமே தலைக்குமேல் அவதியும் அவசரமும் அவசியமும் உள்ளது.

ஒருவரையொருவர் எப்படியாவது முந்தியே தீரணும் என்கிற வெறி. என்ன செய்வது!

இவர்கள் அடிக்கும் கூத்துக்கு விபத்து நேர்வது மிகவும் குறைவே என்று எனக்குத்தோன்றுகிறது.

எப்படியோ ஒரு மாதிரியாக எல்லாம் நல்லபடியாக ஏதோ ஒரு மாதிரி ஓடிக்கொண்டு தான் வருகிறது.

ஈஸ்வரோ ரக்ஷது!

பதிவுக்கு நன்றி. பாராட்டுக்கள்.

பத்மநாபன் said...

அமெரிக்க நகரில் கட்டுப்பாடு இல்லாத நாற்சந்தி இருப்பது ஆச்சர்யம் தான்...

போக்குவரத்தை பொறுமையாக படம் எடுத்து, அவசரக்காரர்களை வட்டமிட்டு காட்டிய திறமையை பாராட்டவேண்டும்

சக்தி கல்வி மையம் said...

அசத்தலான வீடியோ ..

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

இராக்கூத்து இப்பத்தான் முடிஞ்சுதுன்னு பாத்தா அடுத்தது நாற்சந்திய எறக்கிட்டீரே ஓய்!

சேப்பாயி ஹேங்கோவர் தீரலையோ இன்னும்.

சமுத்ரா said...

video blocked :)

கே. பி. ஜனா... said...

காட்சியும் விளக்கமும் கவர்ந்தன.

ரிஷபன் said...

தலை சுத்துது..

இளங்கோ said...

இதெல்லாம் பார்த்தா ரோட்ல வண்டி ஓட்டுறதுக்கே பயமா இருக்குது.

RVS said...

@! சிவகுமார் !
கருத்துக்கு நன்றி சிவா! ;-))

RVS said...

@வை.கோபாலகிருஷ்ணன்
ஒரு பதிவுக்கு அலசி ஆராய்ந்து கருத்து பதிவது உங்கள் ஸ்டைல். ஐ லைக் இட். நன்றி சார்! ;-))

RVS said...

@பத்மநாபன்
நன்றி பின்னூட்டப் புலி பத்துஜி! ;-))

RVS said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!
நன்றி கருன் ;-))

RVS said...

@சுந்தர்ஜி
ஆமாம் ஜி! நெசமாத்தான். ;-))

RVS said...

@சமுத்ரா

Oh Sorry! How is the script? ;-))

RVS said...

@கே. பி. ஜனா...
நன்றி சார்! ;-))

RVS said...

@ரிஷபன்
ஏன்? வொய்? கியோன்? ;-))

RVS said...

@இளங்கோ
துணிஞ்சவனுக்கு தூக்கு மேடையும் பஞ்சு மெத்தை.. ;-))

எல் கே said...

செம

RVS said...

@எல் கே
Thanks. ;-)

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

அங்கயும் அப்படித்தானா?

ஸ்ரீராம். said...

அமெர்க்காவிலேயே அப்படிதான் என்று பார்த்ததும் ஒரு அல்ப திருப்தி மனதில் நிலவுவதை தடுக்க முடியவில்லை!

CS. Mohan Kumar said...

தொடர்ந்து விடாம வாரத்துக்கு ரெண்டு மூணு பதிவு எழுதுறீங்க RVS. வாழ்த்துக்கள். நமக்கெல்லாம் ஒன்னு ரெண்டு மேலே எழுத முடியறதில்லை. Good show. Keep it up.

RVS said...

@வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)

எங்கேயும் எப்போதும் அப்படித்தான் மேடம்... ;-))

RVS said...

@ஸ்ரீராம்.
ஹி..ஹி... சேம் ஃபீலிங்க்ஸ். ;-))

RVS said...

@மோகன் குமார்
மோகம் முப்பது நாள். ஆசை அறுபது நாள் அப்படின்னு சொல்லுவாங்க... இது கொஞ்சம் பேராசையா நீண்டுகிட்டு இருக்கு. வாழ்த்துக்கு நன்றி மோகன். ;-))

ADHI VENKAT said...

வீடியோவை பார்த்ததும் பயமாயிடுச்சு. அங்கயும் இப்படித் தானா!

என்னாச்சு இரண்டு பதிவுகளாக போக்குவரத்து நெரிசல் பற்றியே எழுதியுள்ளீர்கள் சகோ?

RVS said...

@கோவை2தில்லி
கஷ்ட்டப்பட்டு நொந்து போனேன். தாக்கம் இன்னும் நாலு நாள் இருக்கும் போலருக்கே!
கருத்துக்கு நன்றி சகோ. ;-))

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails