Monday, June 6, 2011

பெருமாள் ராசி


பெண்கள் கூந்தலில் இருக்கும் மல்லிப்பூ அகஸ்மாத்தா பக்கத்து ஆம்பிளை காதுக்கு ஏறும் அளவிற்கு கோவிலில் ஒரே பக்தர் கூட்டம். நெரிசலில் "கோவிந்தா... கோபாலா.." என்று பெருமாளை அவரவர்கள் வசதிக்கு ஏற்றார்ப் போல அழைத்து குசலம் விசாரித்து கும்பிடு போட்டார்கள். ரொம்ப நாளாக ஏகாதேசி கோவில் அது. வெளிப் பிரகாரத்தில் ஒரு குழல் விளக்கும் பெருமாள் சன்னதி முன்னால் ஒரு குண்டு பல்பும் எரியும். தாயார் சன்னதி வாசலில் ஒரு டியூப் லைட் மின்னல் எஃபெக்டில் மினுமினுக்கும். எல்லா விளக்கும் விளக்கல்ல.

திடீரென்று யாரும் எதிர்பார்க்காத ஒரு நன்னாளில் கோபுர வாசலில் பூக்கடையும், பழக்கடையும் அர்ச்சனைத் தட்டுமாய் இந்தக் கோயில் பிக்கப் ஆகிவிட்டது. ஊரில் ரெண்டு பேருக்கு சந்தான பாக்யமும், காசுக்கடை செட்டியாருக்கு கூரையை பிச்சுகிட்டு கொடுத்தார் என்றும் செவிவழி விளம்பரம் ஊருக்குள் ஊடுருவிய நாளில் இருந்து பக்திமான்கள் அந்தக் கோயிலுக்கு படையெடுக்க தொடங்கிவிட்டனர். இப்போது அவருக்கு ஏக கிராக்கி. பல பேருக்கு ராசியான சாமி. வாசுவுக்கு பெருமாள் பிடிக்கும். ஆனால் ஏகாந்தமாக தரிசிக்க பிடிக்கும். ஒரே கசகசப்பில், மூச்சு முட்ட நெருக்கியடித்துக்கொண்டு அக்குள் வேர்வையை பிறத்தியார் மூஞ்சிக்கு அப்பி தலைக்கு மேலே கும்பிடு போடும் கூட்டத்தை பார்த்தால் அவனுக்கு பயங்கர அலர்ஜி. 

"பொறந்த நாளா இருக்கு.. போய் பெருமாள சேவிச்சுட்டு வாடா..." என்று கட்டளையிட்ட நார்மடி பாட்டியின் சொல்லைத் தட்டாமல் ஊருக்கு ராசியான பெருமாளை பார்க்க கோவிலுக்கு வந்திருந்தான். இன்றும் மற்றவர் கால் மேல் ஏறி காலோடு கால் பின்னி சாமி பார்க்க முண்டியடிக்கும் பக்திக் கூட்டம் கொஞ்சம் இருந்தது. ரேடியோக்களில் மியூச்சுவல் ஃபண்ட் விளம்பரங்களின் கடைசியில் ரிஸ்க் விதிமுறைகள் சொல்லும் வேகத்தில் சாரி அர்ச்சனை செய்து கொண்டிருந்தார். தாயாரின் துளசி மாலை வாசனையை தூக்கி அடிக்கும் விதமாக கூட்டத்தின் துர்கந்தம் வீசிற்று. வாசு கண் மூடி லோகஷேமத்திர்க்காக வேண்டிக்கொண்டான். வியர்வை இல்லாத மனிதர்களை படைக்க மனமார பிரார்த்தித்துக் கொண்டான்.

கண நேரத்தில் ஒரு சந்தன வாசனை அவன் மூக்கில் நுழைந்து இரண்டு கண்ணையும் திறந்தது. எதிர் வரிசையில் பிரகாசமாக உடலெங்கும் குழைத்துப் பூசிய சந்தனக் கலரில் ஜொலித்தாள் அவள். மழமழவென்று வெண்ணை தடவிய தேகம். நாயுடு ஹால் மீடியம் என்று தயாரிக்கும் எந்த உள்ளாடையும் அவளுக்கு அளவு எடுத்து தைத்தார்ப் போல சிக்கென்று இருக்கும். தழையத் தழைய பச்சைப் பாவாடை. அந்தக் காலத்து சாவித்திரி போல புஃப் கை வைத்த சட்டை. இருபது இருப்பாள். நிச்சயம் இருபத்திரண்டுக்கு மேல் இருக்க மாட்டாள். ஆங்கிலம் பேச ஸ்ருதி மீட்டிய வாய். கண்ணிரெண்டும் கத்திரி. குழி விழும் பட்டுக் கன்னம். கூர் நாசி. எவ்வளவு ஒதுக்கி விட்டாலும் அடங்காப்பிடாரியாக மீண்டும் மீண்டும் சுருட்டிக்கொண்டு நெற்றியில் விழும் தலைமுடி. திருஷ்டிக்கு கன்னத்தில் ஒரு குட்டிச் செல்லப் பரு.

"எல்லோரும் சேவிச்சுக்கோங்கோ... தாயார் ஆனந்தவல்லியா சேவை சாதிக்கறா.... பெருமாளோட எந்நேரமும் ஆனந்தமா இருக்கரதுனால ஆனந்தவல்லி.... சேவிக்கரவாளுக்கு சந்தோஷத்தை அளவில்லாம கொடுக்கரதுனாலையும் ஆனந்தவல்லி.." என்று ஆரம்பித்து தாயாரை வர்ணித்து பக்தி மணம் கமழ நெய் தீபம் காண்பித்தார். தாயார் சந்நிதியில் ஒழுக்கமில்லாமல் அந்தப் பச்சைப் பாவாடை சட்டையை பார்த்தது மகா தப்பு என்று வாசு கன்னத்தில் பட்பட்டென்று போட்டுக்கொண்டான். கண் விடாமல் அத்துமீறி அவளைப் பார்த்துக் கொண்டிருந்தது. பொட்டிட்டு, பூச்சூடி மங்களகரமாக எதிரே நின்று பிரார்த்தனை செய்துகொண்டிருந்த அவளது முகத்தில் ஒரு குழந்தையின் குறும்பு கொப்பளித்தது. கண்ணிரெண்டும் துறுதுறுக்க நிமிர்ந்து பார்த்து இடது கையால் முகத்தில் விழுந்த முடியை ஓரங்கட்டிவிட்டு தீபாராதனை எடுத்து ஒற்றிக்கொண்டாள். நெய்தீப ஒளியில் முகம் டாலடித்தது. காண்போரை வதைக்கும் ராட்சஷ இருபது.


குங்குமம் வாங்கி நெற்றியில் இட்டுக்கொண்டு மீதியை தூணுக்கு தடவி விட்டு திரும்பும்போது ஒரு ஜோடிக் கொலுசுகள் "வாசு..வாசு..." என்று செல்லமாக கூப்பிடுவது போல கேட்டது. காற்றில் மிதந்து வந்த நறுமணத்தை மோப்பம் பிடித்து கழுத்து சுளுக்க திரும்பிப் பார்த்தான். பிரகாரத்தின் அரையிருட்டில் குரல் எதிரொலிக்க ஒல்லிக்குச்சி ராதா அவளோடு ஒட்டிக்கொண்டு லொடலொடவென்று பேசிக்கொண்டே நடந்து வந்தாள். பிரகார மேற்கூரையின் ஓட்டைகளின் வழியே குழல் குழலாக தரை வந்து இறங்கிய வெளிச்சத்தில் மணிரத்னம் பட நாயகி போல இருந்தாள் அவள்.

"யாருடி ராதே! உங்க மாமா பொண்ணா!" என்ற அல்டாப்பு விஜயா மாமியின் விசாரணைக் கேள்விக்கு "ஆமாம் மாமீ!" என்று இரைந்தாள் ஒ.கு.ராதா.

"எப்பிடிடி கொழந்தே இருக்கே. சின்ன வயசில பார்த்தது..." என்று தோளைத் தொட்டு தடவி ஆரம்பித்து அளக்க ஆரம்பித்த மாமியிடம் அவள் தனது பேரைச் சொல்லும் போது உச்சி காலத்திர்க்காக பெரிய மணி அடித்து காதில் விழாமல் சதி செய்துவிட்டது. கவனிப்பாரற்று ஒரு ஓரத்தில் தூணில் பறந்து கொண்டிருந்த சஞ்சீவிப் பர்வதம் தூக்கிய ஆஞ்சநேயரை அவர்கள் அவனை கடக்கும் வரை ஏழு முறை அடி பிரதக்ஷிணம் செய்தான். பாவாடை சரசரப்பும், கொலுசு சலசலப்பும் பக்க வாத்தியமாகக் கொண்டு சங்கீதமாக பேசி சிரித்துக்கொண்டு சென்றாள்.

சாமி சன்னதிக்குள்ளும் சைத்தான் மனசு விடாமல் அவளை துரத்திற்று. கண் விரட்டிப் பிடித்து மனசுக்கு காதல் சேவகம் செய்தது. உற்சவமூர்த்தி கண்ணை திறந்து அவளையே உற்றுப் பார்ப்பது போல ஒரு பிரமை அவனுக்கு.

இமையிரண்டும் மூடி சேவிக்கும் போது மன்மதச் சிலையாக இருந்தாள். சந்நிதிக்குள் சைட் அடித்தால் பெருமாள் கண்ணை குத்திவிடுவார். அவன் ஒரு god fearing பையன். ஆனால் ஒரு fairy loving இளைஞன். பிரசாத துளசி வாங்கி வாயில் போட்டு மென்று கொண்டு வெளியே வந்தான். சடாரி வைக்கும் போது தலை குனிந்த அவள் பிம்பம் ஃப்ளாஷடித்தது. ஷாம்ப்பூ விளம்பரங்களில் வருவது போல கேசம் பந்தாக சுருண்டு நிமிர்ந்தது. இதுவரைக்கும் தெருவில் இந்த வடிவழகியை பார்த்ததில்லையே என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது
"டீ... காதம்பரி... நில்லுடி.. கொஞ்சம் மெதுவாப் போ..." என்று ஒல்லிக்குச்சி ராதா அவளை துரத்திக்கொண்டே குங்குமம் மூடிய இடதுக் கையை தூக்கி பிடித்துக் கொண்டே ஓடிவந்தாள். வாசு காதுகளில் காதம்பரி மோகனமாய் வழிந்தது.

இரண்டடி இடைவெளியில் அவர்களோடு சுவாமி சன்னதி வலம் வந்தான். கொடிமரம் அருகில் நமஸ்கரித்து எழுந்தவனை திரும்பிப் பார்த்த ராதா "என்ன வாசு? புதுச் சொக்கால்லாம் போட்ருக்கே. பர்த் டே வா?" என்றாள். என்புதோல் போர்த்திய ராதையை இதுநாள் வரை லட்சியமே செய்யாதவன் "ஆமா... இந்தா சாக்லேட்..." என்று பான்ட் பாக்கெட்டில் கையை விட்டு காட்பரீஸை எடுத்து நீட்டினான். "ஒண்ணுதானா?" என்று கேட்டவுடன் கை நிறைய எடுத்து ரெண்டு கையாலும் ஏந்தி நின்றான். "நீங்களும்..." என்று அவளிடத்தில் கையை காண்பித்தான். "தேங்க்ஸ்." என்று அவள் ஒற்றை வரி உதிர்த்ததில் வாசுவின் ரத்தம் அதிவிரைவு ஓட்டம் எடுத்து அவன் நரம்புகளை ஜிவ்வாக்கியது.

கோவிலை விட்டு வெளியே வரும்போது கோபுரவாசல் அருகில் பச்சைப் பாவாடை சந்தனக் கலர் சிரிக்க எல்லாம் பெருமாள் ராசி என்று புல்லரித்துப் போனான்.

நாளைக்கும் வாசு கோவிலுக்கு வருவான்.

படம்: அடியேன் கிளிக்கியது.

-

34 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//ஒரே கசகசப்பில், மூச்சு முட்ட நெருக்கியடித்துக்கொண்டு அக்குள் வேர்வையை பிறத்தியார் மூஞ்சிக்கு அப்பி தலைக்கு மேலே கும்பிடு போடும் கூட்டத்தை பார்த்தால் அவனுக்கு பயங்கர அலர்ஜி. //

//கண நேரத்தில் ஒரு சந்தன வாசனை அவன் மூக்கில் நுழைந்து இரண்டு கண்ணையும் திறந்தது. எதிர் வரிசையில் பிரகாசமாக உடலெங்கும் குழைத்துப் பூசிய சந்தனக் கலரில் ஜொலித்தாள் அவள். மழமழவென்று வெண்ணை தடவிய தேகம். நாயுடு ஹால் மீடியம் என்று தயாரிக்கும் எந்த உள்ளாடையும் அவளுக்கு அளவு எடுத்து தைத்தார்ப் போல சிக்கென்று இருக்கும்.//


//"நீங்களும்..." என்று அவளிடத்தில் கையை காண்பித்தான். "தேங்க்ஸ்." என்று அவள் ஒற்றை வரி உதிர்த்ததில் வாசுவின் ரத்தம் அதிவிரைவு ஓட்டம் எடுத்து அவன் நரம்புகளை ஜிவ்வாக்கியது.//


//நாளைக்கும் வாசு கோவிலுக்கு வருவான்.//

படித்ததும் அசந்து போனேன் சார்.
எப்படி சார், இப்படி அசத்தலாக எழுத முடிகிறது? நடுவில் தங்களின் பல பதிவுகளை நேரமின்மையால் படிக்க முடியாமல் போனது.

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
தொடர்ந்து அசந்துங்கள்.

உங்களுக்கு அனுபவம் அதிகம் என்பது எனக்கு நன்றாகப்புரிகிறது.

நானும் தான் அடிக்கடி கோவிலுக்குப்போகிறேன். பலரையும் பார்க்க முடிகிறது. அவர்களின் நடை, உடை, பாவனை, பக்தி, பேச்சுக்களை உணரமுடிகிறது. கோவில் மணி அடித்ததும் அத்தனையும் மறந்தே போகிறது.

அனுபவத்தை அப்படியே அசத்தலாக பதிவு செய்வது தான் உங்கள் தனித்திறமை. சபாஷ்.

A.R.ராஜகோபாலன் said...

நாளைக்கும் வாசு கோவிலுக்கு வருவான்.



நானும் கூட வருவேன்
காதம்பரி அழகை ரசிக்க

RVS said...

@வை.கோபாலகிருஷ்ணன்
சார் பாராட்டுக்கு மிக்க நன்றி. ஆனால், இது புனைவு தான். நினைவுகள் இல்லை. (மாட்டி விட்டுடுவீங்க போலருக்கே.. ஹா ஹா...) அடிக்கடி வாங்க. ;-))

RVS said...

@A.R.ராஜகோபாலன்
கோப்லி.. அழகு ரசிப்பதற்கு தான்.. என்ஜாய். நன்றி. ;-))

ரிஷபன் said...

உங்க எழுத்து ராசி.. கிறங்கடிக்கும் வர்ணனை.. கோவிலுக்கு ஒரு மண்டலம் போலாமா..

அப்பாதுரை said...

நல்லா இருக்குங்க. 'வியர்வை இல்லாத மனிதர்களைப் படைக்க...' சிரித்தேன்.

நாயுடு ஹால் மீடியமா? சரியா கவனிங்க தலைவரே. ஐ மீன், ஸ்மால் மீடியம் லார்ஜுனா விக்கிறாங்க?

RVS said...

@ரிஷபன்
நிச்சயமா போலாம் சார்!
பாராட்டுக்கு நன்றி. ;-))

RVS said...

@அப்பாதுரை
சார்! நம்பர் தான் எழுதியிருந்தேன். எங்கயாவது இடறிடுவேனோன்னு பயந்து மீடியமா மாத்திட்டேன்.
ரசித்தமைக்கு நன்றி! ;-))

பத்மநாபன் said...

பெருமாள் ராசி ...அம்பாள் தரிசனம் ..அசத்திட்டிங்க ஆர்.வி.ஸ்

பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமை தாவணிக் கூட்டத்தைவிட பேண்ட் கூட்டம் ஜாஸ்தியாக இருக்கும்...ஏனென்று ரொம்ப லேட்டா புரிந்த விஷயம் ....

bandhu said...

பிரமாதம்! கோயிலுக்கு போனமாதிரியே இருந்தது!

Sivakumar said...

முதல் வரி....கற்பனை செய்தால் சிரிப்பு வருகிறது. Its a first ball six. நீங்கள் க்ளிக்கிய படம்..... வியர்க்க விறுவிறுக்க படம் பிடித்தீர்களா? டாட்ஸ். கோவிலுக்குள் (மொபைல்) கேமரா யூஸ் பண்ணக்கூடாதுன்னு ஒரு மரபு இருக்கு. அதை பலர் மீறலாம். Why you? Just asked....

எல் கே said...

செம ரசிப்ப்பு ஆர் வீ எஸ். அந்த பருவத்தின் நினைவுகள்.. (சரி மன்னிக்கு தெரியுமா இந்த காதம்பரியை பத்தி ?)

ஸ்ரீராம். said...

ஆர்விஎஸ்..... மனதின் நினைவுகள் பதின்மவயதில் ஆணியடித்து விட்டதா...அல்லது அந்த நினைவுகளை மனதில் 2 GB வைத்து சேமித்து வைத்திருக்கிறீர்களா...வார்த்தைகள் பசுமை மாறாமல் விழுகின்றனவே...! அப்பாதுரை சார் எக்ஸ்ட்ரா லார்ஜ் எல்லாம் உண்டா?

வெங்கட் நாகராஜ் said...

உண்மையாய் நடந்ததோ, புனைவோ ரசிக்க வைத்து இருக்கீங்க மைனரே...

ஒவ்வொரு இடத்திலும் உங்கள் வர்ணனைகள் அசத்துகின்றன. மேற்கோள் காட்டி சொல்லலாம் என்றால் முழு பதிவினையும் சொல்ல வேண்டும் போல் இருக்கிறது...

வாசு மட்டும் அல்ல இன்னும் நிறைய பேர் அவன் கூடவே கோவில் வருவார்கள்..

RVS said...

@பத்மநாபன்
கருத்துக்கு நன்றி பத்துஜி!
அந்த பான்ட் கூட்டத்துல நீங்களும் ஒருத்தரா? ச்சும்மா... ;-))

RVS said...

@bandhu
நன்றி... என்ன ரொம்ப நாளா காணோம்? ;-))

RVS said...

@! சிவகுமார் !
ரசித்ததற்கு நன்றி சிவா!
கோவிலுக்குள் படம் எடுக்கலாமே! என்னைப் பொறுத்தவரையில் தவறில்லை. நான் சென்ற நிறைய கோவில்களை படம் பிடித்துள்ளேன். ;-))

RVS said...

@எல் கே
ஒரு குரூப்பாத்தான் அலையுறீங்க... இது கதை எல்.கே. அனுபவம் இல்லை... (ஆளை மாட்டி விட்ருவீங்க போலருக்கே.. ) ;-))

Madhavan Srinivasagopalan said...

வாசுவோட அவன் பிரதர் ராஜா கூட வருவானா ?

RVS said...

@ஸ்ரீராம்.
பாராட்டுக்கு நன்றி ஸ்ரீராம். மனசு இளைமையா இருக்கு. (வயசும் ஒன்னும் பெருசா ஆகலை அண்ணா!)
;-)))
போற போக்குல அப்பாஜியை தட்டி எழுப்பிட்டு போறீங்களே! ;-))

RVS said...

@வெங்கட் நாகராஜ்
//உண்மையாய் நடந்ததோ, புனைவோ//
ஓஹோ..

ரசித்ததர்க்கு நன்றி. வாசு கூட நீங்களும் வரீங்களா? இருங்க வீட்ல சொல்றேன்.... ;-))

RVS said...

@Madhavan Srinivasagopalan
யாரு ப்ரதர் அது? ;-))

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

//ரேடியோக்களில் மியூச்சுவல் ஃபண்ட் விளம்பரங்களின் கடைசியில் ரிஸ்க் விதிமுறைகள் சொல்லும் வேகத்தில் சாரி அர்ச்சனை செய்து கொண்டிருந்தார்//

யாரும் சொல்லாதது.

அருமையான கோயிலுக்குள் நீங்கள் போய்விட்டு இப்பிடி ஆளரவம் இல்லாத ப்ரஹாரத்தைப் போட்டு டபாய்ச்சுட்டீங்களே ஆர்விஎஸ்?

Unknown said...

நடைமுறை சம்பவமாய்
கண்முன்னே
விரிகிறது
உங்கள் பதிவு
:very nice i like it

RVS said...

@சுந்தர்ஜி
நன்றி ஜி!
இது கதை தானே.... அதனாலதான் வெறும் பிரகாரம் போட்டேன். இல்லைனா கேரக்டர் படத்தோட போட்டிருப்பேனே....... ;-))

RVS said...

@siva

Thanks Siva.ஆனால் இது நடந்த சம்பவம் அல்ல... கதை தான்.. ;-))))

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//அவன் ஒரு god fearing பையன். ஆனால் ஒரு fairy loving இளைஞன்.//
ha ha ha... RVS touch...:))

//வாசு காதுகளில் காதம்பரி மோகனமாய் வழிந்தது//
அப்ப இனி தில்லானா தானா... இல்ல தீம்தரிகிடவா...:))

//நாளைக்கும் வாசு கோவிலுக்கு வருவான்//
வரட்டும் வரட்டும்...நாங்களும் வரோம் படிக்க...:))

//படம்: அடியேன் கிளிக்கியது//
குட் ஒன்...

RVS said...

@அப்பாவி தங்கமணி
ரசித்ததற்கு மிக்க நன்றிங்க...
உங்களோட ஜில்லுக்கு இது ஈடாகுமா? ;-)))

தக்குடு said...

அடா! அடா! அடா! இளையராஜா கைல வயலினை குடுத்து வாசிக்க சொல்லி கேட்ட மாதிரி ப்ரமாதமா இருக்கு. ஒவ்வொரு வரியிலும் காதம்பரியின் அழகு மெருகேறிக்கொண்டே செல்கிறது. மைனர்வாளின் மற்றுமொரு மைல்கல்....:) கேக்க மறந்துட்டேனே, சுவாமியோட பேர் ராஜகோபால ஸ்வாமியா??..:P

RVS said...

@தக்குடு
பாராட்டினத்துக்கு நன்றி. அதென்ன கடைசில ஒரு கேள்வி. எல்லோரும் வேற விதமா கேட்டா நீங்க இன்னொரு விதமா கேக்கறதா.... பலே கில்லாடி ஆள் சார் நீங்க.. ;-))

ச்சும்மா said...

இளவயது நினைவுகளை தூண்டியதற்கு உங்களை பாராட்டியே தீரவேண்டும். நல்லதொரு கதையோட்டம்.

RVS said...

@s.prabhakaran -s.dharmalingam
நன்றி... முகப்புத்தக நண்பர் வெங்கடேசன் செம்மலை தானே நீங்கள். ;-))

Ramesh said...

Good article - what is captivating is your reply for all the comments - thanks for the respect and hope i will also join the queue.

RVS said...

@Ramesh

Thank you Mr. Ramesh. Please do visit again. ;-))

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails